Saturday 6 December 2014

அவதார மகிமை என்ன ?



 மைந்தர்கள் பன்னிரு வகை.

1.தன் மனைவியிடம் தனக்குப் பிறந்தவன் ஔரசன்   

2.   தன் மனைவியை தன் அனுமதியுடன் உயர்ந்தவர்களிடம்  அனுப்பி      கருவுறச்செய்து பெறப்பட்டவன் ஷேத்ரஜன்.
 
3. இன்னொரு குடும்பத்தில் இருந்து உரியமுறையில் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டவன் தத்தன்.

4. தன்னால் மனம் கனிந்து மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டவன் கிருத்ரிமன்

5. மனைவி அவள் விருப்பப்படி இன்னொருவனைக் கூடிப்பெற்ற குழந்தை கூடோத்பன்னன்.

6.உரியமுறையில் காணிக்கை கொடுத்து நாடோடி ஒருவனிடம் மனைவியை அனுப்பி பெறப்பட்டவன் அபவித்தன்.

இந்த ஆறு மைந்தர்களும் அனைத்து வகையிலும் மைந்தர்களே. தந்தையின் உடைமைக்கும் குலத்துக்கும் உரிமை கொண்டவர்கள் அவர்கள். தந்தைக்கும் மூதாதையருக்கும் முறையான அனைத்து நீர்க்கடன்களையும் செய்ய உரிமையும் பொறுப்பும் கொண்டவர்கள். அவர்களை மைந்தர்களல்ல என்று விலக்க எந்நூலும் ஒப்புக்கொள்வதில்லை.

இன்னும் ஆறுவகை மைந்தர்கள் உள்ளனர்.
7.  மனைவி தன்னை மணப்பதற்கு முன் பெற்றுக்கொண்டவன் கானீனன்

8.தன் மனைவி தன்னைப் பிரிந்து சென்று செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் இன்னொருவனுக்குப் பிறந்தவன் பௌனர்ப்பவன்.
 
9.நான் உனக்கு மைந்தனாக இருக்கிறேன் என்று தேடி வந்தவன் ஸ்வயம்தத்தன்

10. மைந்தனாக விலைகொடுத்து வாங்கப்பட்டவன் கிரீதன்.

11.கர்ப்பிணியாக மணம்புரிந்துகொள்ளப்பட்ட மனைவியின் வயிற்றிலிருந்தவன் சகோடன். 

12. ஒழுக்க மீறலினால் தனக்கு பிற பெண்களிடம் பிறந்த பாரசரவன். 

அவர்களும் மைந்தர்களே. எக்குலத்தில் பிறந்தாலும், எத்தகைய ஒழுக்கமுள்ள பெண்ணிடம் பிறந்திருந்தாலும் தன் குருதியில் பிறந்த மகவு தன் மைந்தனே. அவனை ஏற்க மறுப்பது மூதாதையர் பழிக்கும் பெரும் பாவமாகும். இவர்கள் அனைத்து நீத்தார் கடன்களுக்கும் உரிமைகொண்ட மைந்தர்கள். மூதாதையரால் நீர் பெற்று வாழ்த்தப்படுபவர்கள். அவர்களுக்கு தந்தை மனமுவந்து அளிக்காவிட்டால் நாட்டுரிமையும் சொத்துரிமையும் இல்லை என்பது மட்டுமே வேறுபாடு

{ எழுத்தாளர் திரு.ஜெயமோகன் எழுதிவரும் மகாபாரத கதை வெண்முரசுவின் இரண்டாம் பாகமான மழைப்பாடல் பகுதியில் 73 அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. }

அரசன் பாண்டுவுக்கு பெண்களிடம் உடல் உறவு கொண்டு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை. எனவே குழந்தை வேண்டும் என்ற காரணத்தால் தனது மனைவி பிறர் மூலம் குழந்தை பெற்று கொள்ள அனுமதிக்கிறார்.

துர்வாச முனிவர் குந்திக்கு அவளது திருமணத்திற்க்கு முன்னரே ஒரு மந்திரத்தை உபதேசித்துள்ளார். இந்த மந்திரத்தை உச்சரித்து யாருடைய குழந்தை தனக்கு பிறக்க வேண்டுமென நினைத்து , யாருடன் உடல் உறவு கொண்டாலும் , அவருடைய விந்து உறவு கொள்பவனின் வழியாக உன்னிடம் சேர்ந்து உனக்கு குழந்தையாக பிறப்பார்கள் என வரமளிக்கிறார். 5 முறை மட்டுமே உபயோகிக்க அனுமதியளிக்கிறார்.

திருமணத்திற்க்கு முன் இந்த மந்திரத்தை சோதித்து பார்க்கும் பொருட்டு, மந்திரத்தை உச்சரித்து சல்லிய நாட்டு மன்னன் சல்லியனிடம் உறவு கொண்டு பிறந்த குழந்தை கர்ணன்.

திருமணத்திற்க்கு பின் அரசன் பாண்டுவிடம் இந்த மந்திர தன்மையை சொல்லி அவனது அனுமதியுடன் மூன்று குழந்தைகளை பெற்று கொள்கிறாள்.

தர்ம தேவனை நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தை தர்மன்
வாயு தேவனை நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தை பீமன்
இந்திர தேவனை நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தை அர்ஜூனன்
பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரிக்கு இந்த மந்திரத்தை குந்தி சொல்லி கொடுத்து அவளையும் இதே போல குழந்தை பெற்று கொள்ள சொல்கிறார்கள்.
மாத்ரி அஸ்வின் தேவர்களை நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தகள் நகுலன் மற்றும் சகாதேவன் ( இரட்டை குழந்தைகள் )

இதற்கு பிறகு பாண்டுவும் மாத்ரியும் இயற்க்கையான முறையில் உடல் உறவு கொள்ளும் போது பாண்டு இறந்து விடுகிறான்.

பாண்டு என்ற அரசனும் குந்தி என்ற அரசியும் இயற்க்கையான முறையில் உடல் உறவு கொண்டு பெறாத குழந்தைகளை இளவரசர்களாக அங்கீகரித்து அதில் மூத்தவன் தருமனுக்கு அரசுரிமை கோரியுள்ளனர்.

ஆனால் பாண்டுவின் அண்ணன் அரசர் திருதஷ்டிரர் அரசி காந்தாரியும் இயற்கையான முறையில் உடல் உறவு கொண்டு பெற்ற குழந்தை துரியோதனனுக்கு இளவரசு பட்டமும் அரசுரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.
முறையாக பிறக்காத குழந்தை தருமனுக்கு அரசுரிமை பெற்று தர விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் பல வித நியாயங்களை (அதர்மங்களை ) கூறி மாபெரும் யுத்தத்தை நடத்த உதவியுள்ளார்.

தருமனுக்கு ஏன் முடி சூட்ட வேண்டும் ஏன் துரியோதனனுக்கு மூடி சூட்ட கூடாது என்பதற்க்கு பலரும் பல விதமான காரண காரியங்களை கூறி விவாதிக்கின்றனர்.

இந்த கதையை மாபெரும் காப்பியம் என்று கூறி பல நூற்றாண்டுகளாக படித்து போற்றி வருகின்றனர்.

இன்றைய சமூகத்தில் இவ்வாறு முறையாக பிறக்காத குழந்தைகளுக்கு ஒரு பொதுப்பெயர் மட்டுமே உள்ளது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமூக கட்டுப்பாட்டில், கணவன் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் குழந்தையை தத்து எடுத்துக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

தானே இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண் கணவனை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள சமூகத்தாலும் சட்டத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கணவனும் மனைவியும் பிரியாமல் தங்களுக்கான குழந்தையை பெற்றுக்கொள்ள நவீன விஞ்ஞான முறை சில வழிகளை கண்டுப்பிடித்துள்ளது. 

அவர்களது விந்து முட்டைகளை இனைத்து மனைவியின் கருவறையிலிருந்தோ அல்லது மற்ற பெண்ணின் கருவறையிலிருந்தோ குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

விந்துவையோ அல்லது கரு முட்டையையோ விலைக்கு வாங்கி சோதனை சாலையில் கருவுற செய்து மனைவியின் கருவறையிலிருந்தோ அல்லது மற்ற பெண்ணின் கருவறையிலிருந்தோ குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

அதர்மம் எப்போதெல்லாம் தலை விரித்து ஆடுகிறதோ அப்பொதெல்லாம் நான் அவதரிப்பேன் என்பது விஷ்ணுவின் அவதாரத்துக்கு சொல்லப்படுகிறது.

அண்ணன் தம்பிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடக்கும் அரசுரிமை பகைமை அதர்மமா ? இதற்கு . முன் சகோதரர்களுக்கிடையே இவ்வாறு அரசுரிமை போர் நடந்தில்லையா ? இந்த அரசுரிமை போருக்கு ஒரு சார்புக்கு ஆதரவளிக்க விஷ்ணு அவதரிக்க வேண்டுமா ? அப்படியே அது மாபெரும் அதர்ம செயல் என்று கருதி அவரது அவதாரத்துக்கு நியாயம் கற்ப்பித்தாலும், அவரது அவதாரத்துக்கு பிறகு எத்தனையோ அரசுரிமை போர்கள் நடந்துள்ளது. அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் ஏன் அவர் அவதாரம் எடுக்கவில்லை ? அவதாரம் எடுத்து அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டிய பிறகும் அது மீண்டும் மீண்டும் தொடர்ந்தால் அந்த அவதாரத்துக்கு என்ன பொருள் ? 

கடவுளே நேரில் வந்து தீர்த்து வைத்த பிரச்சனை மீண்டும் மீண்டும் நடக்கிறது என்றால் மனித குலம் கடவுளின் நியாய தர்மங்களை ஏற்க்கவில்லையென்று தானே பொருள்படுகிறது. இப்படிப்படிட நிலையில் இந்த அவதார கதைகளை நம்ப தான் வேண்டுமா ?

கலியுகத்தில் மீண்டும் அவதரிப்பேன் என்று கூறியுள்ளார். தற்போது நடந்து வரும் கலியுகத்தில் எத்தனையோ அதர்மங்கள் நடைப்பெருகின்றன. இன்னமும் மிகப் பெரிய அதர்ம செயல் நடைப்பெறும் வரை ஏன் காத்திருக்க வேண்டும். கலியுக அவதாரத்தில் உலகமே அழிந்தி விடும் என்று கூறும் போது, இப்போதே அவதரித்து அதர்மங்களை அழித்து மனித குலத்தை அழித்து மீண்டும் எதை உருவாக்க வேண்டுமென நினைக்கிறரோ அதை நிறைவேற்ற வேண்டியது தானே ?  

இதிகாசங்களிலிருந்து காப்பியங்களிலிருந்தும் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இவைகளை அதிகமாக ஆராய கூடாது என்பதும் சரியான வாதம் அல்ல. 


 

No comments:

Post a Comment