Monday 26 August 2013

கவிதைகள்

கவிதைகள்::


வடிகட்டிய வெண் புகை ஊதுகுழலிருந்து
புறப்பட்ட மேகங்களில்
அமிழ்துன்ட அசுரன்
தேவதைகளை
தேடுகிறான்

====================================================================== 


 என்னை குழம்பு வைப்பாயா
பொறிப்பாயா
மீன் கேட்டது
நீ தான் செத்து விட்டாயே
உனக்கென்ன
இல்லை குழம்பென்றால்
இன்னும் கொஞ்ச நேரம்
மிதந்து கொண்டிருக்கலாமே

====================================================================
 மரம் ஒரு இலை உதிர்த்தது
அவன் சட்டையை உதிர்த்தான்
மீண்டும் ஒரு இலை உதிர்த்தது
அவன் பனியனை உதிர்த்தான்
மீண்டும் ஒரு இலை உதிர்த்தது
அவன் வேட்டியை உதிர்த்தான்
மீண்டும் ஒரு இலை உதிர்த்தது
அவன் கோவனத்தை உதிர்த்தான்
மரம் இன்னமும் குளிர்ச்சியாய் இருக்கிறது
அவன்வெப்பமாய் இருக்கிறான்
மரம் பச்சையாய் தான் இருக்கிறது
அவன் இச்சையாய் இருக்கிறான்

=====================================================================

====================================================================
பாவை
விளக்குக்கு
ஆடை
போர்த்துங்கள்
வருவோர்
போவோர்
எல்லாம்
கூட்டு
புணர்ச்சி
செய்கிறார்கள்

===================================================================== 

 செய்வதற்கு
ஓன்றுமில்லை
என்பதால்
எதை வேண்டுமானாலும்
செய்யலாம்
கவிதை எழுத
காகிதம் கூட தேவையில்லை

விரல்கள்
நடமாடினால்
எழுத்துக்கள்
கவிதையாகும்

======================================================================

 ஆசிரியர்களே
உங்களுக்கு தான்
பதில்கள் தெரியுமே
எங்களை ஏன்
கேட்கிறீர்கள்

======================================================================
=====================================================================
உளவுதுறை அறிக்கையும்
வானிலைதுறை அறிக்கை போலாகிவிட்டது

எல்லையில் போர் இல்லையாம்
குண்டுமழை மட்டும் பெய்கிறது.

=======================================================================
கால்கள் இல்லையென்பதற்காக
செருப்பு போடாமல்
இருக்க முடியுமா

கைகளில் போட்டுகொண்டு
தவழ்ந்து போகிறேன்

======================================================================
ஒற்றை செருப்பாய்
அலைந்துகொண்டிருக்கிறேன்

எவருக்கும் பொருந்தமல்,
எவருக்கும் தேவையில்லாமல்

என்னவள் வரும்வரை
ஏக்கத்துடன் காத்திருப்பேன்

======================================================================
மிருகங்கள் மீது
பவனி வரும்
தெய்வங்களை

மிருக வதை
தடுப்பு சட்டத்தின்
கீழ்
கைது செய்யமுடியுமா?
 
 
 
 

======================================================================


இயற்கை உபாதயை
இறக்கிய பின் கிடைக்கும்
நிம்மதிக்கு இணை
ஏதுமில்லை

கால் கழுவ
காகித உருளையை
சுழற்றினேன்

கண்டேன் காதலை
சிவப்பு நிற கிறுக்கலில்

எழுதியது யார்
எனக்கு முன் வந்தவனா

அதற்கு முன் வந்தவனா
அதற்கும் முன் வந்தவனா


எனக்கு பின் காத்திருப்பவன்

என்ன நினைப்பானோ
என்னை நினைப்பானோ

அப்பன் பேர் அவன் அறிய
அனுப்பிவைத்தேன்
 
அவனெழுதிய கவிதையை

" உனக்கானதை
   உமிழ்ந்து செல்கிறேன்
  கடலாவது
  கர்பம் தரிக்கட்டும்"












Wednesday 21 August 2013

ஏற்றுமதி-இறக்குமதி

 பொருளாதாரம்::

வணிகம் இல்லேயேல் வாழ்க்கை இல்லை
வாழ்க்கை - பொருளை ஆதாரமாக கொண்டது - பொருளாதாரம்
மனிதன் எந்த பொருளையும் உருவாக்கவில்லை
அனைத்து பொருள்களும் இயற்கை நமக்கு இலவசமாக கொடுத்தது.
இயற்கையில் கிடைத்த பொருட்களை, எடுத்து, சுத்தப்படுத்தி,பிரித்து, பிறவற்றுடன் சேர்த்து உருவாக்கி , விற்று வாங்கி உபயோகிப்பதே வணிகம்.

பொருளாதரத்தில் ஏற்றுமதி இறக்குமதி ஒரு பகுதி

நமக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. நாம் உற்பத்தி செய்யும் பொருட்கள் நமது உபயோகத்திற்க்கும், எஞ்சியவை மற்றவர்களின் உபயோகத்திற்க்கும் கொடுத்தால் தான் தொழிழ் வளரும். நாம் நமது உபயோகத்திற்க்கு மட்டுமே பொருட்களை உற்பத்தி செய்து கொண்டால் சுயநலம்.

அது போன்றே நம்மால் தாயரிக்கமுடியாத பொருட்களை, மற்றவர்களிடமிருந்து பெற்று நமது தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டியுள்ளது.

இந்தியா விளை பொருட்களையும் , கலை பொருட்களையும் மட்டுமே ஏற்றுமதி செய்து,  இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு விலை கொடுக்கமுடியாது.
ஏற்றுமதி அதிகமாகவும் இறக்குமதி குறைவாகவும் இருந்தால் தான் அந்நிய செலவானி கையிருப்பில் இருக்கும். பொருளாதாரத்தின் ஒரு பகுதி, அந்நிய செலவானி கையிருப்பு. அப்படியில்லாத நிலையில் தான் தங்கத்தை அடகு வைத்து, BALANCE OF PAYMENT  சரி செய்யப்பட்டது.

நம்முடைய பொருளாதாரம் வலுவானதாகவும், அந்நிய செலவானி கையிருப்பு வைத்திருப்பதற்க்காகவும் நாம் ஏற்றுமதி மட்டும் தான் செய்வோம் என்றால் மற்ற நாடுகள் ஒப்புக்கொள்ளாது. அப்படி வைத்திருந்தால் அதை எதற்கு உபயோகபடுத்த முடியும். நாய் தேங்காயை வாயில் வைத்திருப்பது போலதான்.

தங்கத்தை வைத்து ஈடுகட்டிய பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள்  ஆட்சியை விட்டு விலகிய போது, நாங்கள் இவ்வளவு அந்நிய செலவானி கையிருப்பு வைத்துவிட்டு போகிறோம் என்று அறிவித்தார்கள். அதற்கு பின்பு வந்த ஆட்சியாளர்களால் அதை சமன் நிலையில் வைத்திருக்க முடியவில்லை.

அதில் ஒரு காரணம், புதிய பொருளாதார கொள்கை மற்றும் தாரளமயமாக்குதல் என்ற கொள்கையை உலக  நாடுகளின் வற்றுபுறுத்தலின் காரணமாக(அமெரிக்கா) ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால்.

புதிய பொருளாதார கொள்கையின் ஒரு பிரிவாக அந்நிய நாட்டு முதலீட்டு கொள்கை. 
இந்த கொள்கை தான் இப்போது மிகவும் விமர்சிக்கப்படுகிறது. அந்நிய முதலீடு காரணமாக (அவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள்) உள்நாட்டு தொழில் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதே கொள்கையின் மூலம் தான் இந்திய நிறுவனங்கள வெளிநாடுகளீல் தொழில் செய்கின்றன , வெளி நாட்டு நிறுவனங்களையும் விலைக்கு வாங்குகின்றன என்பதை நாம வசதியாக மறந்து விட்டு ஆட்சியாளர்களை விமர்சித்தி கொண்டிருக்கிறோம். இவர்கள் மூலம் நாம் நாட்டுக்கு வரும் அந்நிய செலவானியால் ஏற்படும் நன்மைகளை மறந்து விடுகிறோம்.

ஏற்றுமதி இறக்குமதி விசயத்திற்க்கு வருவோம்:

நம் நாட்டில் உபயோகபடுத்தபடாத கனிமங்கள் ஏராளமாக உள்ளன. அவை இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டு அதை வெளிகொணர்வதற்க்கு முயற்சிகள் எடுக்கப்படுகிறது.

கனிமத்தை வெளியே எடுத்து, இருதியாக உபயோகபடுத்த கூடிய பொருளாக மாற்றுவதற்க்கு தொழில்நுட்பம், இயந்திரங்கள் மற்றும் மனித வளம் தேவைப்படுகிறது.

இதற்கு தேவைபடும் மூலதனம் அரசாங்கத்திடமிருந்து மட்டுமே வரமுடியும். அரசுக்கு இந்த பணம் மக்களிடமிருந்து தான் வர வேண்டும். இவைகளை தொடர்ந்து செய்தால் தான் , பொருளாதார வளர்ச்சி ஏற்படும். 8 முதல் 9 சதவிகிதம் இருந்த வளர்ச்சி இன்று 5க்கும் 6க்கும் நடுவில் தள்ளாடுகிறது. காரணம் அரசு தொழிலை தொடங்கவில்லை அல்லது தனியார் தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கவில்லை. தனியார் தொழில் தொடங்க வேண்டுமென்றாலும் அவர்களுக்கும் பணம் தேவைபடுகிறது. அவர்கள் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளும், முதலீடும் கேட்கிறார்கள். அரசாங்கத்தால் சலுகைகளை கொடுக்கமுடியுமே தவிர பணம் கொடுக்கமுடியாது(உதாரணமாக நிலக்கரி சுரங்கம்) தனியார் நிறுவனங்கள் மக்களிடமிருந்து பணம் திரட்டுகிறது. அப்படி முடியாத பட்சத்தில் அந்நிய மூதலிட்டை நாடுகிறது. எற்கனவே புதிய பொருளாதார கொள்கை மூலம், அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு நமது நாட்டில் தொழிழ் தொடங்க அனுமதி அளிக்க வேண்டிய நிலை இருப்பதால், சில பல நிபந்தனைகளுடன் அவர்களுக்கு இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, தொழில் தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது. அப்படி வருபவர்களுக்கு லாபம் ஒன்றே குறிக்கோள். 

1) அரசே அனைத்து தொழிழ்களையும் செய்ய முடியாது. செய்ய கூடாது. அது உற்பத்தியிலும், பொருளாதார வளர்சியிலும் தேக்க நிலைய ஏற்படுத்தும். மனித வளம், தனியார்  நிறுவனங்களுக்கு அளிக்கும் முழு திறனையும் கொடுப்பதில்லை. எப்படியிருப்பினும் வேலை நிரந்தரம், சம்பளம் நிரந்தரம் என்கிற மனப்பான்மை. நிர்வாக அதிகாரிகளும் சுயமாக கொள்கை முடிவுகளை எடுக்க முடியாத நிர்பந்தம் மற்றும் அலட்கிய போக்கு மற்றும் அரசியல் குறுகீடுகள். இதனால் இன்று பொது துறை நிறுவனங்கள் பல நட்டத்தில் நடந்து கொண்டு இருக்கின்றன. தனியாரிடம் ஒப்படைக்கும் கொள்கை வகுக்கப்படுகிறது.
(அ) டாட்டா நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட விமான போக்குவரத்து இன்று சீரழிந்துள்ளது. (ஆ) தனியார்களிடமிருந்து  கையகபடுத்திய வங்கிகள் பல நட்டத்திலும், பல ஒன்றுடன் ஒன்று இனைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. பெருகிவரும் தேவையை மனதில் கொண்டும், அரசு அதை பூர்த்தி செய்ய முடியாது என்ற நிலையிலும் தான் இந்த இரண்டு துறைகளிலும் தனியார் தொழில் தொடங்க அனுமதித்தனர். அயல் நாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


2) தனியாயாருக்கு தொழிழ் தொடங்க அனுமதிக்கும் போது, பெரிய அளவில் மூதலிடுகள் தேவைபடுகிறது.அதற்காக சலுகைகலும், பொதுமக்களிடம் பணம் திரட்ட அனுமதியும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது.
அவ்வாறு தொழில் தொடங்கும் தனியார் நிறுவனங்கள் லாப நோக்கை மட்டுமே குறிகோளாக கொண்டுள்ளது. மேலும் மேலும் சலுகைகளை கேட்கிறது. அரசு தர இயலாத நிலையில் அவை உற்பத்தியை குறைத்து அல்லது நிறுத்தி பொருளாதாரத்தை பாதிக்கசெய்கிறது. தொழிலை நிறுத்தினால் தனியாருக்கு எந்தவித நட்டமும் இல்லை. அவர்கள் மூதலீடு செய்த பணம் மிக குறைவு.அதை அவர்கள் தொழில் தொடங்கும் முன்பே பல வழிகளில் எடுத்து விடுகிறார்கள். அந்த தொழிலில் சிக்கியிருப்பது, பொதுமக்களின் பணமும் வங்கிகளின் பணம் மட்டுமே. இதற்க்கு அண்மை கால உதாரணம் KINGFISHER விமான சேவை. நட்டம் ஏற்படுத்திவிட்டார். அவரிடமிருந்து, கடனாக கொடுத்த பணத்தி திருப்பி பெற முடியாது.அவரது வேறு தொழிலில் இருக்கும் பணத்தையோ அல்லது தனிப்பட்ட சொத்துக்களையோ பறிமுதல் செய்ய முடியாது.

மற்றோரு உதாரணம். நமது அந்நிய செலவானி அதிகமாக உபயோகிக்கபடும் துறை கச்சா எண்ணை இறக்குமதிக்கு. அதை குறைக்க வேண்டும் என்பதற்க்காகவும் நமது இயற்க்கை வளத்தை உபயோகிக்கவேண்டும் என்பதற்காகவும்,  கச்சா எண்ணெய் இருக்கும் இடங்களை தேடிபிடித்து உற்பத்தி செய்ய அம்பானிக்கு அனுமதியளிக்கப்பட்டது.  குறைவான விலைக்கு உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், நமது உபயோகத்திறிக்கு வந்தால் அந்நிய செலவானி மிச்சமாகும்.அதை வேறு தொழிழ்களுக்கு உபயோகப்படுத்தலாம். ஆனால் என்ன நடக்கிறது. அம்பானி கூறுகிறார். அரசு கச்சா எண்ணயெய் வெளிநாடுகளிடமிருந்து என்ன விலைக்கு வாங்குகிறதோ அந்த விலையை எனக்கு தர வேண்டும் என உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. நாட்டுபற்று, சமூக அக்கறை சிறிதளவும் இல்லை. இவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இவரால் துறை சம்மந்தப்பட்ட அமைச்சரை நீக்க முடியும் அரசையும் மாற்ற கூடிய வல்லமை படைத்தவர். எந்த கட்சி அரசாங்கமாக இருந்தாலும் இவரையும் இவரை போன்ற பலரையும் பகைத்து கொள்ள முடியாது.

3) நமது இந்திய நிறுவனங்கள் தான் இப்படி தேச பக்தி இல்லாமல் நடந்து கொள்கிறதே என்று வெளிநாட்டு நிறுவனங்களை தொழில் செய்ய அழைத்தால், அவர்கள் சொல்வது உங்கள் நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தொழில் செய்யமுடியாது என்றும் எங்களுக்கு ஏற்றவாரு சட்ட திட்டங்களை மாற்றும்படியும் கூறுகிறது. பல்வேறு நிர்பந்ததினால் அதை செய்ய வேண்டிய் நிலையில் அரசு இருக்கிறது. அவர்களுக்கு சலுகை கொடுப்பதால் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் சலுகை கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் சிறிய, மத்திய வர்க்க தொழில்கள் நசுக்கப்படுகிறது. பெரிய தொழில்களை மட்டுமே நம்பி அரசின் பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட்டால், அந்நாடு விரைவி திவாலாகிவிடும். அண்மை காலத்தில் வெளிநாட்டு மூதலீடுகளை மற்றும் அவர்களின் தொழில் நிறுவனங்களை மட்டுமே நம்பி பொருளாதார கொள்கைகளை வகுத்துகொண்ட நாடுகள் திவாலான நிகழ்சிகள் அண்மை கால வரலாறு.

கனிமங்களை குறைந்த விலைக்கு கொடுத்து இறுதி பொருளை அவர்களிடமிருந்தே அதிக விலைக்கு வாங்குவதலும் அந்நிய செலவானி கையிருப்பு சீரழிகிறது என்கிற வாதம் சரியானதாக தோன்றினாலும்.  அதே கனிமங்களை வைத்து இறுதி பொருடகளை தாயரிப்பதில் உள்ள சிக்கல்களை மேலே கூறியுள்ளேன். பல சமயங்களில் , வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலை, உள்நாட்டு பொருளின் விலையை விட குறைவாக உள்ளது. நமது மக்களும் கண்மூடிதனமாக வெளிநாட்டு பொருளின் மீது உள்ள ஆர்வத்தால் அதேயே வாங்குகிறார்கள். அதனால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்படுகிறது. இதை அரசு பாரபட்சமற்ற நிலையில் அனைவரையும் திருப்திபடுத்தும்படி கொள்கைகளை வகுக்க வேண்டியுள்ளது. எப்படி கொள்கைகளை வகுத்தாலும், அதற்கான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கூடவே வருகிறது.

உள்நாட்டுக்கு உற்பத்திக்கு தேவைபடும் மூலதன கட்டமைப்புகளுக்கு இறக்குமதி அவசியமாகிறது. இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் கொடுக்க , ஏற்றுமதியின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டியுள்ளது.

தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலமும் அந்நிய செலவாணி வீணடிக்கப்படுகிறது. 50 ரூபாய் விலைகொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட ஆணுறைகளை உபயோகிக்கும் நாட்டில் , பொருளாதார கொள்கைகள் சீரழிகிறது. 300% அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டாலும், வெளிநாட்டு மதுவகைகளை வாங்கி குடிக்கும் குடிமக்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் 
இவர்கள் அனைவரையும் அரவனைது ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டியுள்ளது. சில சமயம் அது தவறாகவும் முடிந்து விடுகிறது. அதன் விளைவை சாதாரண பொதுமக்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது.






எனக்கு தெரிந்த அளவில், நாட்டின் பொருளாதார கொள்கைகள் , மொத்த உள்நாட்டு உற்பத்தியின் GDP அடிப்படையில் அமைக்கவேண்டும். புதிய பொருளாதார கொள்கை அறிமுகத்திற்க்கு முன்பு GDP , விளைபொருள், தொழிற்சாலை உற்பத்தி பொருள் மூலமாகவே கணக்கிடபட்டது. விளைபொருளில் உற்பத்தி என்பது, 1 பொருள் பல பொருளாக மாறுவது.ஒரு நெல் தானிய விதை 100 தானியங்களை உற்பத்தி செய்கிறது. தொழிற்சாலை பொருட்கள் ஒரு பொருள் பிரிக்கப்பட்டோ, பிற பொருள் சேர்க்கப்பட்டோ பல பொருட்களாக வெளிவருகிறது. இயற்கையில் இலவசமாக கிடைக்கும் கனிமங்களிடமிருந்து இறுதி பொருள் தாயாரிக்கும் முன்பு பல வேறு விதமான பொருட்கள் வெளிவருகிறது. கச்சா எண்ணையிலிருந்து, petrol  வெளிவருவதற்க்கு முன்பும் பின்பும் 11 துனைபொருட்கள் வெளிவருகிறது. இப்படி விளைபொருகளின் மூலத்தையும்  , தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனின் அடிபடையில் GDP கணக்கிடப்பட்டு, பொருளாதர கொள்கைகள் வகுக்கப்பட்டது.  நிலையாக நீடித்து நின்றது. ஆனால், புதிய பொருளாதார கொள்கையின் படி, சேவையையும் உற்பத்தியாக (service sector) உள்ளடக்கி GDP யை கணகிடபட்டதால் தான் , இன்றைய பணவீழ்ச்கிக்கு வழிவகுத்தது. பொருளாதாரமும் சரிந்தது.

அமெரிக்க பொருளாதாரமும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் பொருளாதரமும் மிகவும் மோசமான நிலைக்கு சென்ற போதும், பெருமளவு ஜனதொகை கொண்ட இந்தியாவும், சீனாவும் தப்பி பிழைத்ததற்க்கு காரணம் இரண்டு.
1) Service Sectorsஐ மிகவும் சார்ந்து இந்த இருநாடுகளும் பொருளாதார கொள்கைகளை வகுக்கவில்லை.
2) இந்தியா விளைபொருள் உற்பத்தியாலும், சீனா தொழிற்சாலை உற்பத்தி பொருட்களால் சாம்பாதித்த அந்நிய செலவானி மூலமும் நிலைத்து நின்றது.
3)மேலும், இருநாட்டு மக்களுக்கும் உள்ள ஒரு அடிப்படையான குணம். அதாவது பணம் சேர்த்த பின்பு பொருள் வாங்குவது. பணம் சேமிக்கும் போது அந்த பணம் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. சேமித்த பணத்தில் பொருள் வாங்கும் போது தாயரித்த பொருள் விற்பனையவதன் மூலம் பண சுழற்சி ஏற்பட்டு , பொருளாதரம் நிலைக்கிறது. சேமிப்பு-உற்பத்தி-உபயோகம்-உற்பத்தி-சேமிப்பு...................(பல நாடுகளில் , பொருளை முதலில் கடனாக வாங்கி பின்பு பணம் கட்டுவது)

நமது பொருளாதரம் பெருகிய போது, அறிவு ஜீவிகள் வைத்த வாதம் அமெரிக்க பொருளாதாரம் வளர்கிறது அதனால் நமது பொருளாதாரம் வளர்கிறது என்றும் நமது பொருளாதாரம் அமெரிக்க பொருளாதரத்துடன் நேரடி தொடர்புடையது )]direct propociation என கூறினார்கள்.

இன்று பணவீழ்ச்சிக்கு காரணம், மந்த நிலையிலிருந்த அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வருவதால் நம நாட்டில் பணவீழ்ச்சி ஏற்படுவதாக கூறுகிறார்கள் இப்போது indirect prpociation

இவர்களால், பணவீழ்சிக்கான சரியான காரணங்களை கண்டறிய முடியவில்லை.அவர்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

திரு. மன்மோகண் சிங் அரசுக்கு தலைமை ஏற்ற போது, மிகவும் மகிழ்சியடைந்தேன்.மேலும், திரு. சிதம்பரத்தை நிதி அமைச்சராக நயமித்து கொண்ட போது , குருவும் சீடனும் ஒரே பல்கலைகழகத்தில் படித்தவர்கள், இருவருக்கும் புரிதல் சரியாக இருக்கும், இருவருமே பொருளாதாரம் வணிகம் மற்றும் நிதி துறையில் அனுபவமுள்ளவர்கள் எனவே நாட்டை பொருளாதார துறையில் முன்னேற்றத்தை உருவாக்கி நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவார்கள் என நினைத்தேன். ஆனால், என்னதான் படிப்பும் அறிவும் இருந்தாலும் இருவருமே அரசியலுக்கு அடிபணிய வேண்டிய நிலை ஏற்ப்பட்டது.

அரசியல் கட்சி தலைமையும், ஆட்சி தலைமையும் இனைந்து செயல்பட்டால் தான் முன்னேற முடியும் என்பதையே இன்றைய பொருளாதாரம் நமக்கு சொல்லி கொடுக்கும் பாடம்.

நான் சாமானிய பாமரன். எனக்கு தெரிந்தவற்றை கூறியுள்ளேன். தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டவும். விவாதிக்க  விரும்பினால், கருத்துக்களை தெரிவிக்கவும்.