Friday 19 December 2014

PK - இந்தி திரைப்பட விமர்சனம்



PK இந்தி படத்தின் பெயர். படத்தில் கதாநாயகனின் பெயரும் இதுவே. PK என்றால் – பிக்கீ ஆயா கியா – பிகே ஆயா கியா – பிகி/பிகீ என்றால் குடித்து விட்டு என்று பொருள். இவர் பேசுவதும் கேட்கும் கேள்விகளும் குடிகாரன் பேச்சு போல இருப்பதால், என்ன குடித்து விட்டு வந்துள்ளாயா என கேட்க இதுவே இவர் பெயராக மாறுகிறது.

பெல்ஜியம் நாட்டில் ஆணும் பெண்ணும் சந்திக்க காதல் ஏற்ப்படுகிறது. காதல் ஏற்ப்படுவதற்க்கு காரணங்கள் தேவையில்லை. ஆண் (Sushant Singh Rajput) பாக்கிஸ்தான் தூதரகத்தில் வேலை செய்து கொண்டே கட்டிட கலை படிப்பு படிப்பவன். பெண் ( Anushka Sharma) . பெண் தனது காதலை இந்தியாவில் உள்ள அம்மா அப்பாவுக்கு தெரிவிக்க , அவர் பதறி அவர் எப்போதும் எல்லா விசயங்களுக்கும் கலந்தலோசிக்கும் குருவிடம் செல்ல , அவர் இந்த காதல் நிறைவேறாது எனவும் அவன் உன்னை திருமணம் செய்ய மாட்டான் என்று கூற , அவள் அவனிடம் நாளைக்கே திருமணம் செய்ய வேண்டும் என கூறி , சர்ச்சில் காத்திருக்கிறாள்.

அங்கு வேறு ஒரு பெண்ணும் திருமணத்திற்க்கு காத்திருக்கிறாள். கையில் ஒரு சிறிய கூடையில் நாய் குட்டி வைத்திருக்கிறாள். அதை அவள் இவளிடம் கொடுத்து விட்டு திருமணத்திற்க்கு செல்கிறாள். அந்த சமயம் ஒரு சிறுவன் ஒரு கடிதத்தை தருகிறான்.  அதில் திருமணம் செய்ய இயலாது என எழுதப்பட்டுள்ளது. அவள் இந்தியா திரும்பி வருகிறாள்.

வேற்று கிரகத்திலிருந்து வரும் வின்கலம் பழுதடைந்து ராஜஸ்தானில் இறங்க அதில் வரும் மனிதன் அமிர்கான். அந்த காட்சியில் மட்டும் சில நொடிகள் நிர்வானமாக இருப்பது போல் கான்பிக்கப்படுகிறது.

 மொழி தெரியாது. சிறிய விபத்தில் சிக்கும் இவனை பாண்டு வாத்திய குழு தலைவன் (சஞ்சய் தத்) எடுத்து செல்ல இவனுக்கு மொழி தெரியாமல் இருக்க, பார்க்கும் பெண்களின் கைகளை இவன் தொட, இவனுக்கு பெண் தேவையென நினைத்து விலை மகளிடம் அழைத்து செல்ல , இவன் விலை மகளின் கையை பிடித்துக்கொண்டு இரவெல்லாம் உட்கார்ந்திருக்க, அவளிடமிருந்து இவனுக்கு போஜ்பூரி மொழி முழுவதும் வந்து விடுகிறது.


வின்கலத்திலிருந்து இவனிடமிருந்த திருட்டு போன பொருள் ரிமோட் (பதக்கம்) டெல்லியில் இருப்பதாக தெரிந்து கொண்டு டெல்லி வந்து தேடும் போது, இவன் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்கள் யாரும் பதில் சொல்ல முடியாமல் கடவுள் மட்டும் சொல்லுவார் என்றும் கடவுளுக்கே தெரியும் என்றும் கடவுளே காப்பாற்றுவார் என்று சொல்ல, கடவுள் கோவிலில் இருக்கிறார் என சொல்ல இவர் கோயில்களில் விடை தேட, ஒரு கட்டத்தில் அது பொய்யென தெரிய அனைத்து நம்பிக்கைகளையும் விட்டு விட்டு கடவளை வைத்து இங்கு செய்யப்படும் வியாபாரங்களையும் முட்டாள் தனமான நம்பிக்கைகளையும் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். கடவுள் எங்கே கடவுள் கானவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்.


இந்த நேரத்தில் TV  நிருபர் சந்திப்பு நிகழ்கிறது. இவரை பற்றி விசாரிக்க இவர் உண்மையை கூறுகிறார். அவள் நம்ப மறுக்கிறாள். பின்பு இவன் Remote தேடுவதை நம்ப , இவனை வைத்து நிகழ்ச்சிகளை தயாரிக்க முற்ப்படுகிறாள். இவளது வாழ்க்கை சாமியாரல் பாதிக்கப்பட்டதை  அறிந்து அந்த சாமியாரின் முகமுடியை அகற்ற அங்கு செல்லும் போது, இவன் தொலைத்த ரிமோட் அவரிடம் இருப்பதை கண்டு தன்னுடையது என்று கேட்கிறான். பின்பு சாமியார்களின் அருள் வாக்கு பொய் என்பதை பல சமயங்களில் நிருபிக்க , சாமியாரின் புகழ் மங்க ஆரம்பிக்கிறது.
சாமியார் இவரிடம் தொலைக்காட்சியில் நேரடி விவாதத்தில் இறங்க , நிருபரின் வாழ்க்கையில் தான் கூறியது நிகழ்ந்தது என்றும் இவளது திருமணம் நடக்கவில்லையென்றும் கூற, அது எப்படி நிகழாமல் போனது என்பதை நீருபிப்பதுடன் கதை முடிகிறது. இதை நிருபித்தால் அந்த ரிமோட்டை தருவதாக சாமியார் சவால் விட்டிருப்பதால் அது கிடைக்க, வின்வெளி கலத்தை மீண்டும் அழைத்து அவருடைய கிரகத்திற்க்கு செல்கிறார்.

மீண்டும் ஒரு வருடம் பூமிக்கு வேறு ஒருவருடன் வரும் போது, பூமியில் என்ன செய்ய கூடாது என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதுடன் படம் முடிவடைகிறது.

இந்த கதையை படம் முழுவதும் நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.

படம் பார்க்கும் போதே அன்மையில் வெளி வந்த Oh My God  இந்தி படம் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.


Munna Bhai MBBS , Lage Raho Munna Bhai, 3 Idiots படங்களை இயக்கிய இயக்குனர் Rajkumar Hirani இயக்கிய படம். அதிகமாக யோசிக்க வேண்டியதில்லை. நகைச்சுவை படம். அலட்டிக்கொள்ளாமல் இயக்கியிருக்கிறார்.


அமிர்கான் மற்று சுசாந் ராஜ்புத் சிறப்பாக அவர்களது பாத்திரத்தை நடித்துள்ளனர். அனுஷ்கா வழக்கமான கதாநாயகியாக வந்துள்ளர். எந்த நடிகை வேண்டுமானாலு நடிக்கலாம். 


இசையும் பாடல்களும் சுமாராக உள்ளது. குத்து பாட்டு, வழக்கமாக இந்தி படங்களில் வரும் திருமண நிகழ்ச்சி பாட்டு, சோக பாட்டு போன்றவை இதில் இல்லை.


பெல்ஜியம் நகரம் ஓளிப்பதிவில் சிறப்பாக இருக்கிறது. டெல்லியிலும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடவுளை வைத்து பிழைப்பு நடத்துவதையும் மக்கள் ஏமாறுவதையும் நகைச்சுவையாக சொல்லியுள்ளார். இவரது கேள்விகளால் கோபப்படும் சாமியார் ‘ கடவுளை காப்பாற்ற “ எங்களுக்கு தெரியும் என்கிற போது, கடவுள் உன்னை காப்பாற்றுவாரா அல்லது நீ கடவுளை காப்பாற்றுவாயா என்கிறார். அதே சமயம் இந்த நம்பிக்கைகளை மனிதனை தற்கொலை முயற்சிகளிலிருந்து காப்பாற்றுகிறது என்றும் வாழ்வதற்க்கு ஒரு நம்பிக்கையை எற்ப்படுத்துகிறது என்றும் சொல்லி, சிக்கலில் மாட்டி கொள்ளாமல் தம்பிக்கிறார். 


அவசரப்பட்டு அவசியம் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றாலும், படத்தை பார்த்தால் ஏன் பார்த்தோம் என்று வருத்தப்பட தோன்றாது

 

No comments:

Post a Comment