Friday, 13 June 2014

அடிமைகள உருவாக்கப்படுகின்றனர்



யுனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன் (UNION PUBLIC SERVICE COMMISSION) 2013ஆம் ஆண்டுக்கான  I.A.S. இறுதி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 3,23,949 பேர் தகுதி தேர்வில் கலந்து கொண்டு, அதில் 14,959 பேர் மட்டுமே இறுதி தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். அதில் 1,122 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று பணி அமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் I.A.S. , I.F.S. மற்றும் I.P.S. பணிகளில் அமர்த்தப்படுவர்.

இவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் அதற்க்காக அவர்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது. பயிற்ச்சி கட்டணமும் அதிகம். ஒரு சிலருக்கு தகுதி அடிப்படையில், இலவச பயிற்ச்சி கிடைக்கிறது.

இதில் சாதாரண பட்ட படிப்பு படித்தவர்களும், மற்றும் பிரபலமான I.I.T.Kanpur ல் பொறியியல் மற்றும் I.I.M Lucknowல் முதுநிலை நிர்வாகம் படித்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இவர் 2வது முறை தேர்வு எழுதி முதலாவது நபராக வெற்றிபெற்றுள்ளார்.

இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் டெல்லி பல்கலைகழகத்தில் சாதாரண பட்டபடிப்பு Biochemistry படித்தவர். இவரும் 2வது முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

இவ்வளவு சிறந்த படிப்பு படித்தவர் இந்த படிப்பிலேயே லட்ச கணக்கான மாத வருமானத்துடன் வேலையில் சேர முடியும். இருப்பினும் சமூக அந்தஸ்த்து மற்றும் அதிகாரத்துடன் கூடிய பதவியை அடைய , சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்

இவர்கள் படித்த முட்டாள்களிடமும், படிக்காத அறிவாளிகளிடமும் வேலை செய்ய வேண்டியுள்ளது. அரசியல்வாதிகள் இவர்களை பல சமயங்களில் மனிதர்களாக கூட மதிப்பதில்லை.

நாடு இயங்கிகொண்டிருப்பதற்க்கு காரணமே இவர்கள் தான். அரசு செய்யும் நன்மைக்கு தீமைக்கும் இவர்களே காரணம். 

நன்மை செய்ய வேண்டும் என்ற கனவுடன் இந்த படிப்பை படித்து வேலைக்கு சேர்கின்றனர். ஆனால், இவர்களால்  நிர்வாக அமைப்பை மாற்ற முடிவதில்லை. நிர்வாக அமைப்பு இவர்களை மாற்றி விடுகிறது. இவர்களும் வேறு வழியில்லாமல் மாறி விடுகின்றனர். முரண்டு பிடித்து மக்களுக்கு நன்மை செய்ய புறப்படும் அதிகாரிகள் உயிர் வாழ்வதே கடினம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால், இது அரசியல்வாதிகளுக்கு அடிமைகளை உருவாக்கும் தேர்வு போல அமைந்துள்ளது.

இவர்களது நல்ல செயல்களை , ஆலோசனைகளை அரசியல்வாதிகள் பயன்படுத்திகொண்டால், நாடு முன்னேறும்.


தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இந்த பதிவை மீண்டும் படித்து பாருங்கள். இதில் இரண்டு முறை I.A.S. என் எழுதியுள்ளேன்.

எனது வலைபூவில் sudhandhiraparavai.blogspot.com ல்100வது பதிவு

உள்நாட்டு அகதிகள்



திரு. நரேந்திர மோடியின் அரசு பதவியேற்ற பின் செயல்படுத்தும் திட்டங்களில் ஒன்று காஷ்மீர் பண்டித்களை (பிராமணர்கள்) மீண்டும் அவர்கள் வாழ்ந்த காஷ்மீர் பகுதிகளில் குடியமர்த்தும் மறுவாழ்வு திட்டம்.

1989ஆம் ஆண்டுகளில் இங்கு ஆரம்பித்த தீவிரவாத செயல்கள் காரணமாக அவர்களை எதிர்த்து போரடும் வலிமையற்ற இந்து பிராமணர்கள் அச்சத்தின் காரணமாக தாமாகவே வெளியேறினர். இஸ்லாமிய தீவிரவாதிகளால் விரட்டப்பட்டனர். அவசரத்தில் வெளியேறியவர்கள் தங்களது உடமைகளையும் சொத்துக்களையும் விட்டு விட்டு வெளியேறினாலும், பின்பு திரும்பி சென்று சொத்துக்களை விற்று விட்டு வந்தனர். சந்தை நிலவரப்படி அவர்களுடைய சொத்துக்களுக்கு பணம் கிடைக்காமல் போயிருக்கலாம்.

2008 ஆம் ஆண்டு , திரு. மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் குடிபெயர்ந்த பிராமணர்களை மறு குடியமர்த்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அங்கு மீண்டும் குடியேற விரும்பும் குடும்பங்களுக்கு, அவர்கள் வீடு கட்டிக்கொண்டு வாழ்வதற்க்கு ரூ.7,50,000/- வழங்குவதாக அறிவித்தது. இது 1989ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டுக்குள் வெளியேறியவர்களுக்கே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொகை குறைவாக இருந்த காரணத்தாலும், பெரிய அளவில் அமைதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் இந்த திட்டம் வெற்றி பெறவில்லை.

தற்போது, ஜம்மு-காஸ்மீர் அரசு இந்த தொகையை ரூ.20,00,000/-ஆக உயர்த்தியுள்ளது. அங்கிருந்து எந்த காலத்தில் வெளியேறியிருந்தாலும், அங்கு வந்து வாழ விரும்பும் அனைத்து குடும்பங்களுக்கும். இந்த சலுகை கிடைக்கும் என அறிவித்துள்ளது.

இந்த திட்டம் பொதுவாக மக்கள் நலனில் அக்கறை கொண்டு அமுல்படுத்துவதாக தோன்றினாலும் உண்மையில் இதன் பின்னனி என்னாவாக இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். இந்த  திட்டத்தை அங்கிருக்கும் எதிர்கட்சியினரோ அல்லது தீவிரவாத இஸ்லாமிய குழுக்களோ எதிரிக்கவில்லை.

திரு.மோடி பதவியேற்ற பின் அரசியல் சட்டம் பிரிவு 370 நீக்க  போவதாக ஒரு துனை அமைச்சரின் மூலம் செய்தி வெளியிடப்பட்டது. அது பல விவாதங்களை எழுப்பியது. இன்றைய ஜம்மு காஸ்மீர் முதமைச்சர் , 370 பிரிவை நீக்கினால், ஜம்மு-காஸ்மீர் தனி நாடாக இயங்க வேண்டியிருக்கும் என்று ரீதியில் பேசினார். அதன் பிறகு அந்த விவாதம் தொடரவில்லை.

திரு. நரேந்திர மோடி , இந்து மத மக்களின் காவலன் என்ற மாயை ஏற்ப்படுத்தியுள்ளார். இவர் இந்த திட்டத்தை.நிறைவேற்றுவதின் மூலம் , அந்த மாயை தக்க வைத்துக்கொள்ள முடியும். மேலும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு தான் பயப்படவில்லையென்றும், சிறுபான்மை இனத்தவர்களிடம் பெரும்பான்மை இனத்தவர் தோற்றுவிடவில்லை என்ற செய்தியை நாட்டுக்கும் அண்டை நாடுகளுக்கும் உலக நாடுகளுக்கும் அறிவிக்கும் செயலாக இது அமைகிறது.

மேலும், சட்டபிரிவு 370 நீக்கப்பட்டால் ஜம்மு காஸ்மீர் அனுபவித்து வரும் சிறப்பு அந்தஸ்து பறி போய்விடும் என்ற நிலை இருப்பதால், மாநில அரசும் இதற்க்கு சம்மதித்துள்ளது போல் தோன்றுகிறது.

காஸ்மீர் பண்டித்துக்கள் (பிராமணர்கள்) என்று தான் சொல்லப்படுகிறதே தவிர காஸ்மீர் இந்துக்கள் என்று சொல்லப்படவில்லை. காஸ்மீரில் இந்து பிராமணர்கள் மட்டும் தான் வாழ்ந்தார்களா ? மற்ற வைசியர்கள், சத்திரியர்கள் மற்றும் சூத்திர பிரிவினர் வாழவில்லையா ?. நிச்சியமாக வாழ்ந்திருப்பார்கள். பிராமணர்களுக்கு இந்த பிரிவு மக்கள் இல்லாமல் தனித்து வாழ முடியாது. இந்த பிரிவினர் செய்யும் வேலைகளை, இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்களும் செய்கின்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு இந்த வேலையே செய்து கொடுத்திருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிராமணர் அல்லாத மற்ற இந்துக்களும் வாழ்ந்திருப்பார்கள். அவர்களுக்கு இந்த மறு குடி அமர்வு திட்டம் வழங்கபடாதா ?. இது குறித்து ஏன் தெளிவாக அறிவிப்புகள் இல்லை என்பது புரியவில்லை.

நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றோரு பகுதிக்கு இயற்கையாக குடிபெயர்வோர் உண்டு. வேலை நிமித்தமாகவோ அல்லது தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு பல காரணங்களுக்காக குடிபெயர்ந்தவர்களுக் இருக்க கூடும். அவர்கள் என்ணி வந்த நோக்கம் நிறைவேறாமல், சொந்த ஊர் திரும்பி செல்ல எண்ணி கொண்டிருப்பவர்களுக்கு இந்த திட்டம் நல்ல பயனை தரும். 

தீவிரவாத செயல்கள் காரணமாக இந்து பிராமணர்கள் மட்டும் தான் வெளியேறினார்கள் என்று சொல்ல முடியாது. உயிருக்கு பயந்த இஸ்லாமிய சமூகத்தினரும் வெளியேறியிருப்பார்கள். அவர்கள் மீண்டும் காஸ்மீர் செல்ல விரும்பினால், இந்த சலுகை அவர்களுக்கு கிடைக்காதா ? ஏன் இந்த சலுகை திட்டம் காஸ்மீர் பிராமிணர்களுக்கு மட்டும் என்று சொல்லப்படுகிறது. 

இது உண்மையில் மனிதாபிமான திட்டமாக இல்லாமல், மத ரீதியாக இந்த பிரச்சனை அனுகப்பட்டு, அதிலும் குறிப்பாக உயர் சாதி மக்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக இந்த திட்டம் அமைகிறது.

ஒரு வேளை திரு. நரேந்திர மோடி நல்ல எண்ணத்துடன் தான் செய்கிறார் இதில் குறை காண முடியாது என்றும், உள்நாட்டில் அகதிகளாக வெளியேறியவர்களுக்கு உதவும் திட்டம் என்றால் அவர்களை பார்த்து நான் வைக்கும் ஒரு கேள்வி.

தீவிரவாதம் என்பது ஆயுதம் ஏந்திய போரட்டம் மட்டுமல்ல. சிந்தனை ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதும் இதில் அடங்கும்.

தமிழ்நாட்டில் பெரியார் என்று அழைக்கப்பட்ட திரு. ஈ.வே. ராமசாமி நாயக்கர் (தெலுங்கர்) புரட்சி என்ற பெயரால் செயல்படுத்திய மத ஒழிப்பு (இந்து மதம் மட்டும்), கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு ?? போராட்ட காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த பிராமணர்கள் துன்புறுத்தப்பட்டனர். அவர்களது பூணூலை அறுத்ததும் குடுமியை  அறுத்ததும் , உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிறுபான்மை இனமாக இருந்த / இருக்கும் பிராமன சமூகம் இவற்றை எதிர்த்து போராட வழி இல்லாமல் வட நாட்டுக்கு குறிப்பாக டெல்லிக்கும், மும்பைக்கும் குடியேறினர். அவர்கள் அந்த பகுதிகளில் தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் நேரடியாக திராவிட கட்சிகளுடன் மோதாமல், அரசில் உயர் பதவிகளில் அமர்ந்து கொண்டு, பிராமணர் அல்லாதவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவற்றை கிடைக்கவிடாமல் செய்வதாக சொல்கின்றனர். தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இந்த பிரிவினையை இன்னமும் உயிருடன் வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து வெளியேறிய பிராமணர்களை மீண்டும் தமிழ்நாட்டில் குடியமர்த்த ஏன் முயற்ச்சி செய்யவில்லை. அவர்களும் ஒரு விதத்தில் உள்நாட்டு அகதிகள் தானே ?

ஒரே மதத்தில் இருக்கும் ஜாதி உயர்வு தாழ்வு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை பற்றி கவலையில்லை. ஆனால், மத ரீதியாக வெளியேற்றப்பட்ட காரணத்தால், அவர்களுக்கு நான் இளைத்தவனும் அல்ல சளைத்தவனும் அல்ல என்று நிருபிக்க எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த காஸ்மீர் பண்டித் மறு குடியமர்ப்பு திட்டம்.

சொந்த நாட்டில் அகதிகளாக வாழாமல், தான் பிறந்து வளர்ந்த சொந்த இடத்தில் வாழ்வது தான் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். அந்த வகையில் ஒரு சிறு பகுதியினருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படுகின்றது என்பதில் மகிழ்ச்சியே.

இந்த உள்நாட்டு அகதிகள் என்ற விசயத்தில் மற்றோரு அம்சத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கு என்ற பெயரில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளும், விளைநிலங்களும் கையகப்படுத்தப்படுகிறது. மிகவும் சொற்பமான நட்ட ஈடு தொகை கொடுக்கப்படுகிறது. பல சமயங்களில் பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றனர். அவர்களுக்கு நியாயமான நட்ட ஈட்டு தொகையும், வேறு பகுதிகளில் சென்று குடியேற தேவையான வசதிகளை செய்து தருவது அரசின் பொறுப்பல்லவா ?

வனப்பகுதிகளில்  கனிம வளங்களை எடுக்கும் பொருட்டு அங்கு வாழும் மலைவாழ் மக்களை விரட்டியடிப்பது எந்த வகையில் நியாயம். அவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல அவர்களது வாழ்வாதரமும், இயற்கை வளமும் அழிக்கப்படுகிறது என்பதாலும். அவை வருங்காலத்தில் மிக பெரிய அளவில் மனித குலத்திற்க்கு கேடாக அமையும் என்ற காரணத்தாலும் தான் எதிர்க்கின்றனர்.

விரட்டியடிக்கப்படும் மக்களுக்கு சரியான வாழ்க்கையை அமைத்து கொடுத்தால், மாவோயிஸ்டுக்கள் போன்ற ஆயுத குழுக்கள் ஏற்ப்படுவதை தவிர்க்கலாம்.

ஒரு கும்பல் தனது மதத்தின் பெயரால் மற்ற மதத்தினரை வெளியேற்றினால் அது மத தீவிரவாதம். ஆனால் அரசு, வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அவர்களது பகுதியிலிருந்து வெளியேற்றினால் அதை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது கூடாது என்பது என்ன நியாயம்.


Monday, 9 June 2014

GDP IS NOT INDICATOR OF MORALITY



உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (Gross Domestic Product-GDP) அடிப்படையில் நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்படுகிறது. நாட்டின் கடன் பிர்ச்சனையை தீர்க்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், விபச்சாரம், போதை பொருள் மற்றும் கடத்தல் மூலம் கிடைக்கும் வருவாயையும் கணக்கில் கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.

DRUGS, SEX AND ALCOHOL COULD BOOST ECONOMIC GROWTH

Paris: Europe’s governments are turning their attention to prostitution, drugs and contraband as possible ways of boosting their economic growth profiles, as they struggle away from their debt crises. 

Italy caused a stir when it announced last month that it would begin including revenues from drug trafficking and the sex trade, as well as contraband tobacco and alcohol, to calculate Gross Domestic Product (GDP) from next year.

One effect would be to reduce the public deficit as a ration of output, if EU authorities were to accept the idea. That would be  a big help to countries trying to get their public deficits below the EU ceiling of 3.0% output.

In 2012, Italy’s central bank estimated the value of the criminal economy at 10.9% of GDP. Including these figures could therefore boost the country’s growth to above the government’s 1.3% estimate.

Last month, Britain said including illegal activities such as prostitution and drugs into national accounts would add about 10 billion pounts to GDP , equivalent to about 1% of national output. 

Using the undeclared or so-called black economy to calculate national statistics is part of range of changes recommended by the European Union’s statistical Institute, Eurostat, to be implemented in September.

Eurostat said including such data would allow a better comparison between countries with different laws. “GDP is not an indicator of morality” said a spokesman, adding that only transactions carried out consesually would be included.

But others are less convinced. Eric vernier, a researcher at the Institute of International Relations, said including “ gross criminal product” in growth figures is a cynical attempt to combat the debt crisis.

Hindustan Times Delhi Edition Page No. 18 Dt.09.06.2014

கருப்பு பொருளாதாரம் எனப்படுகிற கணக்கில் வராத வருவாயையும் தேசிய வருவாயில் இனைப்பதன் மூலம் நாட்டின் கடன் தொல்லையை தீர்க்கமுடியும் என இத்தாலிய அரசு முடிவு செய்து அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது

பிரிட்டன் அரசாங்கம் இந்த முறையில் கிடைக்கும் வருவாய் தேசிய வருவாயில் 1% என கூறுகிறது.

வெள்ளைக்காரன் செய்தால் அதை கண்ணை மூடிக்கொண்டு நம் நாட்டிலும் அமுல்படுத்தும் அரசியல்வாதிகள் இதை அரசுக்கு பரிந்துரைப்பார்கள்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் கனிசமான மக்கள் விபச்சாரத்தை தொழிலாக கொண்டால் அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.

வேலையில்லா ஆண்களும் பெண்களும் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக விபச்சாரம் செய்யலாம். நிராதரவான பெண்களும் ஆண்களும் சமூகத்தில் தலைகுனிந்து வாழமல், அரசு அனுமதியுடன் விபசாரத்தில் பணம் சம்பாதித்து வாழலாம். முழுமையான விபச்சாரம் செய்ய முடியாதவர்கள் , காமத்தில் இருக்கும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்று சம்பாதிக்கலாம்

ஆடை இல்லாமல் நடனமாடுவது, கடற்கரையில் பேருந்துகளில் வாய் விளையாட்டு, உடம்பு பிடித்து விடுதல், முன் விளையாட்டு பின் விளையாட்டு என்று பலவகையான பிரிவுகள் உள்ளன. இதில் ஏதெனும் ஒரு துறையில் சிறப்பு பயிற்சி பெற்று பணம் சம்பாதிக்கலாம்.

இவர்களுக்கு PANனுடன் இனைத்து அடையாள அட்டை வழங்கலாம். சேவை வரியும் (Service Tax)  வருமான வரியும் விதிக்கலாம்

இதற்க்காக Bangkok  செல்லும் நபர்கள் உள்ளுரிலேயே இந்த சேவைகளை பெறமுடியும். அந்திய செலவானியையும் மிச்சப்படுத்தலாம்.

சிறு குழந்தைகளுடன் காமம் அனுபவிக்க வெளிநாட்டுகாரர்கள் இந்தியா வருவது அதிகரித்து வருகிறது. எனவே, மத்திய மாநில அரசுகள் CHILD SEX TOURISM என்று ஒரு அமைச்சகத்தை நிறுவி அதன் மூலம் செயல்ப்பட்டால் அந்நிய செலவானியை அதிகமாக சம்பாதிக்கலாம்

இதன்மூலம் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கலாம். கற்பழிப்பு குற்றங்களும் குறையலாம்.

13 வயதிலிருந்து திருமணம் ஆகி காமம் அனுபவிக்கும் 
வரை வெந்து தணியும் ஆண்/பெண் இருவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.
இது தவறு என்று அரசாங்கம் நினைத்தால், unnatural sex injurious to health என்ற வாசகங்களுடன் இதை அனுமதிக்கலாம்.

காவல்துறையின் கெடுபிடிகள் இதன் மூலம் குறையும். பயமின்றி தொழில் செய்ய வசதியாய் இருக்கும். காவல் துறை இவர்களிடம் லஞ்சம் வாங்குவது தடுக்கப்படுவதன் மூலம், லஞ்சம் வாங்குவதில் இந்தியா முதன்மை வகிக்கிறது என்ற அவப்பெயரை நீக்கலாம்.

இதற்க்காக ஒரு குழு நியமித்து விதிமுறைகள் வகுத்து செயல்படுத்தினால், தனிநபர் வருமானம் கூடுவதுடன் அரசின் வருமானமும் கூடும்.

போதை மருந்துகளை அரசு அங்கிகாரம் பெற்று விற்பனை செய்யலாம். பீடி சிகிரெட் இவைகளில் கலந்து விற்க்கலாம். பான் பராக் போன்று சிறிய பாக்கெட்டுக்களில் விற்க்கலாம். விருந்து நடைப்பெறும் இடங்களில் முன் அனுமதி பெற்று விருந்தினர்களுக்கு வழங்கலாம் என அறிவிக்கலாம். விருந்து நடைப்பெறும் இடங்களில் போதை மருந்து வழங்க அனுமதிப்பதுடன், விபசாரத்தையும் அந்த இடங்களில் ஏற்பாடு செய்தால் விருந்து களை கட்டும்.

மது விற்பனையும் இதில் சேர்த்துக்கொள்ளப்படலாம் என கூறியிருப்பதால் இந்த இடங்களிலும் விபசாரத்தை அனுமதித்தால், மக்கள் மனைவியை தொந்தரவு செய்யாமல் இருப்பதுடன், மக்கள் தொகையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கள்ள கடத்தல் முறையை முறைப்படுத்தினால், அரசு துறை அதிகாரிகளுக்கும், காவல் துறைக்கும் வழங்கும் லஞ்ச பணத்தை அரசாங்கத்திற்க்கு கொண்டு வரலாம். நாட்டின் பொருளாதாரம் உயரும்.

இவைகளை தவிர நாட்டில் தவறு என்று அனுமதிக்கப்படாமல் இருக்கும் பல்வேறு தொழில்களையும் அனுமதித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தலாம்.

இவைகளை அனுபதிப்பதன் மூலம் நாட்டின் கலாச்சாரம் பண்பாடு கெடும் பெண்களின் கற்பு பாதிக்கப்படும் என்பவர்களுக்கு ஒரே பதில். மாற்றம் ஒன்றே மாறாதது. காலத்திற்க்கு ஏற்ப மாறித்தான் ஆகவேண்டும்.

அம்மணமாக திரியும் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியகாரன் என்பது பழமொழி

பணம் தான் பிரதானம். தேசிய வருமானத்திற்க்கும் ஒழுக்கத்திற்க்கும் சம்மந்தமில்லை. “GDP is not an indicator of morality”கற்பாம் மானமாம் கண்ணகியாம் காசிருந்தால் வாங்கலாம் கடைத்தெருவில்என்ற பாடலை ரசித்தவர்கள் நாம்.

கல் தோன்றி மண் தோன்ற காலத்து முன் தோன்றிய மூத்த குடிதமிழ் குடி என்று பெருமைப்படுபவர்கள் நாம். விபச்சாரமும் இந்த குடியில் தான் முதலில் தோன்றியிருக்கும். சங்க காலத்து பாடல்களிலும் இவர்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது


கோவலன் மாதவி வீட்டுக்கு சென்றது குறித்து படித்து கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா என்று இன்று வரை பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். கணவனை தாசி வீட்டுக்கு அழைத்து சென்ற நளாயினி கதையையும் இன்றும் படித்துக்கொண்டிருக்கிறோம்.

எனவே, காலத்திற்க்கேறவாறு இவற்றை ஒழுங்கு படுத்தி நடைமுறை படுத்தினால், அரசாங்கத்திற்க்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

முதலில் அறிமுகபடுத்திய மாநிலம் என்ற பெருமையடைவதுடன், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற இது பெரிதும் பயன்படும்.

இந்த மாதிரி சிந்தித்த சிந்தனையாளர்கள், அதை ஏற்க்கொண்ட அதிகாரிகள், அரசுகள் ஆகிய அனைவர்கள் மீது இடி விழ என்று கூறி முடித்துக்கொள்கிறேன்.



Sunday, 1 June 2014

குழந்தைகளின் பணத்தை கொள்ளையிடும் வங்கிகள்



அண்மையில் மத்திய வங்கி, 10 வயதுக்கு மேற்ப்பட்ட குழந்தைகள் வங்கிகளில் அவர்களே சேமிப்பு கணக்கை துவக்கி இயக்கலாம் என அறிவித்துள்ளது.

வங்கிகள்,  குழந்தைகளின் வங்கி கணக்கை துவக்கும் போது விதிக்கும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இவைகளை நிரணயித்துக்கொள்ளாலம் எனவும் இந்த வகையில் இவை பாதுகாப்பானதும் என்று கூறியுள்ளது. மேலும், ATM Internet வசதிகளையும் அளிக்கலாம் என கூறியுள்ளது.

இதனால், வங்கிகளில் நிறைய கணக்குகள் துவக்கப்படும் என்றும் குழந்தைகளிடம் இருக்கும் சிறு சேமிப்பு பணம் வங்கிகளில் சேமிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

மேலோட்டமாக பார்த்தால் இது சிறந்த திட்டம் போல தான் தோன்றுகிறது. நாடு முழுவதும் குழந்தைகளிடம் சிறு சேமிப்பு பணம் எவ்வளவு இருக்கும், ஒரு சில கோடிகள் இருக்கும். ஆனால், குழந்தைகளின் பெயரில், பெற்றோர் பாதுகாவலர் வைத்திருக்கும் பணம் நிறைய கோடிகள் இருக்கும்

குழந்தைகளிடம் எப்படி பணம் வருகிறது.

குழந்தைகளின் பிறந்த நாள் தினம் அல்லது மற்ற விஷேச தினங்களில் பெரியவர்கள் கொடுக்கும் பணம் தான் பொதுவாக இருக்கும்.

ஆனால், இன்றைய நிலையில் குழந்தைகளும் பணம் சம்பாதிக்கிறார்கள் 
.
1) ஏழை குழந்தைகள் வேலை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். அதில் சேமிக்கும் பணத்தை தான் நம்பும் பெரியவர்களிடம் கொடுத்து வைக்கிறார்கள். சில சமயம் அந்த பெரியவர்கள் ஏமாற்றி விடுவதும் உண்டு.

2) நடுத்தர குடுபங்களின் குழந்தைகள் இப்போது பல வழிகளில் பணம் சம்பாதிக்கின்றனர்.

விளம்பரங்களில் நடிப்பது, திரைப்படங்களில் நடிப்பது, விளையாட்டு போட்டிகளில் பரிசு பெறுவது, தொலைகாட்சி போட்டிகளில் வெற்றி பெறுவது , நட்ட ஈட்டு தொகை பெறுவது, தாத்தா சொத்து பேரன் பேத்திகளுக்கு என்ற முறையில் கிடைக்கும் பணம் மற்றும் பல

இவைகள் தற்போது, குழந்தைகளின் பெற்றோர் மூலம் அல்லது 
பாதுகாவலர் மூலம் பாதுகாக்கப்படுகிறது. குழந்தைகளின் முன்னேற்றத்திற்க்காக செலவழிக்கப்படுகிறது. நல்ல இடங்களில் முதலீடு செய்பவர்களும் உண்டு. ஒரு சில இடங்களில் தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இப்படி பாதுகாப்பாக இருக்கும் பணம் , குழந்தைகளிடம் சென்றால் பணத்தின் மதிப்பு தெரியாமல் செலவழிப்பார்கள். இவர்களை சுலபமாக ஏமாற்றி, ATM Internet மூலம் பணத்தை எடுத்து விடுவார்கள். பெரியவர்களே பலமுறை ஏமாந்த செய்திகளை தினமும் கேள்விப்படுகிறோம்.

இப்போதும் குழந்தைகளின் பணம் வங்கிகளில் தான் இருக்கிறது. எனவே, தனியாக குழந்தைகளுக்கு வங்கி கணக்கு ஆரம்பித்து இயக்க அனுமதிப்பதால் வங்கிகளுக்கு பெரிய அளவில் பணம் கிடைத்துவிட போவதில்லை. வங்கி கணக்கு எங்களிடம் நிறைய இருக்கிறது என்று கூற வேண்டுமானலும் பயன்படலாமே தவிர வேறு எந்த பயனும் ஏற்ப்படாது. ஆனால் தீமைகள் பல ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே, இந்த திட்டத்தை மத்திய வங்கி மீண்டும் பரிசீலினை செய்து கைவிட வேண்டும்.