Friday 6 September 2013

ஒரு மனித நிறுவனம் - ONE PERSON COMPANY

ஒரு மனித நிறுவனம்::


அண்மையில் மாற்றியமைக்கபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் சட்டத்தில் சேர்க்கபட்டுள்ள ஒரு புதிய அம்சம்:
ஒரு மனித நிறுவனம் (ONE PERSON COMPANY-OPC)
ஒரு மனித நிறுவனம் என்றால் ஒரே உறுப்பினரை கொண்ட நிறுவனம்
தனியார் நிறுவனமாக பதிவுசெய்யலாம் (AS PRIVATED LIMITED COMPANY)
வாரிசுதாரரை நியமிக்கலாம். நிறுவனர் இறந்துவிட்டாலோ அல்லது செயல்படமுடியாத நிலையில் இருந்தாலோ வாரிசுதாரர் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தலாம். வாரிசுதாரருக்கு முன் கூட்டியே தெரிவித்து, அவரிடம் எழுத்து மூலம் சம்மதம் பெற்று, பதிவாளருக்கு தெரிவிக்கவேண்டும். வாரிசுதாரரை எப்போது வேண்டுமானலும் மாற்றலாம்.
நிறுவனத்தை குறிப்பிடும் எல்லா இடங்களிலும், ஒரு மனித நிறுவனம் என்பதை அவசியம் குறிப்பிட வேண்டும்.
நிறுவனங்கள் வருடாந்திர கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியமில்லை.
நிறுவனரே இயக்குனராக இருக்கலாம். குறைந்தபட்சம் ஒரு இயக்குனர் இருக்கவேண்டும்.
நிறுவன அமைப்பு விதி குறிப்பு(MEMORANDUM OF ASSOCIATION) கையெழுத்தாளரே முதல் இயக்குனராக கருதப்படுவார்.
ஒரே ஒரு இயக்குனர் இருக்கும்பட்சத்தில், ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியமில்லை. வேறு ஒரு நிர்வாகியை நியமிக்கலாம். அப்படி வேறு ஒரு நிர்வாகி இருக்கும் பட்சத்தில், வருடத்தில் 2 ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். இரண்டு கூட்டத்திற்க்கும் இடையில் 90 நாட்கள் கால அவகாசம் இருக்க வேண்டும்.
கூட்டத்தின் தீர்மானங்களை/ குறிப்புகளை தேதியிட்டு கையெழுத்திட்டு பதிவு செய்து வைத்தால் போதுமானது.
நிதிநிலை அறிக்கையில் நிதி பயன்பாடு(CASH FLOW) விவரங்கள் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
வருட இறுதி நாளுக்கு பிறகு 180 நாட்களில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
நிதிநிலை அறிக்கையும், வருடாந்திர அறிக்கையும் ஒரு இயக்குனரால் கையொப்பம் இடப்பட்டால் போதுமானது.

சாதரண அலுவல் ஒப்பந்தம் தவிர வேரு ஒப்பந்தங்கள்
) எழுத்து மூலமாக இருக்கவேண்டும்
) நிறுவன அமைப்பு விதி குறிப்பில் (MOA) குறிப்பிடபட வேண்டும்.
) கூட்ட குறிப்புகளில் இடம் பெற வேண்டும் மேலும் ஒப்பந்தம் கையெழுத்தான 15 நாட்களுக்குள் பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

விதிமுறைகள், சட்டதிட்டங்கள், படிவங்கள் மற்றும் இதர விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இதில் உள்ள நன்மை திமைகள் பற்றியும்,நடைமுறை சிக்கல்கள் பற்றியும் இது எவ்வாறு மற்ற நிறுவன்ங்களிடமிருந்து வேறுபடுகிறது என்பதை பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய நிறுவனங்கள் சட்டம்தோற்றமும் மாற்றங்களும்::
1. இந்தியாவில் முதன் முதலில் 1857வது வருடம் நிறுவனங்கள் சட்டம்    இயற்றப்பட்டது.
2. அடுத்த நிறுவனங்கள் சட்டம் 1866ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
3. அதற்கு பிறகு 1882ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது அது மீண்டும் 1913 இந்திய நிறுவனங்கள் சட்டமாக மாற்றப்பட்டது.
இதற்கு பிறகு 1950ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்ட அமைப்பு பரிந்துரையின் பேரில் , 1956ஆம் ஆண்டு இந்திய நிறுவனங்கள் சட்டம் இயற்றப்பட்டது.( இது தான் இன்று வரையில் அமுலில் உள்ளது)
5. 1956,ம் ஆண்டு முதல் இதுவரை 24 முறை சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
6. 1988ஆம் ஆண்டு பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு , நிறுவனங்கள் சட்டம் 1988 இயற்றப்பட்டது.
7. அடுத்து 2002ஆம் ஆண்டு பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு, நிறுவனங்கள் சட்டம் 2002 இயற்றப்பட்ட்து.

இந்த சட்டங்களின் நோக்கங்கள்:
1, அரசின் சமூக மற்றும் பொருளாதர கொள்கைகளை செயல் படுத்துவதற்காக இயற்றப்பட்டது.
2. நாட்டின் பொருளாதாரத்தில் நிறுவனங்கள் பெரும் பங்காற்றுவதால், நிறுவனங்களை ஆரோகியமான முறையில் மேம்படுத்த இயற்றப்பட்டது.
3. தவறு செய்யும் நிறுவனங்களின் நிர்வாகத்தை கட்டுபடுத்தி, அதில் சம்மந்தப்பட்டுள்ள அனைவரது நலன்களை காக்கும் பொருட்டு இயற்றப்பட்டது.
4. நிறுவனரின் ஆதிக்கத்திலிருந்து நிர்வாகத்தை பாதுகாத்து, அனைத்து பங்குதாரர்களின் நலனை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்டது.
5. நிறுவனத்திற்க்கு கடன் கொடுத்தவர்களின் பாதுகாப்புக்காகவும் இயற்றப்பட்டது.

PLEASE LOGIN  sudhandhiraparavai.blogspot for more information

No comments:

Post a Comment