Wednesday 2 April 2014

சௌராஸ்டிரர்களும் - பகவான் கிருஷ்ணரும்

சௌராஸ்ட்ரா ஆண்டு கணக்கு ::



ஆண்டு கணக்கு குறிப்பிட்டு நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்துவது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். அதற்கு அடிப்படையாக கடவுள் யேசுநாதர் பிறப்பு ஒன்றை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழில் கிருஸ்து (யேசுநாதர்) பிறந்த ஆண்டிலிருந்து இத்தனை ஆண்டு என்று குறிப்பிடப்படுகிறது. அந்த கணக்குப்படி இன்றைக்கு 2014ஆம் ஆண்டு. ஆனால், உலகம் தோன்றி இத்தனை ஆண்டுகள் தான் ஆகிறதா ? , அதற்கு முன்பு வாழ்ந்தவர்கள் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் குறிப்பிடுவதற்க்கு கிருஸ்து பிறப்பதற்க்கு முன் (கி.மு.)இத்தனை ஆண்டுகள் என்று குறிப்பிடப்படுகிறது.

இது உலகத்தில் அனைவராலும் முழுமையாக ஒப்புக்கொள்ளப்படாவிட்டாலும், நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்க்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத்தற்க்கு காரணம் ஒரு மதம் சார்ந்த கடவுளின் தோற்றத்தின் அடிப்படையில் கணக்கிடுவதே காரணம். பல மதங்களின் அடிப்படையில் பல கடவுள்கள் உள்ளனர். கடவுள்களின் தோற்றம் மறைவு என்று ஒன்று கிடையாது. ஆனால், அந்த கடவுள்கள், பூமியில் பலகாரணங்களுக்காக அவதாரங்கள் எடுத்துள்ளனர் என்பது அந்த அந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டு கணக்கை பின்பற்றுகின்றனர். மதம் சார்ந்து மட்டும் அல்லாமல், இனம் சார்ந்தும், மொழி சார்ந்தும் பல ஆண்டு கணக்குகள் இருக்கிறது. இவையெல்லாம் சரியா தவறா என்ற விவாதத்தை விட , இவைகள் மக்களால் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை ஏற்க்க வேண்டியுள்ளது.

இந்து மத கடவுள்களில் விஷ்ணு  இது வரை ஒன்பது அவதாரங்களை எடுத்துள்ளார். சிவனும் இருபது அவதாரங்களை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது, இந்த அவதார காலங்களை சரியாக கணிக்கமுடியாவிட்டாலும், பல கணக்குகள் சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் கால எண்ணிக்கையை எழுதலாம் என ஆரம்பித்தால், எந்த அவதாரத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிப்பது. விஷ்ணுவின் எந்த அவதாரத்தை அடிப்படையாக கொள்வது, அல்லது சிவனின் எந்த அவதாரத்தை அடிப்படையாக கொள்வது என்ற குழப்பமும் சண்டையும் தான் ஏற்ப்படும். அப்படி ஏதாவது ஒன்றை அடிப்படையாக கொண்டு எழுத முற்ப்பட்டால், எண்ணின் இலக்கங்கள இப்படிதான் இருக்கும். இந்த ஆண்டை 203954394757390294714 என்று கூற குறிப்பிடும்படி அமைந்துவிடும். எனவே, இப்போது நடைமுறையில் உள்ள கணக்குப்படி 2014 குறிப்பிட்டு எழுதுவதே சிக்கல் இல்லாமல் இருக்கும்.

ஆனால், தமிழர்களில் சிலருக்கு இப்படி ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்ததால் , திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பிறந்த ஆண்டு என்று ஒன்றை கணக்கிட்டு திருவள்ளுவராண்டு என்று குறிப்பிடும் பழக்கைத்தை ஏற்ப்படுத்தினர். ஆனால், அதை நடைமுறைபடுத்த இயலாது. தமிழர்களுக்கே இது எத்தனையாவது திருவள்ளுவராண்டு என்று கேட்டால், முதலில் திருவள்ளுவர் ஆண்டு என்று ஒன்று உள்ளதா என்று கேட்பார்கள். அப்படி கேள்விப்பட்டவர்கள் ஒடிச்சென்று நாட்காட்டியை பார்ப்பார்கள். காரணம் இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்த இயலவில்லை. புத்தாண்டு தினம் எதுவென்ற குழப்பத்தை அண்மைகாலத்தில் ஏற்ப்படுத்தியுள்ளனர்.
இது போன்றே ஒவ்வொரு மொழி பேசுவோரும் ஒரு புத்தாண்டு தினத்தையும், ஆண்டு கணக்கையும் ஏற்ப்படுத்தியுள்ளனர். யாரும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. அவரவர் கணக்குப்படி ஆண்டின் எண்ணை எழத ஆரம்பித்தால் குழப்பம் தான் ஏற்ப்படும்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வாழும் சௌராஸ்டிர்ர்கள் ஒரு ஆண்டு கணக்கை குறிப்பிடுகின்றனர். யாரும் அதை நடைமுறையில் கடைப்பிடிப்பதில்லை. ஒரு சில இடங்களில் , குறிப்பாக திருமண அழைப்பிதழ்களில்சௌராஸ்ட்ரா விஜயாப்தம்என்று குறிப்பிடுகின்றனர்



இன்றைய குஜாராத் மாநிலத்திலிருந்து (அன்றைய சௌராஸ்ட்ரா தேசம்) தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்த காலத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டு கணக்கு ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குஜராதிலிந்து குடியேறிய காலம் 800 ஆண்டுகள் முதல் 1300 ஆண்டுகள் என்று கணக்கிடப்படுகிறது. இதில் சரியான ஆண்டு எதுவென்று யாருக்கும் தெரியாது. சிலர் இயற்கையாகயாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற சொல்படி இங்கு குடியேறியிருக்கலாம். “திரைக்கடலோடியும் திரவியம் தேடுஎன்ற பழமொழிக்கேற்ப்ப  வியாபாரம் செய்ய, வேலை தேடி இங்கு வந்து குடியேறியிருக்கலாம். பொதுவாக நம்பும் காரணமான, கஜினி முகமதுவின் படையெடுப்பின்  போது வெளியே , அகதிகளாக இங்கு குடியேறியிருக்கலாம் . மற்றோரு காரணமாக சொல்லப்படும் , சௌராஸ்ட்ரா மக்களின் கைத்தறி தொழிலின் சிறப்புகளை அறிந்து, இங்கிருந்த மன்னர்கள் அழைத்து வந்திருக்கலாம்.  எந்த காரணத்திற்க்காக வந்திருந்தாலும் எல்லோரும் ஒரே காலகட்டத்தில் வந்திருக்கமுடியாது. பல ஆண்டுகளாக, குழக்களாக குடிப்பெயர்ந்திருக்க வாய்ப்புண்டு.
இப்படியிருக்கும் போது எதன் அடிப்படையில்சௌராஸ்ட்ரா ஆண்டு கணக்கு ஆரம்பிக்கப்பட்டது என்று தெரியவில்லை.
கி.பி.1025ஆண்டில் தமிழகத்தில் குடியேறியவர்கள் என்று கணக்கிட்டு அதன்படி இந்த ஆண்டு ( 2014 – 1025) 989 ஆண்டு என்று குறிப்பிடுகின்றனர். அதாவது 2014 ஆண்டை :சௌராஸ்ட்ரா விஜாயப்தம் 989 ஆண்டு என்று குறிப்பிடுகின்றனர்.

வேறு சிலர், கி.பி.1312 ஆண்டில், சௌராஸ்டிரர்கள் விஜய நகர பேரரசில் குடியேறியதாக கூறி அதன் அடிப்படையில், இந்த ஆண்டு ( 2014 – 1312) 702 ஆண்டு என்று குறிப்பிடுகின்றனர். அதாவது 2014 ஆண்டை சௌராஸ்ட்ரா விஜாயப்தம் 702 என்று குறிப்பிடுகின்றனர்.

இதில் எது சரியென யாராலும் தீர்மானமாக கூறமுடியாது. இப்படி குறிப்பிடுவதைப்பற்றி யாரும் கவலைபடுவதாகவும் தெரியவில்லை.
இப்படி ஆண்டை குறிப்பிட்டவர்கள் எந்த நாளில் என்று குறிப்பிடவில்லை. ஆண்டையே கணக்கிடமுடியாத போது சரியான நாளை எப்படி குறிப்பிடமுடியும். ஆனால், சரியான நாளை குறிப்பிட்டால் தானே, “ சௌராஸ்ட்ரா விஜாப்தம் ஆண்டின் அடிப்படையில் புத்தாண்டு எந்த தேதியில் என்று அறிந்து, சௌராஸ்ட்ரர்களின் புத்தாண்டை கொண்டாடமுடியும்.

தமிழ்நாட்டில், வாழும் பகுதிக்கேற்ப தமிழர்களின் புத்தாண்டு தினத்தையே , சௌராஸ்ட்டிரர்களின் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், முகநூலில் திரு. ரவீந்திரநாத் கொண்ட ராஜாராம் Mr.Ravindiranath Kondda Rajaram என்பவர் 31.03.2014 தான் சௌராஸ்டிரர்களின் புத்தாண்டு என்று குறிப்பிடுகிறார். அதற்கு சில காரணங்களையும் கூறுகிறார். முகநூலில் அவரது பதிவை பார்க்கவும். அவர் நாட்காட்டியும்காலண்டர் அச்சிட்டிருப்பதாக தெரிகிறது

அவர் குறிப்பிடும் காரணங்கள்.

1. நாம் கலியுக காலண்டரை பயன்படுத்துகிறோம்.
2, பகவான் கிருஷ்ணர் இந்த உலகத்தை விட்டு மறைந்த நாள்.   அவதாரத்தின் செயலை முடித்துவிட்டு விண்ணுலகம் சென்று மறைந்த நாள். இந்த நாளில் இருந்து கலியுக ஆண்டு கணக்கு துவக்கப்பட்டுள்ளதாம்.
3. சௌராஸ்டிரர்களுக்கு பகவான் கிருஷ்ணரிடம் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம். அதாவது பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் சௌராஸ்டரர்களின் முன்னோர்கள் வாழ்ந்ததாக  கூறுகிறார். பகவான் கிருஷ்ணர் பேசியவிரஜ்மொழியும் நம் சௌராஸ்ட்ரா மொழியும் ஒன்று தான் என்று  குறிப்பிடுகிறார். இதற்கு ஆதாரமாக திரு. கே.ஆர்.சேதுராமன் அவர்கள் எழுதியசௌராஷ்ட்ரா சரித்திரம்எனற புத்தகத்தை ஆதாரமாக காட்டுகிறார்.“ அதனால் பகவான் கிருஷ்ணருக்கும் சௌராஸ்டிரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு என்கிறார். அதனால், சௌராஸ்டிரர்கள் இதை பின்பற்றுகிறார்களாம். இது மிகவும் பழமையான காலண்டர்ஆண்டு கணக்கு முறையென்றும், அதை அவர் பின்பற்றுவதில் பெருமையடைவதாகவும் கூறுகிறார்.

இதுவரை இந்த கட்டுரையை படித்த நண்பர்களே. தற்சமயம் மேற்கொண்டு படிப்பதை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் ஓய்வு கொண்டு, இது குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது யோசியுங்கள். 10 நிமிடத்திற்க்கு பிறகு மேற்கொண்டு படிக்க ஆரம்பியுங்கள்.

சௌராஸ்டிரர்கள் கலியுக ஆண்டு காலண்டரை பயன்படுத்துகிறோம் என்று கூறுகிறார். நீங்கள் அப்படி ஒரு காலண்டரை பற்றி அறிந்ததுண்டா?. அப்படி ஒரு காலண்டரை பார்த்துள்ளீர்களா ? நான் கேள்விபட்டதில்லை.

பகவான் கிருஸ்ணர் தனது அவதார கடமையை முடித்துவிட்டு சென்ற நாளிலிருந்து கலியுகம் ஆரம்பித்துள்ளதாகவும், கலியுக முடிவில் மீண்டும்  அவதாரம் எடுப்பார் என்றும் அன்றுடன்  உலகம் அழிந்து விடும் என்று கூறுகின்றனர். சிலர் ஏற்கனவே,  கிருஸ்ண அவதாரத்திற்க்கு பிறகு கல்கி அவதாரம் எடுத்து முடிந்துவிட்டதாகவும், வேறு சிலர் இன்னமும் கலியுகம் முடியவில்லை என்றும், அவதாரம் எடுப்பார் என்றும் நம்புகின்றனர். ஆனால், கலியுகம் ஆரம்பித்து தற்போது 5113வது ஆண்டு நடைப்பெறுவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், கலியுக ஆண்டு தான் சௌராஸ்ட்ரா ஆண்டு என்றும் அதன் படி தற்போது – “ கலியுகம்சௌராஸ்ட்ரா ஆண்டு 5113 என்று எழுத வேண்டும் என குறிப்பிடுகிறார்.
ஆனால், 31.03. தான் புத்தாண்டு என்று எப்படி கணக்கிட்டார் என கூறவில்லை.

அடுத்து பகவான் கிருஸ்ணர் பேசிய விராஜ்மொழியும், “சௌராஸ்ட்ராமொழியும் ஒன்று தான் என்று குறிப்பிடுகிறார். பின்பு எப்படி இப்போது மொழியின் பெயர்சொராஸ்ட்ராஎன்று மாறியது. “விராஜ்என்று ஏன் தொடரவில்லை.

யாராவது மொழியின் பெயரை மாற்றியிருக்கலாம் என்று நம்பலாம். பகவான் கிருஸ்ணர் அவதாரம் முடிந்து செல்லும் போது, அவரது குலமான யாதவ குலம் அழிந்துவிட்டது. ஒரு குலமே அழிந்து விட்டது என்றால் அதனுடன் அவர்கள் பேசிய மொழியும் அழிந்துவிட்டது என்று பொருள்படுகிறது. சௌராஸ்ட்ரா மொழியும், விராஜ் மொழியும் ஒன்று தான் என்று இந்த நூற்றாண்டிலோ அல்லது சென்ற நூற்றாண்டிலோ தான் சொல்லியிருப்பார்கள். அழிந்து விட்ட மொழியுடன் அதாவது 5100 வருடங்களுக்கு முன் அழிந்துவிட்ட மொழியுடன், தற்போது பேசப்படும் சௌராஸ்ட்ரா மொழியை எப்படி ஆராய்ந்து ஒப்பிட்டார்கள்.

விராஜ் மொழியின் கல்வெட்டுக்கள், ஓலை சுவடிகள் , செப்பு தகடுகள் அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்ததா. யார் ஒப்பிட்டது. அதற்க்கான ஆவணங்கள் எங்கு யாரிடம் உள்ளது. இந்த கேள்விகளுக்கு விடை காணமல், ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில்விராஜ் : மொழியும்சௌராஸ்ட்ராமொழியும் ஒன்று தான் என்பதும், பகவான் கிருஸ்ணர்விராஜ்மொழி பேசினார் என்பதும், அவர் காலத்தில் இன்றைய சௌராஸ்டிரர்களின் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ள முடிகிறதா. ?

ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொண்டாலும், ஏன் கலியுக தொடக்கத்திலிருந்து சௌராஸ்ட்ரா கணக்கை ஆரம்பிக்கவேண்டும்.

கிருஸ்ணர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சௌராஸ்டிரர்களின் முன்னோர்கள், அதாவது இதற்கு முந்தைய அவதாரமானராமஅவதார காலத்திலும் தான் வாழ்ந்திருப்பார்கள். அப்படியிருகையில்ராம அவதாரம்முடிந்த ஆண்டிலிருந்து கூட, சௌராஸ்டிரர்களின் ஆண்டு கணக்கை துவக்கலாமே.

மேலும், இந்த அவதார விசயங்களை சற்று மறந்துவிட்டு, அண்மை காலத்தில் அதாவது 1300 வருடங்களுக்கு முன்பு, அதாவது, சௌராஸ்டிரர்கள் இன்றைய தமிழ்நாட்டில் குடியேறிய பிறகு, சௌராஸ்டிர குலத்தை சார்ந்த ஒரு பெண்ணை சுவாமி ஐயப்பன் மணந்து கொண்டதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. கடவுளே சௌராஸ்டிரா சமூகத்தில் திருமணம் செய்து கொண்டிருப்பதால், அதை தான் பெரிய சாதனையாக கருதி அப்படி திருமணம் செய்து கொண்ட ஆண்டையும், நாளையும் கண்டுபிடித்து (கற்பனை செய்து) புத்தாண்டையும், ஆண்டு கணக்கையும் குறிப்பிடுவது தானே சரியாக இருக்கும்.

கலியுக ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தாலும் சரி, ஐயப்பன் திருமணம் செய்து கொண்ட ஆண்டிலிருந்து ஆரம்பித்தாலும் சரி அல்லது தமிழ்நாட்டில் குறியேறியதாக கூறப்படும் ஆண்டிலிருந்து கணக்கிட்டாலும் சரி அதனால் என்ன பயன்.

திருமண அழைபிதழ்களில்சௌராஸ்ட்ரா விஜாப்தம் 702 அல்லது 989 என்றும் அல்லது கலியுக ஆண்டு 5113 என்றும் குறிப்பிடலாம். அல்லது சமூக ஜாதி பற்று காரணமாக சிலர் காலண்டர் அடித்து தங்கள் வீட்டில் மாட்டிக்கொள்ளலாம். மற்றப்படி வேறு எதற்கும் உபயோகப்படாது.

நீங்கள் எழுதும் செக்கில் (cheque) 03.04.5113 என்று எழுதினால் செல்லுமா. இப்படி ஒன்றுக்கும் உதவாத ஒரு விசயத்தை , எதோ கண்டுபிடிப்பு போல சொல்லி அதற்க்காக ஒரு காலண்டரையும் தயாரித்து வெளியிடுவது, சரியான மனநிலையில் இருப்பவரது செயலாக தெரியவில்லை.

அவர் இவ்வாறு கூறியவுடன் அதற்கு லைக் போட்டவர்களும், காலண்டர் எங்கே கிடைக்கும் என்று விசாரித்தவர்களும், அந்த விசயத்தை ஏற்றுக்கொள்வதற்க்கு முன்பு ஏன் சிந்திக்க மறந்துவிட்டனர். ஏன், எதற்கு, எப்படி, எங்கு, யாரல் என்ற கேள்விகளுக்கு பதில் தேடி, திருப்தியடைந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். அதை விடுத்து யார் எதை சொன்னாலும் அப்படியே ஏற்றுகொள்வது, சமூக (ஜாதி) அபிமானம் என்று கருதினால் , அதை விட கோமளிதனம் வேறு ஏதும் இருக்கமுடியாது.

எனவே இது போன்ற கோமாளிதனங்களை செய்யாமல், சமூகத்தின் மீது அக்கறையிருந்தால், வேறு ஏதேனும் நடைமுறையில் சாத்தியப்படும் விசயங்களை செய்யலாம்.

1 comment:

  1. அவ்ரெ நொவ்வொ ஒர்ஸு கொ2ப்3பொ3 ?

    ReplyDelete