Saturday 14 September 2013

திரைபட விமர்சனங்கள்


இந்தி திரைப்படம் GRAND MASTI


இந்தி திரைப்படம் GRAND MASTI வெளிவந்துள்ளது. வயது வந்தோர்கான (ADULT) திரைப்படம்.
வயதுவந்தோர்கானஎன்ற தமிழ் வார்த்தையை அடிப்படையாக வைத்து பார்த்தால் என்ன பொருள் வருகிறது. அல்லது ADULT என்பதற்க்கு சட்ட ரீதியாக கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தின் அடிப்படையில் என்ன பொருள் வருகிறது.
ADULT என்பதற்க்கு 18 வயது பூர்த்தியானவர்கள் என்பது பொருள். இன்றைக்கு 17 வயது 364 நாட்கள் ஆன ஆணும் பெண்ணும் பார்க்க முடியாது. நாளைக்கு பார்க்கலாம். இந்த ஒரு நாள் இரவில் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் முதிர்ச்சி அடைந்து வசனங்களை கேட்கவும், காட்சிகளை பார்க்கவும்,தகுதி அடைந்து விடுகிறார்களா. அதை பார்த்து உடல் கிளர்ச்சி அடைந்தால் அதை கட்டுபடுத்தும் தகுதியும் அல்லது உடல் கிளர்ச்சியை தணித்து கொள்ளும் உரிமையும் பெற்று விடுகிறார்களா. இப்படி விவாதம் செய்தால் பின்பு எந்த வயது சரியென்று தீர்மானித்து அனுமதிப்பது என்று விவாதம் எழலாம்.
வயதுவந்தோர் என்பதற்க்கு நாட்கள் தான் குறியீடா. பின்பு ஏன் பெண்ணுக்கு  13-14 வயதில் உடல் ரீதியாக  ஏற்படும் மாற்றங்களை கொண்டு அவள் வயதுக்கு வந்துவிட்டாள் என கூற வேண்டும். அவள் தான் வயதுக்கு வந்துவிட்டாளே அதற்கு பின்பும் ஏன் கட்டுபாடுகள் விதிக்கப்படுகிறது. அவள் ஏன் வசனங்களை கேட்ககூடாது. காட்சிகளை பார்க்ககூடாது..இவைகளை பார்பதால் ஏற்படும் உடற்கிளர்சிகளையும் மனகிளர்சிகளையும் ஏன் கட்டுப்படுத்துகிறார்கள்.தமிழ் மொழி கூற்றுப்படி 13-14 வயதான பெண் வயதுக்குவந்துவிட்டாள் என்றால் ஏன் அவளை இதற்கு அனுமதிக்ககூடாது.
இது ஆணுக்கும் பொருந்தும்.13-14 வயதில் அவனும் வயதுக்கு வந்துவிடுகிறான். அதை வெளியே சொல்லி கொண்டாடுவதில்லை. மற்றபடி அவனுக்கும் அவளுக்கும் எல்லா விசயங்களும் தெரிய ஆரம்பித்து விடுகிறது. அப்படி சிலருக்கு தெரியமாலிருந்தாலும், தெரிந்து கொள்வதில் என்ன தவறு.
இந்த வயதில் தெரிந்து கொள்வதாலும் தவறுகள் நடக்கிறது. தெரிந்து கொள்ளாமல் இருப்பதாலும் தவறுகள் நடக்கிறது. எனவே இது ஒரு விவாத பொருள்.
எனவே, பெற்றோரும், கல்வி நிலையங்களிலும் இதற்கான பாடதிட்டத்தை வகுத்து சொல்லி தரவேண்டும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவு,சம்பிரதாய ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சட்ட ரீதியாகவும், இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை சொல்லி தரவேண்டும்.

மேலே குறிப்ப்பிட்ட திரைபடம் ADULT COMEDY  என்று விளம்பரபடுத்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் இல்லை ஒவ்வொரு சொல்லும் இரட்டை அர்த்தங்கள் கொண்டது. மேலும் நடிகர்கள் நடிகைகள் செய்யும் வசன உச்சரிப்பும். உடல் அசைவுகளும் நெளிய வைக்கிறது. வசனம் எழுதியவர் சரளமாக எழுதியிருக்கமாட்டார். மிகவும் சிரமப்பட்டு எழுதியிருப்பார். ஆண் உறுப்பையும் பெண் உருப்பையும் உருவகப்படுத்த சொற்களை தேடி அலைந்து எழுதியிருப்பார். இந்தி மொழி வசனங்களை தமிழில் மாற்றமுடியாது. அதே பொருள் தராது. இந்த படத்தை தமிழில் எடுக்க யாரும் முன் வர மாட்டார்கள் என நினைக்கிறேன்..

எல்லோருக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் பிடிக்கும்.நண்பர்களுக்குள் சொல்லி ரசிக்கப்படும். பெரியவர்களும் சந்தடி சாக்கில் சொல்லி ரசிக்கவும் செய்வார்கள். சங்கடபடுத்தவும் செய்வார்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இந்த படத்தில் வசனங்களும், காட்சிகளும் உடல் அசைவுகளும் அனைத்துமே அதிகம்.

அவசியம் பார்க்க வேண்டிய படம் அல்ல. பார்க்க வேண்டும் என நினைத்தால், திருட்டு VCD வாங்கி பார்க்கவும். இது தொலைகாட்சியில் ஒளிபரப்ப இயலாது என்பது எனது எண்ணம்.





No comments:

Post a Comment