Thursday 5 December 2013

சௌராஷ்ட்ரா சமூகம் - கல்வியறிவு

சௌராஷ்ட்ரா சமூக கல்வியறிவு::


தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா மொழி இன மக்களில் கல்வி அறிவு பெற்றவர்கள் 100% என கூறலாம்.
கல்வியறிவு என்பது ஏதெனும் ஒரு மொழியை, குறிப்பாக அவர்கள் வாழும் பகுதியில் உள்ள மொழியை எழுத, படிக்க, பேச தெரிந்தால், போதுமானது.
அதன்படி பார்த்தால், தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்டிரர்கள் அனைவரும் தமிழ் மொழியில் படித்துள்ளனர். ஒரு சிலர் முழுவதுமாக ஆங்கில வழி கல்வி கற்றிருந்தாலும், அவர்களுக்கும் தமிழ் மொழி நன்றாகவே தெரியும். இதனால், அனைவருக்கும் தமிழில் எழுத, படிக்க, பேச தெரியும். பலருக்கு ஆங்கிலமும் எழுத படிக்க பேச தெரியும். இந்த விதத்தில் தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்டிரர்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள் என்பது நிருபனமாகிறது.
தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய சௌராஷ்ட்டிரர்களின் குழந்தைகள் அவர்கள் வாழும் பகுதியில் இருக்கும் மொழியிலும் ஆங்கிலத்திலும் படித்ததின் மூலம் எழுத படிக்க பேசும் வாய்பினை பெற்றுள்ளனர்.
அனைவருமே பள்ளி இறுதி வரை படித்துள்ளனர். இன்றைய நிலையில் குறைந்த்து 50% மக்கள் கல்லூரி படிப்பை படித்துள்ளனர். மீதி இருப்போர் கல்லூரி கல்வி கற்க முடியாமல் போனதற்kகு காரணம்பொருளாதார நிலைமை : கல்வி கற்கும் ஆர்வம் இல்லாமையே காரணம். இதை தவிர கல்வி கற்க வாய்ப்பு இல்லை என்ற காரணம் சரியாக இருக்கமுடியாது.

ஆனால், சௌராஷ்ட்டிரர்கள் கல்வி கற்க இயலவில்லை என்று கூறுவதற்க்கு காரணம் அவர்கள் விரும்பும் மருத்தும், பொறியியல் அல்லது அவர்கள் விரும்பிய வேறு ஏதெனும் சிறப்பு கல்வி கற்க முடியாமல் போனதை முன்னிட்டு கல்வி கற்க இயலவில்லை என கூறுகின்றனர்.
அனைவருக்கும் அவர்கள் விரும்பிய கல்வி கற்க வாய்ப்பு கிடைப்பதில்லை. விரும்பிய கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், கிடைத்த கல்வியை கற்று வாழ்வில் பலரும் சிறந்து விளங்குகின்றனர். பள்ளி கல்வியை மட்டுமே முடித்தவர் கூட பல தொழில்கள் செய்து மிக நல்ல நிலையை அடைந்துள்ளனர்.
கல்வி கற்றவர்கள் நல்ல வேலை கிடைத்தும் தொழில் செய்தும் வாழ்கையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று உறுதியாக கூறமுடியாது.
கல்வி கற்பதே அறிவு திறனை மேம்படுதி கொள்வதற்க்காக மட்டுமே. வாழ்க்கையில் உயர கல்வி கற்றதின் மூலம் பெற்ற அறிவு திறனை எப்படி பயன்படுத்தி முன்னேறுகிறோம் என்பது தனிமனிதனின் செயல்பாட்டை பொருத்தது.

1887ஆம் ஆண்டு நடந்த முதல் சௌராஷ்ட்ரா. மாநாட்டில் கூட சமூகத்தின் கல்வி வளர்ச்சி குறித்து பேசப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், சௌரசேனி மற்றும் ஆங்கில மொழிகள்  கற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆங்கில மொழி கல்வி ஒன்றே தொடர்பு மொழியாக இருந்து தொழில் வியாபரம் போன்றவற்றை வளர்ச்சியடைய செய்யும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏட்டு கல்வியுடன் தொழில் கல்வியும் கற்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்பதனால் ஏற்படும் நன்மைகளை கூறி , பெண் கல்வி அவசியம் என வலியுருத்தப்பட்டுள்ளது.
ஏழை பிள்ளைகளுக்கும், அநாதை பிள்ளைகளுக்கும் இலவச கல்வி கற்பிக்க வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது. கல்வி கற்க உதவிதொகை கொடுக்க வேண்டும் எனவும், சிறப்பாக கல்வி கற்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல ஊர்களிலும் பல்வேறு கல்விகூடங்களை நிறுவ  நிதி திரட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு முயற்ச்சி எடுத்த்தன் மூலம் இன்று சௌராஷ்ட்ரா மக்கள் அனைவரும் பள்ளி கல்வியை முடித்துள்ளனர்.
இன்றைக்கும் சௌராஷ்ட்ரா மக்கள் தங்களுக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதுவரை சௌராஷ்ட்டிரர்களால் ஒரு மருத்துவ கல்லூரி ஏற்படுத்த முடியாதது ஒரு மாபெரும் குறையாக உள்ளது. அப்படி ஒரு மருத்துவ கல்வி நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டுமென பலரும் பேசி,  முயற்ச்சி எடுத்து வருகின்றனர். கூடிய விரைவில் அதுவும் கைகூடும்.
இந்த சிறந்த நிலையை அடைவதற்க்கு காரணம், சௌராஷ்ட்ரா பொதுமக்கள் செய்து வரும் உதவிகள் தான் காரணம்.
செல்வந்தர்களும், தனிநபர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ள சங்கங்களும் செய்யும் உதவிகள் தான். குறிப்பாக கல்வி கற்கும் குழந்தைகளுக்கு இலவச பாடபுத்தகங்கள் வழங்குவது, சீருடை வாழங்குவது, சிறப்பாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஊக்க தொகை , உதவி தொகை வழங்குவது மற்றும் சிறப்பாக கல்வி கற்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச கல்விக்கு வழி செய்வதும் இதில் அடங்கும்.
இதை தவிர அரசு வழங்கும் அனைத்து உதவிகளை பெற்றும், வங்கி கடன் பெற்றும் சௌராஸ்ட்ரா சமூகம் கல்வி கற்பதில் முன்னேறியுள்ளது.
இவை அனைத்திற்க்கும் பிறகும் கல்வி கற்க பொருளாதார வசதியில்லை என்பதும் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லையென்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாத வாதம். தனிமனித குடும்பங்களில் உள்ள தவறான அணுகுமுறையும், சரியாக திட்டமிடாதலும், கல்வி கற்பதில் நாட்டமின்மையும் தான் காரணம்.
கல்வி கற்பதற்க்கு கிடைக்கும் உதவிகளையும் தவறாக பயன்படுத்துகின்றனர். தனது குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வசதியிருந்தும், ஏழைகளுக்கு உதவி செய்பவர்களிடம் போய் பொய் சொல்லி உதவி பெறுவதன் மூலம், நியாயமாக உதவி தேவைபடுபவர்களுக்கு அது கிடைக்காமல் போய்விடுகிறது.
கல்விக்கு உதவி செய்பவர்களும் தகுதி அறிந்து உதவி செய்ய வேண்டும். ஏதுவுமே இலவசமாக கிடைத்தால் அதன் மதிப்பு மக்களுக்கு தெரிவதில்லை. தவறாக பயன்படுத்துகின்றனர். இலவசமாக கொடுப்பதை விட கடனாக கொடுப்பதே நலம். கல்வி கற்றபின், சம்பாதிக்கும் போது அதை திருப்பி கொடுத்தால் தான், அந்த தொகை மீண்டும் ஒருவர் கல்வி கற்க பயன்படும். இலவசமாக கொடுத்தால் எத்தனை பேருக்கு கொடுக்கமுடியும். “அட்சய பாத்திரமா இருக்கிறது அள்ள அள்ள குறையாமல் வந்து கொண்டே இருப்பதற்க்குஎனவே , கடனாக கொடுப்பதன் மூலம் தொடர்ந்து பலருக்கும் உதவிகளை செய்துகொண்டேயிருக்க முடியும்.
மேலும், உதவி பெற்று கல்வி கற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் வந்தவுடன், அவர்களும் மற்ற ஏழைகள் கல்வி கற்க உதவி செய்ய வேண்டும்.
ஒரு சுழற்சியின் அடிப்படையில் செய்துகொண்டிருந்தால் தான், சமூகம் வேகமாக முன்னேற முடியும்.
தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்டிரா மொழி இன சமுகம் முழுமையான கல்வியறிவு பெற்ற சமூகம் என்பது மிகவும் பெருமைபடகூடிய விசயமாகும்

No comments:

Post a Comment