Tuesday, 18 October 2011

எல்லை

நீர் , நிலம் வாயுவில்
 எல்லைக்கோட்டைக்கோட்டை வகுத்தவன் 
ஆசைகளுக்கு வகுக்க மறுப்பது ஏன் ?



தேவையற்ற பயமா?

கருவில் கலைந்த சிசுக்களை கண்ணாடி குடுவையில் அடைத்ததை போல என்னில் தோன்றிய எண்ணங்களை உன்னில் உள்ளடக்கம் செய்கிறேன் .

வாழ நினைத்தது சுதந்திரமாக
 வாழ்ந்து கொண்டிருப்பது அடிமையாக
 வாழ  போவது எப்போது ?
சிந்திக்க தெரிந்த மனதுக்கு செயல் புரிய பயமெதற்கு ?
 நான் சார்ந்த சமுகமா சமுதாயமா ?
தேவையற்ற பயமா?









Thursday, 13 October 2011

கனவில் எழுதுகிறேன்

கனவில் எழுதுகிறேன்
காகிதம் தீரும்வரை 

எண்ணத்தில் எழுதுகிறேன்
எழுத்துகள் தீரும்வரை
  

அங்கு எழுதியதை இங்கு எழுத 

 வார்த்தைகளை தேடுகிறேன்
இன்றைக்கு வாழ்வதற்காக 
                           நேற்றை தொலைத்தேன் 

 நாளைக்கு வாழ்வதற்காக 
                         இன்றை  தொலைத்து கொண்டிருக்கிறேன் 

என்றைக்கு வாழபோகிறேன்