Sunday 6 July 2014

BOBBY JASOOS - விமர்சனம்



பாபி ஜாசூஸ் – இந்தி திரைப்படம்


பாபி ஜாசூஸ் ( பாபி என்பது பெண்ணின் பெயர் ஜாசூஸ் என்றால் துப்பறியும் நிபுணர்/நிபுணி)

இது நகைச்சுவை கதை என்ற வகையில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் துப்பறியும் கதை அதுவும் பெண் துப்பறிவது என கூறப்பட்டுள்ளது. பெண் துப்பறிவாளர்கள் உள்ளனரா குறிப்பாக இந்தியாவில் உள்ளனரா என்பது கேள்வி.

திரைபடத்தில் துப்பறியும் நிபுணர்களுக்கு , பெண் உதவியாளர்களாக இருப்பார்கள். அதிலும் படங்களில் கவர்ச்சி காட்டவும், கதாநாயனுக்கு பெண் துணை வேண்டும்  பாடல் காட்சிகளில் ஆடவும், வில்லன் இவளை கடத்தவும் பின்பு இவளுக்காக முக்கிய துப்பறியும் வேலையை விட்டு விட்டு இவளை காப்பாற்றவும் பெண் உதவியாளர் உபயோகிக்கப்படுவார்கள். திடிரென  கதையின் முக்கிய முடிவு எதேச்சையாக தெரிய சில பல சண்டைகளுக்கு பிறகு கதை முடிவடையும்.

கதாநாயகியை முன்னிலை படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கதையை வலுவாக அமைக்க தவறி விட்டனர். கதாநாயகி திருமதி. வித்யா பாலன் நடித்தகாகனிதிரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து அவரை வைத்து படம் எடுத்தால் வெற்றியடையும் என்று கருதி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இஸ்லாமியர் வசிக்கும் பகுதியை பின்னனியாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதை ஒரு முழு நீள நகைச்சுவை படமாக எடுத்திருக்க முடியும். ஆனாலும் படத்தயாரிப்பாளருக்கு முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்ற பயத்தில், காதல், பாடல்கள், தந்தை மகளின் உணர்ச்சிகள் என்று பலவற்றை பகுத்தியுள்ளார். கதையில் கவனம் செலுத்தி கதாநாயகியை பயன்படுத்தியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.

கதாநாயகியுடன் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் அவர்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

ஒளி, ஒலி பின்னனி இசை மிக சாதாரணமாக உள்ளது. ஒரு பாடல் நன்றாக இருந்தது. பாடல் காட்சியில் நடித்த நடிகர் பாடல்களுக்கான உணர்ச்சியை முகத்தில் கொண்டு வர தவறிவிட்டார். இது இயக்குனரின் குறை.

எல்லாம் இருக்கிறது ஆனால் எதுவும் இல்லாதது போல் இருக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்டவனுக்கு எத்தனை அலங்காரம் செய்தாலும் அதனால் பயன் ஏற்ப்படாது. அது போல தான் வலுவான கதை இல்லாத காரணத்தால் மற்றவை நன்றாக இருந்தாலும் எடுபடவில்லை.

கண் காது மூக்கு வாய் மார்பு இடை தொடை எல்லாம் தனித்தனியாக நன்றாக இருந்தாலும் அந்த எல்லா நல்லவற்றையும் ஒன்றாக இனைத்தால் மிக அழகிய உருவம் கிடைக்காதது போல பல நல்ல விசயங்கள் இருந்தும், படம் முழுமையடையவில்லை.

படத்தின் இறுதியில் முடிச்சை அவிழ்க்கும் போது, நாம் ஏதோ ஒன்றை எதிர்பார்க்க அங்கு உணர்ச்சிகளை கொண்டு வந்து முடித்திருப்பது ஏமாற்றம். இந்த முடிவுக்காகவா இவ்வளவு ஆர்பாட்டம் என்ற சலிப்பு ஏற்ப்படுகிறது.

படம் பார்த்ததால் நட்டம் ஒன்றுமில்லை. பார்க்காவிட்டாலும் நட்டம் ஒன்றுமில்லை.

No comments:

Post a Comment