Friday 27 February 2015

அப்தக் சப்பன் 2 - இந்தி திரைப்படம்



அப்தக் சப்பன் 2 – 
(இதுவரை 56 பேரை சுட்டு வீழ்த்தியுள்ளேன் என்பது பொருள்) – இந்தி திரைப்படம்

அப்தக் சப்பன் பகுதி 2 படக்கதை 

காவல் துறை அதிகாரி – நானா பாட்டேக்கர் வில்லன்களை சுட்டு வீழ்த்துவதில் கெட்டிக்கார். முதல் படத்தில் இதே வேடத்தில் நடித்தவர். அந்த படத்தில் அவரது மனைவி கொல்லப்படுவதுடன் படம் முடிகிறது.
இந்த படத்தில் அவர் கோவா கிராமத்தில் மகனுடன் அமைதியாக வாழ்வதாக கதை ஆரம்பிக்கிறது. 

மீண்டும் மும்பையில் ரவுடிகளின் நடமாட்டத்தை ஒடுக்க உள்துறை அமைச்சர் அழைப்பு விடுக்கிறார். முதலமைச்சரும் ஒப்புக்கொள்கிறார். மகனுடன் மும்பை வருகிறார். ரவுடிகளை வேட்டையாடுகிறார். அவரது பழைய நண்பரின் மகள் (குல் பங்க் ) பத்திரிக்கையாளராக வருகிறார். அவரது அப்பா தனது காவல்துறை வாழ்க்கையை புத்தகமாக எழுதும் போது இறந்து விடுகிறார். அதை முடிக்க இவரது உதவியை நாடுகிறார்.
ஒரு நாள் கடற்க்கரையில் பேசிக்கொண்டிருக்கும் போது இவரை பழிவாங்க வருபவர்கள் இவரது மகனை சுட்டு வீழ்த்துகின்றனர்.

இதற்க்கிடையில் முதலமைச்சர் கொல்லப்படுகிறார். இதன் குறித்த விவரங்களை சேகரிக்கும் பத்திரிக்கையாளர் சுடப்படுகிறார்.

உள்துறை அமைச்சர் முதலமைச்சராக பதவியேற்க்கவே  முதலமைச்சரை கொன்ற செய்தி கிடைக்கிறது. உள்துறை அமைச்சரும் ஒப்புக்கொள்கிறார். அரசியலில் இது சகஜம் என்றும் தன்னுடன் இருக்கும் படி கூறுகிறார். விலகி சென்றாலும் பரவாயில்லை என கூறுகிறார்.

உள்துறை அமைச்சர் பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் போலிஸ் அதிகாரி மறைந்த முதலமைச்சரை பற்றி தானும் சில வார்த்தைகள் பேச வேண்டும் என கூறி பேசுகிறார்.

இது வரை 55 பேரை சுட்டுக் கொன்றுள்ளேன். அவை மறைவாக செய்தவை. இப்போது உங்கள் முன் ஒருவரை சுட்டுக்கொள்கிறேன் ஒன்று பேனா போல் இருக்கும் ஒரு கருவி மூலம் உள்துறை அமைச்சர் கழுத்தில் குத்துகிறார்.

கைது செய்யப்பட்டு வாக்கு மூலம் கொடுக்கும் போது, இது வரை என்னவெல்லாம் நடந்தது என வாக்கு மூலம் கொடுக்கிறார்.

எந்த வித பெரிய திருப்பங்களும் இல்லாமல் கதை சொல்லப்படுகிறது. நடிப்புக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. துரத்துவது சுடுவது இவை தான் கதை. கதாநாயகி என்று ஒருவர் இதில் தேவையில்லை என்பதால் ஒரு பெண் பத்திரிக்கையாளர் என்று ஒருவர் சில காட்சிகளில் வருகிறார்.
முதல் காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை ஒலி ஒரே விதமாக இருக்கிறது. மிகவும் உச்ச கட்ட ஒலியாக இருக்கிறது. துப்பாக்கியால் சுடும் காட்சியில் நமது மண்டையில் சுடுவது போல இருக்கிறது. தலைவலி வருகிறது.

இந்த படத்தில் ஒளிப்பதிவு என்று ஒன்றும் இல்லை. பழைய சந்து பொந்துகளில் ஓடுவது மற்றும் ஒரு  வீடு. . இதில் பாடல்கள் இல்லை. ஒளிப்பதிவாளருக்கு எந்த வேலையும் இல்லை. 

நான் மாலை 4 மணி காட்சி பார்த்த போது 20 பேர் படம் பார்த்தோம்.
படம் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை.
 

1 comment:

  1. இது போன்ற படத்தை மெனக்கெட்டு பார்த்து விமர்சனம் வழங்கி
    நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நவின்றதற்கு நன்றி.

    உபமன்யு.

    ReplyDelete