Friday 6 February 2015

SHAMITABH – சமிதாப் – இந்தி திரைப்பட விமர்சனம்



SHAMITABH – சமிதாப் – இந்தி திரைப்பட விமர்சனம்

தனுஷ் கிராமத்து ஊமை சிறுவன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன். வளர்ந்த பிறகு அம்மா இறந்த பிறகு மும்பை வந்து நடிக்க முயற்சி செய்கிறான். உதவி இயக்குனர் அக்சரா ஹாசன் (Akshara Hassan ) அவனது நடிப்பு திறமையை அறிந்து, மருத்துவரின் உதவியுடன் வெளிநாடு சென்று , தொன்டையில் சிறு கருவியை பொருத்துவதன் மூலம் பேச ஏற்ப்பாடு செய்கிறார்.

தொன்டையில் சிறு கருவி பொருத்தப்படுகிரது. காதில் புளூ டூத் போல் ஒரு கருவி பொருத்தப்படுகிறது. இவருக்கு பதிலாக சற்று தொலைவில் இருந்து கொண்டு வேறு ஒருவர் பேச அது தொன்டை கருவியில் பதிவாகும். அதே சமயம் இவர் காதிலும் கேட்கும்  இவர் வாய் அசைத்தால் அந்த சத்தம் வெளியே கேட்கும். வாயை திறக்காமல் இருந்தால் சத்தம் கேட்காது. அழிந்து விடும். எதை இவர் பேசுவதாக வெளியில் கேட்க வேண்டுமோ அதற்கு ஏற்றார் போல் இவர் வாயசைக்க வேண்டும். இதை நமக்கு விளக்க 10 நிமிடம் காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு குரல் கொடுக்க சுடு காட்டில் வசிக்கும் குடிகாரன் (அமிதாப் பச்சன்) தேர்வு செய்யப்படுகிறார். அவர் தனுஷ்ன் வேலைக்காரனாக அவர் அருகிலேயே சற்று தொலைவில் இருந்து கொண்டு வசனங்களை பேச இவர் நடித்து முதல் படத்திலேயே புகழ் பெருகிறார். Dhanush – Amitabh என்ற இரண்டையும் இனைத்து தனுஷ்ன் பெயர் சமிதாப்பாக Shamitabh கா மாறுகிறது.

அவரது தினசரி வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் அமிதாப் மூலமாகவே தனுஷ் பேசுகிறார்.

உண்மையான உடல் உறவில் ஈடுப்பட்டிருக்கும் போதும், முக்கல் முனகல் சப்தங்களை அமிதாப் பக்கத்து அறையில் இருந்து கொண்டு  செய்கிறார்.

அடுத்த படத்தின் கதை தேர்வுகளில் , அமிதாப்புக்கு பல கதைகள் பிடிக்கவில்லையென நிராகரிக்கப்படுகிறது. அதையும் மீறி தனுஷ் ஒரு கதையை தேர்வு செய்கிறார். அமிதாபுக்கு பிடிக்கவில்லை. பிரச்சனை ஆரம்பமாகிறது. குரல் இல்லாமல் உடல் (நடிப்பு) இல்லை என்றும், உடல் இல்லை என்றால் குரலுக்கு மதிப்பில்லை என்றும் வாக்கு வாதம் ஏற்ப்பட்டு ஈகோ பிரச்சனை ஆரம்பமாகிறது.

தனுஷ் அடுத்த படத்தில் ஊமையாக நடிக்கிறார். அதே சமயம் அமிதாப் குரல் கொடுக்க வேறு ஒரு தயாரிப்பாளரின் திக்குவாய் மகன் நடிக்க வேறு ஒரு படம் வெளியாகிறது . இரண்டு படங்களும் தோல்வியடைகின்றன.

இந்த நிலையில் ஒரு பத்திரிக்கையாளர் இந்த விசயத்தை கண்டுப்பிடிக்கிறார். அதை sms  மூலம் இவர்களுக்கு தெரிவிக்கிறார்.

அக்சரா இருவருக்கும் ஒருவர் மற்றோருவருக்கு துணை என்று புரிய வைத்து சேர்த்து வைக்கிறார்.

உண்மையை அனைவருக்கும் தெரிவித்து விடுவது என்றும் அதனால் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்ப்படாது என்றும் புகழும் பணமும் கிடைக்கும் என்றும் முடிவெடுத்து, அதற்க்கான கூட்டம் கூட்டப்படுகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருவரும் வரும் போது, விபத்து ஏற்ப்பட்டு தனுஷ் இறக்க அமிதாப் குரல் இழக்கிறார்.

அமிதாப் நடிப்பு சிறப்பானது என்று அனைவருக்கும் தெரியும்.அவருக்கு ஈடு கொடுத்து தனுஷ் நடித்திருப்பது பாரட்ட கூடியது. சிறப்பாக நடித்துள்ளார். தனுஷ் ரசிகர்களுக்கு வித்தியாசமான நடிப்பை பார்க்க கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் முடிவை ஏற்றுகொள்வர்களா என தெரியவில்லை.

தனுஷின் வழக்கமான ஆடல் பாடல்  சண்டை காட்சிகள் கிடையாது. உறவுகளுக்கு ஏங்கி தவிக்கும் உணர்ச்சி மிக்க காட்சிகள் கிடையாது. குத்து பாட்டு கிடையாது. வழக்கமான லுங்கி தாடி மீசை இல்லாமல், கண்ணை உறுத்தாத ஆடைகளுடன் ஆர்பாட்டம் இல்லாமல் நடித்துள்ளார். வசனங்கள் இவர் பேசவில்லையென்றாலும் அதற்கேற்ற முக பாவனைகளுடன் நடிப்பதுடன், அவர் பேசாமல் ஊமையாக நடிப்பதும் சிறப்பாக உள்ளது.

அமிதாப் மீண்டும் ஒரு முறை தான் நடிகன் என நிருபீத்துள்ளார். இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் வெளிவந்த “ சீனிகம் “ மற்றும்  “ பா “ திரைப்படத்தில் எவ்வளவு சிறப்பாக நடித்தாரோ அதை விட சிறப்பாக நடித்துள்ளார். இறுதி காட்சிகளில் மிக மிகச் சிறப்பு.

கதாநாயகி கமலஹாசனின் மகள் என்ற பெயரை தவிர வேறு ஒன்றும் சிறப்பு இல்லை. இதில் நடிப்பதற்க்கு வாய்ப்பும் இல்லை. அப்படியேயிருந்தாலும் ஒரு எழவும் நடிக்க தெரிந்திருக்காது. இந்த வேடத்திற்கு யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். இவர் கருப்பு உடை மட்டுமே அணிவார் என்று கூறி எல்லா காட்சிகளிலும் ஒரு ஜீன்ஸ் மற்றும் ஒரு பக்கம் தோளில் தொங்கும் பனியனை போட்டுக்கொண்டு எல்லா காட்சிகளிலும் வருகிறார்.

ஒளிப்பதிவு P.C. ஸ்ரீராம். மிக நல்ல ஓளிப்பதிவு. அவரது திறமையை காட்டக்கூடிய அளவுக்கு காட்சியமைப்புகள் இல்லாத திரைக்கதை என்பதால் அவரது சிறப்புகள் அதிகமில்லை.

இசை இளையராஜா அவரது 1000வது படம். இது திரையுலக சாதனை. ஆறு பாடல்கள். மிகவும் சிறப்பான இசை என்று சொல்ல முடியாது அதே சமயம் மோசம் என்று கூற முடியாது. இசை நன்றாக இருந்தது.

ஒப்பனை விசயத்தில் அமிதாப்புக்கு சரியாக உடை உடுத்தாத குடிகாரன் உடை அதிலும் சுடுகாட்டில் வசிப்பவர். அந்த உடையிலும் அவரது கனத்த குரலிலும் கம்பீரத்தை கொண்டு வந்துள்ளார்.

அவருடன் சுடுகாட்டில் இருப்பவராக நடித்தவரும் தனது பகுதியை சிறப்பாக செய்துள்ளார்.

இயக்குனர் புதிய கதையை கூறியுள்ளார். இப்படி குரல் மாற்று சிகிச்சை செய்ய முடியுமா என தெரியவில்லை. இந்த விசயத்தை விளக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார். அதை செயல்படுத்தும் காட்சிகளை நமக்கு உணர்த்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் காட்சிகள் நீளமாக இருப்பதால் அங்கு தொய்வு ஏற்ப்படுகிறது. வசனங்களை சிறப்பாக எழுதியுள்ளார்.

இந்தி திரைப்படத்தில் கதாநாயகன் இறந்தால் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ் படத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் குறிப்பாக தனுஷ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தியில் அமிதாப்பை கதாநாயகனாக முன்னிறுத்தி அவரை உயிருடன் இருப்பது போல முடித்துள்ளார்.

இந்த முடிவை தவிர இந்த கதைக்கு வேறு முடிவு சொல்ல முடியாது அல்லது முடிவை சொல்லாமல் ரசிகர்களின் முடிவுக்கு விட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தாலும் இயக்குனர் விமர்சனத்திற்க்கு ஆளாவார்.

தனுஷ் மற்றும் அமிதாப் நடிப்புக்காக படத்தை பார்க்கலாம்
..
 தனுஷ் பற்றிய பொது அபிப்பிராயங்களை ஆரம்ப காட்சியில் கூறப்படுகிறது. நிறம் இல்லை உயரம் இல்லை பார்ப்பதற்க்கு நன்றாக இல்லை என்றாலும் திறமையில் பிரபலம் அடைந்துள்ளார் என்று வசனம் வருகிறது. அதற்க்கு திறமை இருந்தால் மட்டும் போதாது, அதை சரியாக உபயோகித்து கொள்ள அறிவு வேண்டும் என கூறுவதாக காட்சி அமைத்துள்ளார்.

No comments:

Post a Comment