Saturday 14 September 2013

வணிகம்-BUSINESS


RELIANCE NEW INVESTMENT- ரிலையென்ஸ் புதிய மூதலீடு



ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்காவில், ரூ.63,400 கோடி ($ 10 billion )முதலீடு செய்து, சேல்(shale gas) வாயு நிறுவன சொத்துக்களை வாங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ரூ.38674 ($ 6.1 billion) முதலீடு செய்துள்ளது. மீதமுள்ள ரூ.25360 கோடிகளை ($3.9 billion) முதலீடு செய்ய உள்ளது.. ரிலையன்ஸீடம் ஏற்கனவே ரூ.85000 கோடி உபரியாக உள்ளது. அந்த பணத்தின் மூலம் இதை வாங்க போகிறது.

அமெரிக்காவில் இருக்கும் சொத்துக்களின் மூலம், சேல்(SHALE) வாயு உற்பத்தி செய்து, அமெரிக்காவில் வாயு அடிப்படையாக கொண்ட,(GAS BASED FERTILIZERS, PETRO CHEMICALS AND POWER PLANT தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிறகு அவைகளை இந்தியா கொண்டுவர உள்ளது. மேலும், விலை குறைவான சேல் வாயுவை(SHALE GAS) இந்தியாவிற்க்கு கொண்டுவந்து, விலை அதிகமான (LNG) மாற்றி விற்க முடிவு செய்துள்ளது.

ஒரு இந்திய நிறுவனம், உலக நிறுவனங்களுக்கு இனையாக தொழில் செய்வது பெருமைபடகூடிய விசயம். இந்த நிறுவனத்திற்க்கு சேவை செய்யும் விதமாக பல சிறிய நிறுவனங்கள் உருவாகும். நிறைய வேலை வாய்புகள் உண்டாகும் இந்த நிறுவனம் நிறைய லாபம் சம்பாதிக்கும். சரி இதில் என்ன பிரச்சனை. ஏன் இந்த பதிவு.

ரிலையன்ஸ் மூதலீடு ரூ.63400 கோடி ($ 10 billion) இந்திய அரசின் கையிருப்பில் இருக்கும் அந்நிய செலவானி( அமெரிக்கன் டாலர்) வெளியே போகிறது.
அமெரிக்காவில் இருக்கும்  ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கு அமெரிக்காவில் தயாரான பொருட்களை விற்கும் போது, இந்திய நிறுவனம் அந்நிய செலவாணி கொடுத்து தான் வாங்கும்.
அதாவது, மூதலீடு செய்யும் போதும், அங்கு தயாரன பொருட்களை திரும்ப கொண்டுவரும் போதும் நாட்டின் அந்நிய செலவானியை இரண்டு முறை உபயோகப்படுத்துகிறது. இந்திய நிறுவனம்  வெளிநாட்டில் தொழில் தொடங்குவதன் மூலம் இரட்டிப்பு அந்நிய செலவாணி செலவாகிறது. இந்த தொழிலின் மூலம் அந்நிய செலவானி நம் நாட்டுக்கு வரவில்லை.

இதே தொழிலை இந்தியாவில் கிடைக்கும் கனிமங்களை கொண்டு செய்தால், அந்நிய செலவானி மிச்சமாகிறது. மேலும் நமக்கு பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ( கச்சா எண்ணெயில் செய்யும் அடாவடி தனத்தை செய்யாமல் இருந்தால்(எனது முந்தைய பதிவை படிக்கவும்)

இதற்காக தான் தஞ்சாவூர் பகுதியில், மீத்தேன் வாயு கிடைப்பதால், அங்கு அதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டது. ஆனால், விளைநிலங்கள் பாழகிவிடும் மற்றும் தானிய உற்பத்தி குறைந்து விடும் என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இப்போது புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள நிலசீர்திருத்த சட்ட்த்தின் மூலம் , நில உரிமையாளர்களில் 80% பேர் ஒப்புகொண்டால் தான் நிலத்தை கையகபடுத்தமுடியும். எனவே எதிர்ப்பு இருப்பதால், நிலத்தை கையகபடுத்த முடியாது . தொழிற்சாலை தொடங்க இயலாது.

ஆனால், புதிய நிலசீர்திருத்த சட்டத்தின்படி, நிலங்களுக்கு நட்ட ஈடாக , அந்த இடத்தின் சந்தை விலையை போல 4 மடங்கு தர வேண்டும் என்றும் மேலும் பலபல  சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆசைபட்டு, விவசாயிகள் நிலங்களை விற்க ஆசைபடலாம்.
இந்த சட்டம் இயற்றியதற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாரட்டவுமில்லை.

அரசு எந்த கொள்கை வகுத்தாலும் , பொதுவாக பணக்கார்ர்களுக்கு சாதகமாகவே செயல்படுவதாகவே கூறுவார்கள். எதிர்கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் மக்களுக்காக போராடுவதாக ஒருநாள் ஊர்வலம், கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பை காட்டி அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக செயல்படுவதாக காட்டிகொள்வார்கள். ஆனால், அரசு சட்டத்தை கொண்டுவர உதவியும் செய்வார்கள்.
இது போன்ற தொழிற்சாலைகள் தொடங்கபடும் இடங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாதாமாதம் லட்சகணக்கில் பணத்தை பட்டுவாடா செய்கின்றன. இவர்கள் பொதுமக்களின் துணையுடன் பிரச்சனை செய்யாமல் இருப்பதற்க்கும் அல்லது பொதுமக்களோ அல்லது தனியார் அமைப்புகளோ தொல்லை கொடுத்தால் அதை அவர்கள் சமாளிப்பதற்க்கும் கொடுக்கப்படுகிறது.

சேல் என்பது என்ன?
இறுக்கப்பட்ட சேறு , களிமண் மற்றும் வேதியல் பொருள்களால் ஆன பாறை. (Shale is a compressed fine-grained type of sedimentary rock. It was formed from mud silt, clay, and organic matter).
சேல் வாய் என்பது என்ன?  சேல் பாறைகளில் இருக்கும் வாயு. இது HYDROCABON வாயு கலவை. இதில் அதிகமாக METHANE வாயு அடங்கியுள்ளது.மேலும், ETHANE, PROPANE , BUTANE, CAROBON DIOXIDE, NITROGEN)AND SULFIDE அடங்கியுள்ளது.
Shale gas is natural gas trapped within tiny pore spaces in shale formations. It is a hydrocarbon gas mixture. It consists mainly of methane. Other hydrocarbons are natural gas liquids (NGLs) like ethane, propane, and butane, and it also contains carbon dioxide, nitrogen, and hydrogen sulfide.
LNG என்றால் என்ன?
நிறமற்ற திரவநிலையில் இருக்கும் இயற்கை வாயு
இது மின்சார உற்பத்திக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இராசயன பொருட்கள் தாயரிப்பதற்க்கும் பயன்படும்

LNG is liquefied natural gas, a clear, colourless, non-toxic liquid that forms when natural gas is cooled to -162ºC (-260ºF). This shrinks the volume of the gas 600 times, making it easier to store and ship to energy-hungry towns and cities overseas.
 

 RELIANCE CRUDE OIL BUSINESS-ரிலையஸ் கச்சா எண்ணெய் வியாபாரம்


ரிலையன்ஸ் நிறுவனம் கடலோர பகுதிகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது என்பது தெரிந்த விசயம்.

இப்போது அரசுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கும் நடக்கும் பிரச்சனைகள்.

அரசு தரப்பு::
1. ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி தொடங்காத்தால், 100 கோடி            ($ 1 billion) அமெரிக்க டாலர்கள் ஏற்கனவே அபராதம் விதித்துள்ளது.மேலும், தற்போது, 797 லட்சம்( $ 797 million) அமெரிக்க டால்ர்கள் அபராதம் விதித்துள்ளது.
2. ஏற்கனவே உற்பத்தி செய்யும் இடங்களில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க முடியாது என அமைச்சகம் கூறுகிறது.
3. கால தாமதம் செய்வதால் புதிதாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 8 இடங்களை அரசுவசம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சகம் கூறுகிறது
4. சில இடங்களில் மட்டுமே உற்பத்தி செய்கிறது அதுவும் குறைவாக செய்கிறது என்பது அரசின் குற்றசாட்டு.

ரிலையன்ஸ் வாதம்::

1. எண்ணெய் விலையை அரசு நிர்ணயம் செய்கிறது. ஆனால் ஒப்பந்தபடி சந்தை விலை கொடுக்க வேண்டும்.
2.அரசு ஒப்பந்தத்தை மீறுகிறது என குற்றம் சாட்டுகிறது.
3. 8 எண்ணெய் கிணறுகளை அரசு ஒப்படைக சொல்லுவதை கோபத்துடன் மறுக்கிறது.
4. இப்படிபட்ட சூழ்நிலையில், முதளிட்டாளர்கள் எண்ணெய் உற்பத்தி செய்ய மாட்டார்கள் என கூறுகிறது.
5. சந்தை விலை நிர்ணயிக்கமுடியாது என கூறுவதை எதிர்கிறது.
6. அரசு எங்களிடமிருந்து ஒரு பகுதியை திரும்ப எடுத்துகொண்டு , மீண்டும் ஏலம் விட முறச்சி செய்கிறது.
7.கனிம வள சிக்கல்களினால் (geological complexity) உற்பத்தி குறைவாக உள்ளதாக கூறுகிறது.


தனியார் தொழில் தொடங்கினால், அவர்கள் தங்களது லாபத்தை மட்டுமே பார்க்கிறார்கள். தேச நலனை கருத்தில் கொள்வதில்லை.

அரசு பொதுதுறை நிற்வனங்களை தொடங்குவதில்லை. ஏற்கனவே இருக்கும பொதுதுறை நிறுவனங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை.இதற்கு அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டும் காரணமல்ல. அங்கு வேலை செய்யும் தொழிலார்களும் பொதுமக்களும் கூட காரணம். பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு அரசு விற்பனைசெய்கிறது. பொது துறை நிறுவனங்கள் சரிபட செயல்பட அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.

அரசும் ரிலையன்ஸ் நிறுவனமும் பேசி ஒரு முடிவுக்கு வந்தால், அதிக உற்பத்தி தொடங்கும். அந்நிய செலவானி மிச்சமாகும். எண்ணெய் விலை குறைந்தால் அனைத்து பொருள்களின் விலையும் குறையும். தொழில் உற்பத்தி அதிகரிக்கும். பொருளாதரம் மேம்படும்.

விரைவில் தீரவு காண்பார்கள் என எதிர்பார்ப்போம்.
நான் தமிழில் பதிவிடுவதற்க்கு காரணம்தமிழ் மட்டுமே எழுத படிக்க பேசகின்ற மக்களும் எனது பதிவின் விவரங்கள் அறியவேண்டுமென்பதற்க்காக.
என் பதிவில் கருத்து பதிய விரும்பும் நபர்களும் தமிழில் கருத்துக்களை பதிவு செய்யவும்.
ஆங்கிலத்தில் கருத்துகளை பதிவில் செய்ய விரும்பினால் ஆங்கிலத்தில் எழுதுங்கள் .தமிழை ஆங்கிலத்தில் எழுதுபவர்களின கருத்துக்களை நான் படிப்பதில்லை.

அதே சமயம் தமிழின் பழைய பெருமைகளை பேசி திரிபவன் அல்ல. தமிழன் அவமானப்படுத்தபடுகிறான் என்று புலம்புபவனும் அல்ல. தமிழர்களுக்கு தனி தமிழ் நாடு வேண்டும் என்பவர்களுக்கு ஊக்கம் கொடுப்பவனும் அல்ல.

No comments:

Post a Comment