Saturday, 31 May 2014

கவிதைகள்


காக்கூ , கூக்கூ, குஜ்ஜூ
============================

அர்த்தமற்ற வார்த்தைகளால்
கொஞ்சி விளையாடிய மகள்
திருமணத்திற்க்கு பிறகு
அந்நியமாகி விடுகிறாள்

அஞ்சி வாழ்ந்த மகன்
ஆளான பின்பு அவனிடம்
கெஞ்சி வாழ வேண்டியுள்ளது

பிள்ளைகளை பெற்றவர்களுக்கு தான்
தெரியும்
பிரிந்து வாழ்வது
கொடுமையானது என்று





***********************************************


இனி நான் முதிர் கன்னியல்ல

இளம் மனைவி




என்னை பார்த்து விட்டு சென்ற
அனைவருடனும் சல்லாபம் செய்திருக்கிறேன்

ஒண்டு குடித்தனத்தில் ஒதுங்கி சென்று
சுய காமம் செய்ய கூட வாய்பில்லை

முப்பதை கடந்து விட்டதால்
முதிர் கன்னியாம்

எங்களுடன் வசிக்கும் அவன்
என்னை கடந்து செல்லும் போது
ஊற்றெடுக்கிறது.


அக்கா இருவரையும் தங்கை மூவரையும்
கூட்டிக்கொடுத்த பின்பு தான்
தன்னுடன் படுக்க ஆள் தேட வேண்டுமென்பதால்
அவனும் முதிர் காளை ஆகிவிட்டான்.


எங்கள் குறிகளில் வேற்றுமையில்லை
பெயர்களில் வேற்றுமையிருப்பதால்
ஒன்டு குடித்தன கண்கள் அனைத்தும்
எங்களை வேவு பார்த்துக்கொண்டேயிருக்கிறது.

மழை நாள் மதியத்தில்
கடந்து செல்கையில் மோதிக்கொண்டோம்
தாங்கி பிடித்தவனின் இதழ்கள்
என் இதழ்களுடன் இனைந்துவிட்டது.

கொழுந்து விட்டு எரிந்த கமாத்தீயை
மழையால் அனைக்க முடியவில்லை

பார்த்தவர்கள் மனதில் பதட்டம்
மழையில் இரைச்சலால் இவர்களின்
இரைச்சலை கட்டுப்படுத்த இயலவில்லை
எங்கள் மணங்கள் கூடியதைப் பற்றி
கவலைப்படாமல்
இதழ்கள் கூடியதைப்பற்றி கவலைப்பட்டனர்.


கைக்கலைப்பு கலவரமாக மாறியது.
காவலர்கள் அழைத்து சென்று
பிறந்த மேனியாக ஒரே அறையில் பூட்டியது.

நாலு பேர் பார்க்க சடங்கில் இனையாமல்
காவலர்கள் சாட்சியாக கலவியில் இனைந்தோம்
திரை கிழிந்த குருதியில்
நெற்றி திலமிட்டான்.
இனி நான் முதிர் கன்னியல்ல
இளம் மனைவி

கடுத்து போன காவலர் இருவர்
என் முன் வாசல் வழியாகவும்
அவனின் பின் வாசல் வழியாகவும்
எங்களில் புகுந்து கொண்டிருந்தனர்


வெடி வைத்தும், சொக்க பானை  கொழுத்தியும்
பலி கொடுத்தும் எங்கள் இனைப்பை
ஊரே கொண்டாடுவதாக வானெலி இரைந்து
கொண்டிருந்தது.


தோல் தடி தொங்கியவர்கள்
இப்போது
மரத்தடி கொண்டு புணர்கிறார்கள்
காளைமாட்டை போல
அவனை காயடித்தார்கள்

இரு மத குறியீடுகள்
எங்கள் குறிகளை சிதைத்துவிட்டன

அதிகாலையில் மரத்தில் நாங்கள்
ஊஞ்சலாடியதை பார்த்தவர்கள்
மன்னித்தார்கள் ஆனால் மறக்கவில்லை

நாங்கள் மரத்தில் வாழும் தெய்வங்களானோம்
மத வேறுபாடின்றி முதிர் கன்னிகளும் காளைகளும்
எங்களை வணங்கி தங்களின் குறிகளின்
தேவையை பூர்த்தியை செய்ய வேண்டுகின்றனர்.
































மான் குட்டி
மீது
மத யானை
ஏறுகிறது
சிலந்தி வலை
சிறையில்
சிரிக்குதப்பா
நீதீ

















விரிவதும்
                    விரைப்பதும்
                                            மதி
                                                 செய்த
                                                             விதி



                                
 



                                         சொட்டு நீர்
                                                             பாசனத்தில்
                                                                                  இரட்டிப்பு
                                                                                                  மகசூல்

360 கோணத்தில் 370 சாத்தியமா ?



ஒரு விசயத்தை செய்வதற்க்கு முன்பு பல கோணங்களிலிருந்து சிந்திக்க வேண்டும். தேவைப்பட்டால் 360 கோணங்களிலிருந்தும் சிந்தித்து முடிவெடுக்கலாம்.

ஆனால் 370 கோணத்தை  எந்த கோணத்திலிருந்தும் சரியாக பார்க்க முடியவில்லை. 

சரித்திரம் புதிரானது. அதில் பல தரித்திரங்கள் உண்டு. நடந்தது என்ன என்று ஆராய தோண்டி தூர்வாறினால், மக்கி போகாத மனித கழிவுகளில் “மான்புமிகு” க்கள் புழுக்களாக நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் நடந்தவைகளை சரிசெய்ய முடியாது. நடந்து விட்டது. அன்றைய சூழ்நிலையில் சரியென தோன்றியவற்றை அப்போது செய்துள்ளனர். இன்றைய சூழ்நிலையில் அதனால் பிரச்சனைகள் ஏற்ப்படுகிறதென்றால், அன்றைய முடிவுகள் தவறு என்பது அர்த்தமல்ல. இன்றைய காலகட்டத்திற்க்கு எற்ப மாற்ற வேண்டும் என்பது பொருள்.

மாற்றம் ஒன்றே மாற்ற முடியாதது.

இன்றைய நிலையில் எதை செய்தால் குறைந்த பிரச்சனைகளுடன் அமைதியாக வாழ முடியும்.

1. இருக்கும் நிலையை அப்படியே வைத்திருப்பது.:

யாருடன் இனைந்து யாருடைய பாதுகாப்பில் வாழ்கிறார்களோ அவர்களுடைய சட்ட திட்டங்களுக்கு ஏற்ப வாழமாட்டேன் என்றும், எங்களை கட்டுப்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறுவதும் சரியான வாதம் அல்ல. தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகளை நிரந்தரமாக வைத்து கொள்வது தவறு.

அவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு அதிகாரங்கள், சலுகைகள் என்று மற்றவர்கள் போர் குரல் எழுப்பும் போது, அனைவருக்கும் அது போல வழங்க முடியாத நிலை இருப்பதால், தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை திரும்ப பெறுவது ஒரு வழி. அதற்க்கான விவாதம் ஆரோகியமானதாக இருக்க வேண்டும். மத பின்னனியில் இதை அனுக கூடாது.

2. சுதந்திரமாக வாழ அனுமதிப்பது::

இவர்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை செலவழித்து இவர்களை பாதுகாத்தாலும் , இவர்கள் அதை அங்கீகரித்து நன்றி சொல்ல வழியில்லை. இவர்கள் காரணமாக அருகிலிப்பவர்களிடம் ஓயாத சண்டை. அதில் மனித உயிர்களும், பண விரயமும் ஏற்ப்படுகிறது. இதை தவிர்க்க நம்மிடமிருந்து பிரித்து சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கலாம்.

அவ்வாறு செய்யும் பட்சத்தில், இதை பிரச்சனையாக வைத்து ஓயாமல் தொல்லை கொடுத்து வருபவர்கள் அமைதியடைய கூடும். அல்லது இவர்களை அவர்களுடன் இனைத்துகொண்டு, நமக்கு மிக அருகில் இருந்து கொண்டு மிக அதிகமான தொல்லைகளை கொடுக்கவும் வாய்ப்புள்ளது.

இவர்களுக்கு சுதந்திரம் அளித்தால், எற்கனவே அதிக அதிகாரங்களும் சிறப்பு சலுகைகளும் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் தங்களையும் விடுவித்து சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டுமென்பார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சிதறி கிடந்த நிலப்பரப்புக்களை ஒருங்கினைத்த செயலுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

சுதந்திரமாக அனுமதிக்கும் பட்சத்தில், தூரத்தில் இருப்பவர்கள் கூட இவர்களுக்கு உதவி செய்வதாக கூறி இவர்கள் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு, அவர்களை கட்டுப்படுத்துவதுடன் நம்மையும் கட்டுப்படுத்த முயல்வார்கள். பதற்றமான நிலை உருவாகும். எனவே சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது நடைமுறை சாத்தியமில்லை.

3. கூட்டாட்சி முறை:

எல்லோரும் எதோ ஒரு காரணத்திற்க்காக சிறப்பு சலுகைகள் கேட்பதும் கிடைக்காவிட்டால் பிரிந்து போவது தான் வழி என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இவைகளை தவிர்க்க அனைவருக்கு கட்டுப்பாடான சுதந்திரம் அளிப்பது சிறந்த வழி.

மத்தியில் இருப்பவர்கள் நம்மை அதிகாரம் செலுத்துகிறார்கள், நமக்கான நியாயமான தேவைகளை பூர்த்தி செய்வதில்லை, பாரபட்சம் காட்டுகிறார்கள் என்று நினைக்காமல், மத்தியில் இருப்பவர்கள் நமக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள், நம்மை வழி நடத்துகிறார்கள் அனைவருக்கும் பொதுவான விசயங்களில் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் முடிவெடுக்கிறார்கள் என்று உணரும் படி நடந்து கொள்ள வேண்டும். 

இந்த விசயத்தை மத அடிப்படையில் அனுகாமல், மனிதாபிமான முறையில் அனுகினால், பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது.


Wednesday, 28 May 2014

கவிச்சக்கரவர்த்தி கம்பர் சௌராஷ்ட்டிரர்



கவிச்சக்கரவர்த்தி கம்பனை பற்றிய ஆதாரபூர்வமான செய்திகள் இல்லையென்பதால், பலரும் அவரது வாழ்க்கை வரலாற்றை பல்வேறு விதமாக எழுதுகின்றனர்.

அவர் நாதஸ்வரம் வாசிக்கும் தொழிலை செய்யும் குடும்பத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. அவர் அந்த தொழிலை செய்தார் என்றோ அல்லது வேறு தொழிலை செய்தார் என்றோ எங்கும் யாரும் குறிப்பிடவில்லை

தமிழ் மொழியையும் சமஸ்கிருத மொழியையும் கற்று ஆறிந்து, வால்மீகி முனிவர் சமஸ்கிருத மொழியில் எழுதிய ராமயணத்தை தழுவி இவர் தமிழில் ராமாயணம் எழுதியதாக கூறப்படுகிறது. அதுவே கம்பராமாயணம் எனப்படுகிறது.

வால்மீகி எழுதிய மூல பிரதி ராமாயணம் கம்பருக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. செவி வழி மூலமாக அவர் அறிந்திருக்ககூடும். இது போன்று செவிவழியாக ராமயணத்தை அறிந்த ஒருவர் சமஸ்கிருத மொழியிலோ அல்லது தமிழ் மொழியிலோ ஒலைச்சுவடியில் எழுதி வைத்திருக்க வேண்டும். இவர் சமஸ்கிருத மொழியை கற்கும் போது அந்த மொழியில் எழுதப்பட்டிருந்த ராமாயணம் அவருக்கு அறிமுகம் ஆயிருக்கவேண்டும். அதன் பால் கவரப்பட்டு, தமிழ்நாட்டு கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு பல திருத்தங்கள் செய்து தமிழில் கற்பனை வளத்துடன் சுவையான உவமைகளுடன் எழுதியுள்ளார் என தோன்றுகிறது.

கம்பர் தமிழ்நாட்டில் பிறக்காதவராக இருந்து இன்றைய வட இந்தியா என்று கூறப்படும் பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் பிறந்து சமஸ்கிருத மொழியில் கல்வி பயின்றவராகவும் இருக்கலாம். பின்பு அவர் இடம் பெயர்ந்து தமிழ்நாடுக்கு வந்து , தமிழை பயின்று, தான் சமஸ்கிருதத்தில் பயின்ற ராமாயணத்தை தமிழில் எழுதியிருக்கலாம்.

இவரை பற்றி கூறப்படும் எந்த செய்திக்கும் யாரிடமும் ஆதாரமில்லை.

நெசவு தொழில் செய்ய உபயோகப்படுத்தப்படும் கருவிக்கு தறி என்றும் கட்டுத்தறி என்றும் பெயர் . அதுவே இந்நாளில் கைத்தறி என்றும் மருவியிருக்கலாம் என தோன்றுகிறது.

தறியில் ஆடை நெய்யும் போது ஒரே சீரான ஒலி எழுந்து கொண்டேயிருக்கும். பொதுவாக அதை ஒரு சத்தம் அல்லது இரைச்சல் என்ற அளவிலேயே அதிகம் பேசப்படுகிறது.

நெசவாளி அமைதியாக மிக ரசனையுடன் ஆடை நெய்யும் போது, அதிலிருந்து எழும் ஒலி ஒரு கவிதை போல இருக்கும் என்பதை அவர் மட்டுமே உணரமுடியும். அந்த கட்டுதறியே கவிதை படுவது போல இருக்கும்.

நாதஸ்வரம் வாசிக்கும் குடும்பத்தில் பிறந்தவர் அந்த தொழிலை செய்திருக்க வேண்டும் அல்லது கவிதை எழுதி , அரசரின் உதவி பெற்று புலவராக வாழ்ந்திருக்க வேண்டும். 

“ கம்பன் வீட்டு கட்டு தறியும் கவிபாடும் “ என்ற சொல் வழக்கு உள்ளது. இது எப்படி உருவாகியிருக்கும்.

கம்பன் வீட்டுல் கட்டுதறி எங்கிருந்து வந்தது. கட்டுதறியில் நெசவு வேலை செய்தது யார். அவரது மனைவி, மகன் போன்ற உறவுகளை பற்றி எங்கும் யாரும் குறிப்பிடவில்லை காரணம் அப்படியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

எனவே கம்பன் வீட்டில் கட்டு தறி இருந்திருக்கிறது என்பதும் அதில் அவர் நெசவு செய்தார் என்பது இந்த சொல்வழக்கு மூலம் உறுதியாகிறது. நெசவு செய்யும் போது எழும் ஒலி கவிதை போல இருந்திருக்கிறது.

கம்பனை போலவே அவர் வீட்டு கட்டுதறியும்  கவிதை பாடுகிறது என்ற பொருளில் “ கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும் “ என்ற சொல்வழக்கு உருவாகியுள்ளது.

இவர் நெசவு தொழில் செய்திருக்க வாய்புள்ளது என்பது இந்த சொல்வழக்கிலிருந்து அறிய முடிகிறது.

இன்றைய குஜராத் மாநிலம் சௌராஷ்ட்ரா பகுதியிலிருந்து புலம் பெயர்ந்த நெசவு தொழில் செய்யும் மக்கள் “ சௌராஷ்டிரர்கள் “ என்ற பெயருடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, இப்படி புலம் பெயர்ந்த நெசவாளிகளில் ஒருவராக கூட கம்பர் இருந்திருக்கலாம். இந்த சௌராஷ்டிரர்கள் புலம் பெயர்ந்த காலமும் கம்பர் வாழ்ந்த காலமும் ஒன்றாக உள்ளது.

கம்பர் நெசவாளி  என்பதும், அவர் வடநாட்டில் பேசப்பட்ட சமஸ்கிருத மொழியை அல்லது அதை ஒட்டிய சௌரசேனி மொழி பேசக்கூடியவராக இருந்திருப்பார் என்றும் கூறலாம்.

எனவே, கம்பர் இன்றைக்கு தமிழ்நாட்டுல் வாழும் சௌராஷ்ட்ரா சமூகத்தை சார்ந்தவராக இருந்திருக்கலாம் என்பதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளது.






அமைச்சர்கள்



முக்கிய மந்திரிகள் – (Cabinet Minister)


முக்கிய துறைகளை கவனிக்க நியமிக்கப்படுபவர்கள் கேபினட் மந்திரி என அழைக்கப்படுவார். பொதுவாது, உள்துறை அமைச்சகம் (Home Ministery) , வெளியுறவு துறை அமைச்சகம் (External Affairs Ministry, எண்ணை வள துறை ( Petroleum Ministry) கல்வி (Education Ministry ) நல்வாழ்வு (Welfare Ministry ) விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் (Science and Technology ) சுகாதாரம் (Welfare), பாதுகாப்பு அமைச்சகம் (Defence Ministry) சட்டம் மற்றும் நீதிதுறை(Law & Justice) மற்றும் பல.

இவைகள் சிறிய துறைகளாக இருந்தால் கேபினட் அமைச்சர்கள் மட்டுமே இருப்பார்கள்.

பல சமயங்களில் முக்கிய முடிவுகளை பிரதமர் எடுக்கும் போது மந்திரிசபையை கலந்தாலோசிப்பார். மந்திரி சபையில் கேபினட் அமைச்சர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள்.

இணை அமைச்சர் - Minister of State

முக்கிய துறைகளில் கேபினட் அமைச்சர் நியமிக்கப்பட்டாலும், அந்த துறை பெரிதாக இருந்தால் ,அல்லது இரண்டு துறைக்கு சேர்த்து ஒரு கேபினட் அமைச்சர் நியமிக்கப்பட்டால் கேபினட் அமைச்சருக்கு உதவி செய்ய ஒரு துணை அமைச்சர் நியமிக்கப்படுவார். இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட துறை சார்ந்து எடுக்கும் எல்லா முடிவுகளையும் செய்த வேலைகளையும் கேபினட் அமைச்சருக்கு தெரியப்படுத்த வேண்டும்

இணை அமைச்சர்தனிதுறை (Minister of State-Independent)

கேபினட் அமைச்சர் நியமிக்கப்படாத சிறிய துறைகளுக்கு நியமிக்கப்படும் அமைச்சருகளுக்கு Minister of State – Independent Charge என்று பெயர். இவர் அவரது துறையை தனியாக நிர்வாகிப்பார். எந்த அமைச்சருக்கும் கீழ் இவர் வேலை செய்ய மாட்டார். பிரதமரின் நேரடி பார்வையில் இருப்பார்.


மொத்தமுள்ள மக்களவை உறுப்பினர்களில் , பாதி அல்லது பாதிக்கு மேல் உறுப்பினர்கள் உள்ள கட்சி ஆட்சி அமைக்கலாம். எந்த கட்சிக்கும் போதிய பலம் இல்லையெனில் மற்ற கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம்

ஆட்சி அமைக்கும் கட்சியிலிருந்து ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் மற்ற அமைச்சர்களை நியமிப்பார். எப்போது வேண்டுமானலும், புதிய அமைச்சர்களை நியமிக்கவும், மற்ற அமைச்சர்களின் துறைகளை மாற்றவும் அல்லது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றவர்.

அமைச்சராக நியமிக்கப்படுவதற்க்கு எந்த கல்வி தகுதியோ , துறை சார்ந்த அனுபவமோ வயது வரம்போ தேவையில்லை

அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுபவர் , பொது தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கவேண்டும் அல்லது குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினராக இருக்க வேண்டும்.

மேற் கூறிய தகுதி இல்லாத ஒருவரும் பிரதமராகவோ அல்லது அமைச்சராகவோ நியமிக்கப்படலாம். இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் , அடுத்த ஆறு மாதங்களில் மக்களவை உறுப்பினராகவோ அல்லது ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.