Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, 20 October 2014

பரிசு - சிறுகதை



குளிர் பதனப்படுத்தப்பட்ட அறை. முதல் முறையாக சென்றான். தொலைபேசியில் பேசி, அவர்கள் கொடுத்த நேரத்துக்கு சென்றான். பெரிய வரவேற்ப்பு அறை. எல்லா பக்கங்களிலும் கண்ணாடி சுவர். மெத்தை நாற்காலியில் உட்கார்ந்தான். முன்புறம் கண்ணாடி வட்ட மேஜை. தினசரிகள் மற்றும் புத்தகங்கள். ஆண்களின் கட்டுடல் புகைப்படங்களுடன் பல  புத்தகங்கள். புத்தகத்தை புரட்டினான். பல வித விளம்பரங்கள். பாதி விளம்பரங்கள் எதை விற்பனை செய்ய முயற்சிக்கிறது என்று புரியவில்லை.

சின்ன சின்ன ஜட்டிகளுடன் ஆண்கள் பல வித கோணங்களிள் நின்று கொண்டிருந்தார்கள். பல ஆண்கள் அது கூட இல்லாமல் இருந்தார்கள். குறிகள் தெரியாதவாறு புட்டங்களை கான்பித்து கொண்டும் , புணரும் நிலை போன்ற நிலைகளிலும் நின்றும் குனிந்து படுத்தும் கானப்பட்டார்கள். ஒருவரது உடலிலும் துளி கூட ரோமங்கள் இல்லை. கண்ணிமைகள், புருவங்கள் தவிர மொத்தமாக வழிக்கப்பட்டிருந்தது. ஆறு மடிப்புகள் எட்டு மடிப்புகள் கொண்ட வயிற்றுடன், கனிந்த நாவல் பழம் போன்ற முலைகளுடன் தங்களை காட்சிபடுத்தியிருந்தனர்.

மனிதன் தனது உடம்பில் உள்ள மொத்த ரோமங்களையும் புருவம், கண்ணிமை உட்பட நீக்கிவிட்டால் உயிர் வாழ முடியாது என எப்போதோ கேள்விப்பட்ட செய்தி நினைவுக்கு வந்தது. அது உண்மையா என தெரியவில்லை

அழகிய பெண்ணொருத்தி மெழுகு பொம்மை போல் இருந்தவள் அருகில் வந்தாள். முன்பதிவு இருக்கிறதா என நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேட்டாள். இருக்கிறது என்றவுடன் மீண்டும் திரும்பி நடந்தாள். இரண்டு மத்தளங்கள் ஓசை எழுப்பாமல் நடப்பது போல் இருந்தது. ரோமம் நீக்கப்பட்ட பகுதிகள் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் இருந்த போது, அழகன் ஒருவன் கண்ணெதிரே தோன்றினான்.

கை குலுக்கி விட்டு போதை நிறைந்த கண்களுடன் பார்வையை வீசினான். உங்களுக்கு எந்த வகையில் நான் உதவ வேண்டும் என்று கேட்டான். சவரம் செய்ய வேண்டும் என்றான். நிச்சியமாக செய்து விடலாம் என்று கூறினான்.

உள்ளே அழைத்து சென்றான். சிறிய சிறிய கண்ணாடி அடைப்புகளில் சுற்றும் நாற்காலிகளில் இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். பலர் படுக்கும் வசதி கொண்ட கட்டில்களில் படுத்து கொண்டிருந்தனர்.

அங்கிருந்த பெண்ணிடம் சென்று என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி பணம் கட்டி விடுங்கள் என்றான். கூச்சமாக இருக்கிறது நீயே சொல்லி விடு என்றான். சவரம் செய்ய வேண்டும் என்றான். எங்கே என்றான். பேசாமல் இருந்தான். முழுவதுமா என்றான். புரியாமல் விழித்தான். உடல் அமுக்கி விட வேண்டுமா என கேட்டான். எல்லாம் ஆங்கிலத்தில் கேட்டான். ஆங்கிலம் தெரிந்தாலும் அதன் அர்த்தங்கள் புரியவில்லை. அமைதியாக இருந்தான்.

அவனே அவளருகில் அழைத்து சென்றான். எதோ சொன்னான். அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பணம் கட்ட சொன்னார்கள். அவனிடமிருந்ததை கொடுத்தேன். புன்னகையுடன் வாங்கி கொண்டாள். அவன் உள்ளே அழைத்து சென்றான்.

தலையை நுரை சவுக்காரம் போட்டு குளிப்பாட்டி துடைத்து விட்டான். தலை உலர்வதற்க்காக சூடான காற்றை முடிகளுக்கு இடையே செலுத்தினான்.

சுற்றும் நாற்காலியில் உட்கார வைத்து தலைமுடியை , ஆங்காங்கே வெட்டினான். அரை மணி நேரம் சுற்றி சுற்றி வந்து தலைமுடியை வெட்டினான். பின்பு தாடியை வழித்தான். மீசையை முழுவதுமாக வழிக்க வேண்டுமா என கேட்டான். இல்லை திருத்தம் மட்டும் செய்தால் போதும் என்றான். அவன் சொன்ன படி செய்து விட்டு சென்று விட்டான்.

மீண்டும் ஒருவன் வந்தான் . வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்றான். அழகன். பெண்களின் கனவு நாயகன். பார்த்த மாத்திரத்தில் பெண்களின் உள்ளாடையை நனைய வைப்பவன்.

சிறிய அறை. சிறிய நீச்சல் குளம். ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்தது. பல வித வண்ண மெழுகுவர்த்திகள் வாசனையுடன் எரிந்து கொண்டிருந்தது ஒளி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. மெல்லிய இசை. அதுவும் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. மனதை மயக்கும் வாசனை. இதமான ஒலி ஒளி. மது அருந்தாமலேயே போதை தரும் சுகம்.

மன்னிக்கவும். உடை மாற்றி கொள்ளுங்கள் என்று ஒரு சிறிய வெள்ளை துவாலையை கொடுத்தான். அப்போது தான் அவனை சரியாக கவனித்தான். கடைந்தெடுத்த சிற்பம் போல இருந்தான்.  ஜீன்ஸ் கால்சட்டையும் மெல்லிய வெள்ளை சட்டையும் அணிந்திருந்தான். விம்மி புடைத்த மார்பகங்கள் அப்பட்டமாக தெரிந்தது. உடையை மாற்ற சொல்லி மறைவிடத்தை.கான்பித்தான். துண்டை கட்டினால் சரியாக இடுப்பளவுக்கு மட்டுமே இருந்தது. நடந்தால் துண்டு விலகி உள்ளே இருப்பது தெரியும் என்பதால் உள்ளாடையின் மேல் கட்டிக்கொண்டு வந்தான்.

அவன் ஆடைகளை களைந்து விட்டு மிகச் சிறைய உள்ளாடையுடன் இருந்தான். அதுவும் ஒற்றை கால் உள்ளாடை. இது வரை அந்த மாதிரியான உள்ளாடையை பார்த்ததில்லை. ஆன்களும் ஆசைப்படும் அளவுக்கு கிளர்ச்சியை ஏற்ப்படுத்தும் உடல் கட்டு. 

நல்ல கற்பனை சக்தி உள்ள கவிஞர் பார்த்தால் தேக்கு மர கட்டையில் செய்த சிற்பம் என்று வர்ணிப்பார். உடலில் ஏதோ தடவி மெருகேற்றியிருப்பார்கள் போல வளைந்து செல்லும் நரம்புகள் தெரிந்தது. அச்சு பதித்தது போன்ற முலைகள் அவையும் விரைத்திருந்தன. மெல்லிய புகை பிடிக்காத உதடுகள், சுருங்கிய வயிறு பருத்த தொடைகள் புடைத்த பிட்டங்கள். பெரிய  கால் விரல்கள். துணியால் ஆன செருப்பு போட்டிருந்தான்.

படுப்பதற்க்கு சிறிய படுக்கை போன்ற வசதி இருந்தது. குப்புற படுக்க சொன்னான். மேல் தண்டு வடத்தில் எண்ணெய் உற்றி தண்டு வடத்தை மேலிருந்து கீழாக நீவி விட்டான். முதுகு புறத்தை பலவாறாக நீவி விட்டு பிட்டம் வரை கைகளை கொண்டு வந்து நிறுத்தினான். துண்டை நீக்கினான். உள்ளாடையை பார்த்து இதை நீக்கி விடுங்களேன் என்று கூறி பதிலுக்கு காத்திராமல் நீக்கி விட்டான். அதற்கு பிறகு அவன் எங்கெங்கு எப்படியெல்லாம் உருவி விட்டான் என்பது புரியவில்லை. முதுகுக்கு பின்புறம் அவனது இரு கால்களையும் போட்டுக்கொண்டு மீண்டும் முதுகை தேய்த்து விட்டான். அவனது தொடைகள் இவனது இடுப்பின் இரண்டு பகுதிகளையும் உரசிக்கொண்டிருந்த்து. அவனது பிட்ட பிளவில் உரசிக்கொண்டிருந்தது

திரும்பி படுக்க சொல்லி முகம் முதல் கால் பாதம் வரை நீவி விட்டான். சுய நினைவு இல்லை முழு நிர்வாணமாக இருப்பதை கூட இவனால் உணர முடியவில்லை.

பின்பு சிறிய குளியலறையில் ஆவியில் குளிக்க சொன்னான். ஆளுயுர கண்ணாடி பெட்டி . எல்லா பக்கங்களிலிருந்தும் வெந்நீர் ஆவி வந்து கொண்டிருந்தது. அவன் வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு கதவை திறந்து வெளியில் வர சொன்னான். தலை முதல் பாதம் வரை துடைத்து விட்டான். அவன் கூச்சமே இல்லாமல் முன் தோல் உயர்த்தியும் சுத்தம் செய்து விட்டான்.

சேவை பிடித்திருக்கிறதா என கேட்டான். வேறு ஏதும் தேவையா என கேட்டான். இவன் வேண்டாம் என தலையாட்டினான். முன்பு முன்புறம் முட்டிக்கால் போட்டு உட்கார்ந்து வெள்ளரி பிஞ்சை மென்மையாக முத்தமிட்டான்.

ஆடை அனிந்து கொண்டு வெளியே வாருங்கள் என்று சொல்லி விட்டு அவன் வேகமாக அவனது ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே சென்று விட்டான். முற்றின வெள்ளரிக்காயை மடக்கி, உள்ளாடையில் அடக்கி ஆடை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
.
காசு வாங்கும் பெண் சிரித்த முகத்துடன் காத்திருந்தாள். கையில் பெரிய பில் இருந்தது. சேவை செய்த இருவரும் அருகில் இருந்தார்கள். பில் தொகை நாப்பதி ஏழாயிரத்து சொச்சம். வரிகளும் சேர்ந்திருந்தது. இனாம் என்ற பகுதி காலியாக இருந்தது. அதில் எழுத பேனாவும் கொடுத்தாள்.

அவன் , நான் எனது பரிசு கூப்பனை உபயோகித்து செய்து கொள்ள வந்தேன். நீங்கள் பில் கொடுப்பது ஏன். என்னுடைய பரிசு கூப்பன் தொகை பத்தாயிரத்துக்கு தானே செய்ய வேண்டும் என்று கேட்டான். அவள் பரிசு தொகை கூப்பனின் 10 சதவீகிதத்தை இந்த பில் தொகையில் கழித்து விடுவோம். மீதி உள்ள பரிசு தொகையை நீங்கள் மீண்டும் மீண்டும் வரும் போது 10% விதமாக கழித்து கொண்டே வருவோம். ஒரே முறையில் பத்தாயிரம் ரூபாயை கழிக்க மாட்டோம் மேலும் நீங்கள் நாப்பதி ஏழாயிரம் சொச்சம் ரூபாய்க்கு எங்களது சேவையை பெற்றுள்ளீர்கள் என கூறினாள். இந்த நிபந்தனைகள் எல்லாம் பரிசு கூப்பனில் எழுதப்பட்டுள்ளது என்று காட்டினாள். மிகச் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அங்கிருந்த வெளிச்சத்தில் படிக்க முடியவில்லை.

சேவை செய்த இளைஞர்களை பார்த்தான். அவர்கள் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்கள்.  அவர்களை சிறிது தள்ளிக்கொண்டு போய் பேசினான். அவர்களும் இது தான் விதி என்று கூறினார்கள். இனாம் சேர்த்து மொத்தம் ஐம்பதாயிரம் என எழுதிவிடுங்கள். ஆயிரம் ரூபாய் கழித்து கொண்டது போக நீங்கள் 49,000 கொடுத்தால் போதும் என்றார்கள்.

ஒப்புக்கொள்ளவிட்டால் என்ன செய்வார்கள் என கேட்டதற்க்கு, அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மெதுவாக புன்னகை புரிந்தனர். இன்று இரவுக்குள் 10 முறையாவது நீங்கள் குனிந்து நிற்க வேண்டியிருக்கும் அதற்கு நாங்கள் இப்போதே பயிற்சி கொடுக்க ஆரம்பிப்போம் என்றனார்.

அவன் அமைதியாக திரும்பி வந்து கடன் அட்டை மூலம் காசை செலுத்தி விட்டு வெளியே வந்தான்.

பரிசு கொடுத்த தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் மேல் கோபம் வந்தது. குனிவதை பற்றி நினைத்து பயந்து கொண்டு பல நாட்கள் தொலைக்காட்சி பார்பதையே நிறுத்தி விட்டான்.




 

Thursday, 3 July 2014

- லூ -



                லூ -

எங்கள் தெருவில் தான் அவண் வசித்தான். அம்மா, அப்பா, இரண்டு தம்பிகள் ஒரு தங்கை. எல்லோரும் ஒன்றாக தான் வசித்தார்கள். நான் பார்த்த காலத்திலிருந்து அவண் ஒரு மாதிரியாக தான் இருந்தான். பைத்தியம் என்று சொல்ல முடியாது. மனநிலை பாதிக்கப்பட்டவன் என்றும் சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு மாதிரியாக இருப்பான். தெளிவாக பேசுவான் ஆனால் ஒன்றும் புரியாது.

அவனது அம்மா வெற்றிலை பாக்கு புகையிலை போடுவாள். இவனும் அவளிடமிருந்து கற்றுக்கொன்டு போடுவான். இவனுக்கு கழுத்தில் பெரிய கட்டி உள்ளது. அது புற்று நோய் என்று அவண் அம்மா கூறுவாள். இவண் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. வலிப்பதாகவும் தெரியவில்லை. இப்போது வெற்றிலை பாக்கு போடுவதை நிறுத்திவிட்டான். ஆனால், பான்பராக் போன்று ஏதொ ஒன்றை வாங்கி கையில் வைத்து தேய்த்து வாயில் போட்டுக்கொள்கிறான்.

அவனது தங்கைக்கு கல்யாணம் ஆகிவிட்டது. தம்பிகள் இருவரும் படித்து விட்டு இருவரும் சேர்ந்து ஏதோ வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர். இவண் சும்மா தான் சுற்றிக்கொண்டிருக்கிறான். சாப்பாடு கிடைத்து விடுகிறது. பான்பராக் போட காசு கிடைத்து விடுகிறது. வேலைக்கு  போக சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

தெருவில் யார் வீட்டில் எந்த கல்யாணம் கருமாதி நடந்தாலும் முதல் ஆளாக போய் நின்று விடுவான். வேலைகள் எல்லாம் செய்து கொடுப்பான். காசு கேட்கமாட்டான். அவனது வீட்டாரை யாரவது கல்யாணத்திற்க்கு கூப்பிட்டால் இவன் ஒரு பழைய கோட்டை போட்டுக்கொண்டு முதல் ஆளாக நிற்ப்பான். வேலைகள் செய்வான். எல்லோரையும் வரவேற்ப்பான். யாரும் அவனுக்கு வேலை சொல்வதில்லை. அவனாகவே செய்வான்.

அவனது அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டார். இரண்டு தம்பிகளும் குடும்பத்தை கவனித்து கொண்டார்கள். அப்போதும் இவண் வேலைக்கு செல்லவில்லை

மூத்த தம்பிக்கு கல்யாணம் செய்தார்கள். அப்பா உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாகி விட்டார். அடுத்த வருடம் இன்னொரு தம்பிக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. செய்து வந்த தொழில் இரண்டாக பிரிந்தது குடும்பத்திற்க்கு யார் செலவு செய்வது என்பது பிரச்சனை.

இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டவனுக்கு தனி படுக்கையறை இல்லையென்பதற்க்காக பக்கத்து வீடு வாடகைக்கு எடுத்துகொண்டார்கள். அப்பாவின் உடல் நிலை மோசமாகிகொண்டே வந்தது. 10 மாதமாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. வீட்டுக்கு சொந்தகாரர் காலி செய்ய சொல்லி விட்டார்

இரண்டு தம்பிகளும் தனித்தனியே வீடு பார்த்து குடியேறிவிட்டனர். பெரிய தம்பி அம்மா அப்பாவை வைத்துக்கொண்டான். இவனை யார் பார்த்துக்கொள்வது என்று பிரச்சனை. நாள் முழுவதும் ஓயாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பான். அம்மா அவனுக்கு சோறு போட்டுக்கொண்டிருந்தாள். தம்பி மனைவி பிரச்சனை செய்து கொண்டிருந்தாள்.

அப்பா காலமாகிவிட்டார். அம்மா மருமகளின் தயவில் காலம் ஓட்டிக்கொண்டிருக்கிறார். இவனை கேட்க ஆளில்லை.

தினமும் காலையில் பழைய வீடு இருந்த தெருவுக்கு வந்து விடுவான். எல்லோருக்கும் வணக்கம் சொல்லுவான். அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பான். யாரவது ஏதாவது வேலை சொன்னால் செய்து கொடுப்பான். அவண் குடும்பத்தோடு இங்கிருக்கும் போது அவனுக்கு மதிப்பிருந்தது. இப்போது இல்லை. யாரும் அவணை வீட்டுக்கு உள்ளே அழைப்பதில்லை. அவனும் கவலைப்படுவதில்லை. புகையிலையை தேய்த்து வாயில் வைத்துகொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறான். சில சமயம் அவனாக பேசிக்கொள்கிறான். காலையில் வருபவன் இரவு 11 மணி வரை இங்கு தான் சுற்றிக்கொண்டிருக்கிறான். எங்கு என்ன சாப்பிடுகிறான் என்று தெரியவில்லை.

எதிரில் 12 கடைகள் இருக்கின்றன . அதில் ஒரு சாரய கடையும் இருக்கிறது. இப்பொதெல்லாம் அங்கு நின்று கொண்டிருக்கிறான். முதலில் மக்கள் வாங்கி கொண்டு சென்று கொண்டிருந்தனர். இப்போது அங்கேயே குடிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த கடைக்கு அருகில் சிகிரெட் கடை இருக்கிறது. அங்கு குளிர்பானங்கள், டம்ளர் , நொறுக்கு தீனிகள் கிடைப்பதால்  கடைக்கு அருகிலேயே சாப்பிட ஆரம்பித்து விட்டனர்.

காலி பாட்டில்களை கடைக்கு அருகிலேயே போட்டு விட்டு சென்றனர். இவண் அந்த பாட்டில்களில் இருக்கும் கடைசி சொட்டுக்களை வாயில் விட்டுக்கொள்வான். காலி பாட்டில்களை விற்று அதில் கிடைக்கும் காசில் பான் பராக் வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.

இப்போது கையில் ஒரு பிளாஸ்டி டம்ளருடன் அந்த கடை வாசலியேயே காத்திருக்க ஆரம்பித்து விட்டான். குடிப்பவர்களிடம் டம்ளரை ஆட்டி காண்பிக்கிறான். சிலர் அவன் டம்ளரில் கொஞ்சம் ஊற்றுகின்றனர். குடுத்து விட்டு போதையில் இருக்கிறான். கரிசனம் உள்ளவர்கள் இருட்டான மறைவான பகுதிக்கு அவனை அழைத்து செல்கின்றனர்.

இப்போதெல்லாம் அவண் போதையில் இருக்கிறான். மதுவும் கிடைக்கிறது. மறைவிடத்திற்க்கு செல்வதால் காசும் கிடைக்கிறது. ஆனால் எங்கு சாப்பிடுகிறான். இரவில் எங்கு போய் தூங்குகிறான் என்று தெரியவில்லை. 11 மணிக்கு மது கடை மூடும் வரை இங்கு தான் சுற்றிக்கொண்டிருக்கிறான். அவண் வசித்த தெருவில் இருக்கும் நபர்களை பார்த்து சலாம் வைக்கிறான். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை அந்த தெருவை சுற்றி வருகிறான்.

இவனது நடவடிக்கைகளை கவனித்தவர்கள் இப்போது இவனை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.

இவண் அம்மாவிடம் சொல்லி ஒன்றும் ஆவப்போவதில்லை. தம்பிகளுக்கு அவர்களது வாழ்க்கையே போரட்டமாக இருக்கிறது. அப்படியே அக்கறை எடுத்துக்கொண்டாலும் வீட்டில் பூட்டி வைத்தா சோறு போடமுடியும். இவனது இறுதி காலம் எப்படியிருக்க போகிறது. இவனைலூஎன்று யாரும் கூப்பிடுவதில்லை. அவனை லூ என்று குறிப்பிடுவார்கள் ஆனால் அவனை அப்பிடி கூப்பிடமாட்டார்கள். அப்படி கூப்பிட்டால் அவனுக்கு பிடிக்காது.

அவன் பெயர் - லூ


Thursday, 26 June 2014

சிறுகதை



தந்தையும் மகளும்

வழக்கு பதிவு செய்யப்பட்ட அன்றே அந்த வழக்கு குறித்து பரபரப்பு அதிகமாகி விட்டது.

வழக்கு தொடர்ந்தவர் மிக பிரபலமான சங்கத்தின் தலைவர். 

மிக சிறு வயதிலேயே மிகப் பிரபலாமாகி விட்டார். அவரது தந்தையின் செல்வாக்கினால் தான் பிரபலமானார் என்ற குற்றச்சாட்டு உண்டு. அவர் தனது தந்தையின் பெயரை எங்கும் உபயோகிக்கவில்லையென்றாலும், அவர் இன்னாரது மகள் என்ற காரணத்தாலேயே அவருக்கு மரியாதை கிடைத்தது. அவர்  கேட்காமலேயே அவருக்கு தலைவர் பதவி தந்தனர். அவரை தலைவராக வைத்து கொண்டு மற்றவர்கள் புகழ் அடைந்ததுடன், சங்கத்துக்கு கிடைத்த நன்கொடை பணம் மூலமாக தங்களது வசதிகளை பெருக்கி கொண்டனர். 

அவர் இந்த வழக்கை தொடர போகிறேன் என்று கூறியவுடன் மற்றவர்கள் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. இதன் மூலம் சங்கம் மேலும் பிரபலமடையும் என்றும் வெளிநாட்டு நிதி வரத்து அதிகரிக்கும் அதன் மூலம் தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம் என அவரவருக்கு இருந்த தனிப்பட்ட ஆசையின் காரணமாக ஆதரவு அளித்தனர்.

வழக்கு தொடரப்பட்டது ஓய்வு பெற்ற நீதியரசர் மீது . அவர் சர்ச்சைக்குரிய வழக்குகளில் அதிரடியான தீர்ப்புகளை வழங்கி புகழ் பெற்றவர். அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் அவர் ஓய்வு பெற்ற தினத்தை விமர்சையாக கொண்டாடினார்கள்.அவர் ஓய்வு பெற்ற பின்பு , பொதுவாக கிடைக்க வேண்டிய ஏதாவது விசாரனை குழ தலைவர் பதவியோ அல்லது வேறு எந்த பதவியோ அவருக்கு வழங்கப்படவில்லை.

வழக்கை பற்றி அவரிடம் கருத்து கேட்ட போது, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது கருத்து சொல்ல முடியாது என அறிவித்துவிட்டார்.

சங்க தலைவரிடம் கேட்ட போது, யாராக இருந்தாலும் நான் வழக்கு தொடருவேன் என்று கூறினார்.

பொது இடத்தில் நான்கு தீவிரவாதிகளை தன் கையாலேயே கொன்றுள்ளார். இதற்கு சாட்சிகள் உள்ளன. அவர்கள் தீவிர வாதிகளாக இருந்தாலும், சட்டப்படி அவர்களை அரசாங்கத்திடம் தான் ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே சங்கத்தின் வாதம் என்று குறிப்பிட்டார்.

வழக்கு உடனடியாக விசாரனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சங்கத்தின் சார்பாக வாதடிய வழக்கறிஞ்சர் வழக்கின் விவரங்களை கூறி சாட்சியங்களை அழைத்து விசாரணை நடத்தினார். சாட்சிகள் அவர் தீவிரவாதிகளை கொன்றதை பார்த்ததாகவும்  தாங்கள் விலகி நின்று வேடிக்கை பார்த்ததாகவும் கூறினர்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனக்காக வழக்கறிங்கரை நியமித்து கொள்ளாமல் தானே வாதாடுவதாக கூறியதால், அவர் குறுக்கு விசாரணை செய்தார்.

தீவிரவாதிகளுடன் தான் பேச்சு வார்த்தை நடத்தியதை பற்றி கேட்டார். சாட்சியங்கள் பேச்சு வார்த்தி நடத்தியதாக ஒப்புக்கொண்டனர். தீவிரவாதிகளை விலகி செல்லும் படி அறிவுறுத்தியதாகவும், அனால் தீவிரவாதிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதால் அவர்களுடன் சண்டையிட்டு அவர்களை கொன்றதாக கூறினார். சாட்சியங்களும் அதை ஒப்புக்கொண்டனர்.

மேலும், அரசாங்கம் தீவிரவாதிகளை ஒழிக்காமல் இருப்பதால் தான் தனி மனிதர்கள் தங்களை காத்து கொள்ள இது போன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் கூறி, தனது செயலுக்கு நியாயம் கற்ப்பித்தார். மேலும், அரசு தீவிரவாதிகளை ஒழிக்கவில்லையென்றால், பொது மக்கள் இது போன்ற செய்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் வாதிட்டார்.

இவைகளை கேட்ட நீதிபதி, அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி ஒரு வார காலத்திற்க்குள் நேரில் வந்து பதில் அளிக்கும் படி உத்தரவிட்டு வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தார்.

குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியின் வீட்டீல் அவரது மனைவி , உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. உங்களுக்கு தெரியாத சட்டமா, நியாயப்படி செய்திருக்க வேண்டியது தானே. உங்களை யார் இப்படி செய்ய சொன்னது என்று புலம்பி கொண்டிருந்தார். மற்றவர்கள் எப்படி ஒதுங்கி சென்றார்களே அவ்வாறே நீங்களும் இருந்திருக்க வேண்டியது தானே என்று புலம்பி கொண்டிருந்தார்.

வழக்கு தொடர்ந்த சங்கத்தின் தலைவி, அவரை பார்த்து அம்மா எனக்கு காப்பி கொடு என்று கூறினார்.

ஏண்டி, அப்பாவை போட்டு ஏன் இப்படி படுத்துகிறாய். அப்பா மீது வழக்கு தொடர்ந்து அவரை அவமானப்படுத்திவிட்டாய் என்று புலம்பி தீர்த்தார்.

ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் வழக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், தீவிரவாதம் உலகெங்கிலும் இருப்பதாகவும், இந்த அரசு அவர்களை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உலக நாடுகளின் உதவியுடன் மிக விரைவில் நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க எடுத்துள்ள விவரங்களை புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தார்.
.
சங்கத்தின் தலைவரோ இந்த வழக்குக்கு உடனடியாக தீர்ப்பு வழங்கவிட்டால் மேன்மேலும் மக்கள் இப்படி சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்க ஆரம்பித்து விடுவார்கள் நாட்டில் அமைதி குலைந்து விடும் என வாதிட்டார்.

வழக்கு ஒரு மாதத்திற்க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கின் தீர்ப்பு வழங்கபட இருந்த நாளில் , நீதிமன்றத்தில் பெரும் கூட்டம். தொலைகாட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிப்பரப்புக்கு ஏற்ப்பாடு செய்திருந்தது.

எழுதி வைத்திருந்த தீர்ப்பை நீதிபதி வாசிக்க ஆரம்பித்தார்.

உயிர்களை கொல்வது சட்டப்படி குற்றம் என்றும் அதற்க்காக வழக்கு தொடர்ந்த சங்கத்தை பாரட்டினார்.

அரசும் போதுமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதை ஏற்றுக்கொண்டாலும் துரித நடவடிக்கை எடுத்து தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க  வேண்டும் என வலியுருத்தினார்.

எனவே,

இந்த நேரத்தில் நீதிபதி சிறிது தண்ணீர் குடித்தார். நீதி மன்றத்தில் பரபரப்பு கூடியது. நிச்சியமாக தண்டனை கிடைக்கும் என அனைவரும் காத்திருந்தனர்.

நீதிபதி கீழே குனிந்து கால்களை சொறிந்து கொண்டார். மீண்டும் கீழே குனிந்து செறிந்த இடத்தில் தடவி விட்டுக்கொண்டார்.

நீதிமன்றத்தில் பரபரப்பு கூடியது.

எனவே என்று ஆரம்பித்தவர், சற்று நிறுத்தி யோசித்து விட்டு ஆனால் என்று தொடர்ந்தார்.

ஆனால்,

தன்னை தாக்க வரும் தீவிரவாதிகளை தற்காப்புக்காக அழிப்பது சரியென்றும், உலகமுழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார்.

சங்கம் மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது என்றும் கொசுக்கள் மிருக வகையை சார்ந்தது அல்ல என்றும் எனவே வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் கூறினார்.