Wednesday 2 May 2012

சௌராஷ்ட்ரா கோவில் அர்சகர்கள்

  கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள்
 
இன்று காலை (02.05.2012) ஜெயா டி.வியில் மதுரை மீனாட்சியம்மன் திருகல்யாணத்தை நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன்.
அப்போது ஒரு கேள்வி மனதில் தோன்றியது.
அங்கு நிறைய புரோகிதர்கள்/அர்சகர்கள்  இருந்து திருமண வைபவ நிகழ்சிகளை நடத்தி கொண்டிருந்தனர்.
அந்த புரோகிதர்களிள் சௌரஷ்டிரா சமுகத்தை சார்ந்த புரோகிதர்கள்/அர்சகர்கள் உண்டா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சௌரஷ்டிரா புரோகிதர்கள்/அர்சகர்கள் எத்தனை பேர் உள்ளனர். மற்ற பெரிய கோவிலில்களில் எத்தனை சௌரஷ்டிராபுரோகிதர்கள்/அர்சகர்கள்உள்ளனர்.
 இலலையென்றால் ஏன் இல்லை? 
 தமிழகத்தில்எத்தனை கோவிலில் சௌரஷ்டிரா புரோகிதர்கள்/அர்சகர்கள்எத்தனை பேர் உள்ளனர். 
சௌரஷ்டிரா மக்களை பிராமணர்களாக ஓப்பகொள்ளப்பட்ட நிலையில் (ராணி மங்கம்மா சாசணம் எழுதி சௌரஷ்ட்ரா சமூகத்தினரை தமிழ் பிராமணர்கலுக்கு இணையாக அங்கிகரித்த பின்பு )கோவிலில்களில் ஏன் புரோகிதர்கள்/அர்சகர்கள் இல்லை? 
சௌரஷ்டிரா சமுக மக்கள் முயற்சி செய்யவில்லையா? 
வாய்ப்பு மறுக்கபடுகிறதா? 
தகுதி இல்லையா? 
என்ன தகுதி வேண்டும்?
 கோவில் அர்சகர்கள் எப்படி நியமணம் செய்யப்படுகிறார்கள். 
நமது சமுகத்தின் சார்பில் நிர்வாகிக்கபடும் கோவில்களில் இருக்கும் புரோகிதர்கள்/அர்சகர்கள் அணைவரும் நமது சமுகத்தை மட்டும் சார்ந்தவர்களா அல்லது மற்ற சமுகத்தை புரோகிதர்கள்/அர்சகர்கள் உள்ளானரா?
நமது வீடுகளிள் நடத்தும் சுப/அப காரியங்களுக்கு நமது சமுக புரோகிதர்கள்/அர்சகர்கள் கிடைக்காத பட்சத்தில் மற்ற சமுக புரோகிதர்கள்/அர்சகர்களின் சேவையை பயன்படுத்துகிறோம்.
அவ்வாறு நமது சமுக புரோகிதர்கள்/அர்சகர்கள் மற்ற சமுக மக்களின் வீடுகளிள்/கோவில்களிள் சேவை செயகின்றனரா?
நமது சமுக புரோகிதர்கள்/அர்சகர்கள் எந்த மொழியில் (அதாவது சமஷ்கிருதம்/சொரஷ்ட்ரா/தமிழ்) புரோகிதம் செய்கின்றனர்.