Thursday 15 January 2015

" ஐ " திரைப்பட விமர்சனம்

" ஐ " திரைப்பட விமர்சனம்

இயக்குனர் சங்கர் தனது திரைப்படங்கள் வெளியாவதற்க்கு முன்பே ஒரு பரபரப்பை உருவாக்குவதில் வல்லவர். அந்த எதிர்பார்ப்புடன் படம் பார்க்க செல்லும் ரசிகர்களை படம் திருப்திபடுத்தாத பட்சத்தில், பல விமர்சனங்களை அவர் எதிர் கொள்ள நேரிடுகிறது. அந்த வகையில் இந்ததிரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு நிகரானது என்று விளம்பரப்படுத்தி வெளியிட்டுள்ளார். இசை வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் அவர்களை வரவழைத்து நடத்தி காட்டினார். படங்களில் பாடல் காட்சிகள் என்பதை கற்பனை செய்து கூட பார்க்காத ஹாலிவுட் நடிகரை வரவழைத்து நிகழ்த்தி காட்டியது, அவர் தரும் மோசமான படங்களுக்கு பழி வாங்கும் செயலாக தான் எனக்கு தோன்றியது.

படக்கதை

தமிழ்நாட்டு ஆன் அழகன் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் விக்கிரமுக்கு , புகழ் பெற்ற மாடல் அழகி எமி  ஜாக்சன் மூலாமாக மாடல் உலகில் பிரபலமடைய வாய்ப்பு கிடைக்கிறது.. இவரது வருகையால் ஏற்கனவே பிரபலமாக இருந்த மாடல் உபேன் பட்டேல் பாதிக்கப்பட்கிறார். விக்கிரமுக்கு நடிப்பில் முன்னேற்றம் ஏற்ப்பட வேண்டுமென்பதற்க்காக காதலிப்பதாக கூற, பின்பு அது பொய் என்று அறிகிறார். பின்பு மீண்டும் உண்மையாக காதலிப்பதாக கூறுகிறார். விளம்பர படம் தயாரிப்பவருக்கும் விக்கிரமால் பிரச்சனை ஏற்படுகிறது. விக்கிரமால் பாதிக்கப்படும் ஒப்பானை கலைஞர் திருநங்கை, ஏற்கனவே சென்னை ஆனழகன் போட்டியில் இவரிடம் தோற்றவர் அனைவரும் சேர்ந்து . எமிலியின் குடும்ப நண்பர் மருத்துவரின் உதவியுடன் விக்கிரமின் அழகை கெடுத்து விடுகின்றனர். அதற்கு பழி வாங்குகிறார். இழந்த தனது உருவத்தை எமிலியின் உதவியுடன் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன் படம் முடிவடைகிறது.

விக்ரம் இந்த படத்திற்க்காக தனது உடலை மிகவும் வருத்தியுள்ளார் என்பது தெரிகிறது. ஆன் அழகன் என்று பேச்சுக்கு சொல்லாமல் நல்ல உடல் அமைப்பை உருவாக்கி கொண்டிருக்கிறார். விரிந்த தோள்களும் பரந்த மார்பும் ஒட்டிய வயிரும் பருத்த தொடைகளும் உருவாக்க முடிந்தது. ஆனால் முகத்தில் இளமையை உருவாக்க முடியவில்லை. முதிர்ந்த முகம்  அப்பட்டமாக காட்டிக்கொடுக்கிறது. ஒப்பனை செய்திருந்தாலும் இளமையை கொண்டு வர முடியவில்லை.

கண்ணத்தில் மரு ஒட்டி கொண்டு திருடன் என்று கான்பிப்பதும், லுங்கி கட்டி தொப்பி அனிந்தால் இஸ்லாமியர் என்றும் வெள்ளை அங்கி அணிந்து சிலுவை மாட்டிக்கொண்டால் கிருஸ்துவர் என்று காட்டி பல வேடங்களில் நடித்ததாக சொல்லி ஏமாற்றிய காலம் போய், உண்மையிலேயே ஒப்பனை கலைஞர்களின் உதவியுடன் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் தன்னை தயார் படுத்தி கொள்ளும் கலைஞர்கள் வாழும் காலமிது.

அந்த வகையில் தன் உடல் அமைப்பை மாற்றிக்கொண்டு, அருவெறுப்பான தோற்றத்தை ஏற்றுக்கொண்டு நடிக்க உழைத்திருக்கும் விக்கிரமை பாரட்ட தான் வேண்டும்.

வட சென்னை மொழி பேசும் விக்கிரமின் உடல் மொழி அதற்கு ஏற்றார் போல் இல்லை. விறைப்பான உடல் தோற்றத்துடன் அனைத்து காட்சிகளிலும் வருகிறார். காதல் காட்சிகளில் கூட அவரது அங்க அசைவுகள் அப்படி தான் இருக்கிறது. முகம் விகாரமாக மாறிய பிறகு முக பாவங்கள் மூலம் நடிப்பை காட்ட முடியாத நிலையில் உடல் மொழியில் தான் காட்ட வேண்டியுள்ளது. கூன் விழுந்த முதுகுடன் முடிந்த அளவு முயற்சி செய்துள்ளார். 

வட சென்னை மொழி சரியாக அமையவில்லை. மிகவும் செயற்கையாக இருக்கிறது. பிற்பகுதியில் சாதாரண மொழியாக மாறுகிறது.

நடிகை எமி ஜாக்சன் சில காட்சிகளில் கவர்ச்சியாக வருகிறார். நடிப்பு என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் உள்ள நடிகை. குறிப்பிடும் படி ஒன்றும் இல்லை.

சந்தானம், பவர் ஸ்டார் தண்டம். சந்தானம் தானாக நடிப்பதை நிறுத்திவிட்டால் கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சும். நடிகர் ராம் குமார் நடிப்பு பரவாயில்லை. அவர் விஜய் மல்லையாவை நினைவுப்படுத்துகிறார். நடிகர் உபேன் பட்டேல் அழகான உடலமைப்பு கொண்ட நடிகர். இவருக்கு நடிப்பு வராதே தவிர அவர் வரும் காட்சிகளில் கவர்ச்சியாக இருப்பார். கொடுத்த வேலையை ஒழுங்காக செய்ய முயற்சி செய்துள்ளார்.

முதல் சண்டை காட்சி உடற்பயிற்சி கூடத்தில் நடைப்பெறுகிறது. அனைவரும் உடற்ப்பயிற்சி செய்வதால் ஜட்டி மட்டும் போட்டுள்ளனர். அங்கு சண்டை நடைப்பெறுகிறது. பலமான இரும்பு தடிகளுடன் சண்டை போடுகின்றனர். இரும்பு பொருட்களில் முட்டி கீழே விழுகின்றனர். ஆனால் ஒருவருக்கும் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தவில்லை. வட சென்னை உடற் பயிற்சி கூடத்தில் அருவாள் இல்லை. தமிழ் படத்தில் அருவாள் இல்லாத சண்டை காட்சி ரசிகர்களை கவருமா ? 

உபேன் பட்டேலும் விக்கிரமும் மோதும் சண்டை காட்சி நல்ல நகைச்சுவை காட்சி என்று கூறலாம். இரண்டு கட்டுடல் கொண்ட நடிகர்கள் மிகவும் விறுவிறுப்பான சண்டை காட்சியை நிகழ்த்தியிருக்கலாம்.

சீனாவில் நடக்கும் சண்டை காட்சியில் கூரை வீட்டின் மீது சைக்கிளில் பறந்து பறந்து சண்டையிடுகின்றனர். நமது கிராம புறங்களில் இருக்கும் நாட்டு ஓடு வேய்ந்த ஓட்டு வீடு போல கானப்படுகிறது. அவ்வளவு ஆக்ரோசமான சண்டை காட்சியிலும் ஒரு ஓடு கூட உடையவில்லை. யாருக்கும் ரத்த காயம் ஏற்ப்படவில்லை.

ஓளிப்பதிவு P.C.Shreeram . அழகான படப்பிடிப்பு. வட சென்னை பகுதியாக இருந்தாலும் சரி, சீனாவின் தெருக்கள் பூந்தோட்டம், செயற்கை அரங்கம் எதுவாக இருந்தாலும் சரி அனைத்தையும் ஓவியமாக பதிவு செய்துள்ளார். கவிதை பேசும் காட்சிகள். பாரட்டுதலுக்கு  உரியவை. இந்த படத்திற்க்கு ஓவியமும் கவிதையும் பொருத்தமற்றது. மிரள வைக்கும் கோணங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த அழகான ஓவியங்கள் இந்த படத்தில் கூவம் நதியோரம் வைக்கப்பட்ட ஓவிய கண்காட்சி போல அமைந்துள்ளது. திருவையாரு விழாவில் அழகிய கவிதையை கும்பலாக பாடியது போல உள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசை என்பதால் பாரட்டியே தீர வேண்டும் என்று துப்பாக்கி முனையில் மிரட்டினால் பாராட்டியே தீர வேண்டும்.  மற்றப்படி இசை என்பது பாடல் காட்சிகளில் ரசிக்கும் படி இல்லை. ஒரு பாடலில் தலையில் சுத்தியால் அடிப்பது போல இருந்தது. கிராமப்புற பாடல் காட்சி ஏன் அமைக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஒரு வேளை எனக்கு இசையை ரசிக்க தெரியவில்லை என்று கூறலாம். பின்னனி இசை பராவாயில்லை. ஒரு பிரமாண்டாமான பாடல் காட்சியில் பலூன்களும் பிளாஸ்டிக் தண்ணிர் குடங்களும் காட்சி படுத்தி தனது பிரமாண்ட பெருமையை கெடுத்துக்கொண்டுள்ளார்.

படத்தொகுப்பு சில இடங்களில் குழப்பம் ஏற்ப்படுத்துகிறது. சற்று தெளிவாக இருந்திருக்கலாம்.

விக்கிரமின் உடல் தோற்றம் மாறும் விதத்தை படிப்படியாக காட்டும் போது ஒப்பனை கலைஞர்களின் கை திறமை பளிச்சிடுகிறது. அதே போல பழி வாங்கிய பிறகு அனைவரது உடலும் வித்தியாசமான உடல் அமைப்பை பெறுகிறது. இதில் ஒப்பனை கலைஞர்கள் சிரத்தையுடன் உழைத்துள்ளனர் அவர்கள் பாரட்டுக்குரியவர்கள்..

இயக்குனர் எவ்வித திருப்பங்களும் இல்லாமல் கதையை சீராக சொல்லியிருக்கிறார். அடுத்தது என்ன என்ற எதிர்ப்பார்பை எந்த இடத்திலும் உருவாக்கவில்லை. உருவ மாற்றம் நிகழும் விசயத்தையும் மிகச் சர்வசாதாரணமாக சொல்லி விட்டார். அதே போல் அதை சரி செய்யும் விசயத்தையும் மிகவும் இலகுவாக காட்சிப்படுத்தி விட்டார்.

ஒரு பாடல் காட்சியில் எல்லா வீடுகளுக்கும் நீல நிறமடித்து படமாக்கப்பட்டுள்ளது. வட சென்னை இளைஞர், நீல நிற பாடல் காட்சிகளின் மூலம் தலித்தியம் காட்டப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

திருநங்கையின் காதல் என்ற காம இச்சையை காட்டியதுடன் அவரை வில்லியாக காட்டியதன் மூலம் மூன்றாம் பாலினத்தாரை கேவலப்படுத்தியதாக யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை. 

எல்லா விசயங்களும் நன்றாக இருந்தும் அனைத்தையும் இனைத்து ஒரு பிரமாண்டத்தை படைக்க தவறி விட்டார்.

அனைவரது உழைப்பையும் அங்கீகரிக்கும் விதமாக இந்த படத்தை பார்க்கலாம்
 Image result for ஐ படம்


No comments:

Post a Comment