Monday, 5 December 2011

மகாத்மா

உன்னை

மன்னித்து மகாத்மாவாய்

  
வாழ்வதை விட

தண்டித்து

மனிதனாய் வாழ்வதே மேல்


Monday, 28 November 2011

மென்மையான மிரட்டல்

சோத்து   பட்டறையில்
                   
                  சேராவிட்டால்

உன் பெயர் எதிர்மரையாலன்

                   பட்டியலிலுருந்து

மோசமானவன் பட்டியலில்

                      சேர்க்கப்படும்



Saturday, 19 November 2011

மெலுகுவர்த்தியே

மெலுகுவர்த்தியே !
உன்னைப்போல் அல்ல என்னவள்
இருட்டில் எனக்கு மட்டுமே வெளிசமாவாள்.


(இது நான் ரசித்த கவிதை )


********************************
முதுமையீன் முதல் படியீல்,
கடந்து வந்த பாதையீன் காலடி சுவடுகளீல் காதலை தேடினேன்.
காதலுடன் காமமும் கன்டேன்.
இளமையீன் காதல்
         முதுமையீல் பிரசுரம்

புழுக்கள்

 
விதைக்கபடாத
விந்துக்கள்
விதியோர
கால்வாய்களில்
புளுக்களாய்
நெளிகின்றன



விருட்சம்


உணரப்படாமலே
புணரப்பட்ட பூக்களின்
சிசுக்களின் வீரியமே
விருட்சங்கள்

 

Sunday, 13 November 2011

மரணம்


என் மரணத்தை
நாலு பேர் தூக்கி சென்றால் என்ன
    நாய் இழுத்து சென்றால் என்ன
நான் பார்கவா போகிறேன்           
    என்பாத வாழ்க்கை?


Tuesday, 18 October 2011

எல்லை

நீர் , நிலம் வாயுவில்
 எல்லைக்கோட்டைக்கோட்டை வகுத்தவன் 
ஆசைகளுக்கு வகுக்க மறுப்பது ஏன் ?



தேவையற்ற பயமா?

கருவில் கலைந்த சிசுக்களை கண்ணாடி குடுவையில் அடைத்ததை போல என்னில் தோன்றிய எண்ணங்களை உன்னில் உள்ளடக்கம் செய்கிறேன் .

வாழ நினைத்தது சுதந்திரமாக
 வாழ்ந்து கொண்டிருப்பது அடிமையாக
 வாழ  போவது எப்போது ?
சிந்திக்க தெரிந்த மனதுக்கு செயல் புரிய பயமெதற்கு ?
 நான் சார்ந்த சமுகமா சமுதாயமா ?
தேவையற்ற பயமா?









Thursday, 13 October 2011

கனவில் எழுதுகிறேன்

கனவில் எழுதுகிறேன்
காகிதம் தீரும்வரை 

எண்ணத்தில் எழுதுகிறேன்
எழுத்துகள் தீரும்வரை
  

அங்கு எழுதியதை இங்கு எழுத 

 வார்த்தைகளை தேடுகிறேன்
இன்றைக்கு வாழ்வதற்காக 
                           நேற்றை தொலைத்தேன் 

 நாளைக்கு வாழ்வதற்காக 
                         இன்றை  தொலைத்து கொண்டிருக்கிறேன் 

என்றைக்கு வாழபோகிறேன்