Sunday 13 October 2013

கவிதை என்றால் என்ன ?

தன்னை தானே புணர்ந்து பிரசவிப்பது தான் கவிதை



சூத்திரங்களும் சூட்சுமங்களும் இல்லாததும் கூட தான் கவிதை

- "சுதந்திரபறவை"

நான் மேலே கூறியுள்ள விளக்கம் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். குறிப்பாக இன்று, கவிஞர்கள் என்று அறிமுகமாகி உள்ளவர்களும், அறிமுகமாக துடித்துகொண்டிருப்பவர்களும், தங்களுக்கு தாங்களே பட்டப்பெயர்களை சூட்டிக்கொண்டு கவிஞர்களாக, எழுத்தாளர்களாக பவனி வந்து கொண்டிருப்பவர்கள் நிச்சியமாக ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்.

கவிதை பற்றி மற்றவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களை கீழே பகிர்ந்துள்ளேன். ஒவ்வொரு கவிஞரும், எழுத்தாளரும் பல்வேறு விதமாக கூறுகின்றனர். ஒரே கவிஞரே கூட பல்வேறு தருணங்களில் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்.


 
கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
சந்தேகமின்றி, இந்த நிபந்தனையுடன்
வெற்றுத்தாளில் நீ முன்னேற வேண்டும்.


-
நிக்கனார் பாரா (சிலி)
 
லத்தின் அமெரிக்கக் கவிஞர்


அற்ப ஆயுள் கொண்டதானாலும், மகத்தானதானாலும், கவிதை ஒரு செயல்பாடு என்றே நம்புகிறேன்.
 பாப்லோ நெரூதா 



"மிக உயர்ந்த சொற்கள் மிகச் சீறிய மு​றையில் உள்ளடக்கியது கவி​தை" என்கிறார்​

கோல்ரிட்ச்.



ற்றல் நிரம்பிய ​சொற்கள் இயல்பாகப் ​பொங்கி வழிவது கவிதை

வோர்ட்சு​வொர்த்து. 


"கால்வாய் இல்லாத இடத்தில் ​​பெய்யும் ஒளிம​ழை​யே கவி​தை"
கீட்ஸ் .
 

 



வாசிக்கலாம், ஏற்கலாம், நிராகரிக்கலாம், சிலாகிக்கலாம், புறக்கணிக்கலாம் என்பதற்கு மேல் கவிதைகளில் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பது எப்போதும் என் கருத்து. ஏனெனில் கவிதை என்பது, உரைப் புனைவுகளைப் போலல்லாமல், மனதின் மொழியில் எழுதப்படுபவை. அது இருவருக்கு அல்லது பலரிடையே நடக்கிற உரையாடல் அல்ல. உள்மனதுடனான தியானம்.


மாலன்


உலகின் சிறந்த கவிதைகள் தனி மனித அனுபவம் சார்ந்தவை.தனி மனித அனுபவங்கள் எவ்வளவு சரியாய்ச் சொல்லப்படுகிறது என்பதே முக்கியம்.

 கவிஞர் விக்ரமாதித்யன்


கவிதை எனில் சங்கக் கவிதைக்கு நிகராக இருக்கவேண்டும். சங்கக் கவிதையின் தொடர்ச்சியே, இன்றைய நவீன கவிதைகள் என்று நம்புகிறேன்.  

கவிஞர் விக்ரமாதித்யன்


விதை என்பது கனவுகளை எழுதுவது. நல்ல கனவுகளை மட்டுமே கவிதைகள் கொண்டிருக்கும். 

கவிஞர் விக்ரமாதித்யன்


கவிதை ஏதாவது செய்ய வேண்டும்

ஒரு கவிதை உங்களை ஏதாவது செய்ய வேண்டும்.
சந்தோசப்படுத்த வேண்டும் அல்லது கலவரப்படுத்த வேண்டும்.
குறைந்த பட்சம் வாழ்வைப் பற்றி யோசிக்க வைக்கவாவது வேண்டும்.

விக்ரமாதித்யன்


கவிதை ஒரு சமூக ஆவணம். சங்கக் கவிதைகள் அந்த காலத்திய ஆவணம். கவிதை எழுதி முடிச்ச பிறகு ஆவணமாகிறது. ஒரு இனத்தின் ஆவணமாகிறது. இதைத்தாண்டி மனித மனங்களைப் பண்படுத்துகிறது.

 விக்ரமாதித்யன்

 
கவிதை என்பது மாயம்மொழியில் கட்டப்படும் மாயம்
கவிஞன் என்பவன் மாயக்காரன் நல்ல கவிஞன் நல்ல மாயக்காரன்
விக்ரமாதித்யன் 


கவிதை என்பது ஒரு நுட்பமான, ஆழமான ஒரு ஆளுமையைப் பாதிக்கிற ஒரு சிறு பொறி முதல் பெரும் காட்டுத் தீ வரையான ஒரு பெரிய விஷயம். நம்ம பாரதி, பாப்லோ நெருதா போல ஒரு தேசியத்தையே பாதிக்கிற காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை.

சமயவேல்

பெரிய தோட்டத்திலே ஒரே ஒரு
பூதான் பூத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான
பட்டுப்பூச்சிகள் அந்த ஒரு பூவை
கண்டுகொள்கின்றன. தேடிக் காண்பதுதான்
கவிதை. தேடாமல் காண இயலாது.


க. நா. சு

"என்னைப் பொறுத்தவரை மொழியும் எழுதுகிறவனின் மனமும் இணைந்து முயங்குகிற போதுதான் கவிதை பிறக்கிறது"

வண்ணநிலவன்

கவிதை ஒரு கலை. கவிதையை விட நுட்பமான மொழி சார்ந்த வெளிப்பாடு வேறொன்று கிடையாது. சிக்கனமான சொல்லமைப்பு கொண்ட கவிதை நூற்றுக்கணக்கான பக்கங்களில் கூறிவிட முடியாதவற்றை, காண்பிக்க முடியாதவற்றை, ரத்தினச் சுருக்கமாக வெளியீடு செய்து விடுகிறது 
ரா.ஸ்ரீனிவாசன்

"கவிதையின் ஊற்றுக்கண் ஆசையல்ல; கற்பனை அல்ல; கவி என்பவன் தனது சுய வியாபகத்துக்காக உற்பத்தியாக்கும் சரக்கு அல்ல. கவிதை உண்மையில் நடைமுறை வாழ்வில் சம்பவிப்பது. இக்கவித்துவத்தை கவிஞனாக இயங்கும் மனிதனில் உணர்ந்து கொள்ள வேண்டும். கவிதைக்கு அப்போதுதான் உரிய நியாயம் கிடைக்கும்."
 பிரமிள்

இயற்கை ஒளியை விசிறும் மின்சாரம் கவிதை

சிருஷ்டி முழுவதிலும் ஊறி அதை இயக்கும் சக்திக்கு மறுபெயர்தான் கவிதை.
கவிஞனுடைய வேலை இந்தச் சக்திக்குத் தன்னை ஊற்று கண்ணாகத் திறந்து கொள்வதுதான். இயற்கை என்ற ஒளியை விசிறும் மின்சாரம் தான் கவிதை.

பிரமிள்
 
புதுக்கவிதை என்ற பெயர் தற்காலிகமானது.
கவிதையின் பெயர் கவிதையே.
இப்பெயர் பெறத் தகுதியற்ற யாவும் செய்யுள்கள். செய்யப்பட்டவை.
கவிதை எல்லா வகையான சொற்களையும் உதறுகிறது.
நிதர்சனத்தில் திளைக்கிறது.
பிரமிள்

அநித்தியத்திற்கெதிரான சதிதான் கவிதை. எனவே கவிஞனைக் காலம் காலமாய் தீர்க்கதரிசி என்று வரலாறு கூறி வருவது மிகைப்படுத்தல் அல்ல.
 பிரம்மராஜன்

சொல்லைக் குறுக்கக் குறுக்க, அதுக்கு ஒரு அசாத்திய பிரஷர் ஏற்படும். அந்த சொல்லைப் பிரயோகம் பண்ணும்போது பட்டாசு மாதிரி "படார்னு" வெடிக்கும். பட்டாசு சிதைஞ்சு போயிடும்...போகட்டும். இது உண்டாக்கற வெடிப்பு இருக்கே அதுதான் முக்கியம்.

சங்கப் பாடல்களின் தொடர்ச்சிதான் இன்றைய புதுக்கவிதை என்பதை, படம் வரைந்து என்னால் விளக்க முடியும்.

நம் இன்றைய கவிஞர்களுக்கு நான் சொல்வது, சங்கம் பயின்றால்தான் கவிதை எழுத முடியும் என்றில்லை. சங்கம் பயின்றால் சில கவிதைகளை எழுதாமல் இருக்க முடியும்.

சுஜாதா



நல்ல கவிதை உடனே பளிச்சென்று தெரிந்து விடும், குப்பையில் கிடக்கும் பொற்காசு போல. உலகின் கவிதைக்கணங்கள் ரேஷன் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால், நல்ல கவிதை அரிது. கிடைக்கும்போது நாம் தவற விடக்கூடாது. கவிஞர்களையும் பாராட்டத் தயங்கக்கூடாது.

சுஜாதா
 

கவிதைக்கு அப்படிப்பட்ட வார்த்தைகள் தேவை. ஆனாலும் கவிதைங்கிறது வெறும் வார்த்தையில இல்லை...கவிதை என்பது ஜீவனில் உறைவது.
லா. ச. ராமமிருதம்

"Basic emotions" ஒரு சரியான கணத்தில், அடி வயிற்றிலிருந்தோ, முதுகுத்தண்டிலிருந்தோ, உக்ரம் ததும்ப எழும்பித் தன் முகம் காட்டும். உக்ரத்தால் எழுச்சி. எழுச்சிதானே கவிதை. 
 லா. ச. ராமமிருதம்
 
கவிதையின் தனித்தன்மை என்ன? - economy of expression - என்கலாமா?
 ஜி.நாகராஜன்



ஒரு கவிதையைப் படிக்கத் தொடங்கும்போதே "உண்மையின் குரல் இது" என்ற நம்பிக்கையை அது தீவிரமாக உருவாக்கவேண்டும். கவிதையைத் தீர்மானிக்கும் வேறு குணங்கள் அதற்கு இல்லாமல் இருக்கும் நிலையிலும் அல்லது அவை சற்று மங்கலாக இருக்கும் நிலையிலும் கவிதையுடன் நாம் முதல் உறவு கொள்ள இந்த உண்மை உணர்ச்சிதான் அதிக பங்காற்றுகிறது."

சுந்தர ராமசாமி

சிறுகதைகள், நாவல்கள் ஆகியவை செயல்படும் தளங்களுக்கு அப்பால் சில மேல்நிலைத் தளங்கள் இருக்கின்றன. இந்தத் தளங்களில் கவிதை செயல்படுகிறது. இது மிகவும் சூட்சுமமான தளம். அதிக அதிர்வுகள் கொண்ட தளம். படைப்பின் அளவிற்குச் சம்பந்தமில்லாத விரிவை மனதில் உருவாக்கும் தளம்.

சுந்தர ராமசாமி.

இன்று எழுதப்படும் பெரும்பான்மையான கவிதைகள் அனுபவத்தின் ஈரமில்லாதவை. ஒரு நிகழ்வின் அல்லது ஒரு சொல்லின் அடுக்குகள், போலியான ஜென் மனநிலை, இழந்த காலத்தைப் பற்றிய கூற்றுகள், மேம்போக்கான சோதனைகள் ஆகியவைதாம் இன்றைய கவிதையின் பொதுச் சூத்திரங்களாக மாறியிருக்கின்றன என்ற சந்தேகம் கவிதை ஆர்வலனாக எனக்கு இருக்கிறது. கவிதை - குறிப்பாகத் தமிழ்க் கவிதை - அனுபவத்தின் மண்ணிலிருந்துதான் முளைவிடுகிறது என்று பிடிவாதமாக நம்புகிறேன். சங்க இலக்கியம் முதல் இன்றைய கவிதைவரை இதுவே கவிதையின் இயல்பு என்று நம்புகிறேன். வாழ்வின் ஏதோ ஒரு கணத்தைத் திறப்பதாகவே தமிழ்க் கவிதை இன்றுவரை இருந்திருக்கிறது.

சுகுமாரன்




இன்றைய கவிதை சிக்கல்கள் நிரம்பியது. வாழ்க்கையை வியாக்கியானம் செய்யும் கோட்பாடுகளின் மறைவு; மனித இருப்புக்குப் பொருள் சேர்க்கும் கருத்தாடல்களின் மீதான நம்பிக்கையின்மை; முன்பு செப்பனிட்டு வைத்திருந்த பாதைகளில் நடக்க விதிக்கப்படும் தடைகள்; மேலோட்டமான படைப்பாக்க மல்யுத்தங்கள் - எல்லாம் வாழ்க்கையையும் அதன் உடன் நிகழ்வாகக் கவிதையையும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கின்றன. அந்த சிக்கலின் மையத்தைப் பேசுகிற ஒன்றாக இன்று கவிதை ஆகியிருக்கிறது. எல்லாக் காலத்திலும் கவிதை கோரி நின்றது அதைத்தான். இப்போது வேண்டி நிற்பதும் அதைத்தான். முன்னர் எதைச் சொல்வது என்பது கவிதையின் சிக்கலாக இருந்தது. இன்றைய கவிதையில் எதையும் சொல்லலாம். ஆனால் சிக்கல், எப்படிச் சொல்வது என்பதில்தான்.

சுகுமாரன்




கவிதை என்பது  இன்றின் ஒளி””

கவிதையின் இளமை தீராதது. தேவதைகளுக்கு வயதாகாது என்று நம்புவதுபோல. வயதாக வேண்டாம் என்று விரும்புவது போல. வயதாகி விட்ட தேவதைகள் பார்க்கச் சகிக்காதவையாக ஆவதுபோல. இளமை தீர்ந்தது கவிதை அல்ல; செய்யுள். கவிதை எப்போதும் நிகழ்காலத்தின் பொருள். நிரந்தரமான நிகழ் காலத்தின் பொருள். அதற்குள் நேற்றின் நிழலும் நாளையின் சாயலும் இருந்தாலும் அது இன்றின் ஒளி. தன்னுடைய நிகழ் மனதை இன்றும் நிகழ்த்திக் கொண்டிருப்பவற்றைத்தான் ' ஆகச் சிறந்த கவிதைகள்' என்று நம்பவும் விரும்புகிறேன்.

சுகுமாரன்


து சிறந்த கவி​தை என்று எளி​மையாகச் ​சொல்லி விடுவது போல எது சிறந்த கவி​தை எனச் ​சொல்ல முடியாது "
பேராசிரியர் வையாபுரிபிள்​ளை.

நேர் ​கோடுகளும்   வ​ளை​கோடுகளும் வண்ணத்துடன் இ​ணைந்​தோ இ​ணையாம​லோ அழகியலாகும்​போது ஓவியமாவ​தைப்​ போல் உள்ளடக்கம் அழகியலோடு இ​ணைந்து உணர்​வைத் ​தொடும் போது கவி​தையாகிறது"
ப.தமிழ்ச்​செல்வன் (சென்​னைப் பல்க​லைக்கழக ஆய்வாளர் ப.தமிழ்ச்​செல்வன்)
 
  
 


கவிதைக்கு சூத்திரங்கள் இல்லையென்பதால், கைநாட்டும் கவிதையாகும்.

இந்த கவிதை குறித்த விளக்கம் எப்போது வருகிறது. தனது கவிதை நூலின் முகவுரையில் எழுதுகிறார்கள் அல்லது மற்ற கவிஞரின் கவிதை நூலுக்கு முகவுரை எழுதும் வாய்ப்பு கிடைக்கும் போது எழுதுகிறார்கள்.


மற்ற கவிஞரின் கவிதை நூலுக்கு முகவுரை எழுதும் போது, அதில் உள்ள கவிதைகளையும் கவிஞரையும் பாராட்டியே எழுத வேண்டியுள்ளது. உண்மையில் படித்து பிடித்து தான் எழுதுகிறார்களா அல்லது படிக்காமலேயே சம்பிதாயமாக எழுதுகிறார்களா என தெரியவில்லை. சில கவிதை தொகுப்புகளை படித்த போது, அதில் பிரபல கவிஞர்கள் எழுதியிருக்கும் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல அந்த கவிதைகள் இருப்பதில்லை. கவிதைகளை படிக்காமலேயே எழுதிவிடுகிறார்கள் என தோன்றுகிறது.
பாராட்டி எழுத வேண்டியகட்டாயத்தில்இருக்கிறார்கள்.பிடிக்கவில்லையென்றோ அல்லது குறைகள் இருக்கிறது திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்றோ கூட குறிப்பிடுவதில்லை



சில இலக்கிய கூட்டங்களிலும், புத்தக அறிமுக விழாக்களிலும், விமர்சன கூட்டங்களிலும் பேச்சாளர்கள் அந்த புத்தகங்களில் எழுதியிருப்பதை பற்றி பேசாமல் பொதுவாக பேசுவதும், தன்னுடைய பெருமைகளையும், அந்த விழாவுக்கு சம்மந்தமில்லாதவர்களை பற்றியும் பேசுவதாக அதிகமாக  இருக்கிறது.

நானும் கவிதை எழுதுவது என தீர்மானித்துவிட்டேன். எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டால், இதுவரை எழுதியவர்களுக்கு என்ன தகுதி இருந்தது என்ற கேள்வி வரும்
இந்த கவிதை குறித்த விளக்கம் எப்போது வருகிறது. தனது கவிதை நூலின் முகவுரையில் எழுதுகிறார்கள் அல்லது மற்ற கவிஞரின் கவிதை நூலுக்கு முகவுரை எழுதும் வாய்ப்பு கிடைக்கும் போது எழுதுகிறார்கள்


30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாசக சாலை முழுவதும் படித்துள்ளேன்.(பொது நூலகம், மாநகராட்சி பள்ளி, ஆற்காடு சாலை, சென்னை)
எல்லா வகையான புத்தகங்களும், கதை, கட்டுரை, கவிதை, அரசியல், ஆண்மீகம், எல்லாம் எல்லாம் கிட்டதட்ட 500 புத்தகங்களுக்கு மேல் படித்திருப்பேன். இதை தவிர கன்னிமாரா நூலகத்திலும், பழைய வண்ணாரபேட்டையில் இருந்த மாநகராட்சி நூலகத்திலும் பல புத்தகங்கள் படித்துள்ளேன்.
இதை தவிர, வார இதழ்கள், மாத இதழ்கள், தினசரிகளில் வந்திருந்த கதை, கட்டுரை கவிதை ஏராளமானவை படித்துள்ளேன். மேலும் தனி இதழ்களாக வெளிவந்த (பொதுவாக யாரும் படிக்கவிரும்பாத இலக்கிய இதழ்கள்) கவிதைகளையும் படித்துள்ளேன். கடற்கரை கவியரங்களில் வாசிக்கப்பட்ட கவிதைகளையும், இலக்கிய கூட்டங்களில் வாசிக்கப்பட்ட கவிதைகளையும் கேட்டுள்ளேன்.
சமிப காலமாக இணையத்திலும், முக நூலிலும் பார்வைக்கு வரும் கவிதைகளையும், கதைகளையும் வாசித்து கொண்டிருக்கிறேன்.
இவைகள் அனைத்தையும் ஒரு வரையரைக்குள்  கொண்டு வர முடியவில்லை. எழுத்துக்களை ஒரு சூத்திரத்தில் அடக்க இயலவில்லை. அப்படி சூத்திரத்தில் அடக்கிவிட்டால், அதை பாட திட்டமாக அறித்து விடலாம். பின்பு தொழிற்சாலை பொருட்களை போல கவிதைகளையும் தயாரித்து, எழுதிய தேதி காலவதியாகும் தேதிகளையும் குறிப்பிட்டுவிடலாம்.
சோதனை கவிதைகள் - எழுதுவதற்க்கு முயற்சி செய்யும் போது எழுதப்படுபவையும், எழுதிய பிறகு வாசகனுக்கு சோதனையாக அமைவதும்.
வெளிவராத கவிதைகள் - வார்த்தைகள் வசபடாமல் எண்ணங்களாகவே தோன்றி மறைவது
வெளிவந்த கவிதைகள் - நிறை குறையுடன் வெளிவந்து , யாராலும் கவனிக்கப்படாமல் அனாதையாய் இருப்பது
சிறப்பு கவிதைகள் - குறையுடன் இருப்பதை சிறப்புற கவனித்து அதற்க்கும் அங்கீகாரம் செய்யப்படும் கவிதைகள்
விளம்பர கவிதைகள் - ஏழுத தெரியாவிட்டாலும், வேறு துறையில் சிறப்புடன் இருப்பவர் மற்றும் அதிகார வர்கத்தினரால் எழுதப்பட்டு செயற்க்கையாக சிறப்பிக்கப்படுபவர்)
தத்துவ கவிதைகள் - சுமாராக எழுத தெரிந்தவர், பிறரை எழுத சொல்லி தனது பெயரில் வெளியிடுபவர்
ஜனரஞ்சகமான கவிதைகள் - இன்றைய திரைப்பட பாடல்கள்
                                                      
கவிதைகள் ஆழ்மனதில் படிவதில்லை. அப்படி படிந்தால் அது என்றைக்கும் நினைவில் இருக்கும்.
எப்போழுதோ படித்த திருக்குறள் நினைவுக்கு வருகிறது. ஆத்தி சுவடி நினைவுக்கு வருகிறது. வழிபாட்டு பாடல்கள் சில நினைவுக்கு வருகிறது.
திரைபட கவிதைகள் எப்படி நினைவுக்கு வருகிறது. கவிதையின் சில வரிகளாவது நினைவுக்கு வருகிறது. எழுதியவரின் பெயரும் நினைவுக்கு வருகிறது.

ஆனால், இப்போது படிக்கும் கவிதைகள் நினைவுக்கு வருகிறதா ? கவிதையை சொன்னால் கவிஞர் நினைவுக்கு வருவதில்லை. கவிஞர் பெயரை சொன்னால் அவர் எழுதிய கவிதை நினைவுக்கு வருவதில்லை. ஏன். படிக்கும் போது சுவையாய் இருக்கிறது. ஆனால், ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

ஏன் இந்த வேறுபாடு. மெய் எழுத்துக்கள் இருந்தாலும் உயிர்  எழுத்துகள் இல்லாம் வார்த்தைகள் கோர்வையாய் இருபதுதான் காரணமோ?
கவிஞன் எழுதிவிட்டான். யாருக்காக எழுதினான். அவண் படித்தானா. அவனுக்கு புரிந்த்தா இதை அறிய எழுத்தாளன் முயற்ச்சி செய்வதேயில்லை.
படித்தவனுக்கு மட்டுமே புரியும் படி எழுதினால், பாமரன் வசிக்கும் இடத்தில் பாடகூடாது. படித்தவனின் சபை வேறு. அங்கு எழுத வேண்டும்.பாட வேண்டும். ஆனந்த கூத்தாட வேண்டும்.
பாமரனுக்கு எழுதினால் அவனுக்கு புரியும் படி எழுத வேண்டும். நிலம் சார்ந்த மொழி எழுத வேண்டும்.
வாசகன், எழுத்தாளனின் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்வான் என்று எதிர் பார்க்க முடியாது. புரிந்து கொண்டால் சிறப்பு. வேறு பார்வையில் புதிய கோணத்தில் புரிந்து கொண்டால் கவிஞனுக்கு இன்னும் சிறப்பு. புரியாமல் போணால் எழுதியதில் என்ன பயன்.
கவிதையை பொதுவெளியில் பிரசவித்துவிட்டால், அனைத்து வாசகனும் அதற்கு அப்பன். அவண் அதை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம், சீராட்டலாம். விமர்சிக்கலாம்.
விமர்சனத்திற்க்கு விளக்கம் ஏற்க முடியாவிட்டாலும், விளக்கம் கொடுக்கமுடியாவிட்டாலும் விமர்சகனை ஏளனம் செய்வது, தனிமனித ஒழுக்கம் கற்றுகொடுப்பது தேவையற்றது. விமர்சகனை வேட்டையாடி விரட்டகூடாது.
ஒவ்வொரு கவிதைக்கும் அதனுடன் விளக்கவுரை, பொழிவுரை, கருத்துரை, கோனர் உரை தர வேண்டும் என வாசகன் கேட்பதில்லை. இதையெல்லாம் தந்து தான் அவனது கவிதையை சந்தைபடுத்த வேண்டுமெனில் அவண் எழுதாமலேயே இருந்து விடலாம்.  ஆனால் விமர்சனத்தை ஏற்கும் மன பக்குவம் வேண்டும்.
கவிதை விமர்சகனுக்கு சொந்தமானது. கவிஞனுக்கு சொந்தமானது

முகநூலில் அறிமுகமான நண்பர் திரு.செல்வராஜ் ஜெகதீசன் அவர்கள் கவிதையின் வழிதடங்கள் என்ற தொடர் மூலம் பல நல்ல கவிதைகளை வாசிக்க வாய்ப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் கவிஞர்களையும் கவிதைகளையும் அறிய முடிந்த்து. அவருக்கு எனது நன்றிகள்