Thursday 3 April 2014

சிந்திக்காமல் செயல்படும் வரை

போரளியும் அரசியலும்::


இந்திய பிரதமர் திரு.மன்மோகன் சிங் நேற்று (02.04.2014) உரையாற்றுகையில், 2032ஆம் ஆண்டுக்குள் 62000 மெகாவாட் அண்மின் உற்பத்தி செய்யப்படும் என்றும் தற்போது நாட்டில் இயங்கும் அனுமின் நிலையங்களை பாதுகாப்பான முறையில் இயக்குவதே தலையாய கடமை என்றும் கூறியுள்ளார்.

கூடங்குளம் அனுமின் நிலையத்தை மூட வேண்டும் என திரு.உதயகுமார் தலைமையில் மக்கள் பல ஆண்டுகள் போரடியும், வழக்கு தொடர்ந்தும் முயற்சிசெய்தனர். இன்னமும் போராடிகொண்டிருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்த வழக்குகளில் இவர்களுக்கு சாதகமான அதாவது அனுமின் உலையை மூட வேண்டும் என்ற தீர்ப்பு வரவில்லை. வருவதற்க்கு வாய்ப்புகளும் இல்லை

ஆனால், போரட்டத்தை தலைமை தாங்கி நடத்திய திரு. உதயகுமார் மீதும் பொது மக்கள் மீதும், தேசதுரோக வழக்கு உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் மீது விசாரனையும் வழக்கும் நடத்தப்பட்டு , குற்றம் நீருபிக்கப்பட்டால் தண்டனையும் வழங்கப்படும். இதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

இதற்கிடையில் போரட்டகுழுவுக்கு தலமை தாங்கிய திரு. உதயகுமார் போரட்டத்தை அந்த பகுதி பெண்கள் தொடர்ந்து நடத்துவார்கள் என்று கூறி ஒதுங்கிவிட்டு, பொதுமக்களுக்கு சேவை செய்ய , புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியில் இனைந்து தேர்தலை சந்திக்கிறார்.

இவர் போரட்டம் நடத்திய போது, இவர் மீது பல குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அது சரியா தவறா என்று பொது மக்களுக்கு தெரியாது. ஊடகங்கள் எதை வெளியிடுகிறதோ அதை நம்பி அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப கருத்துக்களை உருவாக்கிகொள்ள வேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர். யாரும் குற்றச்சாட்டுக்களை தனிப்பட்ட முறையில் சரிபார்க்கமுடியாது. இவரது இப்போதைய நடவடிக்கைகளை பார்க்கும் போது அதில் உண்மை இருக்கலாம் எனவும் தோன்றுகிறது.

திரு. உதயகுமார் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும், கூடங்குளம் அனுமின் நிலையத்தை மூட முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார். மூடுவேன் என்று உறுதியாக கூறவில்லை. மூட முடியாது என்பது இவருக்கு நன்றாக தெரியும். இவர் சேர்ந்துள்ள கட்சியும் அனுமின் நிலையங்களுக்கு எதிரானது அல்ல. கூடங்குளம் அனுமின் நிலையத்தை மூடுவோம் என்று கூறவில்லை. எதிர்காலத்தில் இந்தியாவில் அனுமின் நிலையங்களை ஏற்படுத்தமாட்டோம் என்றும் கூறவில்லை. எந்த கட்சியும் இதுபோன்ற வாக்குறுதிகளை வழங்கவில்லை. திரு.உதயகுமார் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை படித்துபாருங்கள். இவர் வெற்றிப்பெற்றாலும், இவர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 95% வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. இவரது தேர்தல் அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இவர் தேர்தலில் வெற்றி பெற்று M.P.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால், இவர் மீது உள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படலாம். அல்லது மிக மெதுவாக நடக்க ஏற்பாடு செய்யப்படலாம். ஆனால், பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுமா. அவர்கள் வீட்டிற்க்கும் நீதிமன்றத்திற்க்கும் வாழ்நாள் முழுவதும் அலைந்து கொண்டிருக்கவேண்டும்.

இவரும் மற்ற அரசியல்வாதிகளை போல மக்களை போரட்டத்தில் ஈடுபடவைத்து, பின்பு தனது சுயநலத்திற்க்காக போரட்டகாரர்களை குப்புற படுக்க வைத்து கும்மியடித்துவிட்டார்.

இவரை நம்பி போரட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது. அனுமின் நிலையமும் மூடப்படவில்லை. போரட்டத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை. தலைமை தாங்கியவரும் ஒதுங்கிகொண்டார். இதன் மூலம் அவருக்கு கிடைத்த புகழை கொண்டு பதவி அடைய முயற்சிசெய்கிறார்.

திரு. உதயகுமார் சேர்ந்த கட்சியானது, ஊழல் எதிர்ப்பு என்று கட்சி ஆரம்பித்தது. அதை நம்பி டெல்லியை ஆள வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால், அதை விட பெரிய பதவிக்காக அதை தூக்கி எறிந்துவிட்டு பிரதமர் பதவிக்கு ஆசைபட்டுகொண்டிருக்கிறார்.

அதேபோல தான் மக்களின் நலன் என்று கூடங்குளம் அனுமின் நிலையத்தை மூடவேண்டும் என்று போரடியவர் அதை விட்டு விட்டு வேறு ஒரு பதவிக்கு ஆசைபட்டு ஓடிவிட்டார்.

இப்போது நடுத்தெருவில் நிற்பது இவருடன் போரடியவர்களே. எனவே பொதுமக்களே எந்த போரட்டத்தில் கலந்து கொண்டாலும், பொதுமக்களுக்கு எந்த நன்மையும் விளைவதில்லை. அந்த போரட்டத்தின் வெற்றியை பற்றி கவலைப்படாமல், அதனால் புகழ் பெற்று, அவரவர் சொந்த நலனில் அக்கறை கொள்ளும் தலைவர்கள் தான் உருவாகிறார்கள். இன்று அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் அனைவரும் அப்படி உருவானவர்கள் தான். நாளையும் அப்படிதான் உருவாவார்கள். மக்கள் சிந்திக்காமல் செயல்படும் வரை இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

அடுத்த முறை யார் போரட்டம் நடத்தினாலும் குருட்டுதனமாக அவர்களை பின்பற்றாமல், போரட்டத்தை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துவிட்டு வாழ்க ஒழிக கோஷத்தை மெதுவாக சொல்லிவிட்டு ஒதுங்கி செல்லுங்கள்.

திரு.உதயகுமாரை ஆதரிக்க வேண்டுமா எதிர்க்க வேண்டுமா என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.

http://www.valaitamil.com/kanyakumari-aam-athmi-parliament-contestant-sp-udhyakumar-election-manifesto_12099.html#.Uzz60aKLXpE

No comments:

Post a Comment