BABY இந்தி திரைப்பட விமர்சனம்
தற்காலிக
உளவு படையின் பெயர் பேபி எனப் பெயரிடப்படுகிறது. இறுதியில் அது நிரந்தரமாக்கப்படுகிறது.
இதன் உறுப்பினர்கள் தலைவராக Feroz Ali
Khan (Dany Denzongpa) முக்கிய ஏஜன்டாக Ajya (Akshay Kumar ) இவரது மனைவியாக அஞ்சலியாக
( Madurimal Tuli ) மற்றும் அனுபம் கேர், ரானா , டாப்ஸி, கே.கே, மேனன், சுசாந் சிங்
மற்றும் பலர்.
துருக்கியில்
மாட்டியுள்ள இந்திய ஏஜன்ட் ஐ காப்பற்றும் முயற்சியில் ஈடுப்படும் போது, டெல்லி மால்
ஒன்றில் நிகழ்த்தவிருந்த குண்டு வெடிப்பு தகவல் குறித்து தகவல் அறிந்து அதை தடுக்கின்றனர்.
ஆனால் அது முதல் திட்டம் என்றும் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்த இருக்கின்றனர்
என்று அறிகின்றனர்.
தப்பியோடிய தீவிரவாதியை(கே.கே.மேன்ன் ) கண்டுபிடிக்க ஏற்படுத்தப்படும்
படைக்கு “ பேபி “ என்று பெயரிடப்படுகிறது. அவனை பிடிக்கப்போகும் போது அஜய் தவிர மற்றவர்கள்
உயிரிழக்கின்றனர்.
தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவனை பிடிக்க நேபாள் செல்கின்றனர். பிர்யா(டாப்ஸி
) மற்றும் அஜய் கணவன் மனைவியாக நேபாள் செல்கின்றனர். இந்த முயற்சியில் பிரியா தனியாக
மாட்டிக்கொள்கிறாள். அவளை காப்பாற்ற அஜய் வருவதற்க்கு முன் பிரியா தனியாக சண்டையிட்டு
அவனை வீழ்த்தி விடுகிறாள். இவர்கள் அரசு அனுமதியில்லாமல் மந்திரிக்கு மட்டும் தெரிவித்துவிட்டு
நேபாள் செல்கின்றனர். மாட்டிக்கொண்டால் அஜய் இந்தியன் அல்ல என்றும் அவனுக்கும் இந்தியாவுக்கும்
சம்மந்தமில்லை என்று சொல்வதாக முடிவு செய்து விட்டு செல்கின்றனர்.
தப்பியோடிய
கைதி மேனன் சவுதி அரேபியாவிலிருந்து சதி வேலைகளுக்கு திட்டம் தீட்டி வருவதாக அறிந்து,
அவனை பிடிக்க ரகசியமாக அஜய்,(Akashy) ஜெய், (Rana)ஒம் பிரகாஷ் (Anupam Kher) சவுதி செல்கின்றனர். மேனனை சுட்டுக்கொல்கின்றனர்.
எதிர்பாராத விதமாக தீவிரவாதிகளின் தலைவன் மௌலானா ( Naz) அங்கிருப்பதை கண்டு அவனை சுட்டு
இந்தியா கொண்டு வருகின்றனர். அவனை இந்தியா கொண்டு வர இவர்களுக்கு உதவி செய்யும் உள்ளுர்காரனின்
சித்தப்பா என்றும் மருத்துவ சிகிச்சைக்கு சென்னை செல்வதாக கூட்டி வருகின்றனர். இதற்க்கிடையில்
கே.கே மேனன் சுட்டுக்கொல்லப்பட்டவுடன் உள்ளூர் போலிஸ் விசாரனை செய்கிறது. இவர்கள் இந்தியா
திரும்ப விமானத்தில் உட்கார்ந்திருப்பது வரை அறிந்து கொண்டு, அவர்களை பிடிக்க வசதியிருந்தும்
இவர்களை தப்பிக்க விடுகிறான்.
இந்தியா
கொண்டு வந்து விசாரனைக்கு பிறகு காஷ்மீர் அனுபப்ப்பட்டு வழக்கம் போல நடைப்பெறுவது போல
கூறப்படுகிறது.
இது
மாதிரியான கதையுடன் பல படங்கள் வந்து விட்டது இதுவும் வழக்கமான கதை தான். இயக்குனர்
எந்த சிக்கலும் இல்லாமல் கதையை தெளிவாக எடுத்து செல்கிறார்.
மௌலானா
பிடிபடுவதையும் அவனை இந்தியா கொண்டு வரும் பகுதியையும் விறு விறுப்பாக கொண்டு செல்கிறார்.
கடைசி நிமிடங்களில் பரபரப்பை கூட்ட, காட்சிகளை அமைத்து ரசிகர்களை அமைதியாக உட்கார வைக்கிறார்.
சவுதி
அரேபிய போலிஸ்காரர் இவர்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்ற காரணத்தை கூறவில்லை. இது
ஒரு சொதப்பல்.
இது
போன்ற கதைகளில் கதாநாயகனின் அம்மா, அப்பா,
தங்கை, காதலி, மனைவி குழந்தை இப்படி யாராவது வில்லனால் கடத்தப்படுவார் ஆனால் இந்த படத்தில்
அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை. பாசத்தை பிழியும் காட்சிகளோ அல்லது அவற்றுக்கான பிளாஸ்
பேக் காட்சிகளோ ஆடல் பாடல்களோ இல்லை. அதனால் படம் விறுவிறுப்பாக செல்கிறது. தனியாக
பாடல் காட்சிகள் இல்லை. பின்னனியில் பாடல் ஒலிக்கிறது
( நான் படம் முடித்து வெளியே
வரும் போது பாடல்கள் இல்லாத படம் என நினைத்திருந்தேன்.) .
Akshay
தனது வழக்கமான நடிப்பிலிருந்து மாறுப்பட்டுள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை
முழுமையாக செய்திருக்கிறார். அவரது வழக்கமான ஈறுகளை காட்டி கேனத்தனமாக சிரிக்கும் சிரிப்பு
காட்சிகள் இல்லை. தேவையில்லாமல் சட்டையை கழட்டி கான்பிக்கவில்லை. அவரது வழக்கமான குதித்து
சண்டை போடும் பாணியில் சண்டையிடாமல் தேவையான இடங்களில் மட்டும் சிறப்பாக சண்டை காட்சிகளில்
நடித்துள்ளார்.
இவரது
மனைவியாக வருபவருக்கு அதிக காட்சிகள் இல்லை. இவர் என்ன வேலை செய்கிறார் என்பது சரியாக
தெரியாவிட்டாலும் இவர் செய்வதாக கூறும் வேலை செய்யவில்லை என்பதை மட்டும் அறிவார். ஒவ்வொரு
முறை வெளியே போகும் போது, “ செத்து விடாதே “ என்று மட்டும் கேட்டுக்கொள்கிறார். இந்த
காட்சிகளில் நியாயமாக அனுதாபம் வர வேண்டும். ஏனோ வரவில்லைல். கவர்ச்சி காட்டவில்லை.
அழவில்லை. பாடல் பாடவில்லை. முத்தமிடவில்லை.
இவருடன்
செல்லும் தாப்ஸி ஒரு காட்சியில் மட்டும் வந்தாலும் சிறப்பாக செய்து ஒரு சண்டை காட்சியிலும்
அசத்தியுள்ளார். இவரும் தேவையில்லாமல் கவர்ச்சி காட்டவில்லை.
இவருடன்
செல்லும் ரானாவும், அனுபம் கேரும் சிறப்பாக செய்துள்ளனர். நடிப்பில் அனைவரும் சிறப்பாகவே
செய்துள்ளனர்.
ஓளிப்பதிவு
(சுதீப் சேட்டர்ஜி ) டெல்லியில் நடப்பதாக காட்டப்படும் காட்சிகள் டெல்லிக்கு அருகில்
உள்ள கிரேட்ட நொய்டா பகுதில் அமைந்துள்ள பல்கலைகழகத்தில் படபிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
துருக்கி
(இஸ்தான்பூல்) நேபாள், சவுதி அரேபியா போன்ற இடங்களின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக
இருந்தது. குறிப்பாக சவுதி அரேபிய பாலைவன காட்சிகள் மிக மிக அருமை. பாலைவனத்தை கூட
கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டியிருக்கிறார்.
இசையும்
பின்னனியும் அருமை. தலைவலி வருவது போல சண்டை காட்சிகளில் பின்னனி இசை அமைக்காமல் மிகவும்
கச்சிதமாக உள்ளது. தனியாக பாடல் காட்சிகள் இல்லாமல் கவிதை போல படத்துடன் பாடல்கள் வருகிறது
இதமாக உள்ளது.
ஓளிப்பதிவுக்கே
கொடுத்த காசு பூரணமாகி விடுகிறது.
படம்
பார்க்கலாம்.