Thursday, 4 July 2013

கற்பு என்பது என்ன?



கற்பு என்பது என்ன?

கற்பு என்ற சொல் அனைத்து நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும், அனைத்து இனத்திலும் மற்றும் அனைத்து சமயங்களிலும் உள்ளதா ?

கற்பு என்பதற்க்கு எல்லா இடங்களிலும் ஒரே விதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா ?

கற்பு என்பது விவாத பொருளா? 
கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதா ?
இன்றைய அறிவியல் உலகில்(கலிகாலத்தில்) கற்பு என்ற சொல்லுக்கு பொருள் உள்ளதா ?

இந்தியாவில் கற்பின் விளக்கம் என்ன ?

1) ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் எனும் சடங்கின் மூலம் அல்லது சட்ட ரீதியான முறையில் இணைந்த பின்பு , உடல் உறவு கொள்ள வேண்டும். அதன் பின்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது மரபு

அப்படியில்லாமல் திருமணத்திற்க்கு முன்பு ஆணும் பெண்ணும் உடல் உறவு கொண்டால், பெண் கற்பிழந்தவள் என கருதப்படுகிறது. இது குறித்து பல்வேறு விதமான கருத்துக்களும, விவாதங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நான் விவாதத்திற்க்கு எடுத்து கொள்ளும் பொருள் வேறு.

இன்றைய நாளில் எவ்வாறெல்லாம் குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது என பார்ப்போம்.

1. திருமணம் என்ற சடங்கிற்க்கு பின்பு இயற்க்கையான முறையில் உறவு கொண்டு குழந்தை பிறக்கிறது.

பெண்(மணைவி) குழந்தை பெற்றெடுக்கமுடியாத சூழ்நிலைகள்.

) பெண்ணிற்க்கு கருமுட்டை உருவாகத நிலை
) பெண்ணிற்க்கு கருப்பை பலவினமாக இருக்கும் நிலை/கருவை சுமக்க இயலாத நிலை
) பயத்தின் காரணமாக அல்லது இளமை குறைந்துவிடும் என்ற காரணத்திற்க்காக     குழந்தை பெறாமல் இருப்பது.
) பெண்ணிற்க்கு உடல் உறவில் விருப்பமின்மை
) காரணம் அறிய முடியாத நிலை

ஆண்(கணவன்) குழந்தை பெற்றெடுக்கமுடியாத சூழ்நிலைகள்

) விந்து உருவாகாத நிலை
) விந்து வீரியம் இல்லாமை
) மணைவியின் இளமை குறைந்து விடும்/பிரசவத்தில் மனைவி இறந்துவிடுவாள் என்ற பயம்
) பெண்ணிடம் ஈர்ப்பு இல்லாமை(ஓரின சேர்கையாளனாக இருப்பது)
) காரணம் அறிய முடியாத நிலை

இன்றைய அறிவியல்/விஞ்ஞான முறைப்படி எப்படி பிள்ளை பெறுகின்றனர்.

1) பெண்(மணைவி) கருவை சுமக்க முடியாத நிலையில்/சுமக்க விரும்பாத நிலையில்

பெண்ணின் கருமுட்டையை வெளியே எடுத்து மற்றும் ஆணின் விந்துவையும் வெளியே எடுத்து, இதற்கென உள்ள மருத்துவ மனைகளில் குப்பிகளில் இரண்டையும் சேர்த்து செயற்கையாக கருவை உருவாக்கி, வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் வைத்து கருவை வளர்த்து, இயற்கையாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ குழந்தை பிறக்க செய்து, அந்த தம்பதிகளிடம் ஒப்படைத்தல். இப்படி பிறருக்காக குழந்தை பெற்றுக்கொடுப்பவர்களுக்கு வாடகை தாய் என்று பெயர்.

2) பெண்ணிற்க்கு (மனைவிக்கு) கருமுட்டை உருவாகாத நிலையில்

பெண்ணின் கருப்பை கருவை சுமக்கும் நிலையில் இருந்து அதே சமயம் கருமுட்டை உருவாகாத நிலையில் வேறு ஒரு பெண்ணின் கருமுட்டையை விலைக்கு/தானமாக வாங்கி அதனுடன் ஆணின் (கணவன்) விந்துவையும் வெளியே மருத்துவமனையில் சேர்த்து பின்பு பெண்ணின்(மணைவி) கருப்பையில் வைத்து, குழந்தை பெற்றுக்கொள்வது.

கருமுட்டையை தானம் செய்பவர்கள் உண்டு.

இந்த முறை ஏன் கையாளப்படுகிறது

1) ஆண்(கணவன்) வேறு பெண்ணுடன் இயற்கையான முறையில் உடல் உறவு கொள்வது தடுக்கப்படுகிறதாம். ஆணின் கற்பு நிலை காக்கப்படுகிறதாம்.

2)கருமுட்டைதானமாக/கருப்பையை வாடகைக்கு  கொடுத்த பெண் யார் என்ற ரகசியம் காப்பாற்றப்படுகிறதாம்.

3) எதிர்காலத்தில் கருமுட்டையை தானம்செய்த/கருப்பையை வாடகைக்கு  கொடுத்த  பெண், குழந்தையை உரிமை கொண்டாடி வரும் நிலை தவிர்க்கப்படுகிறதாம்.

ஆண் (கணவன்) கருவை உருவாக்க முடியாத நிலையில்

1) வேறு ஒரு ஆணின் விந்துவை விலைக்கு வாங்கி பெண்ணின்(மணைவியின்) கருமுட்டையுடன் வெளியே சேர்த்து, அதை மனைவியின் கருப்பையில் செலுத்தி குழந்தை பெறுவது அல்லது வாடகை தாயின் மூலம் குழந்தை பெறுவது.
இந்த முறை ஏன் கையாளப்படுகிறது

1) பெண்(மனைவி) வேறு ஆணுடன் இயற்கையான முறையில் உடல் உறவு கொள்வது தடுக்கப்படுகிறதாம்.பெண்ணின் கற்பு நிலை காக்கப்படுகிறதாம்.

2)விந்துவை தானமாக கொடுத்த ஆண் யார் என்ற ரகசியம் காப்பாற்றப்படுகிறதாம்.

3) எதிர்காலத்தில் விந்துவை தானம் செய்த ஆண், குழந்தையை உரிமை கொண்டாடி வரும் நிலை தவிர்க்கப்படுகிறதாம்

ஆண்-பெண்(கணவன்-மணைவி) இருவருமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், அனாதை குழந்தைகளை தத்து எடுக்காமலும்/மறுமணம் செய்யாமலும் தனக்கு தேவையான குழந்தையை உருவாக்கி கொள்ளும் முறை.


1.விந்து தானம் செய்யும் நபரை தேர்வு செய்தல்

2) கருமுட்டையை தானம் செய்யும் பெண்ணை தேர்வு செய்தல்

3) கருவை சுமக்கும் பெண்ணை தேர்வு செய்தல்

இவை மூன்றையும் குழந்தை வேண்டுபவர் தேர்வு செய்து, மருத்துவமனையில் கூறினால் அவர்கள் குழந்தையை உருவாக்கி தருவார்கள்.(order to make)
இவ்வாறு பிறக்கும் குழந்தைகளை சமூகமும் சட்டமும் ஒப்புக்கொள்கிறது.

என்னுடைய  சந்தேகங்களும் கேள்விகலும்::

1) ஒரு குழந்தையின் உயிரில் கணவன்-மணைவி இருவரின் உயிரும் சரிசமமாக கலந்து 50:50 இருக்கவேண்டும். அப்போது தான் அது அவர்கள் குழந்தை.

2) 50% மட்டுமே ஒரு குழந்தையின் உயிரில் கணவன்-மணைவி பங்கு இருந்தால் , அது எப்படி அவர்களின் குழந்தையாக இருக்கமுடியும்.?

3) 50% பங்கு உள்ள குழந்தையை ஏன் செயற்கை முறையில் உருவாக்க வேண்டும். 50% இயற்கையான முறையில் உறவு கொண்டு உருவாக்கினால் என்ன தவறு.
இதில் எங்கே கற்பு பறி போகிறது.

விந்து வேறு ஒருவருடையது என்கிற போது, பெண் கற்பிழந்தவள் தானே
கருமுட்டை வேறு ஒருவருடையது என்கிற போது, ஆண் கற்பிழந்தவள் தானே?

கருமுட்டையும் விந்துவும் தங்களுடையது அல்ல(இரண்டும் விலைக்கு வாங்கியது) என்கிற போது, அது அவர்கள் குழந்தை எப்படி ஆகும். அது தத்து/வளர்ப்பு பிள்ளை தானே?

50% தங்களுடைய பங்கு உள்ள குழந்தைக்கு சமூக அங்கிகாரமும், சட்ட ஆங்கிகாரம் கிடைக்கிறது.

இதே நியாயம், விலை மகளிர் பெறும் குழந்தைகளுக்கும் ஏன் பொருந்துவதில்லை. சமூகமும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. சட்டமும் ஏற்க மறுக்கிறது. இது என்ன நியாயம். விலை மகளிரிக்கு தனது குழந்தையின் ஆண் பங்களிப்பு யாருடையது என்று தெரியாவிட்டாலும் அவளது கருவில் உருவானது. அந்த குழந்தைகு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டாமா?

மேலும், வாடகை தாயின் நிலை என்ன?. ஆணின் விந்து யாருடையது என்று தெரியாத  நிலையில் குழந்தை பெற்றுக்கொடுத்தால், அவள் கற்பிழந்தவளா? அந்த குழந்தை தகாத முறையில் பிறந்த குழந்தை என கூறப்படுமா? வாடகை தாய் பெற்ற குழந்தையும், விலை மகளிர் பெற்ற குழந்தையும் ஒன்று தானே ?

இவ்வாறு குழந்தை பெறுவது சமிப காலமாக அதிகரித்து வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு, பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிர்கான் செயற்கை முறையில் (வாடகை தாய் மூலம்) குழந்த பெற்றார்.

இந்த வாரம் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் 3வது குழந்தை இந்த முறையில் பெற்றுள்ளார்.

இதில் இவருடைய பங்கும் அவரது மனைவியின் பங்கும் எவ்வளவு என்று தெரியவில்லை.

வருங்கால சட்ட சிக்கல்கள்

கடந்த பல ஆண்டிகளாக ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. முன்னாள் உத்திரபிரதேச முதல்வர் N.D. Tiwari மீது ஒரு வாலிபர் வழக்கு தொடர்ந்தார். அதாவது, N.D. Tiwari தனது தந்தை என்றும் அதை அவர் அங்கிகரிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார். பல வருடம் நடைபெற்றது. முடிவு எட்ட முடியாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், மரபணு சோதனை (DNA test) மேற்கொள்ளப்பட்ட்து. அதன் மூலம் அவர் தான் தந்தை என முடிவாகியுள்ளது. நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை.

இன்றிலிருந்து, 20 வருட்த்துக்கு பின்பு, யாரேனும் இப்படி வழக்கு தொடர்ந்து, மரபணு சோதனை மூலம் நீருபிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்ட நபர் இவ்வாறு வாதடலாம். அதாவது தனது இளமை பருவத்தில், மருத்துவமனையில் விந்து தானம் செய்ததாகவும், அதை மருத்துவமணை யார் உபயோகத்திற்க்கு கொடுத்து என்று தனக்கு தெரியது என்றும், அதன் மூலம் வழக்கு தொடர்ந்த நபர் பிறந்திருக்கலாம் எனவே இவர் எனக்கு பிறந்தவர் இல்லை என்றும் எனது வாரிசாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வாதிட முடியும்.

வழக்கு தொடுப்பவர் உண்மையில் சமுக அந்தஸ்து வேண்டும் என்றும் வழக்கு தொடரலாம். மிரட்டி பணம் பறிப்பதற்க்காகவும் அல்லது பிரபலங்களை அவமானப்படுத்துவதற்ககாவும் வழக்கு தொடர்லாம். அப்போது சட்டம் இதை எப்படி கையாளும். (மருத்துமனைகளோ அல்லது பணி புரிந்த மருத்துவரோ அல்லது விவரம் தெரிந்த ஊழியரோ இதற்கு உடந்தையாகவும் இருக்கலாம். பணத்திற்க்காக எதையும் செய்யும் நபர்கள் உண்டு)

இதை படிக்கும் வாலிபர்களுக்கு நற்செய்தி:

வாலிபர்கள் விந்து தானம் செய்யலாம்.(சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) ஒருமுறை விந்து தானம் செய்தால் ரூ.1000 /- முதல் ரூ.10000/- வரை கிடைக்கிறது.) ஏதேனும் பிரபலம் உங்கள் விந்துவை விரும்பி கேட்டு வாங்கினால் லட்சகணக்கிலும் சம்பாதிக்கலாம். டெல்லியில் கல்லூரி மாணவர்கள் கைசெலவுக்கு மருத்துவமனைகளில் கைதொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பிரபலங்கள் குறிப்பாக Models விந்து தானம் / கருமுட்டை தானம் செய்தும் நிறைய சம்பாதிக்கிறார்கள்.

(அண்மையில் ஒரு இந்தி திடைபடம் வெளிவந்த்து. திரைபடத்தின் பெயர் VICKY DONOR – இதில் கதாநாயகன் விந்து தானம் செய்பவர். திருமணத்திற்க்கு பிறகும் விந்து தானம் செய்தவர். இவருக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. இவரது விந்து தானம் மூலம் 52 குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறி அனைவரையும் காட்டுகிறார் மருத்துவர். அந்த குழந்தைகளில் ஒரு குழந்தை அனாதையாக உள்ளது. அதை அவர் தத்து எடுத்து கொள்கிறார்இந்த படத்தை தமிழில் எடுக்க இன்னும் யாருக்கும் துணிவு வரவில்லை)

அடுத்த முறை கழிவறையில் கை குலுக்குவதற்க்கு முன்னால் ஒரு முறை யோசியுங்கள்.
மருத்துவமனை எங்கிருக்கிறது என தேடிபிடியுங்கள்.


ராசாத்தி அம்மாள் எனது மகள் கனிமொழியின் தாயார்
 இந்த பொன்மொழிக்கும் கட்டுரைக்கும் சம்மந்தம் இல்லை.



மகாபாரத கதையில் வரும் குந்தி தேவி எந்த முறையில் கர்ணனை பெற்றேடுத்தார்??.
சூரிய பகவானை நினைத்து மந்திரம் சொல்லி குழந்தையை பெறமுடியுமா. மந்திர தந்திரத்தால் குழந்தை பெற முடியுமா??.

மகாபாரதத்தில் வரும் துரோபதை 5 பேருக்கு மனைவி. அவளுக்கு குழந்தை உண்டா? உண்டெனில் அது யாருடைய குழந்தை ? 5 பேருடன் வாழ்ந்தவள் கற்புக்கரசியா. எதற்க்காக அவளுக்கு கோயில்.

இன்று யாரேனும் 5 பேருடன் வாழ்ந்தால், அவளுக்கு கோயில் கட்டி கும்பிடுவார்களா???????

Monday, 15 April 2013

குற்றம் - தண்டணை - விதிவிலக்கு

குற்றமும் தண்டனையும் ::




இன்று இப்போது இந்தி மற்றும் ஆங்கில தொலைகாட்சிகளில் இந்தி நடிகர் சஜ்ஜய் தாத் பற்றிய செய்திகளும் விவாதங்களும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன.
1993, மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி என முடிவு செய்யப்பட்டு, குறைந்தபட்ச தண்டணையாக 5 ஆண்டுகள் சிறைவாசம் என தீர்பளிக்கப்பட்டவர். விசாரணையின் போது 18 மாதம் சிறை தண்டணை அனுபவித்துவிட்டதால் தற்போது மீதமுள்ள 42 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டி நாளை சரணடைந்து சிறை செல்ல வேண்டும். இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்து சிறை செல்ல 6 மாத காலம் கால அவகாசம் தேவை என மனு தாக்கல் செய்துள்ளார். அவர் கூறியுள்ள காரணம் , அவர் பல படங்களிள் நடித்து கொண்டிருப்பதாகவும், அவர் சிறை சென்று விட்டால், படங்களின் தயாரிப்பு வேலைகள் பாதிக்கப்பட்டு, சினிமா துறைக்கு ரு.150 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், சரணடைய 6 மாத கால அவகாசம் தேவையென மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவுக்கு ஆதரவாக சினிமா துறையை சார்ந்த பலரும் பேசுகின்றனர். சினிமா துறையை சார்ந்த எவரும் இது தவறு என கூறவில்லை. காரணம் துரோகி என முத்திரை குத்துவார்கள் என்ற பயமாகவும் இருக்கலாம். அல்லது தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படும் சமயத்தில், சினிமா உலகம் தனக்கு ஆதரவு தெரிவிக்காதே என்ற பயமாகவும் இருக்கலாம். அல்லது அவ்வாறு தவறு என சொல்பவர்களின் கருத்துக்களை பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் வெளிகொணராமல் இருக்கலாம். இதற்கு ஆதராகவும் எதிர்ப்பாகவும் செய்திகள் வெளியாகின்றன.
இவரது மனு ஏற்க்கப்பட்டு , கால அவகாசம் அளித்தால் என்ன நேரிடும்.
1) இவரை போலவே பலரும் மனு தாக்கல் செய்யலாம். பல்வேறு காரணங்களை கூறலாம். பிறறுக்கு பண நஷ்டம் ஏற்படும் என்ற காரணத்தை காட்டி இவர் சலுகை கேட்டால், இதைவிட வலுவான நியாயமான காரணங்களை காட்டி சலுகை கேட்க வழி வகுக்கும்.
2) ஒற்றை மனிதனாக குடும்பத்தை காப்பாற்றும் தனி மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் புரிய நேரிட்டு, சிறை தண்டணை பெறும் சமயத்தில், தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாலும், தன் மகன்/மகள் படித்து வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றும் பொருப்பு ஏற்கும் வரை தனது சிறை தண்டணையை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டால், நீதி மன்றம் சலுகை அளிக்குமா.
4) ஒரு தொழிலதிபர் ஏதேனும் காரணத்திற்காக சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டால், அப்போது அவர் தான் சிறை செல்ல நேரிட்டால், தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த இயலாது எனவும், தொழிற்சாலை மூடப்பட்டால் ஆயிரக்கணக்கான தொழிலார்கள் வேலை இழக்க நேரிடும் மேலும் பல இன்னல்கள் ஏற்படும் எனவே மாற்று ஏற்பாடு செய்யும் வரை சிறைதண்டணையை தள்ளி வைக்க வேண்டும் என முறையிட்டால், நீதி மன்றம் சலுகை அளிக்குமா.
3. இளைஜன் ஒருவன் குற்றம் செய்து, தண்டணை பெறும் சமயத்தில், தான் இன்னும் காதலிக்கவில்லை, காமம் அனுபவிக்கவில்லை , கல்யானம் செய்துகொள்ளவில்லை எந்த சுகமும் அனுபவிக்கவில்லை எனவே எனது சிறைதண்டணையை தள்ளி வைக்க வேண்டும் என முறையிட்டால், நீதி மன்றம் சலுகை அளிக்குமா.

இவ்வாறு சஜ்ஜய் தத்க்கு வாதிடுபவர்கள், குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் அவருக்கு பதிலாக அவர் வேலையை முடித்துவிட்டு வரும் வரை தான் சிறையிலிருப்பதாக ஒப்புக்கொள்வாரா?. 

இந்த தருணத்தில் வேறு ஒரு விஷயத்தை பற்றியும் குறிப்பிட நிணைக்கிறேன்., தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு  அவர்களது கருணை மனு நிராகரிக்கபட்ட நிலையில் பலர் மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பலரும்  பேசுகின்றனர். அவர்கள் உணர்ச்சிபூர்வமாக வாதிடும் காரணங்களும் பின்னனியும் ஏற்றுக்கொள்ள கூடியதா?
1) தன் மதம் சார்ந்தவன் என்பதனால் தவறான தண்டணை அளிக்கப்பட்டதாக வாதிடுவது
2. தன் இனம் சார்ந்தவன் என்பதனால் தவறான தண்டணை அளிக்கப்பட்டதாக வாதிடுவது
3) தன் மொழி சார்ந்தவன் என்பதனால் தவறான தண்டணை அளிக்கப்பட்டதாக வாதிடுவது
4) தன் நாடு சார்ந்தவன் என்பதனால் தவறான தண்டணை அளிக்கப்பட்டதாக வாதிடுவது.
5) தன் கட்சி சார்ந்தவன் என்பதனால் தவறான தண்டணை அளிக்கப்பட்டதாக வாதிடுவது
இப்படி பல்வேறு காரணங்களுக்காக தண்டனை ரத்து செய்ய கோருவது அல்லது குறைக்க சொல்வது என்று நீடித்து கொண்டே போனால் பின்பு குற்றவாளிக்கு எந்த அடிப்படையில் தண்டனை வழங்குவது.



குற்றவாளி என உறுதி செய்யப்பட்டாலும்,  மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் , அவன் சார்ந்த, ஜாதி, மொழி, இனம், மதம் நாடு , கட்சி மற்றும் பொது ஜன மக்களின் உணர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு அவர்களின் கருத்துக்களையும் கேட்டு தண்டணை அளிக்க வேண்டும் என்றால் எந்த குற்றவாளியும் சிறை செல்ல முடியாது. பின்பு நீதி மன்றங்களே தேவையில்லை.

இப்படியே சென்றால், குற்றங்களும், குற்றவாளிகளும் பெருகி கொண்டேயிருப்பார்கள்.  வலியவன் வெல்வான். எளியவன் தோற்ப்பான்.
காட்டுமிராண்டி ஆட்சி நடக்கும்.  மக்கள் புரட்சியில் மனிதனும் மானுடமும் அழியும்

Sunday, 14 April 2013

பாமரனின் பார்வையில் - இலக்கியம்

இலக்கிய கூட்டம்::


நேற்று 13.04.2013 அன்று புதுதில்லியில், தில்லிகை அமைப்பின் சார்பில் தில்லி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பு இது போன்ற கூட்டத்திற்க்கு சென்றேன். யாரும் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை. முக நூலில் அழைப்பிதல் பார்த்து சென்றேன்.
தமிழ் சங்கத்தின் பாரதி அரங்கம் நிரம்பி இருந்தது. (மொத்த இருக்கைகளே 50 தான்) அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவரையும் எனக்கு தெரியாது. நிகழ்சி முடியும் வரை அங்கு இருந்தேன்.
மேடை அமைப்பு ஏதும் இல்லை. பேச்சாளார், பார்வையாளர் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தது சிறப்பு.
ஊர் என்ற தலைப்பில் நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1) திரு.ஜெயபால் அவர்கள்தெருக்கூத்து பற்றி பேசினார். வெவ்வேறு ஊர்களில் நடத்தபடும் தெருகூத்து பற்றி பேசினார். மேடை தமிழ், பேச்சு தமிழ் நடைமுறையை பின்பற்றாமல் எளிய முறையில் பேசியது சிறப்பு.
2) முனைவர் ராஜன் குறை கிருஷ்ணன்ஊருக்குள் சினிமாசினிமாவுக்குள் ஊர் என்பது குறித்து பேசினார். ரசிகனின் பார்வையில் சினிமா என்பது போல அவரது பேச்சு அமைந்திருந்தது.
3) திருமதி.ஷமிம் அன்வர் அவர்கள்இலக்கியத்தில் பயனித்த ஊர்கள் என்ற தலைப்பில் பேசினார். குறிப்பிட்ட ஒரு எழுத்தாளரின் கதையில் ஊர் எவ்வாரு விவரித்து கையாளாப்பட்டிருந்தது என்பது குறித்து விவரித்தார்.
4) திரு.தட்சணமூர்த்தியின் ஊர் என்ற தலைபில் அமைக்கப்பட்டிருந்த புகைபட கண்காட்சி சிறப்பாக இருந்தது.

கலந்துரையாடல் நிகழ்ச்சி சுமாராக இருந்த்து. அதற்கு காரணம், பேச்சாளார்களின் பேச்சு சிந்தணையை தூண்டும் அளவுக்கு இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.
அணைவரும் ஒதுக்கப்பட்ட நேரத்திற்க்குள் அவர்களது தலைப்பில் மட்டுமே பேசியது சிறப்பு. அனைத்து பேச்சாளார்களும் இயனற அளவு தமிழ் மொழியிலேயே பேசியது சிறப்பு. சில இடங்களில் ஆங்கில சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும், இந்தி மொழி வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை என்பது சிறப்பு.
தமிழ் பேச்சாளார்கள், எழுத்தாளார்கள் அனைவரும் வேற்று மொழி கலப்பில்லாமல் தமிழ் மொழியை மட்டுமே உபயோகிக்க வேண்டும்மென்பதே எனது விருப்பம்.


அவை மரபுபடி, பேசுவதற்க்கு முன்பு அவையோருக்கு வண்க்கம் சொல்ல முவருமே தவறி விட்டனர். வேண்டிமென்றே செய்தார்களா அல்லது எதேட்சையாக நேர்ந்து விட்டதா என தெரியவில்லை. அல்லது இலக்கிய சந்திப்பில் இதுதான் மரபா என தெரியவில்லை.



இந்நிகழ்ச்சியில், அரசியல்வாதிகள், சினிமாகாரர்கள் வேறு எந்த பிரபலங்களும் கலந்து கொள்ளவில்லை. எனினும் நான் ஏன் சென்றேன் என்று யோசிக்கிறேன். ஒரு வேளை , அழைபிதழின் கவர்ச்சியை கண்டு சென்றேனோ. ஆம். அதுவும் ஒரு காரணம். அழைப்பிதழ் வடிவமைபாளருக்கு வாழ்த்துக்கள்.

இக்கூட்டத்திற்க்கு பின்பு, இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வி என்னுள் எழுந்துள்ளது. விடை தேடுகிறேன்.

தில்லிகை என்பதன் பொருள் என்ன?