Monday 15 April 2013

குற்றம் - தண்டணை - விதிவிலக்கு

குற்றமும் தண்டனையும் ::




இன்று இப்போது இந்தி மற்றும் ஆங்கில தொலைகாட்சிகளில் இந்தி நடிகர் சஜ்ஜய் தாத் பற்றிய செய்திகளும் விவாதங்களும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன.
1993, மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி என முடிவு செய்யப்பட்டு, குறைந்தபட்ச தண்டணையாக 5 ஆண்டுகள் சிறைவாசம் என தீர்பளிக்கப்பட்டவர். விசாரணையின் போது 18 மாதம் சிறை தண்டணை அனுபவித்துவிட்டதால் தற்போது மீதமுள்ள 42 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டி நாளை சரணடைந்து சிறை செல்ல வேண்டும். இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்து சிறை செல்ல 6 மாத காலம் கால அவகாசம் தேவை என மனு தாக்கல் செய்துள்ளார். அவர் கூறியுள்ள காரணம் , அவர் பல படங்களிள் நடித்து கொண்டிருப்பதாகவும், அவர் சிறை சென்று விட்டால், படங்களின் தயாரிப்பு வேலைகள் பாதிக்கப்பட்டு, சினிமா துறைக்கு ரு.150 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், சரணடைய 6 மாத கால அவகாசம் தேவையென மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவுக்கு ஆதரவாக சினிமா துறையை சார்ந்த பலரும் பேசுகின்றனர். சினிமா துறையை சார்ந்த எவரும் இது தவறு என கூறவில்லை. காரணம் துரோகி என முத்திரை குத்துவார்கள் என்ற பயமாகவும் இருக்கலாம். அல்லது தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படும் சமயத்தில், சினிமா உலகம் தனக்கு ஆதரவு தெரிவிக்காதே என்ற பயமாகவும் இருக்கலாம். அல்லது அவ்வாறு தவறு என சொல்பவர்களின் கருத்துக்களை பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் வெளிகொணராமல் இருக்கலாம். இதற்கு ஆதராகவும் எதிர்ப்பாகவும் செய்திகள் வெளியாகின்றன.
இவரது மனு ஏற்க்கப்பட்டு , கால அவகாசம் அளித்தால் என்ன நேரிடும்.
1) இவரை போலவே பலரும் மனு தாக்கல் செய்யலாம். பல்வேறு காரணங்களை கூறலாம். பிறறுக்கு பண நஷ்டம் ஏற்படும் என்ற காரணத்தை காட்டி இவர் சலுகை கேட்டால், இதைவிட வலுவான நியாயமான காரணங்களை காட்டி சலுகை கேட்க வழி வகுக்கும்.
2) ஒற்றை மனிதனாக குடும்பத்தை காப்பாற்றும் தனி மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் புரிய நேரிட்டு, சிறை தண்டணை பெறும் சமயத்தில், தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாலும், தன் மகன்/மகள் படித்து வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றும் பொருப்பு ஏற்கும் வரை தனது சிறை தண்டணையை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டால், நீதி மன்றம் சலுகை அளிக்குமா.
4) ஒரு தொழிலதிபர் ஏதேனும் காரணத்திற்காக சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டால், அப்போது அவர் தான் சிறை செல்ல நேரிட்டால், தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த இயலாது எனவும், தொழிற்சாலை மூடப்பட்டால் ஆயிரக்கணக்கான தொழிலார்கள் வேலை இழக்க நேரிடும் மேலும் பல இன்னல்கள் ஏற்படும் எனவே மாற்று ஏற்பாடு செய்யும் வரை சிறைதண்டணையை தள்ளி வைக்க வேண்டும் என முறையிட்டால், நீதி மன்றம் சலுகை அளிக்குமா.
3. இளைஜன் ஒருவன் குற்றம் செய்து, தண்டணை பெறும் சமயத்தில், தான் இன்னும் காதலிக்கவில்லை, காமம் அனுபவிக்கவில்லை , கல்யானம் செய்துகொள்ளவில்லை எந்த சுகமும் அனுபவிக்கவில்லை எனவே எனது சிறைதண்டணையை தள்ளி வைக்க வேண்டும் என முறையிட்டால், நீதி மன்றம் சலுகை அளிக்குமா.

இவ்வாறு சஜ்ஜய் தத்க்கு வாதிடுபவர்கள், குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் அவருக்கு பதிலாக அவர் வேலையை முடித்துவிட்டு வரும் வரை தான் சிறையிலிருப்பதாக ஒப்புக்கொள்வாரா?. 

இந்த தருணத்தில் வேறு ஒரு விஷயத்தை பற்றியும் குறிப்பிட நிணைக்கிறேன்., தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு  அவர்களது கருணை மனு நிராகரிக்கபட்ட நிலையில் பலர் மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பலரும்  பேசுகின்றனர். அவர்கள் உணர்ச்சிபூர்வமாக வாதிடும் காரணங்களும் பின்னனியும் ஏற்றுக்கொள்ள கூடியதா?
1) தன் மதம் சார்ந்தவன் என்பதனால் தவறான தண்டணை அளிக்கப்பட்டதாக வாதிடுவது
2. தன் இனம் சார்ந்தவன் என்பதனால் தவறான தண்டணை அளிக்கப்பட்டதாக வாதிடுவது
3) தன் மொழி சார்ந்தவன் என்பதனால் தவறான தண்டணை அளிக்கப்பட்டதாக வாதிடுவது
4) தன் நாடு சார்ந்தவன் என்பதனால் தவறான தண்டணை அளிக்கப்பட்டதாக வாதிடுவது.
5) தன் கட்சி சார்ந்தவன் என்பதனால் தவறான தண்டணை அளிக்கப்பட்டதாக வாதிடுவது
இப்படி பல்வேறு காரணங்களுக்காக தண்டனை ரத்து செய்ய கோருவது அல்லது குறைக்க சொல்வது என்று நீடித்து கொண்டே போனால் பின்பு குற்றவாளிக்கு எந்த அடிப்படையில் தண்டனை வழங்குவது.



குற்றவாளி என உறுதி செய்யப்பட்டாலும்,  மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் , அவன் சார்ந்த, ஜாதி, மொழி, இனம், மதம் நாடு , கட்சி மற்றும் பொது ஜன மக்களின் உணர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு அவர்களின் கருத்துக்களையும் கேட்டு தண்டணை அளிக்க வேண்டும் என்றால் எந்த குற்றவாளியும் சிறை செல்ல முடியாது. பின்பு நீதி மன்றங்களே தேவையில்லை.

இப்படியே சென்றால், குற்றங்களும், குற்றவாளிகளும் பெருகி கொண்டேயிருப்பார்கள்.  வலியவன் வெல்வான். எளியவன் தோற்ப்பான்.
காட்டுமிராண்டி ஆட்சி நடக்கும்.  மக்கள் புரட்சியில் மனிதனும் மானுடமும் அழியும்

No comments:

Post a Comment