ஜீவா – திரை விமர்சனம்
11வது படிக்கும் மாணவனுக்கும் பக்கத்து வீட்டில் பள்ளியில் படிக்கும் மாணவிக்கும்
காதல். முதலில் அண்ணா என்று கூப்பிடும் பெண் சில காட்சிகளுக்கு
பிறகு அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஊர் சுற்றுவது, பாடல் காட்சிகள் வழக்கம் போல் உள்ளது. பெற்றோருக்கு தெரிகிறது.
பிரிகிறார்கள்.
தோல்வியை சந்திக்கும் மாணவன் குடிக்க போகிறான். அதை மாற்ற அவன் விரும்பும்
கிரிகெட் விளையாட அவனை கிளப்பில் சேர்க்கிறார்கள்.
கிரிகெட் கிளப் நண்பன் தன் காதலை ஒரு பெண்ணிடம் சொல்ல இவனுடன்
போகும் போது, அந்த பென் இவனை கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்ல, அதை மறுத்து விடுகிறான். பழைய காதலியை தேடி பேசுகிறான்.
இதற்கிடையில் நன்றாக விளையாடி ரஞ்சி அணியில் பெயர் சேர்க்கப்படுகிறது. பின்பு நீக்கப்படுகிறது. நண்பன் கிளப்
தேர்வாளர்களை கடுமையாக விமர்சிக்கிறான். அவர்கள் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும்
தான் வாய்ப்பளிக்கப்படுகிறது மற்ற சமூகத்தினருக்கும் மறுக்கப்படுகிறது என்று வாதிடுகிறான்.
மனம் உடைந்த நண்பன் தற்கொலை செய்து கொள்கிறான்.
இவனது
ஆட்டத்தை பார்த்த ராஜஸ்தான் ஆணி வாய்ப்பு கொடுக்கிறது. IPL விளையாடுகிறான்.
==========================================================================
இந்த
படத்தில் விளையாட்டில் ஜாதி பார்த்து தான் வீர்ர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று
கூறிப்பிட்டிருப்பதால், இந்த படம் பாரட்டப்பட்டுள்ளது.
தேர்வு
குழ தலைவர் பிராமணர் என்பதை அவர் நெற்றியில் உள்ள நாமத்தின் மூலம் அடையாளப்படுத்துகிறார்.
தேர்வு செய்யப்படாத வீரர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிடவில்லை. இவரும்
மேல் ஜாதியை சேர்ந்தவராக ஏன் இருக்க கூடாது. பிராமணர் மட்டுமே ஏன் மேல் ஜாதி என்று
கூற வேண்டும். சரி. வீரர் கீழ் ஜாதிகாரர் SC என்றே வைத்துக்கொள்வோம்.
மேல்
ஜாதிகார பிரமணர் மட்டுமே ஜாதி பார்த்து வாய்ப்பு கொடுத்தார் என்று ஏன் குறிப்பிட வேண்டும்
வேறு ஒரு மேல் ஜாதிகாரரை பெயரை அடையாளப்படுத்தி ஏன் அறிமுகப்படுத்தியிருக்க கூடாது. பிராமணர்கள்
அவர்கள் மீது இது போன்ற எத்தனை விமர்சன்ங்களை
வைத்தாலும் எதிர்வினை செய்து காலத்தை வீனாக்குவதில்லை.
ராஜஸ்தான்
அணியில் இவர் சிபாரிசின் பேரில் தான் சேர்த்து கொள்ளப்படுகிறார். அது போன்றே இவரை சேர்த்துக்கொள்ளாத
தமிழக அணி பல நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து பலரை சேர்ப்பதால் இவர் போன்றவர்கள் வாய்ப்பு
இழக்க நேரிடுகிறது. இவர் ராஜஸ்தான் அணியில் சேரும் போது ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த
ஒருவர் வாய்பை இழக்கிறார். அவரும் ஏதேனும் குற்றம் சாட்ட முடியும்.இதை இந்த கண்ணோட்டத்திலும்
பார்க்கலாம். இவை எல்லாம் நடைப்பெறுகிறது என்றே வைத்துக்கொள்ளலாம்.
வேறு
மொழி பேசும் வேறு மாநிலத்தவர் வாய்ப்பு கொடுத்திருப்பது வேறு மதத்தை சார்ந்தவரின் சிபாரிசுன்
பேரில். அப்படிப்பட்டவரை புகழ்ந்து பாரட்டி சில வசனங்களை சேர்த்திருக்கலாமே. சேர்க்க
மாட்டார்கள். வேற்று மொழி பேசுபவரை வேற்று மதத்தை சேர்ந்தவரை பாரட்டினால் தமிழ் உணர்வாளர்கள்
பொங்கி எழுவார்கள்.
ஊருக்கு
இழைத்தவன் யாரோ அவனை குற்றம் சொல்லுவது எளிது என்ற காரணத்தால் பிராமண சமுதாயத்தை சாடியுள்ளார்கள்.
இது ஜாதிய வெறியை காட்டும் படம் தான். உயர் ஜாதிகாரனின் ஜாதியை குறை கூறுவதன் மூலம்
கீழ் ஜாதிகாரர்கள் அவர்களது ஜாதியை தூக்கி பிடிக்கிறார்கள். கீழ் ஜாதிகாரர்கள் பல பேர்
திறமை காரணமாகவும், சலுகைகள் காரணமாகவும் சிறந்த நிலையை அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள்
ஜாதியை சார்ந்தவர்கள், சமூகத்தில் முன்னேற ஏன் வழி காட்டவில்லை. பணத்துக்கும் பதவிக்கும்
ஆசைப்பட்டு, யாரை குறை கூறுகிறார்களோ அவர்களை போலவே நடந்து கொள்கிறார்கள் . பல சமயம்
அவர்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை காரணமாகவும் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.
இன்னும் எத்தனை காலங்களுக்கு தான் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள்
காதலிப்பதாக காட்டுவார்கள்.
பள்ளி சீருடையில் இவர்கள் ஊர் சுற்றுகிறார்கள். முத்தமிட விரும்புகிறார்கள்.
திரைப்படங்களில் பள்ளி மாணவர்களின் காதலை காண்பிப்பதால் தான்
சமூகத்தில் இது போன்ற காதலும் காமமும் நடைப்பெறுகிறது என கூறினால் சமூகத்தில் நடப்பதை
தான் கான்பிக்கிறோம் என்று வாதாடுவார்கள்.
விவாதங்களுக்கு முடிவே இருக்காது. மேலும்,
திரைப்படத்தை பொழுது போக்காக பார்த்து விட்டு போக வேண்டுமே தவிர தீவிரமாக
ஆராய கூடாது என சப்பை கட்டு கட்டுவார்கள்.
அப்படியானல் நான் சாதிய கொடுமைகளை பற்றி திரைப்படத்தில் கருத்து
கூறியுள்ளேன் என்று சாதி ஒழிப்பு பிரச்சாரம் செய்வது எவ்வளவு போலித்தனமான விவாதம். ஜாதியத்தை தூக்கி பிடிப்பவர்கள்
தான், ஜாதி ஒழிப்பு என்று விசயத்தை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி
கொள்கிறார்கள்.
ஜாதியத்தை பேசும் படங்கள் வெற்றிகரமாக அமைய , சமூகம் ஜாதிய பாகுபாட்டை
விரும்புகிறது என்று காட்டுகிறது. ஜாதி ஒழிப்பு என்று பேசுபவர்கள் தங்களது ஜாதியில் பிரபலமாக உயர முடியாத நிலையில்
ஜாதி எதிர்ப்பு என்ற முகமூடியில் பிரபலமாக முயற்சி செய்கின்றனர். மீண்டும் மீண்டும் திரைப்படங்களில் ஜாதியத்தை பேச காரணம் என்ன. அது நன்றாக விரும்பி பேசப்படும் விசயமாக இருப்பதுடன் அதை கட்டி காக்கும் சமுதாயத்தில்
நன்றாக விலை போகும் என்பது தான் காரணம்.
உண்மையிலேயே ஜாதி பார்க்க தேவையில்லை என்பவர்கள் தங்களவில் ஜாதி
பார்க்காமல் காரியம் செய்தாலே போதுமானது.
பிறருக்கு எந்த வழியிலும் போதிக்க தேவையில்லை. பிறர் போதித்து ஒருவரும் திருந்தியதில்லை. தாங்களாவே
திருந்தினால் உண்டு. வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் ஜாதி
மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் தாங்கள் ஜாதி ஒழிப்பு நம்பிக்கை வைத்திருப்பதாகவோ,
ஜாதி ஒழிப்புக்கு பாடு படுவதாகவோ கூறினால் அது சுத்த ஏமாற்று வேலை.
இன்றைய இளைய சமுதாயத்துக்கு குறிப்பாக நகரத்தில் வசிப்பவர்களுக்கு
ஜாதி என்றால் என்னெவென்று தெரியாது.
பாகுபாடு பார்ப்பதில்லை. அதன் வீரியம் என்ன அதனால்
ஒரு குறிப்பிட்ட சமூகம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது தெரியாது. திரைப்படங்கள் அவற்றை சொல்வதன் மூலமாக தான் அவர்கள் அறிந்து கொள்கிறார்கள்
அவர்களும் ஜாதியை கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் சொல்லாமல்
இருந்தால் கனிசமான இளைய சமூதாயத்துக்கு ஜாதி வேறு பாடு தெரியாது.
ஜாதிய ஏற்ற தாழ்வுகளையும் அதன் கொடுமைகளையும் மக்களுக்கு புரிய
வைத்து அதை நீக்க பாடுபடுகிறோம் என்பது அயோக்கியதனம். இவர்கள் புரிய வைப்பதன்
மூலம் ஜாதி ஒழிக்க முடியாது. மேலும் ஜாதியை பற்றி தெரியாதவர்களுக்கு
கூட ஜாதி என்று ஒன்று உண்டு என்பதை சொல்லி கொடுக்கிறார்கள். இதன்
மூலம் ஜாதி பற்றில்லாதவர்களை கூட ஜாதி அபிமானியாக மாற்றுகிறார்கள்.
இவர்கள ஜாதிய கொடுமைகள் என்று கூறாமல் இருந்தாலே , சமூகத்தில் ஜாதி வேறுபாடு
ஒழிந்து விடும்.
ஜாதி வேறுபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் நேரடியாக களத்தில்
இறங்கி அவர்களுக்கு உதவி செய்யலாம் அல்லது ஜாதிய கொடுமைகளை செய்யும் அமைப்புகளிடம்
நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு கானலாம்.
இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மாநில முதலமைச்சர்
கோயிலுக்கு சென்று வந்த பிறகு கோயில் சுத்தப்படுத்தப்படுகிறது. இதை களத்தில் இறங்கி தான்
சரி செய்ய வேண்டுமே ஒழிய, திரைப்படம் எடுப்பதாலோ அல்லது பத்திரிக்கைகளில்
எழுதுவதாலோ ஒழித்து விட முடியாது.
இதை படிப்பவர்கள் இவ்வளவு நீளமாக எழுதி நீ ஜாதியை ஒழித்து விட
போகிறாயா என் கேட்கலாம். என்னை பொறுத்த அளவில் ஜாதி ஒழிய வேண்டும் என்று எப்போதும் கூறவில்லை அதே சமயம்
ஜாதி வெறி பிடித்து அலைய வேண்டாம் என்பதே எனது நிலை. சமரசம் செய்து
வாழ பழகி கொண்டவன்.
காதலில் தோற்றவன் சாராய கடைக்கு போவதை எல்லா படத்திலும் கான்பிக்கிறார்கள்
தேவதாஸ் படத்தில் ஆரம்பித்து இந்த படம் வரை இதை தான் சொல்கிறது.
காதலில் தோற்றவர்கள் அனைவரும் குடித்து தான் துனபத்தை மறக்கிறார்களா
? துன்பத்தை மறக்க வேறு வழியில்லையா. குடிப்பது
தான் காதல் தோல்வியை மறக்க ஒரே வழி என்று தீர்மானித்து அதை திரைப்படத்தின் மூலமாக சொல்வதால்
தான் இன்றைக்கு இளைய சமுதாயம் டாஸ்மாக் கடைகளில் அலைமோதுகிறது. இவர்கள் தான் மது ஒழிப்பு குறித்தும் பேசுகிறார்கள் . அவ்வாறு பேச எழுத கூட இவர்களுக்கு மது தேவைப்படுகிறது.
பெண் காதலை சொல்வதாகட்டும்
, அவனை நெருங்குவதில் பெண் எடுக்கும் முயற்சிகளை கான்பித்து விட்டு
, பிரச்சனை ஏற்ப்படும் போது ஆன் தவறு செய்ய முயற்சிப்பதாக காட்டுவது,
பெண்மையை போற்றுவதாக கருதுகிறார்கள். பெண் காதலிலும்
காமத்துக்கும் முயற்சிப்பதாக கான்பித்தால் பெண்ணியவாதிகளின் எதிரிப்புக்கு ஆளாக வேண்டும்
என்ற பயமா. இந்த போலி கலாச்சார காப்பாளர்கள் எப்போது திருந்துவார்கள்
என தெரியவில்லை.
மத்திய தர வர்கத்திற்க்கு விளையாட்டு தேவையில்லை என்பது உண்மை. படிப்பு தான் வாழ்க்கைக்கு
உதவும் என்ற வாதம் சரியானது. லட்சக்கனக்கான இளைஞர்கள் இன்றைக்கும்
விளையாட்டு துறையின் முன்னேற துடிக்கிறார்கள். அதில் சிலர் மட்டுமே
வெற்றி பெற முடிகிறது. அந்த வெற்றி பெறும் நபராக நான் இருப்பேன்
என்பது தான் அனைவரது கனவும். ஆனால் அது நடைமுறை சாத்தியமில்லை.
விளையாட்டுக்காக படிப்படை புறக்கனித்தவன் விளையாடி வெற்றி பெற
முடியாமல் சமூகத்தில் தள்ளப்படும் போது,
படிப்பு இல்லாமல் அவனால் சமூகத்தில் போரடி வெற்றி
பெற முடிவதில்லை. வசதி படைத்தவர்கள் விளையாட்டை தேர்ந்தெடுத்தால்,
விளையாட்டு துறையில் வெற்றி பெற முடியவில்லையென்றாலும் , தங்களிடமிருக்கும் தொழில் வியாபாரம் மூலம் சமூகத்தில் நிலை பெற முடியும்.
வசதி படைத்தவனுக்கும் நடுத்தர வர்கத்துக்கு வித்தியாசம் இது தான்.
இதை நினைத்து, தோல்வியை நினைத்து கொண்டு களம் இறங்கினால்,
தோல்வி தான் கிடைக்கும் , வெற்றி பெறுவோம் என்ற
நம்பிக்கையுடன் களம் இறங்க வேண்டும் என்று தத்துவம் பேசலாம். முதல் இடம் இரண்டாம் இடம் என்பது சிலருக்கு மட்டும் தான். மற்றவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். அங்கு ஒதுக்கப்பட்ட பின் மீன்டும் முதலிலிருந்து
வேறு துறையில் முயற்சிப்பது கடினம். அது காலம் கடந்த உழைப்பு.
ஒரு காதல் பாடல் கேட்கும் படி உள்ளது. குடித்து விட்டு பாடும்
பாடல் அபத்தம். ஒலிப்பதிவாளருக்கு ஒளிப்பதிவாளருக்கு தனித்திறமை
காட்ட எந்த வாய்ப்பும் இல்லை.
நடிகர் விஸ்ணு பல படங்கள் நடித்து அனுபவம் பெற்றுள்ளார். நடிப்பில் முன்னேற்றம்
தெரிகிறது.
