Friday 13 February 2015

ROY – இந்தி திரைப்பட விமர்சனம்



ROYஇந்தி திரைப்பட விமர்சனம்

ரொமான்டிக் திரில்லர் என்ற விளம்பர வரிகளை பார்த்து திருடன் போலிஸ் விளையாட்டு கதை என்ற முன் முடிவுடன் படம் பார்க்க சென்றேன். 

இதில் காதல் சிறிதளவே உள்ளது. திரில்லர் என்ற வார்த்தைக்கு இந்த படக்கதையில் என்ன வேலை என்றே புரியவில்லை.

கண்ணில் கானும் காட்சி அப்படியே ஓவியமாக உறைந்து விட்டால் கான கண் கோடி வேண்டும். அப்படி உறைந்த ஓவியங்களை திருடும் ஒரு திருடனின் கதையை திரைப்படமாக தயாரித்து வெற்றி பெறுபவனின் கதை.

அவரின் அடுத்த படத்திற்க்கு கதை எழுதும் போது , கற்பனை திறன் மழங்கிய நிலையில் யோசிக்க மலேசியா செல்கிறார். அங்கு வேறு படத்தை தயாரிக்கும் பெண்ணுடன் காதல் கொள்கிறார். அது அவரது 23வது காதலி என அறிமுகமாகிறார். காதலிப்பதும் விலகுவதுமாக வாழும் அவரை பற்றி குறிப்பிடும் போது அவரது நிகழ்கால காதலியை பெயர் சொல்லி குறிப்பிடாமல் எண் குறிப்பிட்டே ஊடகங்கள் குறிப்பிடுகிறது. இவரது போக்கை கண்டு அவள் விலகுகிறாள்.

பல நாடுகளில் ஓவியங்களை திருடுபவனை பிடிக்க பல முயற்சிகள் நடந்தாலும் அவனது முகம் தெரியாத காரணத்தால் பிடிபடாமல் இருக்கிறான்.

இயக்குனரிடமிருந்து விலகிய 23 இந்த திருடனை சந்திக்க அவர்களுக்குள் காதல் ஏற்ப்படுகிறது. இவளுக்கு அவன் திருடன் என்று தெரியாது.
இருவரில் யாருக்கு காதலி என்பது தான் கதை.

கதாநாயகி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மிகவும் சுமாரான நடிப்பு.
இயக்குனராக நடிக்கும் அர்ஜீன் ராம்பாலை சுற்றியே கதை நகர்கிறது.. திருடனாக நடிக்கும் ரன்பீர் கபூர் பாத்திரம் சிறியது. இருவருமே சிறப்பாக செய்துள்ளனர்.

இந்த படம் ஓளிப்பதிவில் மிகவும் சிறந்து விளங்குகிறது. மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் பிரமாதம். இந்த காட்சிகளை மலேசிய அரசாங்க சுற்றுலா துறை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொதுவாக எனக்கு படம் பார்க்கும் போது, கதையுடன் ஒன்றுவதை விட காட்சிகள் எப்படியிருக்கிறது என்பதில் தான் கவனம் அதிகமாக இருக்கும். காட்சியில் இருக்கும் ஓவியங்கள், அழகு பொருட்கள், கேமரா கோணங்கள், ஆடை வடிவமைப்பு போன்றவைகளை அதிகமாக கவனிப்பேன். இதனால் சில சமயம் வசனங்களை கவனிப்பதை தவற விட்டு விடுவேன்.

இந்த படத்தில் கடற்கரை, கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள வீடு, வீட்டின் உள் அரங்க வேலைப்பாடு, அங்கு இருக்கும் பொருட்கள், வீடு அதன் அமைப்பு, பெரிய ஹோட்டல் அமைப்பு இவைகள் என்னை மிகவும் கவர்ந்தது.

திருடப்படும் ஓவியங்கள் அல்லது காட்டப்படும் ஓவியங்கள் எதுவும் மனதை கவரும் அளவுக்கு இல்லை. திருடப்படும் ஓவியங்களின் சிறப்பு என்று ஏதும் கூறப்படவில்லை அல்லது பிரபல ஓவியர் வரைந்தது என்றும் கூறப்படவில்லை. ஏதற்க்காக அவ்வளவு விலை கொடுத்து ஒருவர் வாங்க முயற்சி செய்கிறார் என விளக்கம் அளிக்கவில்லை  திருடப்படும் நிகழ்ச்சிகளை எவ்வித பரபரப்பும் இல்லாமல் காட்டியுள்ளர்.
இயக்குனர் அவரது திரைப்பட கதைக்கு வறட்சியுடன் அல்லாடும் காட்சிகளை விவரிப்பது படத்தில் தொய்வு ஏற்ப்படுத்துகிறது.

படம் மிகவும் மெதுவாக நகர்கிறது. எடிட்டிங் சரியாக அமையாததால் கதையை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்ப்படுகிறது.

ஒளிப்பதிவை தவிர்த்து இந்த பட்த்தில் வேறு சிறப்புகள் ஏதும் இல்லை.
 


No comments:

Post a Comment