Wednesday 11 December 2013

சௌராஷ்ட்ரா சமூகம் - தீர்மானங்களும் இன்றைய நிலையும்

தீர்மானங்களும் இன்றைய நிலையும்::


125 ஆண்டுகளுக்கு முன்பாக, சௌராஷ்ட்ரா பிராமண மாநாடுகளில் விவாதிக்கப்பட்ட விசயங்களும், எடுக்கப்பட்ட தீர்மானங்களின் இன்றைய நிலையும்.
விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள்
தற்போதைய நிலை
எடுக்கப்படவேண்டிய முயற்சிகள்

பன்மொழி கல்வி
நல்லமுன்னேற்றம்.அனைவரும் அடிப்படை கல்வி கற்றுள்ளனர்
விரும்பியகல்வி கற்க தனிநபர் முயற்சி தேவை

இலவச கல்வி
இருக்கிறது
தொடர வேண்டும்
பெண் கல்வி
நல்லமுன்னேற்றம்.அனைவரும் அடிப்படை கல்வி கற்றுள்ளனர்
விரும்பியகல்வி கற்க தனிநபர் முயற்சி தேவை

கல்வி நிறுவனங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமானது இல்லை
முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது
நெசவு தொழில்
பொருளாதார முன்னேற்றம் தேவையான அளவு இல்லை என்பது பொதுவான கருத்து
நெசவுதொழிலில்
வாய்ப்பு இல்லையெனில் வாய்ப்பு இருக்கும் தொழிலுக்கு மாறவேண்டும்
தொழில் வளர்ச்சி
நல்ல முன்னேற்றம்
தொடர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்
மொழி வளர்ச்சி
ஆரம்ப நிலையில் மட்டுமே உள்ளது.மக்களிடையே அதிக ஆர்வம் இல்லை

தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்
ஆச்சாரங்கள்
காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் இருக்கிறது.சரிபார்க்க இயலவில்லை
தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டும்
மடாதிபதி/ஆசார விசாரணை தலைவர்
ஏற்படுத்தவில்லை
இனி ஏற்பட வாய்ப்பில்லை

சபைகள்
ஏற்படுத்தப்பட்டு செயல் இழந்துள்ளது.
முயற்சி தொடர வேண்டும்
பொதுஇடங்கள்/சத்திரங்கள் முதலியன
ஏற்படுத்தப்பட்டது. இலவசமாக இல்லை
தனிமனித பேரசை காரணமாக ஏற்படுத்த இயலாது








சௌராஷ்ட்ரா சமூகம் - கட்டுரைகள்

சௌராஷ்ட்ரா கட்டுரைகள் ::


சௌராஷ்ட்ரா சமூகத்தில் இடம் பெற்றுள்ள விசயங்கள் குறித்து 8 கட்டுரைகள் எழுதினேன்.
அவற்றில் மிக குறைந்த அளவில் படிக்கப்பட்ட கட்டுரை – கல்வியறிவு குறித்து. எந்த விசயத்தில் முழு தன்னிறைவு பெற்றுள்ளோமோ அது குறித்த கட்டுரை தான் மிகவும் குறைவாக படிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அதிக அளவில் படிக்கப்பட்ட கட்டுரை – குலதெய்வங்கள் மற்றும் ஜாதிகள்.
இதுவரை இரண்டுமே யாரலும் எழுதப்படாத விசயங்கள் என்பதால் அதிக அளவில் கவனத்தி ஈர்த்துள்ளது.
கட்டுரைகளின் தலைப்பு
படித்தவர்களின் எண்ணிக்கை
கல்வியறிவு
4
குலதொழில்
16
வருடபிறப்பு
23
மடாதிபதிகள் நியமனம்
32
மொழி
37
குலதெய்வங்கள்
213
ஜாதிகள்
214


மேலும், சௌராஷ்ட்ரா சமூகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து பல்வேறு நபர்களால், பல்வேறு இடங்களில் விவாதிக்கப்படுகிறது.

சௌராஷ்ட்ரா சமூகம் குறித்த தனிப்பட விசயம் மற்றும் இதுவரை யாராலும் கவனிக்கப்படாத விசயங்கள் எனது கவனத்திற்க்கு வந்தால் எனது கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
மேலும், சௌராஷ்ட்ரா சமூகத்திற்கான விசயங்களை அல்லது பல்வேறு விசயங்கள் குறித்து இங்கு பதிவிட உள்ளேன். படித்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
                    

சௌராஷ்ட்ரா சமூகம் - மொழி 2

சௌராஷ்ட்ரா மொழி வளர்ச்சி ::



சௌராஷ்ட்ரா மொழி இன மக்களின் மொழி பற்று மற்ற இனத்தவரை விட குறைந்ததல்ல. ஆனால், பேச்சு மொழியாக மட்டுமே உள்ள மொழிக்கு எழுத்துக்களை தேடிபிடித்து, சீர்திருத்தி, படித்து, பயிற்றுவித்து மொழியை பாதுகாத்து, வளர்த்து செழிக்க செய்ய வேண்டிய நிலையில் வேற்று மொழி எழுத்துக்களை உபயோகப்படுத்தி எழுதி அதன் இயற்கைதன்மையை அழித்து கொண்டிருப்பது அந்த மொழியை நிரந்தரமாக அழிக்கவே பயன்படும்

மொழி ஆராய்ச்சி, மொழி சீர்திருத்தம், மொழி பாதுகாப்பு மற்றும் மொழி வளர்ச்சி என்பவற்றை தவறாக புரிந்து கொண்டு செயல்படும் தன்மையால் மொழி சீரழிக்கப்பட்டு வருகிறது.

எந்த மொழியும் எழுதப்படாமல் அதனால் படிக்கபடாமல் இருக்கலாம். ஆனால், பேசப்படாமல் இருந்தால் அது அழியும். பேசப்படாமல் இருப்பதற்க்கு காரணம் அம்மொழி பேசும் மக்கள் தொகை குறைவது, பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்வது, மற்ற மொழிகளின் கலப்பு தன்மையாலும் மற்றும் ஆர்வமின்மையாலும் அழிகிறது.

மொழி ஆராய்ச்சி :: 

அழிந்த மொழியை அல்லது அழிந்து கொண்டிருக்கும் மொழியை எப்படி புதுபிக்கலாம். மொழியை பெரும்பாலும் பேசிய மக்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து தான் தேடிப்பிடிக்க வேண்டும். மிக உயர்ந்த கலாச்சாரங்களையும் , இலக்கியங்களையும் கொண்டதாக இருப்பின், அரசு துறைகளும் அல்லது தனிப்பட்ட மொழி ஆர்வலர்களும் அதை மீட்டெடுக்க முயற்சி செய்வார்கள்.

ஒரு மொழியின் வரலாற்றை அறிய வேண்டுமானல், அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் அரசின் தொல்பொருள் துறை அகழ்வாரய்ச்சி மேற்கொள்ளும் போது கிடைக்கும் கல்வெட்டுகளில் இருக்கும் குறியீடுகளை தற்காலத்தில் வாழும் மொழியுடன் ஒப்பிட்டு அது என்ன மொழி என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யும். அதன் பின்பு அதில் எழுதப்பட்ட விசயங்களை அறிந்து அம்மொழி பேசிய மக்களின் அரசாட்சி, கலை , இலக்கியம் போன்றவற்றை அறிய முயற்சி செய்யும்.ஆனால், கண்டெடுக்கப்பட்ட மொழி வரிவடிவங்களை ஒப்பிட தற்காலத்தில் அதை ஒத்த வரிவடிவத்தை கொண்ட மொழியை எவரேனும் பயன் படுத்திகொண்டிருந்தால் தான் ஒப்பிடமுடியும். அப்படியே அந்த பெயரில் ஒரு மொழி உபயோகத்தில் இருந்தாலும் அதன் வரிவடிவங்கள் மாறியிருக்கும். அத்தனை எளிதில் ஒப்பீடு செய்து விடமுடியாது

சௌராஷ்ட்ரா தேசம் இருந்ததாக கூறப்படும் இன்றைய இந்திய பகுதிகளில் இன்றைக்கும் பழங்குடிகள் இருப்பார்கள். நிச்சியமாக அவர்கள் பழைய மொழியை தான் (ஓரளவு மாற்றங்கள் இருந்தாலும்) பேசிகொண்டிருப்பார்கள். எழுதிகொண்டிருப்பார்கள். அவர்களிடம் பேசி அவர்களது எழுத்து வடிவங்களையும் இன்றைக்கு தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் சௌராஷ்ட்ரா மொழியுடன் ஒப்பிட்டு பார்த்து, இருக்கும் மாற்றங்களை அறிந்து மொழியை செம்மைபடுத்துவதுடன் வாய்வழி/செவிவழி பாடல்களை/எழுத்து இலக்கியங்களை வெளிகொணரமுடியும்.

அல்லது அகழ்வாரய்ச்சியின் போது கிடைக்கும் ஓலை சுவடிகளின் மூலமும் அறிய முடியும். தற்காலத்தில் ஒரு பெயரால் பேசப்படும் மொழியின் எழுத்துக்களின் வரிவடிவத்தை இன்றைய காலகட்டங்களிலிருந்து பின்னோக்கி ஆராய்ந்து செல்ல வேண்டும். குறைந்தபட்சம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மொழி ஆராயப்படவேண்டும். இப்படியே ஒவ்வொரு 50 ஆண்டுகளிலும் அந்த மொழியின் எழுத்துகளில் ஏற்ப்பட்ட வரிவடிவ வேறுபாட்டை ஆராய்ந்து கொண்டே சென்றால், அம்மொழி பேசிய மக்கள் கூட்டமாக வாழ்ந்த பகுதியில் வாழ்ந்த காலகட்டத்தில் உபயோகித்த மொழியின் வரிவடிவத்தை காணமுடியும்.

இவ்வாறு செய்வதற்க்கு நிறைய கால அவகாசம் தேவைப்படும். பொருள் செலவும் ஏற்படும். அரசின் பல்வேறு துறைகளின் அனுமதியும், உதவியும் தேவைப்படும். இவையெல்லாம் செய்வதற்கான காரணமும் மிகவும் அவசியம். தேவையற்ற காரணங்களுக்காக, காலவிரயமும், பொருட்செலவும் செய்ய முடியாது.

இந்த நிலையில், மிக அண்மை காலத்தில் எழுதப்பட்ட வரிவடிவங்களை கொண்டு அதை முன்னோக்கி எடுத்து செல்லமுடியும்.

சௌராஷட்ரா மொழிக்கு வரிவடிவங்கள் உண்டு என்பதும், அது திரு.ராமராய் அவர்களால் சீர்திருத்தம் செய்யப்பட்ட்து என்றும் கூறப்படுகிறது. அதன் மூலம் நிறைய எழுதப்பட்டுள்ளது என்றும் நம்பப்படுகிறது

திரு.ராமராய் மொழி சீர்திருத்தம் தான் செய்திருக்கிறார். மேலே கூறியபடி மிகவும் பின்நோக்கி சென்று அவர் ஆராயவில்லை. அவருக்கு முன்பு இந்த மொழியை ஆராய்ந்து எழுதி வைத்ததின் அடிப்படையில் , அவற்றை அடிப்படையாக் வைத்துகொண்டு சீர்திருத்தம் செய்துள்ளார்

இன்றைக்கு மொழி ஆர்வலர்கள், அவர் எந்த அடிப்படையில் மொழி சீர்திருத்தம் செய்தார் என்பதை அறிந்து அதன் அடிப்படையின் பின்நோக்கி சென்று மூலத்தை அறிந்து பழைய மொழியின் வரிவடிவத்தை அறிய முயற்சிக்கலாம். இப்படிபட்ட மொழி ஆராய்ச்சி சௌராஷ்ட்ரா மொழிக்கு சாத்தியமா என யோசித்தால் , சாத்தியமில்லை என்ற பதிலை தான் பெற முடியும்.

இப்படிபட்ட சூழ்நிலையில், திரு.ராமராய் சீர்திருத்திய மொழியின வரிவடிவங்களை கொண்டுதான் மேலெடுத்து செல்லமுடியும்.

இப்படி செய்யும் போது, மொழி இன மக்களின் முழுமையான வரலாற்றை வெளிகொணர முடியாது. அந்த மொழியில் எழுதப்பட்ட பழைய இலக்கியங்களையும் வெளிகொணரமுடியாது.

சென்ற நூற்றாண்டில், சௌராஷ்ட்ரா மொழியில் இலக்கியங்களும் வேறு பல நூல்களும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது சௌராஷ்ட்ரா இலக்கியங்கள் அல்ல

தமிழ் மொழி இலக்கியங்கள், தெலுங்கு மொழி இலக்கியங்கள்  , கீர்த்தனைகள் சௌராஷ்ட்ரா மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதாவது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, திருக்குறள் சௌராஷ்ட்ரா மொழியில் எழுதப்பட்டுள்ளது. சௌராஷ்ட்ரா மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகத்தில் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு இலக்கியம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட காரணம் அதன் சிறப்புதன்மை. அதை அனைவரும் அறிய வேண்டும் என்பது நோக்கம். உலகில் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் தமிழ் மொழி அறிய முடியாத காரணத்தினால், அவர்கள் மொழியில் மொழிபெயர்ப்பு  செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சௌராஷ்ட்ரா மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு செய்தாலும், மொழிமாற்றம் செய்தாலும் அதன் அவசியம் என்ன என்பதை பார்க்கவேண்டும்.

இன்றைய தமிழ் நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தமிழ் மொழி தெரியும். சௌராஷ்ட்ரா மக்கள் அனைவரும் பள்ளிகூடத்திலேயே மற்ற மொழி மாணவர்கள் படிப்பதை போல திருக்குறளை தமிழ் மொழியில் படித்துள்ளனர்

இந்த நிலையில் சௌராஷ்ட்ரா மொழியில் மொழி பெயர்ப்பு செய்ய என்ன காரணம் இருக்க வேண்டும். தமிழ் மொழி படிக்க தெரியாத, சௌராஷ்ட்ரா மொழி மட்டுமே படிக்க தெரிந்த மக்கள் மட்டும் இருந்தால் அவர்களுக்காக மொழிபெயர்ப்பு செய்வது அர்த்தம் உள்ளது. ஆனால், சௌராஷ்ட்ரா மொழி மட்டுமே தெரிந்த மக்கள் என்று (அதுவும் சௌராஷ்ட்ரா மொழி எழுத்துக்களில் மட்டுமே படிக்கதெரிந்தவர்கள்) எவரும் கிடையாது.

எனவே, சௌராஷ்ட்ரா மொழியில் இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல. முதலில் அது சௌராஷ்ட்ரா மொழி இலக்கியம் அல்ல. தமிழ் மொழி இலக்கியம் சௌராஷ்ட்ரா மொழியில் மொழிபெயர்ப்பு/மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால், சௌராஷ்ட்ரா மொழி மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை.  இது இலக்கியத்திற்க்கு மட்டுமல்ல. வேறு எந்த கீர்த்தனைகளும், பாடல்களும்  எதுவாக இருந்தாலும், அது சௌராஷ்ட்ரா மொழி மக்களுக்கு எவ்வித பயனும் தராது.

அதைவிட வாழ்ந்த பகுதிகளில் ஆராய்ச்சி செய்து, அங்கு மன்னர் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களை, பாடல்களை ஆராய்ந்து அதை இன்றைய மொழி வடிவத்தில் மாற்றினால், குறைந்த பட்சம் சௌராஷ்ட்ரா மொழி பழம் இலக்கியங்களை அந்த மொழியிலேயெ பாதுகாத்தோம் என்ற திருப்தியாவது கிடைக்கும். அதை இன்றைய மக்கள் படித்து அறிய முடியுமா என்பது  கேள்விகுறியாக இருந்தாலும், மொழி இலக்கியம் பாதுகாக்கப்பட்டது என்றாவது சொல்லி கொள்ள முடியும்.

சௌராஷ்ட்ரா மொழியில் இலக்கியங்கள் இருந்ததா என்று எப்படி அறிவது. ஊதாரணமாக , மன்னர் ஆட்சி காலத்தில் புலவர்கள் மன்னர்களை புகழ்ந்து பாடிய பாடல்கள் இருக்க்கூடும். அல்லது மன்னர்களின் போரின் வெற்றி தோல்விகள், சாதனைகள் நிச்சியமாக எழுதப்பட்டிருக்கும். அப்பகுதி மக்களின் வாழ்வியல் முறை, நாட்டுபுற பாடல்கள் போன்ற மொழி சார்ந்த மக்களின் சரித்திரத்தின் ஒரு பகுதி ஏதெனும் ஒரு வடிவத்தில் கிடைக்கலாம். அல்லது அன்மை கால கட்டத்தில் எழுதுவது போன்ற ஜாதகங்கள் கிடைக்கலாம்.

குறைந்தபட்சம், தமிழ்நாட்டில் குடியேறிய கால கட்டங்களில் எழுதப்பட்ட ஒலைசுவடிகளாவது கிடைக்கலாம். உதாரணமாக, முயற்சி செய்தால், 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட யாருடைய ஜாதகமாவது கிடைக்கலாம்.

தஞ்சை சரஸ்வதி நூலகத்தில் படிக்கப்படாத பல லட்ச ஓலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில், சௌராஷ்ட்ரா மக்கள்  எழுதிய ஓலைசுவடிகளும் இருக்கலாம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் வந்து குடியேறிய போது எழுதப்பட்ட இலக்கியங்கலோ, பாடல்கலோ, குடியேறிய வரலாற்று குறிப்புகலோ அல்லது வேறு வகையான ஏதேனும் குறிப்புகள் கிடைக்ககூடும். அங்கு இருக்கும் ஒலை சுவடிகளில் எழுதப்பட்டிருப்பது சௌராஷ்ட்ரா மொழி தான் என்பதை அறிய பின்னோக்கி சென்று சௌராஷ்ட்ரா மொழியின் வரிவடிவத்தை அறிந்தால் தான் சௌராஷ்ட்ரா ஓலை சுவடிகளை அறிய முடியும்.

இப்படி இவைகளை செய்தால் தான் மொழி ஆராய்ச்சி என்று ஒப்புகொள்ள முடியும். அதை விடுத்து, வேற்று மொழி இலக்கியங்களை பாடல்களை மொழிபெயர்ப்பு, மொழிமாற்றம் செய்துவிட்டு, சௌராஷ்ட்ரா மொழியில் இலக்கியங்கள் இருக்கிறது, நூல்கள் பல எழுதப்ப்பட்டுள்ளன என்பது மொழி வளர்ச்சிக்கு உதவாது.

மொழி வளர்ச்சி::

மொழிவளர்ச்சி செய்வதற்க்கு முன்பு இதுதான் மொழி என்று உறுதிபடுத்திகொண்டால் தான், அந்த மொழியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். எது மொழி என்பதிலேயே குழப்பங்கள் நீடித்தால் ஒரு காலத்திலும் அதை விருத்தி அடைய செய்ய முடியாது. மொழிக்கு எழுத்து வரிவடிவங்களை முடிவு செய்த பிறகு, பழைய இலக்கியங்களை புதுபிக்க முடியவில்லையென்றாலும், இன்றைய வரலாற்றை எழுதுவதற்க்கும், இலக்கியங்களை படைப்பதற்க்கும் பயன்படுத்தலாம்.

சௌராஷ்ட்டிரர்களில் மிக அருமையாக பாடல் இயற்ற வல்லவர்களும், பாடகூடியவர்களும் இருக்கின்றனர். மிக அருமையாக அனைத்து துறைகளிலும் தர்க வாதம் செய்ய கூடியவர்களும், கலை உலகை சார்ந்தவர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் தொழில் நுட்ப வல்லுனர்களும் இருக்கின்றனர். அவர்கள் அவர்களது திறமைகளை , சிந்தனைகளை சௌராஷ்ட்ரா மொழியில் பதிவு செய்யலாம்

எழுத்தாளர்கள், கவிஞர்கள் , வேற்று மொழி இலக்கியங்களை மொழிமாற்றம் செய்து, சௌராஷ்ட்ரா மொழி இலக்கியம் என்று கூறாமல், இன்றைய காலத்திற்க்கு ஏற்ப இயல், இசை, நாடகம், திரைபடம், கவிதை, கட்டுரை, தர்க வாதம், தொழில்நுட்ப விசயங்கள் என்று எல்லா துறைகளிலும் சௌராஷ்டரா மொழியை பயன்படுத்தினால் மொழி வளர்வதற்க்கும் பாதுகாப்பதற்க்கும் உதவியாய் இருக்கும்.

இலக்கியங்கள் மட்டுமே மொழி சார்ந்த இனத்தை பெருமைபடுத்தும், இனம் அழிந்தாலும் இலக்கியங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்

அதைவிடுத்து, வேற்று மொழி எழுத்துக்களை பயன்படுத்தி எழுதுவது, வேற்று மொழி இலக்கியங்களை மொழிமாற்றம் செய்து அதை சௌராஷ்ட்ரா இலக்கியம் என கூறி மொழிக்கு களங்கம் விளைவிப்பது நிறுத்தப்படவேண்டும்.