Thursday 24 April 2014

மூடுபனி - தமிழ் திரைப்படம்



மூடுபனிதமிழ் திரைப்படம் 

இயக்குனர் திரு. பாலு மகேந்திரவை பற்றி இப்போது நிறைய பேர் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். பார்ட்டுகிறார்கள். அவர் விட்டு சென்ற பணியை தொடர்வதாக கூறுகிறார்கள்.

இவர இயக்கிய படங்களில் நான் பார்த்த படங்கள்.

1) அழியாத கோலங்கள்
2) மூடுபனி
3) மூன்றாம் பிறை
4) நீங்கள் கேட்டவை ?
5) வீடு
6) சந்தியா ராகம்
7) சதி லீலாவதி

இந்த படங்கள் அவை வெளிவந்த காலங்களில் பார்த்தது. அவை இப்போது சரியாக நினைவில்லை. ஆனால்,  சதி லீலாவதி படம் எப்போது தொலைகாட்சியில் ஒளிப்பரப்ப்பட்டாலும் நிச்சயம் பார்ப்பதுண்டு.

நேற்று (22.04.2014) K.TVயில் இரவு 11.00 மணிக்கு மூடுபனி திரைப்படம் ஓளிப்பரப்பப்பட்டது. கவனமாக பார்த்தேன்

திரு. பாலு மகேந்திர மிக சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற நிலையில் பார்த்தேன்.. மிக பெரிய ஏமாற்றம்.

கதை என்றால்,  சிறு வயதில் எற்ப்பட்ட நிகழ்சி மூலம் பாதிக்கப்பட்டவனின் பழி தீர்க்கும் படலம் தான் கதை. கதாநாயகன் திரு.பிரதாப் போத்தன். அந்த காலகட்டத்தில் அவர் சிறந்த நடிகர் என்ற அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த கதாபாத்திரத்துக்கு அவர் பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது. கதாபாத்திரத்தை எற்று நடிக்கும் நடிப்பு அந்த பாத்திரத்துடன் ஒன்றி இருக்கவேண்டும். எந்த காலகட்டத்தில் அந்த படத்தை பார்த்தாலும் அவர் சிறப்பாக செய்திருக்கிறார் என்று தோன்ற வேண்டும். ஆனால், இப்போது அந்த படத்தை பார்க்கும் போது, இவர் எல்லாம் ஏன் நடித்தார் என்று நொந்து கொள்ள தோன்றுகிறது.

பிரபல கதாநாயகியாக வரும்  ஷோபா சிறந்த நடிகை. ஆனால் இந்த படத்தில் அவர் வீனாக்கப்பட்டிருக்கிறார் என்று தோன்றியது.

இதில் வரும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் போலிஸ் அதிகாரியா அல்லது நகைச்சுவை நடிகராக என தெரியவில்லை. அவர் துப்பறியும் முறை கொடுமை. அதிலும் எப்போதும் வாயில் பைப் வைத்துகொண்டிருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட புகைக்கவில்லை. இப்படி ஒரு மட்டமான நடிப்பை வழங்கிய நடிகர் யார் என தெரியவில்லை.

ஒளிப்பதிவில் சிறந்தவர் என்று போற்றப்படுபவரின் ஓளிப்பதிவு இந்த படத்தில் மட்டம் என்றே தோன்றுகிறது. இயற்கையான ஒளிப்பதிவில் படம் எடுப்பவர் என்று பெயரெடுத்தவர் படம் ஏதோ திருமண வீட்டில் வீடியோ படம் எடுப்பவரின் படம் போல் இருக்கிறது. ஒரே காட்சியில் தீடிரென வெளிச்சம் அதிகமாகிறது. குறைகிறது. அது காட்சிக்கு தொடர்பானது என்று கூற முடியாது. அந்த காட்சிகளில் நடிப்பும் கிடையாது. அழுத்தமான வசனமும் கிடையாது. அப்படி ஒரு ஒளிப்பதிவு செய்வதற்கான எந்த மூகாந்திரமும் கிடையாது. வீடியோ எடுப்பவரின் கூட விளக்கு தூக்கிகொண்டு சென்று,  வெளிச்சம் அடிப்பார். அப்போது, சிறிது கவனகுறைவின் காரணமாக வெளிச்சம் வேறுபக்கங்களில் திரும்பும் போது, வீடியோ காட்சி எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது.
ஒரே ஒரு பாடலும் அதற்க்கான ஒளிப்பதிவும் நன்றாக இருந்த்து

மொத்தத்தில் இந்த படம் அவரது சிறந்த படங்களில் ஒன்று என கூறினால், நான் இனி அவரது படம் பார்ப்பதேயே தவிர்க்க வேண்டியிருக்கும்.

சில பல விருதுகள் வாங்கிவிட்டதால், சிலர் அவை நாகரீகம் கருதியும் தொழில் நாகரீகம் கருதியும் தனிப்பட்ட காரணங்களுக்காக புகழ்ந்து பேசினால், அதையே எல்லோரும் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை.

No comments:

Post a Comment