Thursday 26 September 2013

சட்டங்கள்

சட்டம்::

கீழே இருப்பது முந்தைய பதிவு.இன்றைய நிலைபடி  இந்த அவசர சட்டம் வாபஸ் பெறபடும் என தெரிகிறது.

சட்டம் இயற்றப்பட்டாலும், இந்திய அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடாது.
குற்றம் நிருபீக்கப்பட்டு தண்டனை பெற்றாலும் அரசியல்வாதிகள், அவர்கள் தேர்தலில் நிற்காமல் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மகன்,மருமகள், மகள், மருமகன், மனைவி, சின்ன வீடு இப்படி யாரையாவது நிறுத்தி தேர்தலில் நின்று ஜெயித்து பதவிக்கு வந்து செய்ய வேண்டிய அட்டுளியங்களை செய்துகொண்டிருப்பார்கள்.

இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. இதையாவது செய்ய முடிந்ததே என திருப்திபடவேண்டியது தான்.

குறை சொல்ல முடியாத அளவுக்கு எந்த சட்டமும் இயற்ற முடியாது என தோன்றுகிறது
அண்மையில் இந்திய உச்ச நீதி மன்றம், குற்றவியல் தண்டனை சட்டப்படி 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் சிறை தண்டனை பெற்றவர்களது சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும் என தீர்பளித்தது. அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்கவும் தடை விதித்த்து.

ஆனால், அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை எதிர்த்தன. இந்த விசயத்தில் மட்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளன.
இதை தடுப்பதற்க்காக ஒரு அவசர சட்டத்தை அமுல் படுத்தவும் தயாராய் உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களும், தண்டனை பெற்று மேல் முறையீடு செய்த நிலையிலும் உள்ளவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதற்கு அரசியல் கட்சிகள் கூறும் காரணங்கள் சரியானது போல தோன்றுகிறது.
1. கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றாலும், மேல் முறையீடு செய்வதன் மூலம் உயர்நீதி மன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் தண்டனை ரத்து செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ சந்தர்பம் இருப்பதால், இந்த தீர்ப்பு சரியானது அல்ல என வாதாடுகிறார்கள்.
அதற்கு பதிலாக, கீழ்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்களது பதவியை பறிப்பதை விட, அவர்கள் பதவியில் இருக்கலாம் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் ஆனால் அங்கு அவர்களுக்கு ஒட்டளிக்கும் உரிமையை நிறுத்தி வைக்கலாம் மற்றும் சம்பளத்தை நிறுத்தி வைக்கலாம் என வாதிடுகிறார்கள்.
இது சரியான வாதமாக தோன்றுகிறது. மேலும், ஒருவரை தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்க்காக பொய் வழக்கு பதிவு செய்து, சாட்சியங்களை ஏற்படுத்தி, நீதியை விலைக்கு வாங்கி தண்டனை அறிவிக்க செய்தால் ஒருவர் நிரந்தரமாக தேர்தலில் போட்டியிடும் உரிமையை இழந்து விடுவார். குறிப்பாக பாலியல் வழக்குகள் பதிவு செய்வது இன்றைய நிலையில் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மிக எளிதாக  மக்களிடையே உணர்சிகளை தூண்டிவிட்டு, நீதிமன்றங்களுக்கு நெருக்கடி கொடுத்து, தண்டனை வாங்கி தர முடியும்.
ஆனால், கீழ் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்து தீர்ப்பு வர 20-30 வருடங்கள் ஆகும் நிலையில், குற்றவாளிகள் ஆட்சியில் இருப்பதும், அவர்களுக்கு நாம் அடிபணிவதும் கேவலமாக தோன்றுகிறது.
அரசியல்வாதிகள் பொதுவாக குற்றவாளிகள் என்ற அபிப்பிராயம் மக்களிடையே உள்ளது. அதற்கு காரணம் ஊடகங்கள் தொலைகாட்சிகள் செய்யும் பிரசாரமமே காரணம். ஊடகங்கள் நினைத்தால் ஒருவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தாமலேயே , அவனுக்கு தன்டனை வழங்ககூடிய நிலையில் உள்ளன. ஊடகங்கள் பரப்பும் செய்திகளின் அடிப்படையில் தான் நாம் அபிப்பிராயத்தை உருவாக்கி கொள்கிறோம். ஊடகங்கள் சொல்வதெல்லாம் உண்மையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே நீதிமன்ற தீர்பையும், அரசியல்வாதிகள் எழுப்பும் வாதங்களையும் கருத்தில் கொண்டு, யாருக்கும் பாதிப்பு வராமலும் அதே சமயம் குற்றவாளிகள் நம்மை ஆட்சி செய்யாமலும் இருக்கும் படி சட்டம் இயற்ற வேண்டும்.

எந்த சட்டம் இயற்றினாலும், ஒரு சாராருக்கு சாதகமாகவும் மறு சாராருக்கு பாதகமாகவும் முடிகிறது.
குறை சொல்ல முடியாத அளவுக்கு எந்த சட்டமும் இயற்ற முடியாது என தோன்றுகிறது.

லோக்பால் சட்டத்தை அவசரமாக சட்டமாக  இயற்ற வேண்டும் என குரல் கொடுத்தபோது, சட்டம் பாரளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இயற்ற முடியுமே தவிர , அவசர சட்டமாக இயற்ற முடியாது என கூறிய அரசு இன்று வரை அந்த சட்டத்தை இயற்றவில்லை. ஆனால், அவர்களுக்கு பாதகமான தீர்ப்பு வந்தவுடன் , அவசர சட்டம் இயற்றுகிறது.

நமது ஜனநாயக ஆட்சிமுறை மீதே நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment