Saturday 6 December 2014

வாதம் - விவாதம் - விதண்டாவாதம் - சம்ஸ்கிருத மொழி



சம்ஸ்கிருதம் தெய்வ மொழி, வேத மொழி, பழமையான மொழி

வாதம் விவாதம் விதண்டாவாதம்

மத்திய அரசு பள்ளிகளில் – கேந்திரிய வித்தியா பள்ளிகளில்மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக சமஸ்கிருத மொழியை அறிமுகப்படுத்தியது குறித்து விவாதங்கள் நடைப்பெறுகிறது.

இந்தியாவில் கல்வி மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருபவை. மாநில அரசு பள்ளிகளின் பாடதிட்டத்தில் மொழிக்கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது. அதே போல மத்திய அரசு பாட திட்டத்தில் மொழிக்கொள்கையில் மாநில அரசு தலையிட முடியாது.

பல நேரங்களில் தலையீடு இருக்கிறது. மத்திய அரசு பள்ளிகள் என சொல்லப்படும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் எல்லா மாநிலத்திலும் இருக்கிறது. அதனால் இந்த விசயத்தில் மாநில மக்களும், மாநில மொழி ஆர்வலர்களும், மாநில அரசியல்வாதிகளும் , அரசும் அவ்வப்போது தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் போது சர்ச்சை எழுகிறது. மக்கள் நீதி மன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்ப்படுகிறது.

மத்திய அரசு கொள்கைப்படி , ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பள்ளிகளில் முதல் மொழியாக ஆங்கிலமும் இரண்டாவது மொழியாக அந்த மாநில மொழியும் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் அல்லது வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழி கற்ப்பிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற உதவியாக இருக்கும் பொருட்டு ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழி கற்ப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது

அதன்படி 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜெர்மனி மொழி கற்பிக்க முடிவு செய்யப்பட்டு, அதன் படி கேந்திரிய வித்தியா பள்ளி நிர்வாக கூட்டமைப்பு, ஜெர்மன் அரசு ஆதரவுடன் இந்தியாவில் இயங்கி வரும் மேக்ஸ்முல்லர் பவன் அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஜெர்மன் மொழியை கற்ப்பித்து வருகிறது. தற்போது சுமார் 70000 மாணவர்களுக்கு 700 ஆசிரியர்கள் இந்த மொழியை கற்ப்பித்து வருகின்றனர்.

இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 2014ல் முடிவடைந்த நிலையில், கடந்த மே மாதம் புதிதாக ஆட்சியமைத்த பி.ஜே.பி. அரசாங்கம் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் உடனடியாக ஜெர்மன் மொழிக்கு பதிலாக சமஸ்கிருத மொழியை கற்ப்பிக்க ஆனையிட்டது.

கற்றுக்கொள்ள இந்திய மொழிகள் பல இருக்கும் போது அதிலும் மிகவும் பழமையான மொழி தெய்வ மொழி வேத மொழி என்று கூறப்படும் சமஸ்கிருதம் கற்பதில் என்ன தவறு என்பது வாதம்

சமஸ்கிருதம் தெய்வ மொழி என்றால்  அது இந்து மத தெய்வ மொழியாக தான் இருக்கிறது. இந்து மத தெய்வங்கள் வழிப்பாட்டுக்கு மட்டுமே  பிராமண சமூகதினரால் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. மற்ற மத   
க்டவுள் வழிப்பாட்டுக்கு இந்த மொழி உபயோகப்படுத்துவதில்லை. இந்தியா போன்ற மதசார்ப்பற்ற நாட்டில்,  பல மத வழிப்பாட்டு முறைகள் இருக்கும் நிலையில் ஒரு மத வழிப்பாட்டுக்கு அதிலும் சிறுபான்மையினரான பிராமண மக்களால் உபயோகிக்கப்படும் மொழியை ஏன் கற்க வேண்டும் என்ற விவாதம் எழுகிறது.

இந்தியாவில்  பல மொழிகள்  இருக்கும் போது சமஸ்கிருதத்திற்க்கு ஏன் முக்கியத்துவம் என்ற கேள்வியும் வருகிறது. சமஸ்கிருதம் இன்றைய இந்தியா முழுவதும் ஓரளவுக்கு உபயோகப்படுத்தபட்ட மொழியாக இருக்கிறது என்ற பதில் ஏற்புடையதாக இருக்கிறது. வேறு எந்த மொழியை அனுமதித்தாலும், அந்த மாநில மக்களை தவிர மற்ற மாநில மக்கள் ஏற்க மாட்டார்கள். ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில மொழியை மூன்றாவது மொழியாக பள்ளிகள் கற்பிக்க வேண்டுமென வாதம் செய்வார்கள்.

மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மற்றும் கேரளாவில் இந்தி மொழியே மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் உத்திரபிரதேசம் பிகார் போன்ற மாநிலங்களில் தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகள் கற்பிக்கப்படுவதில்லை. இந்த மொழியை தாய்மொழியாக கொன்டவர்கள் அவர்களது மொழியை கற்க வசதியில்லாத நிலையில் பள்ளிகளில் இந்த மொழிகளை மூன்றாவது மொழியாக கற்பிக்க வழி செய்யாதது ஏன் என்ற வாதம் எழுகிறது. ஜெர்மனிய மொழியை கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க முடிகிற அரசுக்கு இந்திய மொழிகள் குறிப்பாக மிக பழமையான தமிழ் மொழியை கற்பிக்க ஏன் வகை செய்யக்கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.

சமஸ்கிருத மொழியில் பல விஞ்ஞான உண்மைகள் இருக்கிறது என்றும் உலகின் பல நாடுகளில் அது பயிற்றுவிக்கப்படுகிறது என்ற வாதம் சரியானால் சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பல அயல் நாடுகளில் தேசிய மொழியாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது என்றும் பல நாடுகளில் பள்ளிகளில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது என்ற எதிர் வாதம் வருகிறது.

சமஸ்கிருதம் பிராமண சமூகத்தினர் உபயோகிக்கும் மொழியென்றும், சமஸ்கிருதத்தை பள்ளிகளில் புகுத்துவதன் மூலம் தங்களது அதிகாரத்தை காட்டுகின்றனர் என்றும் அதன் மூலம் ஆட்சி முறை உயர் குடி பிராமண சமூகத்திடமே தக்க வைத்து கொள்ளும் உத்தியாகவே இதை பார்க்க முடிகிறது என்ற விதாண்டா வாதமும் வைக்கப்படுகிறது.

மத்திய அரசு பள்ளிகளில் தானே சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்துகிறோம். இதில் மாநில அரசுகளுக்கும் மாநில மக்களுக்கும் என்ன பிரச்சனை என்பதும் , உங்கள் மாநில அரசு பள்ளிகளில் விசயத்தில் நாங்கள் தலையிடாத போது , மத்திய அரசு பள்ளிகள் விசயத்தில் நீங்கள் தலையிடுவது ஏன் என்ற வாதமும் சரியானதே.

மத்திய அரசு பள்ளிகளாக இருந்தாலும் அவை எங்கள் மாநிலங்களில் நடப்பதாலும் எங்களது மாநில குழந்தைகளும் படிப்பதால் இதில் தலையிடுகிறோம் என்ற எதிர் வாதமும் சரியே.

உங்கள் மாநில குழந்தைகளின் பெற்றோர் வேலை காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டு வேறு மாநிலத்திற்க்கு சென்று அங்குள்ள பள்ளிகளில் சேரும் போது உங்கள் வாதம் பொய்த்து விடுகிறது என்றும் எனவே பொதுவாக சமஸ்கிருதம் இருந்தால் எந்த மாநில மக்களாக இருந்தாலும் எந்த மாநிலத்தில் வசித்தாலும் தங்கு தடையின்றி தொடர முடியும் என்ற விவாதமும் சரியானது தான்.

தங்கு தடையின்றி மொழி பயில வேண்டும் என்பதன் காரணமாக தான் ஜெர்மனி மொழி கற்பிக்கப்பட்டது அதை நீக்க வேண்டிய அவசியம் என்ன என்ற வாதத்திற்க்கு , சிறப்பு மிகுந்த இந்திய மொழிகள் இருக்கும் போது அயல் நாட்டு மொழியை ஏன் கற்க வேண்டுமென்பது சரிதான்.

அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு தேடிச்செல்ல உதவியாய் இருக்கும் என்பதால் அயல் நாட்டு மொழி கற்க வேண்டுமென்பது எதிர் வாதம்.

மொழியை கற்றதனாலேயே வெளி நாட்டில் வேலை கிடைக்கும் என்பது உத்திரவாதமல்ல என்றும் மேலும் வெளிநாட்டு மொழி கற்ற அனைவருக்கும் வெளிநாட்டில் வேலை கிடைப்பதில்லை என்றும் எல்லோரும் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பவில்லை என்பதும் வாதமாக வைக்கப்படுகிறது. மேலும், அப்படியே வெளிநாட்டுக்கு சென்றாலும் உலக இனைப்பு ஆங்கில மொழி தெரிந்திருப்பதால் அது பிரச்சனையல்ல என்பதும் அப்படியே தேவைப்படும் போது அங்கு சென்ற பிறகு மிக எளிதாக தேவைக்கேற்ப அந்த நாட்டு மொழியை கற்க முடியும் என்று கூறுகின்றனர்.

வேற்று நாட்டு மொழி கற்றுக்கொண்டால் உள்நாட்டிலும் மொழி பெயர்ப்பாளர்களாகவும், அந்நாட்டு தூதரகங்கள் வணிக நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகின்றனர். அந்த வேலை வாய்ப்பு மிகச் சிறிய அளவிலேயே இருப்பதாகவும் அதற்க்காக பள்ளி பருவத்திலேயே இத்தனை மாணவர்களுக்கு கற்பிப்பது தேவையற்றது என்பதும் சரியான வாதமே. மத்திய அரசு பள்ளிகளில் மட்டும் தான் சமஸ்கிருதம் கற்பிக்க சொல்கிறோம். இன்று அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் தான் அதிகம் இருக்கின்றன. அங்கு பயிலும் மாணவர்கள் அவர்களுக்கு விருப்பமான அயல் நாட்டு மொழிகளாக ஜெர்மனி, பிரன்ச் மற்றும் பல மொழிகள் கற்கின்றனர் . அதை நாங்கள் தடை செய்யவில்லை அங்கே சமஸ்கிருதம் கற்பிக்க வேண்டும் என்று கூறவில்லை எனவே மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிப்பதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்பது வாதம்.

சமஸ்கிருதம் இந்தியாவின் இனைப்பு மொழியாக இருக்காது. ஏன் அதை கற்கும் மாணவர்களுக்கிடையே கூட இனைப்பு மொழியாக இருக்காது. பள்ளி படிப்பு முடிந்தவுடன் அதை மறந்து விடுவார்கள். அப்படியே மறக்காமல் இருந்தாலும் அதனால் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்க போவதில்லை. அதனால் அதை பயில்பவர்களுக்கு  எந்த நன்மையும் இல்லை. கோயில்களில் அர்ச்சகராக சேர்ந்தாலும் அல்லது தனிப்பட்ட முறையில் புரோகித தொழிலை மேற்க்கொண்டாலும் பள்ளியில் படிக்கும் இந்த பாடதிட்டம் அதற்கு உதவாது. அதற்க்கான மந்திரங்கள் பூஜை முறைகளை தனியாக தான் கற்க வேண்டும். அந்த தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் சில வருடங்களில் அதற்கு தேவையான அளவு தேவையான சமயத்தில் கற்று கொள்ள முடியும். எனவே பள்ளிகளில் கற்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் சரியான வாதமே.

இவைகள் சரியான வாதமாக இருந்தாலும் மூன்றாவது மொழி என்று ஒன்று கற்பிக்க வேண்டிய நிலையில், சமஸ்கிருதத்தை கற்பதில் என்ன தவறு என்பதும் சரியான எதிர் வாதமே.

சமஸ்கிருதம் பள்ளிகள் படிக்க வசதி செய்து கொடுத்தால் போதுமானது விருப்பமுள்ளவர்கள் அதை விருப்பபாடமாக கற்றுக்கொள்ள வசதி செய்து கொடுத்தால் போதுமானது ஆனால் மூன்றாவது மொழியாக திணிப்பது தேவையற்றது என்பதும் சரியே.

சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக திணித்தால் ஜெர்மன் மொழியை கற்ப்பிக்கும் 700 ஆசிரியர்கள் வேலை இழக்க நேரிடும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு வாதம்.

இந்த 700 ஆசிரியர்களும் ஜெர்மனியிலிருந்து வந்தவர்கள் அல்ல. இங்கு ஜெர்மன் மொழியை கற்ற இந்தியர்களே. இவர்கள் ஜெர்மன் மொழி மட்டும் அறிந்தவர்கள் அல்ல. அது அவர்களது கூடுதல் தகுதி மட்டுமே. இவர்கள் ஆசிரியர்கள். வேறு பாடங்களை நடத்தி பள்ளிகளில் ஆசிரியராக தொடர முடியும்.

7ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பில் மட்டும் ஒரு மூன்றாவது மொழியை கற்பதனால் என்ன பயன். அதை தொடர்ந்து படிக்க போவதில்லை என்கிற போது மூன்றாவது மொழி என்பது அவசியம் தானா. ஆங்கிலமும் ஒரு மாநில மொழியும் போதுமானதே. வேறு மொழி கற்றுக்கொள்ள வேண்டுமென நினைப்பவர்கள் அவர்களுக்கு தேவைப்படும் போது கற்றுக்கொள்ளலாமே என்ற வாதத்திற்க்கு நாங்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளிலும் சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்க முயற்சி செய்கிறோம் என்ற எதிர் வாதம் மாணவர்களுக்கு நிறைய மன அழுத்தத்தையும் பயத்தையும் உண்டாக்க கூடியது.

பள்ளி இறுதியான்டு எனப்படுக்கிற 12வது ஆண்டு தேர்வுக்காக மாணவர்கள் 11 ஆம் வகுப்பிலிருந்தே 12வது வகுப்புக்கான பாட திட்டங்களை படிக்க ஆரம்பித்து மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.  பள்ளி இறுதியாண்டு தேர்வின் மதிப்பென்னை வைத்தே மாணவர்களின் எதிர்க்காலம் நிர்ணயிக்கப்படும் நிலையில் இந்த புதிய மூன்றாவது மொழியில் சரிவர மதிப்பென்கள் எடுக்க முடியாவிட்டால் அது மேற்கல்விக்கு ஒரு பாதகமான சூழ்நிலையே ஏற்ப்படுத்தும்.

சமஸ்கிருதம் முன்பு ஏற்கனவே கற்பிக்கப்பட்ட மொழி தானே அது சில ஆண்டுகள் கற்பிக்கப்படவில்லை அதை நாங்கள் மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம் ஆனால் அதை நீங்கள் கட்சி அரசியலாகவும் மதத்துடனும் இனைத்து பார்த்து எதிர்க்கீறிர்கள். இது அரசியலாக்கப்பட்டுள்ளது.என்பது மற்றோரு வாதம்.

இது அரசியலக்கப்பட்டதற்க்கு காரணமே அதை செயல் படுத்திய முறை தான் காரணம். கல்வியாண்டின் இடையில் ஒரு மொழியை நீக்கி விட்டு வேறு மொழியை மாணவர்களுக்கு கற்ப்பிக்க என்ன அவசியம் ஏற்ப்பட்டது. ஒரு பொது விவாதத்தை தொடங்கி ஒரு மித்த கருத்து ஏற்ப்படுத்தி அடுத்த கல்வியாண்டிலிருந்து தொடங்கியிருந்தால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது.

மேலும், மதசார்ப்பற்ற நாட்டில் இந்து மத கொள்கைகளை அனைவரும் ஏற்க்கும்படி பேசியும் செயல்பட்டும் வரும் அரசு திடிரென இப்படி கல்வியான்டின் இடையில் சமஸ்கிருத மொழியை திணிப்பது ஒரு நீண்ட கால செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக தான் பார்க்க முடிகிறது.

மொழிக்கொள்கை உணர்வு பூர்வமாக பார்க்கப்பட்டு உணர்ச்சிகளை ஏழுப்புகிறது. இரு மொழி கொள்கையே சரியானது. மாநில மொழியும் இனைப்பு மொழியாக ஆங்கிலமும் மட்டுமே இருப்பது சரியானது. மற்ற மொழிகளை கற்க பள்ளிகளில் வசதி செய்து கொடுத்தால் போதுமானது. மற்ற மொழிகளை தனிப்பட்ட முறையில் கற்று தரும் அமைப்புகளுக்கு அரசு ஆதரவும் உதவியும் செய்தால் போதுமானது.

இந்த கல்வியாண்டில் சமஸ்கிருத தேர்வு நடத்தப்போவதில்லையென்று நீதிமன்றத்துக்கு மத்திய அரசின் கல்வித்துறை உறுதி மொழியளித்துள்ளது.

மேலும் கல்வியென்பது மொழி, இனம்,மாதம் சார்ந்த்து அல்ல. கல்வியை எந்த மொழியில் கற்றாலும் அது அறிவுத்திறனை வளர்க்க கூடியதாக இருக்க வேண்டும். அதை அவரவருக்கு பிடித்த மொழியில் புரியும் மொழியில் கற்றால் மட்டுமே பயன் அடைய முடியும்.




No comments:

Post a Comment