Saturday 11 February 2012

கழுதைகளுக்கு பின்னாள் சென்று கொண்டிருக்கிறேன்

கவிதை::

கிண்ணத்தில் அரிசி தான் இல்லையே
பூக்களையாவது அடுக்கி வைப்போம்
         என்றான் சீனக்கவிஞன்
இலவசங்களை பெறும்
பிச்சை பாத்திரமாக்கினோம் நாம்
******************************************************************************

தாமரை இலை தட்டுலே
தயிர் சாதம் வச்சிபுட்டு
தண்ணி சொம்பே மட்டும்
தாவணியிலே மறைச்சிட்டியே
********************************************************************************
துணிகளை சலவை செய்ய
            சொன்னேன்
எனது மூளையை சலவை
             செய்தாள்
இன்று அவளுடைய கழுதைகளுக்கு
பின்னாள் சென்று கொண்டிருக்கிறேன்.
********************************************************************************
அவனின்
எழு மணைவிகளில்
நாலாவது மணைவியின்
கணவனை கொன்று மணந்தான்,
அவள் பதினாலவது பிரவசத்தில்
இறந்த பின்
அவள் தங்கையை மணந்தான்
அவண் கட்டிய கல்லறை
காதலின் சின்னமா?
*********************************************************************************
நம்பி கட்டுங்கோ
      உறுதியானது
      கம்பியல்ல
      கயிறு
      தாலிக்கயிறு
*********************************************************************************
பார்வையிழந்தவன்
ஒலியால் உணர்கிறான்
செவியிழந்தவன்
ஒழியால் உணர்கிறான்
வாயிழந்தவன்
ஒலி ஒழியால் உணர்கிறான்
அனைத்தும் உள்ளவன்
எதையும் எதிலும்
உணர மறுக்கிறான்.
*************************************************************************************
அர்த்தமுள்ள வார்த்தைகளை
அழுத்தி சொல்வதன் மூலம்
மன அதிர்வுகளை உருவாக்கலாம்மந்திரங்கள்
அர்த்தமற்ற வார்த்தைகளை
ஆவேசமாக சொல்வதன் மூலம்
மன பிறல்களை உருவாக்கலாம்   - தந்திரங்கள்
*************************************************************************************
நீரில் உருவாகி
நிலத்தில் விளையாடி
வாயுவை சுவாசமாக்கியயென்னை
அக்னி ஆட்கொண்டதால்
ஆகாயத்தில் ஐக்கியமானேன்
ஐம்பெரும் பூதம்
ஆட்கொண்டதால்
பரம்பொருள் முன்னே
பரவசமானேன்
*************************************************************************************
நெற்பயிரில்
   புல் களை
புல் வெளியில்
நெற்பயிர் களை
புல்லும் பயிரும்
இயற்கையின் கலை
**************************************************************************************
 
எண்ணங்களை
கொட்டினேன்
வார்த்தையானது
வார்த்தைகளை
கொட்டினேன்
கவிதையானது
கவிதைகளை
கொட்டினேன்
காவியமானது
காவியத்தை
கொட்டினேன்
கடவுளானது
****************************************************************






































































Friday 10 February 2012

வறுமை கோட்டின் முகவரியோ

பூனை நடை::


குழி விழுந்த கன்னமும்
    சூம்பிய மாரும்
உலர்ந்த  வயிறுடன்
ஒட்டு துணியுடன்

பூனை நடை நடந்து
வறுமையை உலகறிய செய்யும்
பெண்ணே
நீ தான்
வறுமை கோட்டின் முகவரியோ