Wednesday 9 April 2014

காமம் செய்ய காதல் செய்வீர்



சமூகத்தில் காதல் திருமணங்களை எதிர்ப்பவர்கள் யார் ::

தங்களுக்கு திருமண வயதில் மகனோ அல்லது மகளோ இல்லாதவர்கள் ; தங்களுக்கு திருமண வயதில் பேரனோ அல்லது பேத்தியோ இல்லாதவர்கள் ; அப்படியே இருந்தாலும் , அவர்கள் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கும் வரை காத்திருந்து திருமணம் செய்து கொள்வார்கள் என்ற அதிகபட்ச நம்பிக்கையுடன் வாழ்பவர்கள்.

ஆண் பெண் இருவருமே பெற்றோர் செய்து வைத்தால், நல்ல அழகான பெண்ணையும் / ஆணையும் நல்ல பொருளாதார வசதியுடன் செய்து வைப்பார்கள் என்று காத்திருப்பவர்கள் : உண்மையிலேயே சமூக பற்று அதிகம் உள்ளவர்கள் ; இவர்கள் காதலிக்க நினைத்தாலும், இவர்களை காதலிக்க யாரும் இல்லாத நிலையில் இருப்பவர்கள்.

இந்த இரண்டு வகையிலுமே இருப்பவர்களுக்கு, திருமணம் நடக்கவில்லையென்றால், காலம் முழுவதும் தனியாக மகிழ்சியுடன் தங்கள் வாழ்க்கையை நடத்துவார்களா ? அல்லது வேறு சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு காம இச்சையை தணிக்க எந்த சமூக பெண்ணிடம் உறவு கொள்வார்களா ?

இன்றைய நிலையில் சமூகத்தில் திருமணம் செய்து வைக்க முடியாத பெற்றோர், நாட்டில் எத்தனையோ பேர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் நமது பிள்ளைகளுக்கு அந்த துப்பில்லையே என்று புலம்பிகொண்டிருக்கிறார்கள். இவரகள் காதலித்திருந்தால் காலகாலத்தில் திருமணம் செய்து வைத்திருக்கலாம் என்று ஆதங்கப்பட்டுகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இருப்பதால், இதை வெளிப்படையாக சொல்லிக்கொள்ள முடிவதில்ல்லை.



முதலில் குறிப்பிடபட்டவர்களின் குடும்பத்தில், காதல் திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டால், நவ தூவரங்களையும் மூடிக்கொள்வார்கள். இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது சேர்ந்து வாழ போகிறவர்களின் விருப்பம் தான் முக்கியம் என்று கூறி சமாளிப்பார்கள்
இரண்டாவது வகையில் குறிப்பிடப்பட்டவர்கள் வயது ஏற ஏற, தங்களது எதிர்ப்பார்ப்புகளை குறைத்து கொள்ள தொடங்குகின்றனர். 30 வயதை கடக்கும் போதுவத்தலோ தொத்தலோ பொத்தல் இருந்தால் சரிதான்என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள்.

பெற்றோர் பார்த்து தங்களது சமூகத்திலேயே மணமக்களை முடிவு செய்து திருமணம் செய்து வைப்பது சிறந்தது தான். ஆனால், அப்படி எல்லோருக்கும் காலகாலத்தில் அமைந்து விடுவதில்லை.

எப்போது காதலிக்க வேண்டும் ::

பெற்றோர் திருமணத்திற்க்கு வரண் தேடும் போது, ஒரு ஆண்டு காலம் வரை பொறுமையாக அவர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும்.
26 – 27 வயது வரை வரை திருமணம் நடைப்பெறவில்லையென்றால், சமூகத்தில் ஆண் / பெண் காதலிக்க தொடங்க வேண்டும்.
29 – 30 வயது ஆகும் போதும் திருமணம் அமையவில்லையென்றால், வேறு சமூகத்து ஆண்யோ / பெணயோ கூட காதலிக்க தொடங்கலாம்.
35 வயதுக்குள் திருமணம் நடைப்பெறவில்லையென்றால், எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், தன்னுடைய சமூகம் சார்ந்த அல்லது வேறு சமூகம் சார்ந்த விதவையோ அல்லது விவாகரத்து ஆனவர்களையோ பெரியோர்கள் மூலம் ஏற்பாடு செய்தோ அல்லது காதலித்தோ நிச்சயமாக திருமணம் செய்யவேண்டும்.

அதற்கு மேல் திருமணம் செய்யாமல் காலம் கடத்தி , திருமணமே செய்யாமல் இருப்பதை விட , ஏதாவது ஒரு விதத்தில் திருமணம் செய்து, காமம் அனுபவித்து வாரிசுகள உருவாக்கி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும்.

சமூகத்தில் காதலிக்க அண் / பெண்ணை தேடுவது எப்படி :

27 வயது ஆகும் போது, தமது வீட்டுக்கு யார் வந்து திருமண பத்திரிக்கை வைத்து அழைத்தாலும், அந்த திருமணத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் ; அங்கு தங்களுடைய சமூக பெண்கள் அதிகம் இருப்பார்கள். அதில் யாரையாவது உங்களுக்கு பிடித்திருந்தால், பெற்றோரிடம் சொல்லி ஏற்பாடு செய்யலாம். அல்லது நீங்களே களத்தில் இறங்கி காதலிக்க ஆரம்பிக்கலாம்.

காது குத்தல், முடி இறக்குதல், வளைகாப்பு அல்லது வேறு எந்த விசேசம் என்றாலும் அந்த வீட்டு விசேசங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். எல்லோரையும் கவரும் படி நடந்துகொள்ள வேண்டும். யாரவது திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டால், ஆகவில்லையென்றும், யாரவது ஆண் / பெண் இருந்தால் சொல்லுங்கள் என்று கூச்சப்படாமல் கேட்க வேண்டும்.

கல்யாண தரகர்களிடம் சமூக ஆண் / பெண் ஜாதகங்கள் மற்றும் இதர தகவல்கள் இருக்கும். அவர்களிடம் பேசி எல்லா ஆண் /பெண் விவரங்களையும் சேகரித்து, அவர்களை காதலிக்க முயற்சி செய்ய வேண்டும்.

சமூக மக்கள் அதிகமாக வாழும் பகுதியிலிருந்து வெளியேறி வேறு மாநிலங்களில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் ஆண் / பெண்கள் , அந்தந்த ஊர்களில் நடக்கும் சமூக நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்டு தங்களுக்கு பிடிக்கும் ஆண் / பெண்ணை காதலிக்க வேண்டும்.
இவ்வாறேல்லாம் செய்தும் 29 வயது வரை திருமணம் அமையவில்லையென்றால், வேறு சமூக  ஆணையோ /பெண்ணையோ காதலிக்க ஆரம்பிக்கலாம்.

ஆணோ பெண்ணோ, உங்களுக்கு காதல் வந்து விட்டால், அதை பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்து வைக்க சொல்லுங்கள். உங்கள் தரப்பு நியாயங்களை கூறுங்கள். உறவினர்களின் ஆதரவை நாடுங்கள். சம்மதிக்காவிட்டால், திருமணமே செய்து கொள்வதில்லை என உறுதியாய் இருங்கள்.

பெண்களே தயவு செய்து வீட்டை விட்டு ஓடாதீர்கள். நீங்கள் நம்பி செல்லும் ஆண் உங்களிடம் எல்லா உண்மைகளையும் சொல்லியிருப்பான் என்று குருட்டுதனமாக நம்பாதீர்கள். தீர விசாரியுங்கள். நாளை அவண் உங்களை விட்டு விட்டு ஓடினால், நீங்கள் பிறந்த வீட்டிற்க்கும் வரமுடியாது. தனியாக அவப்பெயருடன் வாழ்வது சிரமம். ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டாலும், பலரது சாட்சியுடன் பதிவு திருமணம் செய்துகொள்ளுங்கள். ஏதேனும் பிரச்சனையேற்ப்பட்டாலும், அது உதவக்கூடும். பொதுவாக, விட்டு கொடுத்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை அமைதியாய் இருக்கும். குறிப்பாக காதல் திருமணத்தில், ஓடி போய் திருமணம் செய்து கொள்பவர்கள் நிச்சியமாக விட்டுக்கொடுத்து தான் வாழவேண்டும்

ஆரம்பத்தில் ஓடிபோனாலும் , பின்பு நமது வீட்டில் சேர்த்துகொள்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் இருக்காதீர்கள். பொதுவாக சில வருடங்களுக்கு பின்பு சேர்த்து கொள்கிறார்கள். மேலும், இவர்கள் வந்து சேர்ந்து கொள்வதற்க்கு காரணம் உறவுகள் வேண்டும் என்பதற்க்காக அல்ல. அப்பன் சொத்தில் எங்கே நமது பங்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று சிலவருடங்களில் எப்படியாவது வந்து ஒட்டிக்கொள்கிறார்கள். எனவே, ஓடி போய் திருமணம் செய்து கொண்டு , சொத்துக்காக வந்து ஒட்டிக்கொள்ளாதீர்கள். எல்லோரையும் உதறி விட்டு போபவர்கள், சொத்தையும் உதறிவிட்டு போங்கள்.

பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்யும் ஆண்கள், உங்களை நம்பி வந்த பெண்ணை கடைசி வரை காப்பாற்றுங்கள். உங்களது பெற்றோர் உங்களை நம்பி வாழ வேண்டிய சூழ்நிலையில் இருந்தால், அவர்களை கடைசி காலத்தில் காப்பாற்றுங்கள். அவர்கள் ஏன் உங்கள் காதல் திருமணத்தை எதிர்த்தார்கள் என்பதை அவர்களது கோணத்திலிருந்து காண முயற்சி செய்யுங்கள்.

30 வயதுக்குள் அனுபவிக்கும் காமமே சிறந்த காமம். அதற்கு பின்பு முதன் முதலில் காமம் அனுபவித்தால் அவ்வளவு இன்பமாக இருக்காது.

பெற்றோர்கள் ஏன் காதல் திருமணத்தை ஆதரிக்கவேண்டும். ::

1. இந்த காலகட்டத்தில் எல்லா வீடுகளிலும் இரண்டு குழந்தைகள் தான் இருக்கிறது. வயதான காலத்தில் பிள்ளை தன்னை காப்பாற்றுவான் என்பது நம்பிக்கை. பெண்களும் காப்பாற்றுவார்கள்.
அவர்களுக்கு கால காலத்தில் காமம் அனுபவிக்க திருமணம் செய்வது அவசியம். அவர்கள் யாரையாவது காதலிப்பதாக கூறினால், நல்லவிதமாக புரிய வைக்கலாம். சமூகத்தில் பார்த்து திருமணம் செய்வதால, ஏற்பட கூடிய நன்மைகளை விரிவாக கூறலாம். ஏற்கனவே வயது அதிகமாகிவிட்டிருந்தாலும், சமூகத்தில் வரன் அமைவது சிக்கலாக இருந்தாலும், அவர்களது காதலை ஆதரித்து, திருமணம் செய்து வைக்கலாம்

காதலை பிரிக்கிறேன் என்று மிரட்டுவது, பூட்டி வைப்பது, வெளியே அனுப்பாமல் இருப்பது, படிப்பை நிறுத்துவது, வேலைக்கு அனுப்பாமல் இருப்பது போன்ற காரியங்களை செய்யகூடாது. கட்டப்பஞ்சாயத்து மூலமாகவோ, சமூக அமைபுகளின் மூலமாகவோ காதலை முறியடிக்க முடியாது ;  கௌரவ கொலைகளும் செய்ய முடியாது கூடாது. பெற்றோர் அப்படி நடந்துகொண்டால்  அவர்கள் உங்களுக்கு அவமானத்தை தேடி தந்து உங்களுக்கு தெரியமாலேயே திருமணம் செய்துகொள்வார்கள். வீட்டை விட்டு ஓடிபோவார்கள் ; வீட்டிற்க்கு இழுத்துகொண்டு வருவார்கள்.

உங்கள் பேச்சை கேட்டும், சமூக கௌரவத்திற்க்காகவும் அவர்கள் காதலை தியாகம் செய்து தனிமையில் வாழ்ந்தால், அவ்வாறு வாழும் பெண்களை இந்த சமூகம் பலவேறு விதமாக பேசுகிறது. எந்த சமூகத்திற்க்காக , தங்களது காதலை துறந்தார்களோ , அந்த சமூகமே அவர்களை இழிவாக பேசுகிறது. அவர்களும் குடும்ப நிகழ்சிகளில் / சமூக நிகழ்சிகளில் பங்கு கொள்ள விருப்பம் ஏற்படுவதில்லை. அப்படியே கலந்து கொண்டாலும், அவர்களது திருமணம் ஆகாத நிலைக்கு அவர்களையே காரணமாக சொல்லி தூற்றூகிறது. பெண்களுக்கு இந்த நிலை என்றால், ஆண்களை சமூக உறவினர்கள் கூட தங்கள் வீட்டிற்கு அழைக்க தயங்குகிறார்கள். அவர்கள் மூலம் தங்கள் வீட்டு பெண்களுக்கு ஏதேனும் ஆபத்து அசிங்கம் ஏற்ப்பட்டு விடுமோ என்று நினைக்கிறார்கள்.
இப்படி தனிமையில் வாழ நேரிடும் அணுக்கும் பெண்ணுக்கும் ஏற்ப்படும் காம உணர்ச்சியால், அதை அவர்கள் தவறான வழியில் தேடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பெயரை கெடுத்து கொள்வதுடன் மனதையும் உடலையும் கெடுத்து கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்

வயதான காலத்தில் மகனையோ அல்லது மகளையோ சார்ந்து வாழ வேண்டிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களது இளமை கால வாழ்க்கைக்கு முட்டு கட்டை போட்டால், அதுவே உங்கள் மீது வெறுப்பை வளர்த்து விடும். அவர்களுடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்ப்படும். பொருளாதார உதவிகளும் கிடைக்காமல் போய்விடும். உடல்நல குறைவு ஏற்ப்படும் போது, பெற்ற பிள்ளைகள் உடனிருந்து கவனித்தால் தான் மனநிறைவு ஏற்ப்படும். உங்களிடம் பணம் இருந்தாலும் , உங்களை கவனித்து கொள்ள ஆள் வேண்டும் என்ற நிலை ஏற்ப்படும் போது, அவர்கள் உங்களை கவனித்துகொள்ள மாட்டார்கள். முதியோர் இல்லத்திலோ அல்லது அனாதை இல்லத்திலோ போய் வாழ வேண்டிய நிலை ஏற்ப்படும். அது உங்களுக்கும் அவமானம். அவர்களுக்கும் அவமானம்.

எந்த சமூகத்திற்க்காக காதல் திருமணத்தை எதிர்த்து, பிள்ளைகளை ஒதுக்குகிறிர்களோ அந்த சமூகம் உங்களுக்கு உதவி தேவைப்படும் போது  உதவ முன்வராது. சமூக அந்தஸ்தை காப்பாற்றுபவர்களுக்கு , அவர்களது கடைசி காலத்தில் உதவி செய்வதற்கென்று, எந்த சமூக அமைப்புகளும் இல்லை. உறவினர்களிடம் சென்று உதவி கேட்டாலும், , அவர்களும் உதவும் நிலையில் இருக்கமாட்டார்கள். விரும்பமாட்டார்கள். பிள்ளைகளிடம் சென்று வாழுங்கள் என்று தான் கூறுவார்கள். பிள்ளைகளின் விருப்பபடி காதல் திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் எத்தனையோ பேர் அப்படி தான் செய்திருக்கிறார்கள் என்றும் நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் என்று உங்களது உறவினர்களும், சமூக மக்களும் கைவிட்டு விடுவார்கள்.

2. மேலும், பெண்களை பெற்றவர்களால், ஆண்கள் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு செலவு செய்து திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில் இருப்பதாலும், பெண்களின் எதிர்ப்பார்புகளுக்கு ஏற்ப ஆண்களை தேட முடியாத நிலையில் இருக்கும் போது, காதல் திருமணங்களை ஆதரிக்க வேண்டும். அவர்களாகவே முடிவு செய்யும் போது, பெற்றோர்களுக்கு இந்த பொருளாதார பிரச்சனை ஏற்ப்படாது. அவர்களது எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர்களது துணையை தேடிக்கொள்வார்கள். எனவே, காதல் ஏற்ப்பட்டு விட்டது என்று கூறினால், அவர்களை பற்றி விசாரித்து திருமணம் செய்து வைத்துவிடுங்கள்.

இன்றைக்கு சமூகத்தில் திருமண வயதை கடந்து பல ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஜாதகம் பார்ப்பதை நிறுத்திவிட்டு, மற்ற எதிர்ப்பார்ப்புகளையும் நிறுத்திவிட்டு அவர்களுள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டால், இன்றைக்கு அவதிப்பட்டுகொண்டிருக்கும் ஆண் பெண் நிச்சியமாக ஒரு நல்ல வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும். முயற்சி செய்து தான் பாருங்களேன்.

காதல் திருமணம் செய்தால், சமூகம் சீரழிந்து விடும் என்பது மிகப்பெரிய முட்டாள்தனம். சமூக கலாச்சாரம் என்று ஒன்று கிடையாது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த்து போலவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூக காலச்சாரம் எவ்வளோ மாறிவிட்டது. காதல் திருமணங்கள் கூடாது என்பவர்கள், சமூகத்து ஆண் பெண்களை சமமாக பழகவிடுங்கள். சமூகத்திலேயே அவர்களுக்கு துணை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்ப்பட்டால், அவர்கள் வேறு சமூக பெண்களை நாடுவது குறையும்.  மேலும், பெண் வீட்டாரிடமிருந்து எதிர்ப்பார்ப்புகளை குறைத்துகொள்ளுங்கள். பெண்களுக்கும் நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருக்கிறது. ஆண்களை விட பெண்களுக்கு தான் நிறைய எதிர்ப்பார்புகள் இருக்கிறது.

சமூகத்தில் எல்லா பெண்களுக்கும் அவர்கள் எதிர்பார்ப்பது போல ஆண்கள் கிடைக்கமாட்டார்கள்.. பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையை நிம்மதியாக சந்தோசமாக வைத்திருக்க உதவாது.  

இப்படியே வேறு சமூகத்து பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தால், சமூகம் அழிந்து விடும் என்று கூறப்படுகிறது. சமூகம்(ஜாதி) என்பது தொட்டு உணரகூடியது அல்ல. பார்த்து அறிய கூடியது அல்ல. ஜாதி என்பது ஒரு சொல். சௌராஷ்ட்ரா சமூகத்திற்க்கு மொழிதான் அடையாளம்.

காதல் திருமணங்களால் தான் சமூகம் அழிந்து விடுமா. இன்று சொந்த ஊரில் இருந்து குடிபெயர்ந்து வேறு மாநிலங்களில் , வேறு நாடுகளில் வாழும் சமூக மக்களுக்கு அவர்களது மொழி தெரிவதில்லை. வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு, அவர்களது பெற்றோர் இருக்கும் வரை தான், சொந்த ஊருக்கு வந்து சொந்தங்களை வந்து பார்த்துவிட்டு பாக்கியம் கிடைக்கிறது. பெற்றோர்களின் மறைவுக்கு பிறகு அங்கேயே வாழும் சூழ்நிலையில் மொழியும் தெரிவதில்லை. கலாச்சாரமும் தெரிவதில்லை. இரண்டு தலைமுறையில் சமூகத்திலிருந்து பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படுகிறது. இவ்வாறு சமூகம் சிறிது சிறிதாக அழிந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் ஒரு நூற்றாண்டில், சமூகம் மற்ற சமூகங்களுடன் கலந்து ஒரு கலவையாக தான் இருக்கும். அதை யாரலும் தடுத்து நிறுத்தமுடியாது.

இந்த நிலையில் உள்ளூரில் வாழும் சமூக மக்கள் வேறு சமூக மக்களுடன் காதல் திருமணங்கள் செய்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டாலும், அந்த சமூக ஆணுக்கும் பெண்ணுக்கும் மொழியை கற்றுக்கொடுப்பதன் மூலம் , சமூகத்திற்க்கு ஒரு புதியவரை அழைத்து வர முடியும். இதன் மூலம் இந்த சமூக தொடர்ச்சியை இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். அதற்கு பிறகு என்ன செய்வது என்பதை அடுத்த தலைமுறைகள் முடிவுசெய்யும்.

பள்ளியில் படிக்கும் போதும், கல்லூரியில் படிக்கும் போதும், சிறு வயதிலேயே அரிப்புக்கு ஆள் தேடி ஓடிப்போவருக்கு மேலே கூறியவை பொருந்தாது.


No comments:

Post a Comment