சிந்தனை-SINDHANAI
சொல்லடி சிவசக்தி – எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
Wednesday, 25 January 2012
கற்பிழந்தவளா ?
கற்பு ::
விந்துவை விலைக்கு வாங்கி
விதைத்துகொண்டு
தாய்மை அடைபவள்
கற்பிழந்தவளா ?
25.01.2012
Tuesday, 24 January 2012
ஆன்மிகமும் அரசியலும்
மந்திரங்கள் தந்திரங்கள்
அர்த்தமுள்ள வார்த்தைகளை
அழுத்தி சொல்வதன் மூலம்
மன அதிர்வுகளை உருவாக்கலாம்
-
மந்திரங்கள்
அர்த்தமற்ற வார்த்தைகளை
ஆவேசமாக சொல்வதன் மூலம்
மன பிறல்களை உருவாக்கலாம்
-
தந்திரங்கள்
24.12.2012
உணர்கிறான்
உணர்வு::
பார்வையிழந்தவன்
ஒலியால் உணர்கிறான்
செவியிழந்தவன்
ஒழியால் உணர்கிறான்
வாயிழந்தவன்
ஒலி ஒழியால் உணர்கிறான்
அனைத்தும் உள்ளவன்
எதையும் எதிலும்
உணர மறுக்கிறான்
.
24.12.2012
ஆரத் தழுவினேன்
துவாளை::
நான்
குளிக்கும் போது
மெல்ல கதவை திறந்து
எட்டி பார்த்தேன்
உடல் முழுவதும் நீர் துளிகழுடன்
………….
அக்கம் பக்கம் யாருமில்லை
நிர்வாணமாய் ஒடிபோய்
முகம் பதித்தேன்
அங்கம் முழுவதும்
ஆரத் தழுவினேன்
இடை சேர்த்து
இறுக்க கட்டினேன்
எ
ன
து
துவாலையை
23.01.2012
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)