Saturday 14 September 2013

பிள்ளையார்


கடவுள் வழிபாடு::


நான் பிள்ளையார் சதுர்த்தி அன்று அவரைபபற்றி ஒரு பதிவும் பாட்டும் போட்டேன். கடவுள் என்றால் என்ன என்பதும் ஏன் இப்படி என்பதும் தான் கேள்வியாக்கினேன்.

என் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் கடவுளை குறித்து இப்படியெல்லாம் பேச வேண்டாம், எழுத வேண்டாம் என்றும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கும்படியும், மேலும் கடவுள் தண்டிப்பார் என்றும் அறிவுரை கூறினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

கடவுளை நான் நிந்திக்கவில்லை. கடவுளை பற்றி சிந்திக்கிறேன். ஆத்திகன் என்று சொல்லும் நபர்களைவிட , நாத்திகன் என்று குறிப்பிடபடும் நான் உயர்ந்தவன்.

ஆத்திகன் என்று சொல்லிகொள்பவர்கள், விஷேச தினங்களிலும் மற்றும் தங்களுக்கு ஏதேனும் வேண்டும் என்கிற போதும் அல்லது தங்களுக்கு நேரும் துன்பங்களின் போதும் மட்டுமே கடவுளை நினைக்கிறார்கள்.

மேலும், எனது துனபத்தை நீக்கினால், அல்லது எனக்கு இதை அதை கிடைக்க செய்தால்  நான் உனக்காக இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று பேரம் பேசுகிறார்கள். மொட்டை அடித்து கொள்கிறேன் என்று பிராத்தனை செய்கிறார்கள். மயிர் வளர்ந்து விடும் என்பதால் அதை இழக்க தயாராக இருக்கிறார்கள். ஏன் கையை காலை வெட்டிகொள்கிறேன் என்று வேண்டிகொள்வது தானே அல்லது இருக்கும் சொத்தில் பாதியை தானம் செய்கிறேன் என்று வேண்டிகொள்வது தானே.

நான் முன்பு எல்லோரையும் போல கோவிலுக்கு போய் கொண்டிருந்தேன். பின்பு சிந்தித்து பார்க்கும் போது, கடவுளும் , புஜை முறைகளும் மக்களை நல்வழிபடுத்துவதற்க்காகவும் , மக்கள் பிறருக்கு துன்பம் இழைக்காமல் இருப்பதற்க்காகவும், பயமுறுத்தி  ஏற்படுத்தப்பட்ட முறை என்று அறிந்து கொண்டேன். பிறகு ஒரு சாரர் அதை தங்களுக்கான பிழைப்பாக வைத்துகொண்டு அநியாயம் செய்வதை உணர்ந்துகொண்டேன். கடவுளை வணங்குவதற்க்கு கூட பல நிபந்தனைகள், முன் உரிமைகள் மற்றும் கடவுளின் இடைதரகர்களாக இருப்பவர்கள் செய்யும் அடாவடி தனங்கள்
இவற்றை உணர்ந்த பிறகு கடவுளின் மேல் நம்பிக்கையும் பயமும் போய்விட்டது.

அதனால் தான் கடவுளை பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று அறிந்து கொண்டு, சிந்தித்து பல கேள்விகளை எழுப்பி கேலி செய்கிறேன்.இதனால் கடவுளை பற்றி அதிகம் படிக்கிறேன். தினமும் கடவுளை நினைக்கிறேன்.

நான் நல்லவன். யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. எதையும் கடவுளிடம் கேட்பதில்லை. பேரம் பேசுவதில்லை. எப்படியிருப்பினும் நான் கடவுளை பற்றி நினைப்பதால், அவர் எனக்கு நல்லது தான் செய்வார்.(கடவுள் என்று ஒருவர் இருந்தால்)

நான் தினமும் பலமுறை சொல்வது: அப்பனே முருகா ஷண்முகா, ஞ்னா பண்டிதா வேலாயுதா கந்தா கடம்பா கதிர்வேலா என்னை மட்டும் காப்பாத்து அல்லது என்னை என் பொண்டாட்டியிடமிருந்த காப்பாத்து என்று சொல்லிகொண்டேயிருப்பேன்.

எனவே ஆத்திகனை விட நாத்திகன் என்று சொல்லப்படும் நான் கடவுள் என்று சொல்லபடுபவன்  பெயரை அதிகம் சொல்கிறேன்.

கடவுளை எதிர்கிறேன் என்பதை விட , அவனது பெயரால் செய்யப்படும் அநியாயங்களை எதிர்கிறேன். அப்போது கடவுள் என்று சொல்லப்படுகிறவனையும் எதிர்கிறேன்.

கடவுளுக்கு ஏன் இத்தனை உருவ வழிபாடு. எத்தனை வேறுபாடுகள். எத்தனை பிரச்சனைகள். எனவே அவனிடமிருந்து விலகியிருப்பதே மேலானது என முடிவு செய்துவிட்டேன்.

இதற்கு மேலும் எனக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்பங்கள் ஏற்பட்டால், அது இயற்கையான நிகழ்வுகளாகவே இருக்கும். அல்லது முன் ஜென்மத்தில் செய்த பாவத்தை அனுபவிக்கிறோம் என்று சொல்வார்களே அதுவாக தான் இருக்கும். எனது கடவுள் நிந்தனைக்காக இருக்காது.

எதற்கு இத்தனை கடவுள்கள்.கோயில்கள்.பிரச்சனைகள்.

உணரகூடிய நிலையில் உள்ள ஐம்பெரும் பூதங்கள் எனப்படும் இயற்கையை வணங்கினால் போதாதா. ஒரு செங்கல்லை வணங்கினாலும் போதுமானது.

நிலம்.நீர்,வாயு, ஆகாயம், நெருப்பு -களிமண்ணை எடுத்து நீர் கலந்து, நெருப்பில் சுட்டு, காற்றில் காய வைத்து, ஆகாயத்தை கூறையாக வைத்து ஒரு செங்கல்லை வைத்து கும்பிட்டாலும் அதுவும் கடவுள் தான்.
எந்த வித நோன்பும் விரதமும், கொடுக்கல் வாங்கல் இல்லாமல் நமது மனசுமையை இறக்கி வைக்கும்  சுமைதாங்கியாய் பயன்படுத்தலாம்.
மற்றவை எல்லாம் வெளிவேசமே.

ஒரு கோவில் கட்டுவதற்க்காக இரு மதங்கள் சண்டையிட்டுகொள்கின்றன. எத்தனை மனித உயிரிழப்பு. எத்தனை சொத்துக்கள் நாசம். எத்தனை குடும்பங்கள் அனாதையாகின்றன.
இரு மதங்களையும் சார்ந்த கடவுள் ஏன் அதை தடுப்பதில்லை. தண்டிப்பதில்லை.
கடவுள், கோயில், பண்டிகை இன்ன பிற விசயங்களை பற்றி என்னுடன் பேசும் போதும், என்னை கடவுளை நம்பு என்று வற்புறுத்தும் போதும் எனது கடவுள் நிந்தனை தொடரும்.

எனது வீட்டில் புசை மடம் இருக்கிறது.முருகன் சிலையும் இன்ன பிற சிலைகளும் கடவுள் படமும் உண்டு. என் மனைவி தினமும் சாமி கும்பிடுவாள். எனது பிள்ளைகளையும் கும்பிட சொல்வேன். எனக்கு நம்பிக்கை இல்லையென்பதற்காக மற்றவர்கள் நம்பிக்கையை கெடுப்பதில்லை. அதே சமயம் எனது கடவுளுக்கு எதிரான கருத்துக்களை சொல்லிகொண்டேயிருப்பேன்.

நவராத்திரி தீபாவளி வருகிறது . அந்த கடவுள்களை பற்றி எழுத வாய்புள்ளது

No comments:

Post a Comment