Sunday 15 September 2013

கற்பழிப்பு குற்றமும் தண்டணையும்



கற்பழிப்பு குற்றமும் தண்டனையும்::
டெல்லி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிருபிக்கப்பட்டு அவர்கள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டவுடன் மகிழ்சியடைந்து இனிப்பு கொடுத்து கொண்டாடி மக்கள் நிகழ்சியை முடித்து வைத்தனர்.
ஊடகங்கள், நீதிமன்ற தீர்ப்பு நாளை நேரடி ஒளிபரப்பு செய்வதாக கூறி பின்பு சில பல விவாதங்களுடன் தங்களது கடமையை செய்து முடித்தது. அவர்களுக்கு இப்போது நரேந்திர மோதி விசயம் இருப்பதால் இதை இனிமேல் பேசமாட்டார்கள்.
ஒருசிலர் வித்தியாசமாக சொல்லவேண்டும் என்பதற்காக தூக்கு தண்டனை தேவையா என கேட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். இந்த வழக்கு விசயத்தில் அது தேவையில்லை என கூற தைரியம் வேண்டும். அப்படி கூறினால் அவனும் இந்த குற்றத்திற்கு உடந்தை என்பது போல கருந்து வெளியிட்டு தங்களது நமைச்சலை தீர்த்து கொள்வார்கள்.
வேறுசிலர் இந்த வழக்கை இவ்வளவு சீக்கிரம் விசாரித்து தீர்ப்பு வழங்கியதை போல மற்ற வழக்குகள் ஏன் விசாரிக்கப்படவில்லை என்ற கேள்வியையும், டெல்லியில் நடந்தால் தான் முன்னுரிமையா என்றும் எங்களது மாநிலத்தில் நடந்தவைகளை ஏன் இதுபோல் விசாரிக்கவில்லை என்று அரசியல்வாதிகள் போல் கருத்து தெரிவித்துள்ளனர்.
கற்பழிப்பு நிச்சியமாக தவறான செயல். அது தண்டிக்கப்பட வேண்டிய செயல். இதில் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. ஆனால் இந்த விசயத்தில் எல்லாம் சரியாக நடந்திருக்கிறதா என்பது தான் கேள்வி.

கற்பழிப்பு என்றால் என்ன. முதலில் கற்பு என்றால் என்ன?. பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஆண் அவளிடம் உடல் உறவு கொண்டால் அது கற்பழிப்பு என்று பொருள்படுகிறது. பெண் சம்மதித்து உடல் உறவு கொண்டால் அது கற்பழிப்பு ஆகாது. செய்கை ஒன்று தான். அதில் பெண்ணின் சம்மதத்தை பொறுத்து பொருள் மாறுபடுகிறது. கணவன் மனைவி தினமும் உறவு கொண்டாலும், மனைவி மறுக்கும் போது கணவன் கட்டாயமாக உறவு கொண்டால் அதையும் கற்பழிப்பு என்று தான் சட்டம் சொல்கிறது.. அதாவது பெண்ணின் சம்மதம் இல்லாமலும், அல்லது சடங்குகள் சம்பிராதயங்கள் இல்லாமலும் ஆண் பெண் உடல் உறவு கொண்டாலும் கற்பு போய்விட்டது என பொருள் கொள்ளப்படுகிறது. மொத்தத்தில் உடல் உறவுதான்  கற்பு என்று பொருள் படுகிறது  அதாவது, பெண் மட்டுமே உறவை தீர்மானிக்கும் உரிமையை பெறுகிறாள்.
பெண் பலவந்தபடுத்தி ஆணை இணங்க செய்தால் அது கற்பழிப்பு குற்றத்தில் வருவதில்லை. ஆண் அதை வெளியில் சொல்வதில்லை. மக்கள் என்ன சொல்கிறார்கள் நீ விரும்பி உடல் உறவு கொண்டாலும் அல்லது பெண் உன்னை பலவந்தம் செய்து உறவு கொண்டாலும் உனக்கு இன்பம் தானே என்று சமாதானம் சொல்கிறார்கள். பெண்ணுக்கு உறவு கொள்வதற்க்கு விருப்பம் இல்லாத போது ஆண் உறவு கொள்ளகூடாது என்றால் பெண்ணும் அப்படி தானே.  ஆண் உறவு கொள்ள மறுத்தாலும், பெண்கள் அதையும் குறை கூறி ஆணை அவமானப்படுத்துகிறார்கள். இன்பம் அடைவது இருவரும் தான். துன்பம் அடைவதும் தான் இருவரும் தான். ஆனால், ஆண் மட்டும் தான் இன்பம் அடைகிறான் என்பது போல சித்தரிக்கப்படுகிறது. இதை ஆண் வர்கமும் ஒப்புகொள்கிறது. நியாயம் இருவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும். இருவரது சம்மதத்துடன் நடைபெற வேண்டும்.
கற்பழிப்பு என்ற நிகழ்சியில் பெண்ணின் சம்மதம் இல்லாமல் உடல் உறவு நடைபெறுவதால் அது தண்டனைக்குரிய செயலாக மாறுகிறது. அதிலும் பலர் சேர்ந்து வன்முறையுடன் உறவு கொள்வது மிகவும் தவறான செயல் .நிச்சியமாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.

6 பேர் சேர்ந்து செய்த கற்பழிப்பு. ஒருவன் சிறுவன். 3 ஆண்டு தண்டனையுடன் தப்பித்துவிட்டான். ஒருவன் தூக்குமாட்டிகொண்டு செத்துவிட்டான். மற்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை.இந்த தண்டனை கற்பழிப்பு குற்றத்திற்க்காக மட்டுமல்ல. உயிரிழப்புக்கும் சேர்த்துதான். இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றால், இந்த தண்டனை கிடைத்திருக்க வாய்பில்லை.
18 வயது நிரம்பாதவன் என்பதற்காக குறைந்தபட்ச தண்டனை சரிதனா. இவன் உடல் உறவு மட்டும் கொள்லவில்லை. உயிர் பிரிவதற்கான காரியத்தையும் செய்துள்ளான். இரண்டு தவறுகளையும் செய்த பின்பும்  வயதின் காரணமாக கடும் தண்டனையிலிருந்து தப்பி விட்டான். சிறுவனுக்கு காமம் செய்ய தெரிகிறது, கொடுரமான முறையில் செயல்களை செய்ய தெரிகிறது . ஆனால் சிறுவன், செயலின் தன்மையை அறியாமல் செய்துவிட்டான் என்ற நியாயத்தின் கீழ் அவண் தண்டனையிலிருந்து தப்பிவிட்டான்.
நியாயம் வயதை பொறுத்த அல்லது குற்றத்தை பொறுத்த?. வயதை பொறுத்து என்றால் ஒருவன் 18 வயது அடையும் வரை இது போன்ற எத்தனை கற்பழிப்பு குற்றங்கள் செய்தாலும் அவண் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம். இது எப்படி நியாயம். இந்த சட்டம் உலகம் முழுவதும் இருக்கிறது.
18 வயதுக்கு உட்பட்டவன் எந்த குற்றம் செய்தாலும் இப்படி தான் தண்டனையளிக்கப்படுகிறது. கொலை குற்றத்திற்க்கும் இது தான் தண்டனை.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு 18 வயதுக்கு உட்பட்ட சகோதரன் இருந்து, குற்றம் செய்தவர்களை பழி வாங்குவதற்க்கு  அவர்களை கொலை செய்தால், சட்டம் என்ன செய்யும். அவனையும் சிறுவன் என்று கருதி அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறைதண்டனை தானே தரும். ஏன் இவ்வளவு சிரமப்பட்டு வழக்கை நடத்தி  தண்டனை வாங்கி தரவேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்பட பல ஆண்டுகள் ஆகும். தண்டனை குறைக்கப்படவும் வாய்புண்டு. இந்த குற்றத்திற்க்கு மரண தண்டனை தான் சரியானது என்றால், அதை பாதிக்கப்பட்டவர்கள் செய்ய என்ன தடை. அந்த சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க என்ன பிரச்சனை.
இந்த வயது வரம்பை வைத்து தான் தண்டனை என்றால், பழிவாங்க நேரடியாக கொலை செய்பவர்களும்,  கூலிபடையை வைத்து கொலை செய்பவர்கள் ஏன் 18 வயதுக்கு உட்பட்டவர்களை வைத்து கொலை செய்யமாட்டார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு அவண் வசதியான வாழ்க்கை வாழலாம்.
இப்படி அனுமதிக்கபட்டால், சமுதாயத்தில் அமைதி இருக்காது.
எனவே , இந்த பாலியல் குற்றத்திற்க்கு அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை தவறானது. மரண தண்டனை வழங்கவில்லையென்றாலும் ,ஆயுள் தண்டனையாவது வழங்கியிருக்கலாம்.
சட்டப்படி தான் சிறுவனுக்கு தண்டணை வழங்கபட்டது சரியென வாதாடினால், மற்ற 4 பேருக்கு வழங்கப்பட்ட தண்டணை சரியானதா.?
நமது சட்டத்தில் கற்பழிப்பு குற்றத்திற்க்கு மரண தண்டனை கிடையாது. எந்த குற்றத்திற்க்கும் மரண தண்டனை கூடாது என்ற விவாதமும் இருக்கிறது.
இந்த 4 பேர் கற்பழிப்பு குற்றம் மட்டுமே செய்துள்ளார்கள். சட்ட்த்தின் படி இவர்களுக்கு மரண தண்டனை பொருந்தாது. எது அதிக பட்ச தண்டனையென்று நிர்ணயிக்கபட்டுள்ளதோ அதை தான் வழங்கியிருக்க வேண்டும்.
பழிக்கு பழி உயிருக்கு உயிர் பழிவாங்கபடும் என்பது என்ன நியாயம். இது சட்டமா. காட்டுமிராண்டிதனமா ?
மேலும், ஒரு உயிரிழப்புக்கு, 4 உயிரை பறிப்பது சரியா.? இது மறுபரிசீலனை செய்ய வேண்டிய தீர்ப்பு.
ஏன் இவ்வளவு அவசரமாக வழக்கு முடிக்கப்பட்டது. தொலைகாட்சி மற்றும் ஊடகங்கள் இதை பெரிது படுத்தின. அந்த சமயத்தில் அவர்களுக்கு ஒளிபரப்புவதற்க்கு வேறு செய்திகள் இல்லை. மக்களின் குறிப்பாக இளைய தலைமுறையின் உண்ர்சிகள் தூண்டிவிடப்பட்டது. அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. புதிய சட்டம் இயற்றவும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. மக்களை சமாதனபடுத்த வேண்டிய நிலையில் அரசும் இதை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதே காரணத்திற்காக தான், நீதீ மன்றமும் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த நீதிமன்றத்திற்க்கு தெரியும். எப்படியும் மேல் முறையீடு செய்யப்படும். மற்ற நீதிமன்றங்கள் இறுதி தீர்ப்பு கொடுக்கட்டும். நாம் மக்களின் கோபத்திற்க்கு ஆளாகமல், நமது இடத்திலிருந்து இந்த வழக்கு விலகி செல்லட்டும் என்ற நிலைபாட்டின் காரணமாகவே இந்த நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.இதை தான் குற்றவாளிகளின் சார்பாக வாதாடிய வழக்கறிங்கரும் கூறியுள்ளார். இதற்காக அவர் விமர்சனத்திற்க்கு ஆளாகியுள்ளார்.
அப்துல் கசாப் வழக்கில் எத்தனை ஆண்டுகள் விசாரிக்கப்பட்ட்து. அவண் செய்தது ஒரு கொலையா இல்லையே. பல கொலைகள் செய்தான். அவனுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு அவனுக்காக வாதட வாய்பும் அளிக்கப்பட்ட்து.
பல கொலைகள் செய்தவனுக்கு ஒரு மரண தண்டனை. ஆனால் ஒரு கொலைக்கு 4 பேருக்கு மரண தண்டனை. அப்துல் கசாப்பை எத்தனை முறை தூக்கிலிடவேண்டும். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் யோசித்து பாருங்கள்.
இதுதான் நியாயமா. இதுதான் தர்மமா. இதற்கு சட்டமும் நீதிமன்றங்களும் தேவையா.
பின்பு என்ன தண்டனை வழங்கியிருக்க வேண்டும். ஆயுள் தண்டனை வழங்கியிருக்கவேண்டும். ஆயுள் தண்டனையென்றால் சட்டம் சொல்லும் 14 வருட தண்டனையல்ல. அவண் உயிரோடு இருக்குவரை சிறையில் இருக்கவேண்டும். மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றினாலும் அத்துடன் கதை முடிந்துவிடுகிறது. அப்படியில்லாமல் செய்த குற்றத்திற்க்காக வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டும். எந்த இன்பத்திற்காக இந்த குற்றத்தை செய்தானோ அந்த இன்பம் வாழ்நாள் முழுவதும் கிடைக்காமல், ஏங்கி ஏங்கி வருத்தப்பட்டு உயிரிழக்கவேண்டும்.
இந்த வழக்கில் எக்காரணம் கொண்டும் மரண தண்டனை கூடாது.
மரண தண்டனைதான் சரியானது என்று சொல்லும் மக்களிடம் நான் கேட்கும் இரண்டு கேள்வி.
1)இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல்வாதியின் மகனாகவோ அல்லது பெரிய பணகாரரின் மகனாகவோ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.
நண்பன் என்கிற காதலன் சாட்சியம் அளித்திருக்கமாட்டான். விலை பேசப்பட்டிருப்பான். நீதியும் விலை பேசபட்டிருக்கும். அப்படியே விலைக்கு அவர்கள் வரவில்லையென்றால், சாட்சியத்திற்க்கு விபத்து ஏற்பட்டு உயிர் இழந்திருப்பார். நீதி உறங்கியிருக்கும்.
2) விதி வசத்தால்,விதி வசத்தால் (அப்படி யாருக்கும் நேரவேண்டாம்) தூக்கு தண்டனையை ஆதரிக்கும் ஆண்/பெண்ணின் தந்தையோ, கணவனோ, மகனோ, சகோதரணோ இந்த மாதிரி குற்றத்தை செய்திருந்தால், மரண தண்டனை கொடுங்கள் என்று கூறுவார்களா ? மாட்டார்கள். என் உறவு இது போன்ற குற்றங்களை செய்யவில்லை என்பார்கள். செய்ய மாட்டான் என்பார்கள்.அவனது கூட்டாளிகள் சிக்க வைத்து விட்டார்கள் என்பார்கள். சிறந்த வக்கீலை பார்த்து வாதாடுவார்கள். சாட்சியிடம் கெஞ்சுவார்கள். மிரட்டுவார்கள். தண்டனையை கருனையுடன் பரிசீலித்து குறைந்தபட்ச தண்டணை வழங்க வேண்டுவார்கள்.காரணம் அது அவர்களது உறவு.

இப்போது தண்டனை பெற்றவர்களின் உறவுகளுக்கும் அப்படிதான் இருக்கும். அவர்களும் குற்றம் செய்தவர்கள் உயிருடன் இருக்கவேண்டும் என்று தான் விரும்புவார்கள்.
எனவே யாராக இருந்தாலும் இந்த இரட்டை வேடம் போடதான் செய்வார்கள். எனவே மரண தண்டனை அவசியமா என்று எல்லோரும் யோசிக்க வேண்டும். எல்லோரும் உணர்ச்சி வேகத்தில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தான் கூறுவோம். சற்று யோசித்து முடிவுசெய்தால் உங்கள் எண்ணங்கள் மாறக்கூடும்.

இறுதியாக, உடன் இருந்த நண்பனின்/காதலனின் இன்றைய மனநிலை என்னாவாய்யிருக்கும். அவனால் இந்த நிகழ்சியை மறக்கமுடியாது. காலபோக்கில் அவண் திருமணம் செய்துகொண்டு, மணைவியுடன் உடல் உறவு கொள்ளும் போது இந்த நிகழ்ச்கி நினைவுக்கு வரும். நாம் இயற்கையான உறவு கொள்கிறோமா அல்லது பாலியல் பலாத்காரம் செய்கிறோமா என மனஉளைச்சல் ஏற்படும்.
அவனுக்கு ஆறுதல் சொல்லி அறிவுரை கூறி நல்ல மனநிலைக்கு திரும்ப அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நீதிமன்றமும் எந்த பரிந்துரையும் செய்யவில்லை.

இந்த நிகழ்சி நடந்த பின்பும்  பல கற்பழிப்பு நிகழ்சிகள் இந்தியா முழுவதும் நடந்துள்ளது. இனிமேலும் நடக்கும்.
ஆண்களே திருந்துங்கள் இல்லையெனில் திருத்தப்படுவீர்கள். உங்களுக்கு காமம்  தேவைப்பட்டால், விலைமாந்தரிடம் செல்லுங்கள். அப்பாவியான பெண்களை துன்புறுத்தாதீர்கள்
பாதிக்கப்பட்ட பெண் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்பு தேவைப்பட்டால் மீண்டும் எனது கருத்துகளை கூறுகிறேன்
.









No comments:

Post a Comment