விருது பெறும் திரைப்படங்கள்
உள்நாட்டு அளவிலும் வெளிநாட்டு அளவிலும் பல திரைப்படங்கள் பல
விருதுகளை பெறுகிறது.
விருது வழங்கும் அமைப்புகள், விருதுக்காக வரும் அனைத்து படங்களையும் பார்த்து
விட்டு தான் விருதுகளை வழங்குகிறார்களா ? ஒரு குறிப்பிட்ட மொழி
படங்கள் பல விருதுக்கு வருகிறது. அந்த மொழி படங்களை பார்த்து
தீர்மானிப்பவர்கள் அனைவருக்கும் அந்த மொழி தெரிந்திருக்கிறதா ? அந்த மொழியின் தொன்மை, வட்டார வழக்கு, பழமொழிகள், குறியீடுகள், மண் பெருமை,
கலாச்சாரம், நம்பிக்கைகள் , சடங்குகள் சம்பிரதாயங்கள் அனைத்தும் உணர்ந்தவர்களாக உள்ளனரா ? இவைகளை உணராதவர்கள் விருதுக்கான திரைப்படங்களை எந்த வகையில் தேர்ந்தெடுக்கின்றனர்.
திரைப்படத்தை ரசிப்பதற்க்கு மொழி அவசியமில்லை என்ற வாதம் முன்
வைக்கப்படுகிறது. திரை மொழி என்ற ஒன்றை வைத்து கணக்கிட முடியும் என்று கூறுகின்றனர்.
திரை மொழி என்றால் என்ன என்பதை யாரும் விளக்க முடியாது.
எந்த உணர்ச்சியாக இருந்தாலும் எல்லோரும் ஒரே விதமாக வெளிப்படுத்துவதில்லை. சந்தோசத்தை வாய்விட்டு சிரிப்பவர்கள்
இருக்கிறார்கள். மௌனமாக புன்னகைப்பவர்களும் உண்டு. உணர்ச்சிகளை கான்பிக்காமல் மனதுக்குள் ரசித்து செல்பவர்களும் உண்டு.
சோகத்தை கண்ணில் கான்பித்து விட்டு கடந்து செல்பவர்கள் உண்டு
. ஒப்பாரி வைத்து பாடி செல்பவர்களும் உண்டு. இது
இயற்கை தானே என்ற நிலையில் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கடந்து செல்பவர்களும் உண்டு.
இது எல்லா உணர்ச்சிகளுக்கும் பொருந்தும்.
சிறந்த நடிகன் நடிகையாக தேர்ந்தெடுப்பவர்கள் கதைக்கு ஏற்ப எவ்வாறு
உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கதையை முழுமையாக புரிந்து
கொண்டால் மட்டுமே அது சிறந்த நடிப்பா என்று உணர முடியும்.
ஒருவரின் இறப்பு நிகழ்வை பல வித சோக நடிப்பால் வெளிப்படுத்தலாம். விபத்தில் இறப்பு நிகழும்
போது வெளிப்படுத்தும் முக பாவனையும், நோய்வாய்ப்பட்டு இறப்பு
நிகழும் போது வெளிப்படுத்து முக பாவனையும், இறந்தவரின் வயது,
சோகத்தை வெளிப்படுத்துபவருக்கும் அவருக்கும் உள்ள உறவுகளை பொறுத்து சோகத்தின்
வெளிப்பாடு இருக்கும். ஒரு மண்ணில் மனைவி இறந்து விடுவது என்பது
வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் நிகழ்வு. வேறோரு இடத்தில்
அது ஒரு தற்காலிகமான சோக நிகழ்வு. அது தற்காலிகமாக அமைய காரணம்
, உடனடியாக வேறு ஒரு வாழ்க்கை துனை தேடிக்கொள்ளும் மண்ணில் அத்தனை சோகத்தை
வெளிப்படுத்தாது. ஆனால், சில மண்ணில் வாழ்நாள்
முழுவதும் துனையின்றி குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய சூழ் நிலையில் இருப்பவனுக்கு அது
வாழ்நாள் சோகம். அவன் வெளிப்படுத்தும் சோகத்தை எல்லோராலும் உணர
முடியாது. இப்படிப்பட்ட நிலையில் கலாசாரத்தை உணர முடியாத நிலையில்
உள்ளவர்கள் விருதை தேர்ந்தெடுக்கும் நிலையில் இருந்தால் அவர்கள் தேர்வு சரியானது என்று
சொல்ல முடியுமா ? அதை அவர்களுக்கு விளக்கி சொல்லி புரிய வைக்க
முடியுமா.
ஒரு மொழி படத்துக்கே பல வித காரணிகள் இருக்கும் போது, சர்வதேச திரைப்பட விருதுகளில்
பல நாடுகளின் பல மொழிகளின் திரைப்படத்தை பார்த்து தெர்ந்தெடுப்பவர்கள் அனைத்து மொழி கலாச்சாரம் பண்பாடு இவைகளை அறிந்தவர்களாக
இருக்கிறார்களா அல்லது அவைகளை அவ்வளவு எளிதில் புரிய வைத்து விட முடியுமா ?
சிறந்த நடிகன் நடிகையை தேர்ந்தெடுப்பதிலேயே இத்தனை சிரமங்கள்
இருக்கிறது. இந்த நிலையில் சிறத்த திரைப்படத்தை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள்.
சிறந்த திரைப்படத்தில் நடிப்பு, இசை, ஓளிப்பதிவு, ஒலிப்பதிவு, ஓப்பனை
மற்றும் எல்லா அம்சங்களும் பொருந்தியிருக்க வேண்டும். எல்லா அம்சமும்
பொருந்தியுள்ளது என்ற நிலையில் ஒரு திரைப்படத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,
சிறந்த நடிப்புக்காக , சிறந்த ஒளிப்பதிவுக்காக
மற்றும் பல சிறந்தவைகளுக்காக எவ்வாறு தனித்தனியாக விருதுகள் வழங்க முடியும்.
சிறந்த திரைப்படத்தில் எல்லா விசயங்களும் சிறந்ததாக இருந்தால் தான் அது
சிறந்த திரைப்படம்.
ஒரே படம் பல விருதுகளை பெறுகிறது. நடிப்பு கதை, இசை இவைகள் அனைத்தும் ஒரு படத்திற்க்கு கிடைத்த பிறகு சிறந்த ஒளிப்பதிவு என்று எப்படி வேறு ஒன்றை தேர்ந்தெடுக்க முடியும்.
சிறந்த ஒளிப்பதிவு இல்லையெனில் அந்த படத்தில் காட்சியமைப்புகள் சரியாக
இருக்க முடியாது. ஒளிப்பதிவு சரியாக இல்லையெனில் நடிகர்களின்
உணர்ச்சிகள் சரியாக பதிவாகியிருக்காது. அப்படிப்பட்ட நிலையில்
சிறந்த திரைப்படம் என்று எப்படி கூற முடியும்.
ஒரு திரைப்படம் சிறந்த திரைப்படம் என்று தேர்வு செய்யப்படுகிறது. ஆனால் மற்ற எல்லா சிறந்த
விருதுகளும் மற்ற படங்களுக்கு கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால்
சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படத்தில் அவை சிறந்ததாக இல்லையென பொருள்.
இப்படி எதுவும் சிறந்ததாக இல்லாத திரைப்படம் எப்படி சிறந்த திரைப்படமாக
தேர்ந்தெடுக்கப்படுகிறது.
ஐந்து திரைப்படங்களை பார்த்து சிறந்த திரைப்படமாக ஒன்றை தேர்ந்தெடுத்த
பிறகு அந்த திரைப்படம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என விளக்கம் கொடுக்கப்படுகிறதா. மற்ற திரைப்படங்களிடமிருந்து
அது எவ்வாறு வேறுப்பட்டு இருந்தது என எப்படி தெரிந்து கொள்வது. தேர்ந்தெடுத்தவர்கள் தான் விளக்கம் கூற வேண்டும்.
இவ்வாறு விளக்கம் கூறினால், அந்த விளக்கத்தை ஏற்க்காமல் மற்ற போட்டியாளர்கள்
விவாதிக்க நேரிடலாம். ஏன் தேர்ந்தெடுக்கவில்லையென வழக்கு தொடர
முடியாது. குறைந்த பட்சம் தங்களுடையது தேர்ந்தெருக்கப்பட்ட திரைப்படத்தை
விட எந்த வகையில் சிறந்தது என விளக்கம் அளிக்க முடியும்.
அதற்கான வாய்புகள் இப்போது இல்லையென்ற காரணத்தால், தேர்வு குழுவினர் பல வித
அரசியல் சமூக நிர்பந்தங்களாலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்
அடிப்படையிலும், சுய நலத்திற்க்காகவும் விருதுகள் வழங்கப்படுகிறது.
தேர்வு வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். எந்த திரைப்படத்தை தேர்வு
செய்தாலும் விவாதங்கள் வரத்தான் செய்யும். ஆனால் குறைந்தபட்சம்
தேர்வு குழுவினர் ஏன் தேர்ந்தெடுத்தோம் என விளக்கம் கூறினால் மற்ற போட்டியாளர்கள் சமாதானம்
அடையக்கூடும்.
பெரும்பான்மையான மக்களால் சிறந்த திரைப்படம் என கருதப்படும்
திரைபடங்கள் போட்டியின் நுழைவு தேர்வுக்குள் நுழையும் தகுதியை கூட இழக்கும் நிலை உள்ளது.
திரைப்பட ரசிகர்களும் போட்டிக்கு வந்த அனைத்து திரைப்படங்களையும்
பார்த்து , விருதுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம் சரியானது தான என கணிக்க முடியும்.
இது சிறந்த திரைப்படம் தேர்வுக்காக மட்டுமல்ல. மற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
திரைப்பட விமர்சகர்களும் இது போன்ற நிர்பந்தம் காரணமாகவும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்
அடிப்படையிலேயே விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.
சுமார்
50 வருடங்களாக திரைப்பட துறையில் இருப்பவர் அல்லது திரைப்படங்கள் பார்த்து
விமர்சனம் எழுதி வருபவர் படங்களை ஓப்பீடு செய்து விமர்சனங்கள் எழுதுவது ஏற்ப்புடையது.
25
-30 வயதுள்ளவர்கள் 50-60 வருடங்களுக்கு முன்பு
வெளிவந்த திரைப்படங்கள் தான் சிறந்தது என்பதும் தற்போதைய திரைப்படங்கள் வணிக ரீதியில்
எடுக்கப்பட்ட தழுவல் படங்கள் என்று விமர்சனம் எழுதுவது விசித்திரமானது.
தமிழ் நாட்டை விட்டு வெளியே போகதவர்கள் மற்ற மொழி கலாச்சாரம்
இன பாகுபாடு எதுவும் தெரியாதவர்கள் மற்ற மொழி படங்களை புகழ்வதும் வெளிநாட்டு படங்கள
தான் மிகவும் சிறந்தது என வர்ணிப்பதும் கேலிக்கூத்தாக உள்ளது.
இன்றைய தமிழ்பட விமர்சகர்கள் பலரும் திரைப்படத்தையே பார்க்காமல்
கேள்விபட்ட விசயங்களை கொண்டு விமர்சனம் எழுதுவது அதை விட மோசமானது.
தமிழ் திரைப்படங்கள் அனைத்துமே வெளிநாட்டு திரைப்படங்களின் தழுவல்
என எழுதுகின்றனர். ஒரு சில காட்சிகள் அப்படி அமையலாம் அல்லது மூலக்கதை தழுவலாக இருந்தாலும் தமிழ்
சமூகத்திற்க்கு ஏற்றவாறு அதை மாற்றியமைத்து வழங்குவதும் ஒரு படைப்பே.
வெளிநாட்டு படங்களை பார்க்காத 99% மக்களுக்கு அது ஒரு புதிய
கதை தான். ஓரிரு காட்சிகள் அப்படியே காப்பியடித்திருந்தாலும்
அதுவும் இந்த ரசிகர்களுக்கு புதுமை தான்.
ஓரிரு காட்சிகள் ஒரே தன்மையாக இருந்தால் அந்த திரைப்படம் முழுவதும்
தழுவல் என எப்படி கூற முடியும்.
ஒரு நடிகர் ஒரு விதமாக வண்டி ஓட்டுகிறார் என்றால் , இந்த காட்சி அந்த வெளிநாட்டு படத்தின் தழுவல் என கூறுகிறார். ஒருவர் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் காட்சி வந்தால் அது அந்த படத்தின்
தழுவல் என எப்படி கூற முடியும். உலகமுழுவதும் ஆன் நின்று கொண்டு
தான் சிறுநீர் கழிக்கிறான். அது பல படங்களிலும்
கான்பிக்கப்படுகிறது. எனவே அது தழுவல் காட்சி என கூற முடியுமா.
அப்படி பார்த்தால் விமர்சனம் எழுதும் நபரும் அப்படி தான் சிறுநீர் கழிக்கிறார்.
அவர் அந்த நடிகரை பார்த்து சிறுநீர் கழிக்கிறார் அவர் அப்படி செய்ய கூடாது
என வாதிட்டால் அவர் நிறுத்தி விட்டு தலைகீழாக நின்று செய்வாரா அல்லது படுத்துக்கொண்டு
மேல் நோக்கி சிறுநீர் கழிப்பாரா ? எனவே விமர்சனம் எழுதுபவர்களும்
தங்களை அறிவு ஜீவியாக காட்டிக்கொள்ளாமல் யாதார்த்தமாக எழுத வேண்டும். வெளிநாட்டு படங்களுடன் ஒப்பிட்டி பேசுவதால் அவர்கள் உலக முழுவதும் வெளியாகும்
படங்களை பார்த்து அனைத்தையும் நினைவில் வைத்துள்ள அறிவுஜீவி என்று கூற முடியாது.
அது சாத்தியமுமல்ல.
தமிழ்
படத்தை தழுவி வெளிநாட்டு படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று விமர்சகர்கள் எழுதுவதில்லை.
அத்தனை மொழி வெளிநாட்டு படங்களையும் இவர்கள் பார்த்ததில்லை.
தமிழ்
படத்தை போன்று வெளிநாட்டு படத்துறை படங்களை தயாரிப்பதில்லை என்று ஒரு போதும் இவர்கள்
விமர்சனம் எழுதுவதில்லை. தமிழ் பட நாயகன் ஆடும் நடனம் போன்று அவர்களால் ஆட முடியுமா
அல்லது நகைச்சுவை காட்சிகளை தான் அவர்களால் அமைக்க முடியுமா. அவர்களை போல உணர்ச்சிகளை
வெளிப்படுத்தி நமது நாட்டிலும் நடிக்க நடிகர்கள் உள்ளனர். ஆனால் நமது நடிகர்கள் நடிப்பது
போல நடிப்பு, நடனம் வசனம் பேசுவது போல அவர்களால்
முடியுமா.
அவர்கள்
நாட்டுக்கு எது தேவையோ அதை செய்கிறார்கள். நமது நாட்டுக்கு எது தேவையோ அதை இங்கு செய்கிறார்கள்.
ஓப்பிடுது தவறில்லை ஆனால் இங்குள்ளவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று குறை கூறுவது
தேவையற்றது.
No comments:
Post a Comment