Thursday 5 December 2013

சௌராஷ்ட்ரா சமூகம் - மொழி

சௌரசேனி, சௌராஷ்ட்ரா மொழி - அழியும் மொழி::


தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா மொழி இன மக்கள் பேசும் மொழிக்கு சௌராஷ்ட்ரா என்றும் சௌரசேனி என்றும் கூறப்படுகிறது.

மொழி என்பது அதனை பேசும் மக்களின் கருத்துகளையும், எண்ணங்களையும்  வெளிப்படுத்தும் ஆயுதமாகும்

ஒரு மொழி அழிந்தால், அதனைப் பின்பற்றும் அந்த இனமும் அழிந்து விடும் என, காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியை மு. குருவம்மாள் தெரிவித்துள்ளார்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அவர்கள் பேசும் மொழியை அழித்தாலே போதுமானது.

மொழி இறப்பு, பராமரிப்பு: கோட்பாடு, நடைமுறை மற்றும் விபரிப்பு அணுகுமுறைகள் என்ற நூல் அருகிய மொழியின் நிலைகளை பின்வருமாறு வரிசைப்படுத்துகிறது.
  • அருகிய மொழியாவதற்கான வாய்ப்பு (potentially endangered): சிறுவர்கள் வேற்று மொழியை தேர்ந்து கற்கிறார்கள், அருகிய மொழியை முறையாகக் கற்கவில்லை.
  • அருகிய மொழி (endangered): மொழியைப் பேசுபவர்கள் இளையவர்கள், குழந்தைகள் யாரும் ல்லது மிகச் சிலரே பேசுகிறார்கள்.
  • ஆபத்தான அருகிய நிலை (seriously endangered): மொழியைப் பேசுபவர்கள் இடைப்பட்ட வயது வந்தவர்கள், இளையவர்கள், குழந்தைகள் யாரும் பேசுவதில்லை.
  • இறக்கும் நிலை (terminally endangered): மொழியைப் பேசுபவர்கள் முதியோர்கள் மட்டுமே.
  • இறந்த மொழி (dead): மொழியை யாரும் பேசுவதில்லை
உலகில் அதிக மொழிகளை பேசும் நாடு என பெருமை கொண்ட  

இந்தியாவில் மட்டுமே சுமார் 1652 மொழிகள் பேச்சு வாக்கில் உள்ளதாக  
கூறப்படுகிறது. தொழில் நுட்ப மாற்றங்களாலும், குறிப்பிட்ட மொழி  

பேசும் இனத்தவர்களின் அழிவினாலும் உலகம் முழுவதும் சுமார் 3000  

க்கும் அதிகமான மொழிகள் அழிவு நிலையில் உள்ளதாம்

இந்தியாவில் 1950க்குப் பின்னர் 5 மொழிகள் அழிந்துவிட்டன. 42 மொழிகள் கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளன. 63 மொழிகள் நிச்சயம் அழிந்துவிடும் என்ற பட்டியலிலும், 82 மொழிகள் அழியும் அபாயம் உள்ளவை என்ற பட்டியலிலும் உள்ளன.


மொழிகளை பாதுகாப்பதன் மூலமே அந்தந்தப் பகுதியில் தோன்றி, வளர்ந்துள்ள பழக்க வழக்கங்களையும், அறிவியலையும் பாதுகாக்க முடியும்.

ஒரு மொழி பாதுகாக்கப்பட மூன்று விஷயங்கள் முக்கியமானவை
 1. அந்த மொழியை பயிற்றுவிப்பது,
 2. அந்த மொழியில்இலக்கியங்களை வெளியிடுவது,
 3. இதர மொழிகளை பேசுவோரிடையே குறிப்பிட்ட மொழி பற்றிய விழிப்புணர்வைஏற்படுத்துவது மிகவும் அவசியம்

செளராஷ்டிரா  மொழி அழிவுப் பட்டியலில் இருக்கிறது.
சௌராட்டிர மொழிக்கான உலகளாவிய மொழிக் குறியீட்டு எண் 639-3 ஆகும்.

சௌராஷ்டிர மொழிக்கான எழுத்துமுறை என்று இன்று நாம் காண்பது திரு.இராமராய் சீர்திருத்தி முழு வடிவம் தந்த எழுத்துக்கள்தான். இன்று இந்த எழுத்துக்களே சௌராஷ்டிர மொழிக்குரிய அதிகாரப்பூர்வமான எழுத்துக்கள் ஆகும்.

சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்னரே சௌராஷ்ட்ர த்தி சபையில் விவாதங்கள் நடைபெற்று நமது சௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்துருவாக தேவநகரி எழுத்தே உரியது.  நமது பாரம்பரியத்திற்கு உகந்ததும் நமது சௌராஷ்ட்ர மொழி உச்சரிப்பிற்கு உள்ள அனைத்து ஒலிகளும் தேவநகரி எழுத்தில் பிரதிபலிக்கப்படுவதால் அதனையே (அதாவது ஹிந்தி எழுத்தையே) நாமும் உபயோகபடுத்தலாம்  என தீர்மானம் இயற்றினர்

இதை தவிர இன்று சௌராஷ்ட்ரா மொழி பேசும் இன மக்கள் தமிழ், ஆங்கிலம் எழுத்துக்களை கொண்டும் சௌராஷ்ட்ரா மொழியை எழுதுகின்றனர்.

தமிழ் எழுத்துக்களை கொண்டு , சௌராஷ்ட்ரா மொழியை எழுதினால், அதை தமிழர்களும் படிப்பார்கள் ஆனால் ஒன்றும் புரியாது. தமிழ் மொழி அறியாத , பிற மாநிலத்தில் வாழும் சௌராஷ்ட்டிரர்களால் படிக்க இயலாது. சௌராஷ்ட்ரா மொழி பேச தெரிந்தவர்களின் பார்வைக்கு இவை வந்தாலும், இது தமிழ் மொழியில் ஏதொ எழுதப்பட்டுள்ளது என கவணம் செலுத்தாமல் சென்று விடுவார்கள். ஆகவே தமிழ் எழுத்துக்களை கொண்டு , சௌராஷ்ட்ரா மொழியை எழுதினால் யாருக்கும் பயனளிக்க போவதில்லை.

இதே நிலை தான், ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தினாலும், இந்தி எழுத்துக்களை பயன்படுத்தினாலும் ஏற்படும். வேறு எந்த மொழி எழுத்துக்களை பயன்படுத்தினாலும் இந்த நிலை தான் ஏற்படும்.  
 .
இப்படிபட்ட நிலையில் திரு.இராமராய் சீர்திருத்தி முழு வடிவம் தந்த எழுத்துக்களை பயன்படுத்துவது தான் சிறப்பாக இருக்கமுடியும் என தோன்றுகிறது.

இதற்கும் வாதி பிரதிவாதங்கள் ஏற்ப்படும். அப்படியெனில், சௌரஷ்ட்ரா மொழிக்கு எந்த எழுத்துக்களை பயன்படுத்துவது என்ற விவாதத்திற்க்கு தீர்வு ஏற்படாது.

இன்றைய குஜராத் மாநிலத்தில், சௌராஷ்ட்ரா தேசம் இருந்ததாக கூறப்படும் பகுதிகளில் அகழ்வாரய்ச்சி செய்து, ஏதேனும் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் ஏதேனும் வரிவடிவங்கள் இருந்து அவைதான் சௌராஷ்ட்ரா தேசத்தில் பயன்படுத்த மொழி (சௌரசேனி அல்லது வேறு ஏதாவது பெயர்) என்று அறிவிக்கப்பட்டால் தான் சௌராஷ்ட்டிரர்களின் மொழிக்கு வரிவடிவம் கொடுக்கமுடியும்.

அதற்கும் வழக்கம் போல வாதி பிரதிவாதங்கள் தொடங்கவும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், இந்தி மொழி எழுத்துக்களை உபயோகபடுத்தினாலும் அல்லது திரு.இராமராய் சீர்திருத்தி முழு வடிவம் தந்த எழுத்துக்களை உபயோகபடுத்தினாலும் இரண்டையும் இனிமேல் தான் படித்து உபயோகபடுத்தி மொழியை வளர்க்க முடியும்

இன்றைக்கு சௌராஷ்ட்ரா மொழி வளர்ச்சிக்கு பலரும் சிறந்த சேவை செய்து வருகின்றனர். அவரவர் வாதங்களை முன் வைத்து, மொழியை வளர்க்க பாடுபடவேண்டும்.

இறுதியாக, மக்களால் எந்த எழுத்து வரிவடிவம் ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதுவே நிலைத்து நிற்கும்.

எந்த தனிமனிதரின் கருத்தும் இறுதியானது என்று கூறமுடியாது. எந்த தனிமனிதராலும், ஒரு மொழியை உருவாக்க முடியாது. அது பொரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

சௌராஷ்ட்ரா மொழியில் பல்வேறு மொழிகள் கலந்துள்ளன. புதிய கண்டுபிடிப்புகளுக்கு கலை சொற்கள் சௌராஷ்ட்ரா மொழியில் உருவாக்க வேண்டும் அல்லது அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு நெடிய பயணம். இதற்கு நீண்ட காலமும், பொருளாதார வசதியும் தேவைப்படுகிறது. இது ஒரு நூற்றாண்டு காலமாக வெறுமனே பேசப்படுகிறது. இதற்க்காக 1898ஆம் ஆண்டே நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. அன்றிலிருந்து தொடர்ந்து முயற்சி செய்திருந்தால் இன்று அனைத்து சௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்களும் மொழியை எழுத, படிக்க பேசம் நிலையை அடைந்திருக்கலாம். வெறும் வாதி பிரதிவாதங்கள் செய்து யாரும் யாரையும் செய்ய விடாமல் தடுத்து மொழி வளர்ச்சியை கெடுத்துள்ளனர்.

சௌராஷ்ட்ரா மக்கள் தொகை குறைந்து வரும் காலகட்டத்தில், இதற்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டு அதை வேகமாக பரப்புவதன் மூலமே சௌராஷ்ட்ரா மொழியை காக்க முடியும். 

சௌராஷ்ட்ரா மொழி இன மக்களின் வரலாற்றை சௌராஷ்ட்ரா மொழியில் பதித்து அதை ஆவனபடுத்த வேண்டும்.

அருகி வரும் மொழிகளை பாதுகாக்கும் பொருட்டு பல தனியார் அமைபுகளும் அரசு துறை சார்ந்த அமைப்புகளும் முயற்சி செய்துவருகின்றன.

சௌரஷ்ட்ரா மொழி ஆராய்ச்சியாளர்கள் என்று எவரும் இல்லாத நிலையில் மொழி ஆர்வலர்கள், மொழியை செம்பைபடுத்தி அதை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும்.



2 comments:

  1. Even we have to take census our population along with this.

    ReplyDelete
  2. Sourashtra (SAZ) is a living language according to Unicode. It is not in the endangered language list. It has got lot of literature and many works like Bhagavath Geetha and ThirukkuraL etc. are already translated into Sourashtra language.
    Journals are published in Sourashtra language. People are using Sourashtra language in written form and books are printed. It is a Literary language.

    ReplyDelete