Saturday 3 January 2015

கயல் - திரைப்பட வமர்சனம்



கயல் - திரைப்பட வமர்சனம்



கயல் திரைப்படம் சாதாரண காதல் கதை என்று தெரிந்திருந்தால் பார்த்திருக்க மாட்டேன். விமர்சனம் எதுவும் படிக்காத காரனத்தால் பார்த்தேன். நீங்கள் அவசரப்பட்டு பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் இந்த விமர்சனத்தை பார்க்கும் போது திரையரங்குகளிலிருந்து வெளியேறியிருக்கலாம். தமிழ் புத்தாண்டு அன்று (ஏப்ரல் மாதம் ? ) ஏதாவது தொலைக்காட்சியில் வந்து விடும்.

படம் பார்த்த பிறகு இது குறித்து என்ன மாதிரியான விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கிறது என பார்த்தேன்.

வழக்கம் போல இயக்குனர் தனது மதம் சார்ந்து அதற்கு வலுவூட்டும் படி இயக்கியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் கதாநாயகன் அல்லது கதாநாயகி குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களாக குறிப்பிடப்பட்டிருந்தால் அது மதம் சார்ந்த மத வாதிகளால் எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டு தங்களது மத நம்பிக்கையை அல்லது மத வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர்.

கிருஸ்துவ மத பெயர்களோ அல்லது இஸ்லாமிய மத பெயர்களோ  படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது அந்த மதத்தை தூக்கி பிடிக்க எடுக்க பட்ட படம் என்றும் இந்த மத பெயர்கள் இல்லையென்றால் அது இந்து மத படமாக பார்க்கும் கண்ணோட்டம் என்று நிறுத்தப்படும் என்று தெரியவில்லை.

இந்து மத பெயர்கள் இருந்தால் அதில் ஜாதிய பிரச்சனையை குறிப்பிட்டு எழுதுகிறார்கள். பிராமணர்கள் ஆதிக்க சாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ( தாழ்த்தப்பட்டோர் மட்டுமே தமிழர்கள் என்று குறிப்பிடும் அளவுக்கு இப்போது சாதி வெறி முற்றியுள்ளது ) என்ற பாகுபாட்டை கான்பித்து அது வரவேற்க்கதக்கது என்றும் வெறுக்க தக்கது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இயக்குனர்கள் உண்மையில் அந்த வகையில் தான் சிந்தித்து படம் எடுக்கிறார்களா அல்லது பார்ப்பவர் மனதில் குறிப்பாக விமர்சகர்கள் மனதில் அப்படி தோன்றுகிறதா என தெரியவில்லை.

இப்படி கதாபாத்திரங்களின் பெயர்கள் அல்லது அவர்கள் அணிந்திருக்கும் குறியீடுகள் மூலம் அவர்களது மதமும் சாதியும் அடையாளப்படுத்தப்படும் என்றால் , கதாபாத்திரங்களுக்கு 1,2,3 ………. இப்படி எண்களை தான் அடையாளப்படுத்த வேண்டும். இதிலும் 1 என்பது பிராமணர் என்றும் 2 என்பது ஆதிக்க சாதியினர் என்றும் 3 என்பது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் என்றும் அடையாளப்படுத்துவார்கள்.

இதற்கு மேல் இயக்குனர் மற்றும் படத்தயாரிப்பாளர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவர் எந்த இன மொழியாளர் என்று அடையாளப்படுத்தி விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

மதம் சாதி இவைகளை படம் பார்க்கும் போது அடையாளப்படுத்தி கொள்ளாமல் என்று திரைப்படத்தை பார்க்க கற்றுக்கொள்கிறார்களோ அன்று தான் திரைப்படத்தை உண்மையாக ரசிக்க முடியும்.

பொதுவான ரசிப்பு தன்மையுடைய ரசிகர்களை பார்த்து உங்களுக்கு படத்தை பார்க்க தெரியவில்லையென்றும் ரசிக்க தெரியவில்லையென்றும் உலக திரைப்பட தரத்துக்கு இல்லையென்றும் வேறு சிலர் நச்சரிக்க தொடங்குகின்றனர்.

புது கதாநாயகன் நாயகி அறிமுகம் ஆகும் போது பொதுவாக முதல் படத்தில் சிறப்பாக செய்கின்றனர். அந்த விதத்தில் இந்த படத்தில் அறிமுகமாகியுள்ள சந்திரன் வின்சென்ட் மற்றும் ஆனந்தி சிறப்பாக செய்துள்ளனர்.

ஓளிப்பதிவு மிகச் சிறப்பாக இருந்தது. என்னை போன்று நகரத்திலேயே பிறந்து வளர்ந்து இயற்கையையும் பசுமையும் பார்க்காதவர்களுக்கு இது போன்று காட்சியமைப்புகள் பிடித்து போவது இயற்கையானது. இயற்கை அழகை கானும் போது கண்கள் கூசுவதில்லை. செயற்கையாக பல வண்ண அரங்கங்கள் அமைத்து பாடல் காட்சிகளை அமைத்து மனிதனின் ரசிப்பு தன்மையை கெடுப்பதை விட இது போன்ற இயற்கை காட்சிகளை கான்பது சுகமாக இருக்கிறது.

இமான் அவர்களின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. குத்து பாடல்கள் இல்லை. இறுதியில் கிருஸ்மஸ் தினத்தன்று சார்ச் வாசலில் பாடப்படும் பாடல் மிகவும் அபத்தம்.

காதலன் காதலியை சந்திக்கும் காட்சிகளை பல விதங்களில் காட்டப்பட்டு விட்டது. இதில் கதாநாயகனும் அவனது நண்பனும் தவறாக அடையாளம் கானப்பட்டு அழைத்து வரப்பட்டு அடி வாங்கும் நிலையில் அந்த ஜமின் மாளிகை வீட்டு வேலைக்கார பெண்ணை பார்த்து காதல் ஏற்ப்படுகிறது. அதை வெளிப்படையாகவும் சொல்லி விடுகிறான்.

ஒரே காட்சியில் கண்டதும் காதல் என்பது போல காதல் வருகிறது. அந்த பெண்ணுக்கும் காதல் வருகிறது. பல வருடங்களாக அந்த பெண்ணை காப்பாற்றி வரும் பாட்டி அதை ஏற்று அவனை தேடி போகும் படி சொல்லும் அபத்தமும் நடைப்பெறுகிறது. வந்தவன் யார் எந்த ஊர் என்று எதுவும் தெரியாமல், அவன் கன்னியாகுமாரி செல்வதாக கூறியதை நம்பி அவனை தேடி தன்னந்தனியாக செல்வது அபத்தம் என்று சொல்ல தோன்றுகிறது. ஆனால் இன்று இனையத்தில் பழகியவர்களை நம்பி வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள் இருப்பதால் இந்த மாதிரி காட்சிகளை சகித்துக்கொண்டு பார்க்கதான் வேண்டும். அவர்கள் இனைந்தார்களா இல்லையா என்பது தான் கதை. இனைந்து விடுகிறார்கள் என்பது தான் முடிவு.

2004ல் ஏற்ப்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு எழுத்து மறு வாழ்வு அமைத்து கொண்டார்களா என்பது இது வரை விவாதத்துக்குரியது. ஆனால் அந்த சுனாமியை அடைப்படையாக வைத்து அதன் பின்னனியில் கதை காட்சிகள் அமைத்து பல திரைப்படங்கள் வந்து விட்டது. இந்த சுனாமி இவர்களுக்கு வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளது.
 

No comments:

Post a Comment