Monday 26 August 2013

கவிதைகள்

கவிதைகள்::

வடிகட்டிய வெண் புகை ஊதுகுழலிருந்து
புறப்பட்ட மேகங்களில்
அமிழ்துன்ட அசுரன்
தேவதைகளை
தேடுகிறான்

====================================================================== 

 என்னை குழம்பு வைப்பாயா
பொறிப்பாயா
மீன் கேட்டது
நீ தான் செத்து விட்டாயே
உனக்கென்ன
இல்லை குழம்பென்றால்
இன்னும் கொஞ்ச நேரம்
மிதந்து கொண்டிருக்கலாமே

====================================================================
 மரம் ஒரு இலை உதிர்த்தது
அவன் சட்டையை உதிர்த்தான்
மீண்டும் ஒரு இலை உதிர்த்தது
அவன் பனியனை உதிர்த்தான்
மீண்டும் ஒரு இலை உதிர்த்தது
அவன் வேட்டியை உதிர்த்தான்
மீண்டும் ஒரு இலை உதிர்த்தது
அவன் கோவனத்தை உதிர்த்தான்
மரம் இன்னமும் குளிர்ச்சியாய் இருக்கிறது
அவன்வெப்பமாய் இருக்கிறான்
மரம் பச்சையாய் தான் இருக்கிறது
அவன் இச்சையாய் இருக்கிறான்

=====================================================================

====================================================================
பாவை
விளக்குக்கு
ஆடை
போர்த்துங்கள்
வருவோர்
போவோர்
எல்லாம்
கூட்டு
புணர்ச்சி
செய்கிறார்கள்

===================================================================== 

 செய்வதற்கு
ஓன்றுமில்லை
என்பதால்
எதை வேண்டுமானாலும்
செய்யலாம்
கவிதை எழுத
காகிதம் கூட தேவையில்லை

விரல்கள்
நடமாடினால்
எழுத்துக்கள்
கவிதையாகும்

======================================================================

 ஆசிரியர்களே
உங்களுக்கு தான்
பதில்கள் தெரியுமே
எங்களை ஏன்
கேட்கிறீர்கள்

======================================================================
=====================================================================
உளவுதுறை அறிக்கையும்
வானிலைதுறை அறிக்கை போலாகிவிட்டது

எல்லையில் போர் இல்லையாம்
குண்டுமழை மட்டும் பெய்கிறது.

=======================================================================
கால்கள் இல்லையென்பதற்காக
செருப்பு போடாமல்
இருக்க முடியுமா

கைகளில் போட்டுகொண்டு
தவழ்ந்து போகிறேன்

======================================================================
ஒற்றை செருப்பாய்
அலைந்துகொண்டிருக்கிறேன்

எவருக்கும் பொருந்தமல்,
எவருக்கும் தேவையில்லாமல்

என்னவள் வரும்வரை
ஏக்கத்துடன் காத்திருப்பேன்

======================================================================
மிருகங்கள் மீது
பவனி வரும்
தெய்வங்களை

மிருக வதை
தடுப்பு சட்டத்தின்
கீழ்
கைது செய்யமுடியுமா?
 
======================================================================

இயற்கை உபாதயை
இறக்கிய பின் கிடைக்கும்
நிம்மதிக்கு இணை
ஏதுமில்லை

கால் கழுவ
காகித உருளையை
சுழற்றினேன்

கண்டேன் காதலை
சிவப்பு நிற கிறுக்கலில்

எழுதியது யார்
எனக்கு முன் வந்தவனா

அதற்கு முன் வந்தவனா
அதற்கும் முன் வந்தவனா

எனக்கு பின் காத்திருப்பவன்

என்ன நினைப்பானோ
என்னை நினைப்பானோ

அப்பன் பேர் அவன் அறிய
அனுப்பிவைத்தேன்
 
அவனெழுதிய கவிதையை

" உனக்கானதை
   உமிழ்ந்து செல்கிறேன்
  கடலாவது
  கர்பம் தரிக்கட்டும்"

No comments:

Post a Comment