Thursday 3 July 2014

என்ன, ஆப்பு வைத்து விட்டானா ?



ஆப்பு::

ஆப்பு என்றால் என்ன ? ஆரம்ப கால கட்டத்தில் , வெட்டப்பட்ட மரத்தின் கிளைகளை மேலும் சிறியதாக்க நீள் வாக்கில் ஒரு முனையிலிருந்து வெட்டிகொண்டு வரும் போது, வெட்டப்பட்ட முனை மறுபடியும் நெருங்கி கொள்ளும். அதனால், மேற்கொண்டு வெட்டுவது சிரமமாகும். அதனால், ஆரம்பத்தில் வெட்டப்பட்ட பகுதி மீன்டும் நெருங்கி விடாமல் இருக்க சிறிய மரத்துண்டை வெட்டப்பட்ட இடைப்பகுதில் வைப்பார்கள் இதனால் வெட்டப்பட்ட பகுதி மீண்டும் நெருங்கி வராது. அதற்கு அடுத்தபகுதியை வெட்டுவது சுலபமாக இருக்கும்..

பிளவுபட்ட பகுதி மீண்டும் நெருங்காமல் இருக்கும் பொருட்டு இடையில் சொருகப்படும் சிறிய துண்டுக்கு ஆப்பு என்று பெயர். மரத்துண்டாக இருந்த இந்த ஆப்பு இப்போது எந்த பொருளாகவும் மாறிவிட்டது. நம் எதிரில் இருக்கும் எந்த பொருளையும் வைக்கலாம் என்ற நிலை ஏற்ப்பட்டுவிட்டது

அதாவது, பிளவு பட்ட பகுதியில் வைக்கப்படும் சிறிய நீளமான துண்டுக்கு ஆப்பு என்று பெயர்.


இந்த ஆப்பு என்ற சொல் இப்போது பரவலாக .பல இடங்களிலும் பேசப்படுகிறது. வீட்டிலும் பேசக்கூடிய அளவுக்கு உபயோகத்தில் வந்து விட்டது. தொழில் ரீதீயாக பயன்படுத்த பட வேண்டிய சொல் அரத்தமற்று உபயோகப்படுத்தபடுகிறது.

இப்போது இந்த ஆப்பு என்ற வார்த்தை திரைப்படங்களிலும், தொலைகாட்சி தொடர்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதன் காரணமாக ஆப்பு என்ற சொல் மக்களின் அன்றாட உரையாடல்களிலும் வந்து விட்டது.

திரைப்படங்களில், கதாநாயகன் கதாநாயகியை அல்லது வில்லியை அடித்தாலோ அல்லது ஏதெனும் ஒரு வகையில் கேவலப்படுத்தினால் என்ன ஆப்பா , என்ன ஆப்பு வைத்துவிட்டான என்ற வசனம் வருகிறது.

இந்த இடத்தில் ஆப்பு என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் வருகிறது. எதை பிளந்தான். எங்கே ஆப்பு வைத்தான். யாரும் யோசித்திருப்பார்களா. வசனம் எழுதிய வசனகர்த்தா என்ன நினைத்து எழுதினார் என்பது அவருக்கு தெரியும். பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தனது கதாநாயகன் கதாநாயகியை ஏமாற்றி விட்டான் அல்லது சரியான பதிலடி கொடுத்து விட்டான் என்ற அர்தத்தில் மட்டுமே பார்க்கப்படுகிறது.

உண்மையில் பெண்ணிடம் உள்ள பிளவு பட்ட பகுதியில் ஆணிடம் உள்ள ஆப்பு போன்ற உறுப்பை வைத்து விட்டான் என்ற பொருளில் தான் வசனம் எழுதப்படுகிறது. அதாவது ஆண் பெண் பிறப்புறுப்புகள் சேரும் செய்கையை தான் இந்த ஆப்பு என்ற சொல்லின் மூலம் உணர்த்துகிறார்கள். காமத்தின் முக்கிய செயலை ஒரு சிறிய சொல்லின் மூலம் பொது வெளியில் சொல்லி கொச்சையாக வெளிப்படுத்துகிறார்கள்.

மேலும், தற்போது கதாநாயகியிடம் கதாநாயகன் கேவலப்படும் போது, அவனுடைய நண்பர்கள் என்ன மச்சி/மச்சான் என்ன ஆப்பு வைத்துவிட்டாளா என்ற வகையில் வசனம் வைக்கப்படுகிறது.

ஒரு பெண் ஆப்பு வைக்க முடியுமா ? யோசித்து பார்த்து வசனம் எழுதவில்லை. செயற்கை பொருளை ஆப்பாக வைத்தாலும் ஆணிடம் பெண் எங்கு ஏன் வைக்க வேண்டும். அர்த்தமற்ற வசனம்.

மேலும், ஆண் ஆணுக்கிடையே ஏற்படும் சம்பவங்களில் கூட என்ன மச்சி ஆப்பு வைத்து விட்டானா என்ற வசனம் வருகிறது. இருவரிடமும் ஆப்பு இருக்கிறது. ஒருவர் மற்றோருவருக்கு ஆப்பு வைப்பதென்றால், அது வேறு ஒரு காம வகையை சார்ந்தது.

ஆப்பூ என்ற சொல் ஆண் பெண் காம செயலின் ஒரு பகுதியை குறிக்கும் வகையில் குறிப்பிடப்படுகிறது.

இன்று அந்த சொல், அதன் உண்மை பொருள் தெரியாமல், குழந்த்தைகள் முதல் பெரியவர்கள் வரை சர்வ சாதரணமாக சொல்லி வருகிறார்கள்.

திரைப்பட வசனகர்த்தாகள் தொடங்கி வைத்த ஒரு அசிங்கமான தேவையற்ற சொல் , அதன் உண்மை பொருள் தெரியாமல் பலரும் சொல்லி வரும் போது, உண்மை பொருள் அறிந்தவர்கள் சங்கடத்துடன் அதை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment