Thursday 3 July 2014

- லூ -



                லூ -

எங்கள் தெருவில் தான் அவண் வசித்தான். அம்மா, அப்பா, இரண்டு தம்பிகள் ஒரு தங்கை. எல்லோரும் ஒன்றாக தான் வசித்தார்கள். நான் பார்த்த காலத்திலிருந்து அவண் ஒரு மாதிரியாக தான் இருந்தான். பைத்தியம் என்று சொல்ல முடியாது. மனநிலை பாதிக்கப்பட்டவன் என்றும் சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு மாதிரியாக இருப்பான். தெளிவாக பேசுவான் ஆனால் ஒன்றும் புரியாது.

அவனது அம்மா வெற்றிலை பாக்கு புகையிலை போடுவாள். இவனும் அவளிடமிருந்து கற்றுக்கொன்டு போடுவான். இவனுக்கு கழுத்தில் பெரிய கட்டி உள்ளது. அது புற்று நோய் என்று அவண் அம்மா கூறுவாள். இவண் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. வலிப்பதாகவும் தெரியவில்லை. இப்போது வெற்றிலை பாக்கு போடுவதை நிறுத்திவிட்டான். ஆனால், பான்பராக் போன்று ஏதொ ஒன்றை வாங்கி கையில் வைத்து தேய்த்து வாயில் போட்டுக்கொள்கிறான்.

அவனது தங்கைக்கு கல்யாணம் ஆகிவிட்டது. தம்பிகள் இருவரும் படித்து விட்டு இருவரும் சேர்ந்து ஏதோ வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர். இவண் சும்மா தான் சுற்றிக்கொண்டிருக்கிறான். சாப்பாடு கிடைத்து விடுகிறது. பான்பராக் போட காசு கிடைத்து விடுகிறது. வேலைக்கு  போக சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

தெருவில் யார் வீட்டில் எந்த கல்யாணம் கருமாதி நடந்தாலும் முதல் ஆளாக போய் நின்று விடுவான். வேலைகள் எல்லாம் செய்து கொடுப்பான். காசு கேட்கமாட்டான். அவனது வீட்டாரை யாரவது கல்யாணத்திற்க்கு கூப்பிட்டால் இவன் ஒரு பழைய கோட்டை போட்டுக்கொண்டு முதல் ஆளாக நிற்ப்பான். வேலைகள் செய்வான். எல்லோரையும் வரவேற்ப்பான். யாரும் அவனுக்கு வேலை சொல்வதில்லை. அவனாகவே செய்வான்.

அவனது அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டார். இரண்டு தம்பிகளும் குடும்பத்தை கவனித்து கொண்டார்கள். அப்போதும் இவண் வேலைக்கு செல்லவில்லை

மூத்த தம்பிக்கு கல்யாணம் செய்தார்கள். அப்பா உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாகி விட்டார். அடுத்த வருடம் இன்னொரு தம்பிக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. செய்து வந்த தொழில் இரண்டாக பிரிந்தது குடும்பத்திற்க்கு யார் செலவு செய்வது என்பது பிரச்சனை.

இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டவனுக்கு தனி படுக்கையறை இல்லையென்பதற்க்காக பக்கத்து வீடு வாடகைக்கு எடுத்துகொண்டார்கள். அப்பாவின் உடல் நிலை மோசமாகிகொண்டே வந்தது. 10 மாதமாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. வீட்டுக்கு சொந்தகாரர் காலி செய்ய சொல்லி விட்டார்

இரண்டு தம்பிகளும் தனித்தனியே வீடு பார்த்து குடியேறிவிட்டனர். பெரிய தம்பி அம்மா அப்பாவை வைத்துக்கொண்டான். இவனை யார் பார்த்துக்கொள்வது என்று பிரச்சனை. நாள் முழுவதும் ஓயாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பான். அம்மா அவனுக்கு சோறு போட்டுக்கொண்டிருந்தாள். தம்பி மனைவி பிரச்சனை செய்து கொண்டிருந்தாள்.

அப்பா காலமாகிவிட்டார். அம்மா மருமகளின் தயவில் காலம் ஓட்டிக்கொண்டிருக்கிறார். இவனை கேட்க ஆளில்லை.

தினமும் காலையில் பழைய வீடு இருந்த தெருவுக்கு வந்து விடுவான். எல்லோருக்கும் வணக்கம் சொல்லுவான். அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பான். யாரவது ஏதாவது வேலை சொன்னால் செய்து கொடுப்பான். அவண் குடும்பத்தோடு இங்கிருக்கும் போது அவனுக்கு மதிப்பிருந்தது. இப்போது இல்லை. யாரும் அவணை வீட்டுக்கு உள்ளே அழைப்பதில்லை. அவனும் கவலைப்படுவதில்லை. புகையிலையை தேய்த்து வாயில் வைத்துகொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறான். சில சமயம் அவனாக பேசிக்கொள்கிறான். காலையில் வருபவன் இரவு 11 மணி வரை இங்கு தான் சுற்றிக்கொண்டிருக்கிறான். எங்கு என்ன சாப்பிடுகிறான் என்று தெரியவில்லை.

எதிரில் 12 கடைகள் இருக்கின்றன . அதில் ஒரு சாரய கடையும் இருக்கிறது. இப்பொதெல்லாம் அங்கு நின்று கொண்டிருக்கிறான். முதலில் மக்கள் வாங்கி கொண்டு சென்று கொண்டிருந்தனர். இப்போது அங்கேயே குடிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த கடைக்கு அருகில் சிகிரெட் கடை இருக்கிறது. அங்கு குளிர்பானங்கள், டம்ளர் , நொறுக்கு தீனிகள் கிடைப்பதால்  கடைக்கு அருகிலேயே சாப்பிட ஆரம்பித்து விட்டனர்.

காலி பாட்டில்களை கடைக்கு அருகிலேயே போட்டு விட்டு சென்றனர். இவண் அந்த பாட்டில்களில் இருக்கும் கடைசி சொட்டுக்களை வாயில் விட்டுக்கொள்வான். காலி பாட்டில்களை விற்று அதில் கிடைக்கும் காசில் பான் பராக் வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.

இப்போது கையில் ஒரு பிளாஸ்டி டம்ளருடன் அந்த கடை வாசலியேயே காத்திருக்க ஆரம்பித்து விட்டான். குடிப்பவர்களிடம் டம்ளரை ஆட்டி காண்பிக்கிறான். சிலர் அவன் டம்ளரில் கொஞ்சம் ஊற்றுகின்றனர். குடுத்து விட்டு போதையில் இருக்கிறான். கரிசனம் உள்ளவர்கள் இருட்டான மறைவான பகுதிக்கு அவனை அழைத்து செல்கின்றனர்.

இப்போதெல்லாம் அவண் போதையில் இருக்கிறான். மதுவும் கிடைக்கிறது. மறைவிடத்திற்க்கு செல்வதால் காசும் கிடைக்கிறது. ஆனால் எங்கு சாப்பிடுகிறான். இரவில் எங்கு போய் தூங்குகிறான் என்று தெரியவில்லை. 11 மணிக்கு மது கடை மூடும் வரை இங்கு தான் சுற்றிக்கொண்டிருக்கிறான். அவண் வசித்த தெருவில் இருக்கும் நபர்களை பார்த்து சலாம் வைக்கிறான். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை அந்த தெருவை சுற்றி வருகிறான்.

இவனது நடவடிக்கைகளை கவனித்தவர்கள் இப்போது இவனை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.

இவண் அம்மாவிடம் சொல்லி ஒன்றும் ஆவப்போவதில்லை. தம்பிகளுக்கு அவர்களது வாழ்க்கையே போரட்டமாக இருக்கிறது. அப்படியே அக்கறை எடுத்துக்கொண்டாலும் வீட்டில் பூட்டி வைத்தா சோறு போடமுடியும். இவனது இறுதி காலம் எப்படியிருக்க போகிறது. இவனைலூஎன்று யாரும் கூப்பிடுவதில்லை. அவனை லூ என்று குறிப்பிடுவார்கள் ஆனால் அவனை அப்பிடி கூப்பிடமாட்டார்கள். அப்படி கூப்பிட்டால் அவனுக்கு பிடிக்காது.

அவன் பெயர் - லூ


No comments:

Post a Comment