Tuesday 22 July 2014

வேர்களை தேடும் விழுதுகள் – விழுதுகளை தேடும் வேர்கள்



வேர்களை தேடும் விழுதுகள் – விழுதுகளை தேடும் வேர்கள்

இன்றைய நிலையில் தான் தனது குடும்பம் என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்தாலும் நமது முன்னோர்களை அறிய பல சமயம் விருப்பம் ஏற்ப்படுகிறது.

குறைந்தபட்சம் தனது வம்சா வழியில் தந்தை, தாத்தா, தாத்தாவின் அப்பா என்கிற அளவில் மட்டும் தான் அறிய முடிகிறது. இதுவும் அனைவருக்கும் சாத்தியமில்லை. இன்றைய தலைமுறை தாத்தாவின் பெயரை கூட அறிய முடிவதில்லை.

கூட்டு குடும்ப சிதைவே இதற்கு முக்கிய காரணம். குடும்ப சடங்குகள் நடைபெறுவதும் குறைந்து வருகிறது.

கல்யாண பத்திரிக்கை அடிக்கும் போது தாத்தாவின் பெயர் பயன் படுத்தப்படுகிறது. மகனுக்கு கல்யாணம் செய்யும் தந்தை, அவரது தந்தையின் பெயரை தவறாமல் பதிவு செய்கிறார். ஆனால், தாய் தந்தை  ]இல்லாதவர் தனது திருமணத்திற்க்கு பத்திரிக்கை அடிக்கும் போது , தாத்தாவின் பெயரை அறியாதவர்களே அதிகம்.

சில சமயம் ஈம சடங்கு செய்யும் போதும் தந்தை தாத்தா பெயர்களை நினைவு படுத்தி கொள்ள வேண்டிய அவசியம் ஏற்ப்படுகிறது.

இந்த மூன்று தலைமுறை பெயர்களை நினைவு படுத்தி கொள்வது ஆண்களே. பெண்களுக்கு அந்த நிலை ஏற்ப்படுவதில்லை. இந்த சமூகம் ஆண் வழி வம்சத்தை மட்டுமே நினைவுபடுத்த ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எனது வம்சம் எனது பரம்பரை பாரம்பரியமானது என்று கூறி கொள்வது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை. நாலு தலைமுறையை நினைவு வைத்து கொள்ள முடியாதவர்கள் பாரம்பரிய பெருமை பேசுவது போலித்தனம். பரம்பரை பேர் சொல்ல ஒரு மகன் வேண்டும் என்று தவமிருந்து ஆண் பிள்ளையை பெற்று கொள்ள முயற்சி செய்கின்றனர். பேர் சொல்ல பிள்ளை ஒன்று வேண்டும் என்பது பழமொழியாகி விட்டது.

மிகப்பிரபலமானவர்களின் பரம்பரையை கூட அறிய முடிவதில்லை. வெள்ளையர்கள் நம்மை ஆள வருவதற்க்கு முன்பு இருந்த மன்னர் பரம்பரையினர் இன்றைக்கும் இருப்பார்கள். அவர்களால் கூட இந்த பரம்பரையை நினைவு வைத்துக்கொள்ள முடிவதில்லை.

நாம் அனைவருமே வேர்களை தேடும் விழுதுகளாக தான் இருக்கிறோம்.

இன்றைக்கு 90 வயதை கடந்தவர்கள் அவர்கள் உருவாக்கிய  பரம்பரை வாரிசுகளை கூட நினைவுபடுத்தி கொள்ள முடிவதில்லை. அவர்கள் பெற்ற பிள்ளைகள் எத்தனை, அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் எத்தனை, அவர்களது பிள்ளைகள் எத்தனை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. 

சிலருக்கு அவரது வாரிசுகளின் எண்ணிக்கை ஐம்பதை தாண்டி விடுகிறது.
அவர்கள் அனைவரையும் இவர்களால் நினைவு படுத்திகொள்ள முடிவதில்லை. நேரில் பார்த்தாலும் இந்த வாரிசுகளின் நேர் வரிசையை அறிய முடிவதில்லை. அவர்களே அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டியுள்ளது. அனைவரையும் ஒரு சேர பார்த்தாலும் அனைவரையும் யார் யாருடைய வாரிசு என்று அறிய முடிவதில்லை.

வயது முதிர்ந்த நிலையில் நினைவு சக்தி குறைந்த காரணம் முக்கியமானதாக இருந்தாலும், வாரிசுகள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அனைவரும் கூடி குடும்ப நிகழ்சிகளில் கலந்து கொள்ளாததும்  காரணம்.

நாம் அனைவருமே விழுதுகளை தேடும் வேர்களாக தான் இருக்கிறோம்.

வேர்களை அறிவதும் விழுதுகளை அறிவதும் அவசியமாகிறது.
வேர்களையும் விழுதுகளையும் நேரில் சந்திக்க முடியாத நிலையில் குறைந்த பட்சம் அவர்களது பெயர்களையாவது அறிந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல, ஒரு ஆவனத்தை ஏற்ப்படுத்தி வைக்கலாம். குடும்ப மரம் ( FAMILY TREE) என்ற மென்பொருள் இனையத்தில் இலவசமாக கிடைக்கிறது. அதன் மூலம் முடிந்த வரை நமது  வேர்களையும் நமது விழுதுகளையும்  உருவாக்கி , நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வேர்களுக்கும் விழுதுகளுக்கும் புரிய வைக்க முயற்சி செய்யலாம்.


Monday 21 July 2014

பாரி - ஊதாரி



முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி வள்ளல்

பாரி வள்ளல் சிறிய வளமான பிரதேசத்தை ஆண்ட மன்னன் என்று கூறப்படுகிறது. 

அவர் வெளியே சென்று விட்டு வரும் போது, வழியில் முல்லைகொடி படருவதற்க்கு பிடிப்பு இல்லாமல் காற்றில் அலைந்து கொண்டிருப்பதை பார்த்து மனம் இரங்கி அந்த கொடி படர்வதற்க்காக தனது தேரை அந்த முல்லை கொடியின் அருகில் நிறுத்தி அதில் படர விட்டதாக சொல்லப்படுகிறது.

அவர் புலவர்களுக்கு வாரி வாரி செல்வத்தை வழங்கியதால் அவர் பாரி வள்ளல் என்று புகழப்பட்டுள்ளார்.

1) அவரது நாட்டுல் ஒரே ஒரு முல்லை கொடி மட்டும் தான் இருந்ததா அல்லது ஒரு கொடி மட்டும் தான் படருவதற்க்கு பந்தல் இல்லாமல் இருந்ததா அல்லது அதன் அருகில் வேறு செடி அல்லது மரம் இல்லாமல் இருந்ததா ? அது ஏன் ஒரு முல்லை கொடிக்கு மட்டும் தனது தேரை கொடுத்தார். அது போல் படர வாய்ப்பில்லாத மற்ற கொடிகளுக்கு ஏன் தேரை வழங்கவில்லை

2) அவ்வளவு இரக்க குணம் உள்ளவராக இருந்தால், அவருடன் வந்தவர்களின் உதவியுடன், மரக்கிளைகளை உடைத்து  காய்ந்த இலை தழைகளை உபயோகித்து ஒரு பந்தல் அமைக்காமல் ஏன் அவர் பயணம் செய்யும் தேரை அங்கே நிறுத்தி அதில் கொடி படர விட வேண்டும்.

3) அவர் என்னதான் வளமான நாட்டின் மன்னனாக இருந்தாலும், அவருக்கு பணம் விவசாயி அல்லது தொழிலாளி மூலமாக தான் வந்திருக்கும். வரி வசூலித்து தான் செல்வம் சேர்த்திருப்பார். உழைப்பாளிகளை சுரண்டி ( எந்த ஆட்சியாளர் வசதியாக இருந்தாலும் அல்லது தேவையற்ற செலவுகளை செய்தாலும் சுரண்டி பிழைத்தார் என்று தான் இன்றைய போராளிகள் சொல்கிறார்கள்) வசூலித்த பணத்தில் செய்யப்பட்ட தேரை இப்படி பொறுப்பற்ற முறையில் வீனாக்கிய ஒரு மன்னனை எப்படி வள்ளல் என்று கூற முடியும். அவரும் ஒரு விவசாயி அல்லது தொழிலாளி போல் உழைத்து சம்பாதித்திருந்தால் இது போன்ற செய்கையை செய்வாரா.

ஒரு வேளை அவரது தேர்  வரும் வழியில் அச்சு முறிந்து அதை மேற்கொண்டு செலுத்த முடியாத நிலையில் அதை ஓரத்தில் நிறுத்தி விட்டு , குதிரை மூலம் ஊர் திரும்பியிருக்க கூடும்.

அந்த தேர் மீது அருகில் இருந்த முல்லைகொடி படர்ந்திருக்கும். அதை பார்த்த புலவன் , வஞ்சப் புகழ்ச்சியாக ( நக்கலும் நையாண்டியாக ) அதை சொல்லி மன்னன் முன் பாடி பரிசு பெற்றிருக்கலாம்.

அவர் புலவர்களுக்கு வாரி வழங்குபவர். வஞ்சப்புகழ்ச்சியை புரிந்து கொண்டோ அல்லது புரியாமலோ பரிசை வழங்கியிருக்கலாம். அல்லது இப்படி எழுதி வைத்ததை அவர் அறியாமல் இருந்திருக்கலாம். பின்பு மற்றவர்கள் கையில் கிடைத்து இன்று நாம் அதை படித்து கொண்டிருக்கலாம். 

வஞ்சப்புகழ்ச்சியை அல்லது பொறுப்பற்ற ஊதாரிதனமாக செலவு செய்த மன்னனை நாமும் பெருமையுடன் கூறி நமது மன்னர்கள் எத்தகைய வள்ளல்கள் என்று பெருமை பட்டுக்கொண்டிருக்கிறோம்.

மன்னனை புகழ்ந்து பாடிய புலவர்களுக்கெல்லாம் வாரி வழங்கினார் என்பது சரி. இந்த புலவர்கள் என்றும் உண்மையை சொல்வதில்லை. கற்பனையாக இட்டுக்கட்டி புகழ்ந்து பாடுவது. அந்த மன்னர் ஒன்றும் செயற்கரிய சாதனைகள் செய்ததாக குறிப்புகள் இல்லை. பாரி வள்ளல் என்று மட்டும் தான் குறிப்பிடப்படுகிறது.

இன்றைய கால வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், ஜால்ரா போட்டவர்களுக்கு காசை வாரி இறைத்துள்ளார். உழைத்து சம்பாதித்த காசாக இருந்தால் இப்படி செய்வாரா. இப்படி பொறுபில்லாமல் நடந்து கொண்ட மன்னனை இன்றைக்கும் வள்ளல் என்று புகழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு அறியாமை.

இன்றைய ஆட்சியாளர்கள் தங்களை புகழ்ந்து பாடும் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பாராட்டி சில சலுகைகளை அளித்தால் அதை ஏன் மக்கள் வசைபாடுகிறார்கள். இவர்களையும் வள்ளல் என்று கூறி பெருமைபட வேண்டியது தானே.


Monday 14 July 2014

மனிதர்களும் நாயை போல புண.......................



தர்மர் : அர்ஜூனா, அர்ஜூனானானா அர்ஜூனா எங்கே இருக்கிறாய். சீக்கிரம் இங்கே வா.

அர்ஜூனன் : வணங்குகிறேன். தாங்கள் என்னை அழைப்பதாக பணிப்பெண் வந்து கூறினாள். விரைந்து வந்தேன்

தர்மர்: என்ன பணிப்பெண் கூறினாளா அல்லது நீ சல்லாபம் செய்துகொண்டிருந்த பணிப்பெண் நான் அழைப்பதாக கூறினாளா. பராவயில்லை அதனால் பாதகம் ஒன்றுமில்லை. அழைத்தவுடன் ஆர அமர வந்ததற்க்கு நன்றி அர்ஜூனா.

அர்ஜூனன் : தாங்கள் ஏன் என் மீதும் சினம் கொண்டுள்ளீர்கள் என தெரியவில்லை. என்ன தவறு செய்து விட்டேன். அதை சற்று கூறினால் எனது தரப்பு வாதங்களை வைக்க சரியாய் இருக்கும்.

தர்மர்: ஓ உனது தரப்பு வாதங்கள் என்று கூறி உனது செய்கைகளை நியாயப்படுத்துவாய் அப்படி தானே.

அர்ஜூனன் : நீங்கள் இன்னமும் காரணம் கூறாமல் சினம் கொண்டிருந்தால் எனக்கு என்ன புரியும்.

தர்மர் : ஆமாம் ஆமாம் உனக்கு ஒன்றும் புரியாது. நீ செய்த காரியத்தால், இன்று பூலோகத்தில் அக்கிரமம் நடந்து கொண்டிருகிறது. அதற்கு நீ தான் காரணம் என்பதை நீ அறிய மாட்டாயா ?

அர்ஜூனன் : பூலோகத்தில் நிறைய அக்கிரமம் நடக்கிறது. எதை என்று தெளிவாக கூறுங்கள்.

தர்மர்: விளையாடாதே அர்ஜூனா. உனக்கு தெரியாது என்பதை நான் நம்பமாட்டேன்.

அர்ஜூனன் : புரிந்து விட்டது இப்போது புரிந்து விட்டது ஆமாம் அண்ணா என் பெயரில் வழங்கப்படும் விளையாட்டு விருதுகளில் முறைகேடு நடப்பதாக நானும் கேள்விப்பட்டேன். அதற்கு நான் என்ன செய்ய முடியும். அந்த விருதின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது என்றும் அதனால் அனைவராலும் வாங்க முடியவில்லை என்றும் கேள்விப்பட்டேன். அதனால் தான் இந்தியாவிலிருந்து உலக கால்பந்து போட்டிக்கு யாரும் தகுதி பெறவில்லை என அறிந்தேன்.

அண்ணா, அதற்கும் நீங்கள் என்னை கோபித்து கொளவதற்க்கும் என்ன சம்மந்தம். நான் யாருக்கும் விருது வழங்க சிபாரிசு செய்வதில்லை. அவர்களும் அந்த பணத்திலிருந்து எனக்கு பங்கு எதுவும் தருவதில்லை. அப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை கோபிக்க வேண்டும்.

தர்மர்: ஓ இப்படி ஒரு விசயம் நடந்து கொண்டிருக்கிறதா. இது எனக்கு தெரியாதே.

அர்ஜூனன் : நீ நீங்கள் இந்த விசயத்துக்காக கூப்பிடவில்லையென்றால் எதற்காக கூப்பிட்டீர்கள். விசயத்தை சொல்லாமல், தொலைகாட்சி மெகா தொடர் போல வசனங்களை கூறிக்கொண்டிருந்தால், உங்கள் மீது ஃபோகஸ் லைட் அடித்து உங்கள் முகத்தில் உணர்ச்சிகளை கொண்டு வந்து காட்ட அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். நீங்கள் கூப்பிட்ட விசயத்தை முதலில் சொல்லுங்கள்.

தர்மர்: நீ அன்று சற்றும் யோசிக்காமல் கொடுத்த சாபத்தினால், இன்று உலகத்தில் அக்கிரமம் தலை விரித்தாடுகிறது. நான் அதைப்பற்றி கூறினேன்.

அர்ஜூனன் : அண்ணா அண்ணா இதற்கு தான் இத்தனை கோபமா . இன்று உலகத்தில் கூந்தலை பின்னி பூ முடிப்பது இல்லை. தலையை விரித்து போட்டு கொண்டு இருப்பது தான் நாகரிகம் என்று அதை அனைத்து பெண்களும் கடைப்பிடிக்கிறார்கள். அது உங்களுக்கு தலை விரித்து ஆடுவது போல் தோன்றுகிறது.

அண்ணா நாம் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. அதற்கான அதிகாரம் நமக்கு இல்லை. அதுவுமில்லாமல், நமது மனைவி பாஞ்சாலி தலையை முடிய மாட்டேன் என்று சபதம் செய்த போது , கூந்தலை அள்ளி முடிய வேண்டும் என்று நம்மால் கூறமுடியாமல் மௌனமாக தானே இருந்தோம். அப்படியிருக்கும் போது , இப்போதைய பெண்களை நாம் எப்படி கட்டுப்படுத்த முடியும். அவர்கள் நம்மை எதிர் கேள்விகள் கேட்பார்கள்.

தர்மர்: அர்ஜூனா, நீ தெரிந்து பேசுகிறாயா அல்லது தெரியாமல் பேசுகிறாயா என்று புரியவில்லை. நான் அதைப்பற்றி கூறவில்லை. நான் சொல்வதை நீ புரிந்து கொள்ளாமல், நீ சொல்வதை நான் புரிந்து கொள்ளாமல் இப்படியே பேசிக்கொண்டிருந்தால், இதைப்படிப்பவர்கள் வேறு ஒரு பதிவுக்கு சென்று படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நான் சொல்வதை புரிந்து கொள்.

நீ பைரவனுக்கு கொடுத்த சாபம் நினைவிருக்கிறதா. அந்த சாபத்தினால், பைரவர்கள் மட்டுமல்ல மனிதர்களும் அந்த சாபத்தால் பீடிக்கப்பட்டு நிறைய தவறுகள செய்ய ஆரம்பித்துவிட்டனர். இன்று அனைவரும் பயத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர். அன்று பெரியப்பா கண் தெரியாத காரனத்தால் எனக்கு எந்த அநியாயமும் தெரியவில்லை என்று சும்மா இருந்தார் அதை போலவே இன்று அரியனையில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவர்களால் தான் பாதிப்பு ஏற்ப்படுகிறது என்று கூறி அவர்களே கூட இந்த தவறுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு வேண்டுமானல் இப்படி தவறுகள் நடப்பதற்க்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருக்கலாம் . ஆனால் எனக்கு நிச்சியமாக தெரியும். இந்த தவறு நடப்பதற்க்கு நீ கொடுத்த சாபம் தான் காரணம்.

அர்ஜூனன் : அண்ணா. சற்று அமைதியாய் இருங்கள் நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை. இப்படி கோபப்பட்டால், ரத்த கொதிப்பு அதிகமாகும். பாஞ்சாலிக்கு நான் பதில் சொல்ல நேரிடும். மருத்துவர்கள் மாத்திரை கொடுத்து விட்டு, ரத்த கொதிப்புக்கு மாத்திரை சாப்பிட ஆரம்பித்து விட்டால் ஆயுள் முழுவது சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி சொல்வதால் அவர்களுக்கு ஆதாயம் இருக்கிறது. நமக்கு செலவு தான் ஆகும். எனவே, பொறுமையாய் என்ன நடந்தது என்று சற்று விரிவாக கூறுங்கள்

நான் என்ன சாபம் கொடுத்தேன். யாருக்கு கொடுத்தேன். எப்போது கொடுத்தேன். ஏன் கொடுத்தேன். எப்படி கொடுத்தேன். சாபம் கொடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது. அப்போது நீங்கள் ஏன் தடுக்கவில்லை. இவற்றையெல்லாம் கூறாமல், என் மீது கோபம் கொள்வது தவறு. மூத்த தமையன் என்பதால் பொறுத்து கொண்டிருக்கிறேன்.

தர்மர்: அர்ஜூனா என் பொறுமையை சோதிக்காதே. அனைத்துக்கும் காரணம் நீ.  இன்று ஒன்றும் தெரியாதது போல் என்னிடமே பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கிறாய்.

நாம் ஐவரும் அன்னையின் சொல் கேட்டு பாஞ்சாலியை மணந்து கொண்டது நினைவிருக்கிறதா

அர்ஜூனன் : ஆம் அண்ணா, நன்றாக நினைவிருக்கிறது. பாஞ்சாலியை பார்த்தவுடனேயே நான் அவளை மணந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நாம் பாஞ்சாலியை அன்னை குந்தியிடம் அழைத்து வந்தோம். அவர் என்னை மணந்து கொள்ள அனுமதிப்பார் என நினைத்திருந்தேன். ஆனால், அவர் சற்றும் யோசிக்காமல், ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார். வேறு வழியில்லாம் நாம் ஐவரும் மணந்தோம். அதனால் என்ன. அது நடந்து முடிந்த கதை. இப்போது ஏன் நினைவு படுத்துகிறீர்கள்.

தர்மர்: நீ அவளை மணக்க நினைத்திருந்த விசயம் இப்போது தான் எனக்கு தெரிகிறது. அன்னையிடம் சொல்லி நீ மட்டுமே மணந்திருக்க வேண்டியது தானே.

அர்ஜூனன் : நானும் முதலில் அப்படி தான் நினைத்தேன். ஆனால், ஐவரும் மணந்தால் அவள் எனக்கு நான்கு மனைவியாக இருப்பாள் என்ற காரணத்தால் , ஐவரும் மணக்க சம்மதித்தேன்.

தர்மர்: அர்ஜூனா, என்ன உளறுகிறாய். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அர்ஜூனன்: புரியும் படி சொல்கிறேன் கேளுங்கள். நான் அவளை மணப்பதால் அவள் எனக்கு ஒரு முறை மனைவியாகிறாள். நீங்களும் பீமனும் அவளை மணப்பதால், அவள் எனக்கு இரண்டு முறை அண்ணியாகிறாள். அண்ணன் பெண்டாட்டி அரை பெண்டாட்டி என்பார்கள். அந்த கணக்கு படி இரண்டு அரை மனைவியாகிறாள். நகுலனும் சகாதேவனும் தம்பிகள் அவர்களும் பாஞ்சாலியை மணக்கிறார்கள். தம்பி பொண்டாட்டி தனக்கும் பொண்டாட்டி என்பார்கள். அதன் மூலம் இரண்டு தம்பி பொண்டாட்டிகளை அடைகிறேன். எனவே, இரண்டு தம்பி பொண்டாட்டிகளாகவும், இரண்டு அரை பொண்டாட்டிகளாகவும், நான் மணப்பதால் ஒரு முறையும் மொத்தம் 4 பெண்டாட்டியாக மாறினாள். இது ஒரு சந்தோசத்தை கொடுத்ததால் ஐவரும் மணக்க சம்மதித்தேன்.

தர்மர்: சரி விடு. அந்த கணக்கும் எனக்கும் சரியாய் தான் இருக்கிறது.

நான் சொல்ல வந்தது அதுவல்ல. நாம் பாஞ்சாலியை மணந்த ஆரம்ப காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை கூறுகிறேன். நமக்குள் நடந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை எற்ப்படுத்திகொண்டோம். அதன் படி நடந்து கொண்டிருக்கையில் பைரவன் தனது காதல் மனைவியின் மோகம் பிடித்து சுற்றி கொண்டு செய்த செயலால் நாம் அனைவரும் சங்கடத்துக்கு உள்ளானோம். அந்த சமயம் நீ கோபம் கொண்டு பைரவனுக்கு கொடுத்த சாபம் நினைவிருக்கிறதா ? அதனால் இன்று உலகத்தில் பாதகம் ஏற்ப்பட்டுள்ளது. அதை தான் உனக்கு இவ்வளவு நேரமாக நினைவு படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். நீ வேறு எதை எதையே கூறி முன்பு நான் அறியாத விசயத்தை எல்லாம் கூறிக்கொன்டிருக்கிறாய்.

அர்ஜூனன் : அண்ணா எனக்கு நினைவுக்கு வரவில்லை. சற்று பொருங்கள் வருகிறேன்.

தர்மர்: அர்ஜூனா நான் இங்கு மிகவும் மன வேதனையுடன் பேசிக்கொண்டிருக்கும் போது , நீ சுபத்திரையை தேடிச் செல்வது என்னை அவமானப்படுத்துவதற்க்கு சமம்.

அர்ஜூனன் : அண்ணா, சற்று பொறுங்கள். எப்போதும் யோசிக்காமல் பேசுகிறீர்கள். யார் பேச்சையும் கேட்காமல் உங்கள் விருபப்படி செய்ததால் தான் அன்று நீங்கள் சூதில் அனைவருக்கும் பொதுவான பாஞ்சாலியை எங்களை கேட்காமல் சூதில் பணயம் வைத்தீர்கள். அதனால் பட்ட துன்பம் போதும். சற்று பொருமையாய் இருங்கள் வருகிறேன்.

அர்ஜூனன்  எதோ ஒரு வளையத்துடன் வந்து தரையில் வைத்து, லைட்டரால் அதை பொருத்துகிறான்.

தர்மர்: அர்ஜூனா என்ன இது. புதிதாக இருக்கிறது. புகை வருகிறது. எப்படி இதை பற்ற வைத்தாய். கையில் என்ன இருக்கிறது அதிலிருந்து தீ எப்படி வந்தது. எல்லாம் புதிதாக இருக்கிறது. இதை எல்லாம் எங்கிருந்து கற்றுக்கொண்டாய். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு தெரியாமல் இங்கு என்னவெல்லாமோ நடந்து கொண்டிருக்கிறது. அர்ஜுனா சொல் இதெல்லாம் என்ன. ஏன் புகையை கிளப்புகிறாய்.

அர்ஜுனன் : அண்ணா எத்தனை கேள்விகளை ஒரே மூச்சில் கேட்பீர்கள். வளையமாக இருப்பது கொசு வத்தி சுருள். அதை பற்ற வைத்தால் புகை வரும் அந்த புகையை கண்டதும். கொசுக்கள் ஓடி விடும். ஆனால், உலகத்தில் பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வரும் போது இதன் மூலம் வரும் புகையை கான்பித்து , முந்தைய நிகழ்சிகளுக்கு போவது போல காண்பிப்பார்கள். நானும் அதை தான் செய்கிறேன். நீங்கள் கூறும் நிகழ்சி எனக்கு நினைவு வரவில்லை. இந்த புகை சுற்றி சுற்றி செல்லும் போது, நானும் முற்பிறவிக்கு சென்று பழைய நினைவுகளை கொண்டு வருவேன்.

தர்மர்: அது சரி. தீ எங்கிருந்து வந்தது. அது என்ன லைட்டர். அது எதற்கு இங்கு வந்தது.

அர்ஜுனன். அண்னா பூலோகத்தில் மக்கள் சிகிரெட் பிடிக்க, அதற்கு தீ மூட்ட இதை தான் பயன்படுத்துகிறார்கள்.

தர்மர்: சிகிரேட்டா. அது என்ன . அதை ஏன் தீ மூட்ட வேண்டும். அதனால் பயன் என்ன ?

அர்ஜுனன். சிகிரெட் என்றால் ஒரு போதை வஸ்து. . இதை வாயில் வைத்து ஒரு முனையில் தீயை வைத்து , காற்றை உள் இழுத்தால், புகை வாய்க்குள் போகும். புகையை உள்ளே இழுத்து நுரையீரல் வரை எடுத்து சென்றால், ஒரு விதமான மயக்க நிலை போன்று ஏற்ப்படும். பின்பு புகையை மூக்கின் வழியாகவும் வாய் வழியாகவும் வெளியேற்ற வேண்டும். அதை சுருள் சுருளாக கூட வெளியேற்றும் திறமையை இன்றைய மானிடர்கள் பெற்றுள்ளனர். இந்த ஊதுகுழலை தூக்கி போட்டு வாயில் பிடித்து அதில் தீயை மூட்டி புகை விட்டதன் மூலம் ஒருவர் மிகவும் பிரபலமடைந்து பெரும் பணக்காரர் ஆகியுள்ளார். நாம் சோமபானம் சாப்பிடும் போது ஒரு வித மயக்க நிலை ஏற்ப்படுமே அது போன்று ஏற்படும். அதற்காக தான் இந்த ஊதுகுழலை மக்கள் பயன் படுத்துகின்றனர். இந்த லைட்டரின் ஒரு முனையை ஒரு பக்கமாக அழுத்தினால் மறுபுறம் தீ ஜூவாலை வெளிவரும்.

தர்மர்:. அட இது கூட நன்றாக தான் இருக்கிறது. சரி இது என்னிடமே இருக்கட்டும். வேள்வி நடத்தும் போது, சிக்கி முக்கி கல்லால் தீயை உண்டு பண்ண சிரமும் உண்டாகிறது. இனிமேல் இதை உபயோகித்து கொள்கிறேன்.

அர்ஜுனா இப்போது உனக்கு பழைய நினைவுகள் வருகிறதா

அர்ஜுனன்: அண்ணா, சற்று பேசாமல் இருங்கள். பழைய நினைவுகளில் சென்ற பிறகு நானே பேசுகிறேன்.

அர்ஜுனனும் தருமரும் முற்பிறவிக்கு சென்றனர்.

பாஞ்சாலி : பாண்டவர்களே, உங்கள் அன்னையின் சொற்படி நீங்கள் ஐவரும் என்னை மணந்து கொண்டீர்கள். பாதகமில்லை. ஆனால், நீங்கள் ஐவரும் என்னை புணருவதற்க்கு ஒரு சேர முதல் ஜாமத்தில் வருவதில் பிரச்சனையாக உள்ளது.

அனைவர் எதிரிலும் ஒருவர் புணர மற்றவர்கள் தங்கள் முறைக்காக அங்கேயே காத்திருந்து அதை கண்டுகொண்டிருப்பது எனக்கு பிடிக்கவில்லை. மேலும், நீங்கள் ஐவரும் ஒருவர் பின் ஒருவர் புணர்ந்தாலும் என் உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை.

எனவே ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் என்னை புணரலாம். யார் முதல் ஜாமத்தில் முதலில் வருகிறீர்களோ அவருடன் மட்டுமே அன்றைய இரவை கழிப்பேன்.

தருமர்: யார் உள்ளே இருக்கிறார்கள் என்பதை எப்படி அறிவது. சயன அறை வாசலில் காவலர்கள் இல்லை. எப்படி அறிவது.

பாஞ்சாலி : யார் முதலில் வந்தாலும், அவர்களது பாதுகையை சயன அறை வாசலில் விட்டு விட்டு வர வேண்டும். அடுத்து வருபவர் அதை பார்த்து விட்டு திரும்பி போய் விட வேண்டும்.

ஏற்கனவே நாட்டில் ஐவரை மணந்தவள் பத்தினியா பரத்தையா என்று விவாதித்து கொண்டிருக்கிறார்கள். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒருவருக்கு தான் சுகம் தருகிறேன் என்று கூறிஒருவனுக்கு ஒருத்தி என்ற சொல்லுக்கு புதிய இலக்கணம் வகுக்க வழி பிறக்கும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

அர்ஜுனன் : ஆகட்டும் பாஞ்சாலி. உன் கட்டளைப்படியே நடந்து கொள்கிறோம். உனது விருப்பமே எங்களது விருப்பம்.

பீமன்.  பாஞ்சாலி, ஒரு விண்ணப்பம். நீ அனைவரையும் சமமாக நடத்தி இன்பம் தர வேண்டும்.

தருமர்: என்ன பீமா. நீ சொல்வதில் ஏதொ சூட்சுமம் இருப்பது போல தோன்றுகிறது. ஏதும் பிரச்சனையா ?

பீமன் : அதெல்லாம் ஒன்றுமில்லை அண்ணா. சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதனால் சொன்னேன்.

பாஞ்சாலி : சரி எல்லோரும் கலைந்து செல்லுங்கள். உங்கள் அன்னை குந்தி தேவி வருகிறார். விரைந்து கலைந்து செல்லுங்கள்.

குந்தி : என்ன பாஞ்சாலி, உன் கண்வர் ஐவரும் ஒரு சேர வெளியேறிகொண்டிருக்கிறார்கள். ஏதேனும் முக்கிய முடிவு எடுக்க அவர்களை அழைத்தாயா அல்லது அவர்களால் ஏதேனும் பிரச்சனையா ? தயங்காமல் சொல். என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.

பாஞ்சாலி: ஒன்றுமில்லை. பிரச்சனைக்கு தீர்வு கண்டாகிவிட்டது.

குந்தி : என்ன பிரச்சனை. என்ன தீர்வு. தயங்காமல் சொல். நானும் தெரிந்து கொள்கிறேன்.

பாஞ்சாலி  அனைத்தையும் விவரமாக கூறுகிறாள்.

குந்தி: சரியான முடிவைதான் எடுத்திருக்கிறாய். அனைவரும் உன்னை சந்தோசப்படுத்துகிறார்கள் தானே.

பாஞ்சாலி : ம்ம் ஏதொ படுத்துகிறார்கள்.
குந்தி: என்ன பாஞ்சாலி சலிப்பாக கூறுகிறாய். ஐவரை மணந்தவள் . காமசூத்திரத்தை கரைகண்டிருப்பாய். பின்பு ஏன் இந்த சலிப்பு.

பாஞ்சாலி: என்னத்தை சொல்ல.  நகுலனும் சகாதேவனும் வந்தவுடன் பால் அருந்தும் போதே கசிந்து விடுகிறார்கள். பின்பு படுத்து விடுகிறார்கள். அவர்கள் வேறு எங்காவது சென்று படுத்தாலவது அர்ஜூனனை அழைக்கலாம். இவர்கள் எழுந்து விடுவார்களோ என்ற பயத்தில் அர்ஜூனனை அழைக்க முடியாமல் தனிமையில் தவிக்க வேண்டியுள்ளது.

பீமன் வரும் அன்று, நன்றாக மூக்க முட்ட சாப்பிட்டு விட்டு வந்தவுடன் படுத்து கொள்கிறார். அப்படியே அவர் ஏதும் செய்தாலும் அவர் எடையை என்னால் தாங்க முடிவதில்லை. எந்த நிலையிலும் ஏதும் செய்ய முடிவதில்லை. இவர் கோபக்காரர். எனவே இவர் உள்ளே இருக்கும் போதும் அர்ஜுனனை கூப்பிட முடிவதில்லை.


தருமர் வருகிற அன்று மகிழ்சியாக தான் இருக்கிறது. ஆனால், சொர்க வாசல் திறந்தவுடன், பள்ளி கொண்ட ரங்கநாதரின் தரிசனம் கிடைத்து விட்டது என்று தொட்டு கும்பிட்டு விட்டு படுத்து விடுகிறார். அன்றும் நான் பட்டினியாக தான் இருக்க வேண்டியுள்ளது.

குந்தி: என்ன பாஞ்சாலி, தருமரை பற்றி கூறிவிட்டு அர்ஜுனனை அழைக்க முடியவில்லை என்று புலம்பாமல் விட்டு விட்டாய்.

பாஞ்சாலி: அப்படியில்லை. அடுத்து அவரை பற்றி கூற போவதால், அலுத்துக்கொள்ளவில்லை. அவரை நினைத்த மாத்திரத்திலேயே என் உடலில் வெப்பம் ஏறுகிறது.

அவர் வரும் நாளை எப்போதும் நான் ஆவலுடன் காத்திருபேன்.  அன்று எனது சயன அறையை காலையிலிருந்தே அலங்கரித்து விடுவேன். மாலையில் என்னை அழகுப்படுத்தி கொண்டு, அறை முழுவதும் அகிற் புகையை எழுப்பி, வாசனை திரவியங்களை கொண்டு சயன அறையை நான் வைத்திருக்கும் முறையை பார்த்தால், திருநங்கைகள் கூட பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவார்கள்.

அர்ஜுனன் மட்டுமே முதல் ஜாமத்திலிருந்து வெள்ளி முளைக்கும் வரை சளைக்காமல் சரசமாடுவார். எனது அத்தனை நரம்புகளையும் மீட்டுவார். ஆனந்த யாழ் மீட்டுவார். அவரது முதிர்ந்த புல்லாங்குழல் கூட ஆனந்த தாண்டவமாடும்.

ஒற்றை துளை புல்லாங்குழலில் இசை கசிந்து  எனது பொற்றாமரை குளத்தில் கவிதைகளால் நிரப்பி வழிந்தோட செய்வார். சில நாட்கள் எனது வேண்டுகோளுக்கினங்கி மீண்டும் கவிதைகளால் நிரப்பி பழுதில்லா காவியம் படைப்பார்.

குந்தி: பாஞ்சாலி நிறுத்து. நான் ஆடை மாற்றிக்கொண்டு ஆலயம் செல்ல வேண்டும். போய் வருகிறேன்.

பாஞ்சாலி: அத்தைக்கு மகாராஜா பாண்டுவின் நினைவு வந்து விட்டது போலிருக்கிறது.. ஒ அர்ஜுனன் வரும் நேரமாகிவிட்டது.

வா அர்ஜுனா வா. உனக்காக எனது உடலும் உள்ளமும் காத்திருக்கிறது. என்னை காக்க வைப்பதில் உனக்கு ஏன் இத்தனை இன்பம். இனி பேச நேரமில்லை.

அதற்கு மேல் நடந்தவைகளை, காமசூத்திரம் எழுதியவன் கூட அறிய மாட்டான்.

பொற்றாமரை குளத்தில் இறங்க முயன்ற நேரத்தில், மிகுந்த ஆரவாரத்துடன் பீமன் உள்ளே நுழைந்தான். அதிர்ச்சியுற்ற இருவரும் விலகினர். கவிதை சிந்தியது.

அர்ஜுன்ன்: பீமா, என்ன இது. நானும் பாஞ்சாலியும் தனித்திருக்கும் போது ஏன் உள்ளே வந்தாய். நாம் விதித்துள்ள கட்டுப்பட்டை ஏன் மீறினாய்.

பீமன்: நான் கட்டுப்பாட்டை மீறவில்லை.  சயன அறையில் யாரும் இல்லையென்பதற்க்காக தான் நான் உள்ளே வந்தேன். நீ தான் பாதுகையை வெளியே வைக்காமல் உள்ளே வந்துள்ளாய். இதில் என் தவறு ஏதுமில்லை.

அர்ஜுனன்: பொய் சொல்லாதே பீமா. நான் பாதுகையை வெளியே வைத்து விட்டு தான் வந்தேன்

பீமன்: வாருங்கள் நீங்களே வந்து பாருங்கள். அங்கு பாதுகை இல்லை. இருவரும் வெளியே வந்தனர்

அந்த சமயம் தருமர் , தனக்கு இன்று வாய்ப்பு கிடைக்குமா என பார்க்க வந்திருந்தார். இருவரது சண்டையையும் கேட்டு என்ன என்று விசாரித்தார். அர்ஜுனன் பீமன் மீது பழி சொல்லி அவனை தண்டிக்க வேண்டும் என வாதாடினார்

தர்மர்: அர்ஜுனன் சொல்வது உண்மையென்றால் பாதுகை எங்கே

அர்ஜுனா, உன் பாதுகை எங்கேயிருக்கிறது என்று உன் அகக் கண்ணால் பார் என்றார்.

அர்ஜுனன் : அண்ணா, எனது பாதுகையை பைரவனும் அவண் மனைவியும் வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழைக்கிறேன். நீங்களே விசாரியுங்கள்.

பைரவனும் அவனது மனைவியும் வருகிறார்கள்.

தருமர்: பைரவா, அர்ஜுனனின் பாதுகையை ஏன் எடுத்து சென்று விளையாடிக்கொண்டிருக்கிறாய். அதனால் இங்கு விளைந்த விபரீதத்தை அறிவாயா என கேட்டார்.

பைரவன்: பிரபு, பாதுகை இங்கு இருப்பதின் அர்த்தம் எங்களுக்கு தெரியாது. தெரியாமல் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும்.

அர்ஜுனன் : அண்ணா, நீங்கள் மன்னித்தாலும் நான் மன்னிக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் நான்.

இனி இவர்கள் இந்த பூலோகத்தில் நாய் என்று அழைக்கப்படுவார்கள்.  இவர்கள் வீட்டுக்கு வெளியெ தெருவில் தான் அலைந்து கொண்டிருக்க வேண்டும். நான் பாஞ்சாலியை புணரும் போது, எனது தமையன் பார்க்க நேர்ந்தது. இனி இந்த பைரவனும், ஏன் அனைத்து பைரவர்களும் , தெருவில் பலர் அறிய புர வேண்டும். அதை அங்குள்ள அனைவரும் பார்க்க வேண்டும் என சாபமிடுகிறேன்

அதை பார்க்க நேரும் மனிதர்களும் நாயை போல புணர்ந்து இன்பம் பெறுவார்கள்.

பைரவன் : அர்ஜுனரே, தெரியாமல் செய்த பிழைக்கு இப்படியொரு சாபமா. சாப விமோசனம் அளித்து மன்னித்தருளுங்கள்.

தர்மர்: அர்ஜுனா பைரவன் தெரியாமல் பிழை செய்து விட்டான். அவனுக்கு சாப விமோசனம் வழங்கு.

அர்ஜூனன்: சாப விமோசனம் வேண்டுமா. கலியுகத்தில்……………..

பாஞ்சாலி : அர்ஜுனா, என்ன இது ஆடை கூட அணியாமால் அனைவர் முன்பும் அம்மணமாய் வெளியே நிற்கிறாய். உள்ளே வந்து ஆடை அணிந்து செல்.

அர்ஜுனன்.: அர்ஜுனன் அப்போது தான் உணர்ந்தான். ஆடை இல்லாமல் அனைவர் முன்பும் இது வரை நின்று கொண்டிருந்தது குறித்து வெட்கப்பட்டு உள்ளே போனான். போனவன் வெளியே வரவில்லை.

பைரவன்: தர்மரே, அர்ஜுன்ன் வெளியே வரவில்லை. எனது சாப விமோசனம் என்னவென்று சொல்லவில்லை. நான் என்ன செய்வது.

தர்மர்: பைரவா, ஒன்றும் செய்ய இயலாது, காலம் தான் உனது சாப விமோசனத்தை நிர்னயிக்கும்.

அர்ஜுனனும் தருமரும் நிகழ்காலத்துக்கு வருகின்றனர்:

தர்மர்: அர்ஜுனா இது தான் நீ கொடுத்த சாபம். இதனால் இன்று பூமியில் பல முறைகேடுகள் நடக்கின்றன.

அர்ஜுனன் : அண்ணா எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அன்று நான் பைரவனுக்கு கொடுத்த சாபத்திற்க்கும் இன்று பூமியில் நடக்கும் முறைகேடுகளுக்கும் என்ன சம்மந்தம்.

தர்மர்: அர்ஜூனா, மீண்டும் அகக் கண்ணால் பூமியில் என்ன நடக்கிறது என்று பார். குறிப்பாக ஆண் பெண் உறவுகளை பார். உன்னுடன் சேர்ந்து நான் பார்க்க முடியாது. நீ தனியாக பார். நான் பாஞ்சாலியை கடைத்தெரு வரை அழைத்து சென்று வருகிறேன். இப்பொதெல்லாம் அவள் கூந்தலை முடிவதில்லை. கடைத்தெருவில் கிளிப் என்று ஒன்று வந்துள்ளது. அதை வாங்கி மாட்டிக்கொள்கிறாள். மேலும் ஒப்பனை பொருட்கள் வாங்க வேண்டும். இப்போது நமக்கு வருமானம் இல்லை. முன்பாவது ராஜமானியம் கொடுத்து கொண்டிருந்தார்கள் இப்போது நிறுத்தி விட்டார்கள். ஆனால், பாஞ்சாலி அதை புரிந்து கொள்வதில்லை.

அர்ஜுனன் மீண்டும் பூலோகத்தை பார்க்கிறார்

பாரத தேசம் முழுவது பார்க்கிறார். ஆண் பெண் உறவு சரியாக தான் நடக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்று தானே நடக்கிறது. ஏன் தருமர் இவ்வளவு கோபப்பட்டார் என்று புரியாமல் மீண்டும் கவனமாக பார்க்கிறார்.

வாலிப வயது ஆணும் பெண்ணும் திருமண சடங்கு இல்லாம உறவு கொள்வதை பார்க்கிறார். ஆனால், நமது காலத்திலும் இவ்வாறு தானே இருந்தது. நாம் அதை கந்தர்வ திருமணம் என்று ஏற்றுக்கொண்டோமே இதில் என்ன தவறு என்று நினைத்து வேறு இடம் பார்த்தார்.

பரத்தையர் வாழும் இடங்களில் பலரும் பலவிதமாக உறவு கொள்வதை பார்த்தார். இதில் ஒன்றும் தவறில்லையே அது அவர்களது குழத்தொழில். இதில் என்ன தவறு கண்டார் தருமர் என்று வேறு புறம் பார்த்தார்.

மக்கள் அனைவரும் ஒரு சிறு பெட்டியின் முன் உட்கார்ந்து, உறவு கொள்ளும் முறைகளை ஆவலுடன் பார்ப்பதை கண்டார். அர்ஜுன்ன் , அட பூமியில் எவ்வளவு முன்னேற்றம். நாம் கடுமையான குருகுல பயிற்சிக்கு பின்பு அகக் கண்ணால் கண்டதை இவர்கள் இவ்வளவு எளிமையாக பார்க்கிறார்களே என வியந்தார். இது போல் ஒரு பெட்டியை நாமும் வாங்க வேண்டும் என நினைத்துக்கொண்டார்.

ஆணும் ஆணும் புனருவதை கண்டார். இதுவும் முன்பு இருந்தது தானே. இவ்வாறு தானே சுவாமி ஐயப்பன் தோன்றினார். இதில் என்ன தவறு என நினைத்தார்.

ஒரு பூங்காவில் வெட்ட வெளியில் பல ஆண்கள் ஒரு பெண்ணை புணருவதை கண்டார். இப்போதும் பாஞ்சாலி போல பல பெண்கள் இருக்கிறார்கள் என நினைத்தார். ஏன் இந்த ஆண்கள் நம்மை போல முறை வைத்து ஒரு நாளைக்கு ஒருவராக புணராமல் எல்லோரும் ஒரே நேரத்தில் புணருகிறார்கள். அதுவும் அந்த பெண் மறுப்பு தெரிவித்து கூச்சல் போடும் போது, மேலும் அந்த பெண்ணை ஏன் கொன்று விடுகிறார்கள் என குழம்பினார்.

நாய்கள் நாம் சாபம் கொடுத்த்து போல புணருகின்றன என்று திருப்தியடைந்தார்.

அந்த நேரத்தில் தருமர் திரும்பி வந்தார். 

தருமர்: என்ன அர்ஜுனா, நடக்கும் அநியாயங்களை பார்த்தாயா. உன் செயலின் விபரீதம் புரிந்ததா என கேட்டார்.

அர்ஜுனன் : அண்ணா நடக்கும் நிகழ்சிகளை பார்த்தேன். இதில் என் சாபத்தின் மூலம் என்ன தவறு நடக்கிறது என புரியவில்லை.

தருமர்: பூலோகத்தில் ஒரு பெண் நாய்க்கு பின்னால் பல ஆண் நாய்கள் செல்கிறது. பெண் நாயுடன் ஒரு ஆண் நாய் புணரும் போது மற்றவை விலகி விடுகின்றன. தொடர்ச்சியாக எல்லா ஆண் நாய்களும் புணருவதில்லை. ஆனால், மனிதர்களும் நாய்களை போல புணருவார்கள் என்று சாபமிட்டாய்.

ஆனால், மனிதர்கள் நாய்களை போலவே ஒரு பெண்ணை துரத்தி சென்று  பெண்ணை புணருகிறார்கள். ஆனால், எல்லோரும் செய்கிறார்கள். நாய்கள் அவ்வாறு செய்வதில்லை. நீ சாபம் கொடுக்கும் போது, நாய்களை போல மனிதர்களும் என்றாய். ஆனால் மனிதர்கள் நாயை விட மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

இன்றைய பூலோக விதிகளின் படி  பெண்ணின் சம்மதத்துடன் திருமணத்திற்க்கு பிறகு ஒருவர் தான் உறவு கொள்ள முடியும். பெண்ணை வற்ப்புறுத்தி துன்பப்படுத்தி உறவு கொள்வது தண்டனைக்குரியது. அது தெரிந்திருந்தும் அவர்கள் அவ்வாறு செய்ய காரணம் , நீ மனிதர்களும் நாயை போல அந்த நிலையில் செய்வார்கள் என கூறியதை, அவர்கள் தங்களுக்கேற்ப மாற்றி, நாயை போன்ற நிலையிலும், பலர் பெண்ணை விரட்டி அவள் சம்மதம் இல்லாமலும் உறவு கொள்கின்றனர். இது நீ சாபம் கொடுத்த காலத்திலிருந்து தொடர்கிறது. முன்பு, மிகவும் குறைவாக இருந்தது. இப்போது மிகவும் அதிகரித்துவிட்டது 

முன்பெல்லாம் இதை “ கெடுத்து விட்டான் “ என்பார்கள். பின்பு “ பலாத்காரம் “ செய்தான். என்று கூறுவார்கள். பின்பு கற்பழித்தான் என்று கூறுவார்கள். இப்போது அதை மாற்றி “பாலியல் வன்முறை “ என்றும் “ கூட்டு வன்புணர்வு “ என்றும் கூறுகிறார்கள்.

இதற்கெல்லாம் நீ கொடுத்த சாபம் தான் காரணம். நீ பைரவனுக்கு சாப விமோசனமும் கொடுக்கவில்லை. நீ என்று சாபம் விமோசனம் கொடுக்கிறாயோ அன்று தான் இந்த நிலைமை மாறும் .

அர்ஜுனன் : பூலோகத்தில் நடக்கும் தவறுகளுக்கு நான் பொறுபேற்க்க முடியாது. நான் பைரவனுக்கு தான் சாபம் கொடுத்தேன். மக்களும் அந்த நிலையில் செய்து இன்பம் பெறுவார்கள் என்று தான் கூறினேன். ஆனால் அதை மக்கள் தவறாக பயன் படுத்தினால் நான் பெறுபேற்க முடியாது.

மேலும் , உறவு முறை தவறி உறவு கொள்வது, குழந்தைகளிடம் உறவு கொள்வது, குழந்தைகளே உறவு கொள்வது, திருநங்கைகளிடம் உறவு கொள்வது, ஒரே இனம் உறவு கொள்வது, மிருகங்களிடம் உறவு கொள்வது, அதிகாரத்தை பயன் படுத்தி உறவு கொண்டு அதை மறைப்பது, உறவுக்கு பின் பெண்களை கொல்வது இவை எல்லாம் என் சாபத்தால் நிகழ்பவை அல்ல இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.

மேலும், நான் சாப விமோசனம் வழங்கிகொண்டிருக்கும் போது, பாஞ்சாலி என்னை அழைத்ததால், சாப விமோசனம் முழுமையாக கூற முடியாமல் போய் விட்டது அதற்கு பாஞ்சாலி தான் காரணம். பூலோகத்தில் தவறுகள் நடக்கிறது என்றால் அதற்கு பாஞ்சாலி தான் காரணம் அவள் தான் அதை சரி செய்ய வேண்டும். 

பாஞ்சாலி: என்ன என் பேச்சு அடிப்படுகிறது. உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தேன்.

தருமர்: இந்த ஒட்டு கேட்கும் பழக்கம் உன்னை விட்டு போகவில்லை.

பாஞ்சாலி: அப்படி செய்ய விட்டால் ஆண்கள் செய்யும் தவறுகளை பெண்கள் எப்படி தெரிந்து கொள்வது.

தருமர்: பாஞ்சாலி அது இருக்கட்டும். பூலோகத்தில் நடக்கும் தவறுகளுக்கு அர்ஜுனனின் சாபம் தான் காரணம் அவண் நீ குறுக்கிட்டு சாப விமோசனத்தை முழுமையாக கூற விடாமல் தடுத்துவிட்டாய் என்றும் அதனால் நீ தான் காரணம் என்கிறான். யாருடைய தவறாக இருந்தால் என்ன. தவறுகள் நிறுத்தப்பட வேண்டும். தருமம் நிலை நாட்டப்படவேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று நீயே சொல் 

பாஞ்சாலி. பாதிக்கப்படுவது பெண்கள். பெண் என்ற முறையில் அதை தடுக்க வேண்டிய பொறுப்பும் உனக்கு உண்டு. என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்

பாஞ்சாலி: இது குறித்த தகவல்கள் சில ஆண்டுகளாக எனக்கும் வந்து கொண்டிருக்கிறது. சென்ற யுகத்தில் கொடுத்த சாபத்திற்க்கு இந்த யுகத்தில் சாப விமோசனம் வழங்க முடியாது. நான் பரந்தாமனை இது குறித்து கேட்கலாம் என நினைக்கிறேன். அவர் தான் இதற்கு உபாயம் கூற முடியும்.

அந்த நேரம் பரந்தாமன் வருகிறார்.

கிருஷ்ணர்: என்ன பாஞ்சாலி, என்னிடம் என்ன கேட்க வேண்டும். கேள் தாரளமாக தருகிறேன்.

பாஞ்சாலி: உங்களுக்கு தெரியாது ஒன்றும் இல்லை. நாங்கள் என்ன விவாதித்து கொண்டிருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏதேனும் உபாயம் கூறுங்களேன். பூலோக பெண்களை இந்த வன் கொடுமையிலிருந்தே காப்பாற்றியே ஆக வேண்டும்.

கிருஷ்ணர்: பாஞ்சாலி, நீ இங்கிருந்து கொண்டு ஒன்றும் செய்ய இயலாது. நீ உடனடியாக பூலோகத்தில் பிறந்து பாரத தேசத்தின் ஆட்சியை பிடிக்க வேண்டும். அதற்கு பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஞ்சாலி : என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் அதையும் கூறி விடு.

கிருஷ்ணர்: அதை நான் எப்படி இப்போது கூற முடியும். பூலோகம் செல். அங்கு உனக்கு என்ன அதிகாரம் கிடைக்கிறது என்று பார். குற்றங்கள் ஏன் நடக்கிறது என்று தெரிந்து கொள். அதற்கு ஏற்ப நடவடிக்கை எடு. குற்றங்கள் தடுப்பதை நிறுத்து.

தருமர்: பரந்தாமா. நீ அனைத்தும் அறிந்தவன். எப்படி தடுத்து நிறுத்துவது என்பது உனக்கு தெரியும். அதை கூறாமல் பாஞ்சாலியை பூலோகத்துக்கு அனுப்புவதன் மூலம் நீ வேறு ஏதோ லீலை நடத்த முயற்சி செய்கிறாய் என்று தோன்றுகிறது. பரந்தாமா, வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. பாஞ்சாலி ஏதும் பங்கம் நேர்ந்தால் நீயே பொறுப்பாவாய்.

கிருஷ்ணர்: “ நானே அனுப்புகின்றேன். நானே செய்ய சொல்கிறேன்
            போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும்
            இந்த பரந்தாமனுக்கே “

மறைந்து விடுகிறார்.

பாஞ்சாலி பூலோகத்தில் அவதாரம் எடுக்கிறார்.

                          முதல் பாகம் முடிவடைந்த்து