Friday 15 November 2013

சௌராஷ்ட்ரா சமூகம் - ஜாதிகள் - பகுதி 2


சௌராஷ்ட்ரா ஜாதிகள் ::

இக்கட்டுரையின் முதல் பகுதியில், சௌராஷ்ட்ரா மொழி இன சமூகத்தில் ஆரம்ப காலங்களில் ஜாதிகள் இருந்திருக்கும் என்றும் , ஆனால், தமிழ்நாட்டில் குடியேறிய பிறகு , 4 வர்ண மக்களில் 3 வர்ண மக்கள் தங்களை ஒரே ஜாதியாக முன்னிறுத்தி, சௌராஷ்ட்டிரர்கள் என்ற பொது ஜாதி பெயரில் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தேன்.
இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் குடியேறிய காலங்களில் இங்கு வாழ்ந்த மக்களின் மொழியை அறிந்து அவருக்கு இனையாக சமூகத்தில் வாழ சிரமப்பட்ட நிலையில் சௌராஷ்ட்ரா சமூக ஆர்வலர்கள் தங்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினராக கருதி, சிறப்பு சலுகைகளை வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மொழிவாரி சிறுபான்மை இனத்தவர் அனைவரையும் பிந்தங்கியோர் பட்டியலில் இனைத்து அவர்களுக்கு கிடைத்த அனைத்து சலுகைகளையும் சௌராஷ்ட்ரா சமுகத்தினரும் அடைய வழி வகை செய்யப்பட்டது.
இதன் மூலம் நான் உறுதிபடுத்தும் விசயம் யாதெனில், சௌராஷ்ட்ரா சமுகத்தில் ஜாதிகள் இல்லையென்றும், பின்தங்கியோர் பட்டியலில் இணைக்கப்பட்டதற்க்கு காரணம் மொழிவாரி சிறுபான்மையினர் என்பதே காரணம் என்பதை வலியுருத்துகிறேன்.
ஆனால், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பின்தங்கியோர் பட்டியலிலும், மிகவும் பின்தங்கியோர் பட்டியலிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலிலும் இருப்பவர்கள் ஜாதிய அடிப்படையில் சேர்க்கப்பட்டவர்கள். ஜாதி என்பது செய்யும் தொழிலின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்.
ஆனால், சௌராஷ்ட்ரர்கள், செய்யும் தொழில் மூலம் ஜாதியாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் பேசும் மொழியின் அடிப்படையில் சிறுபானமையினர் என்ற அடிப்படையில் பின்தங்கியவர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள்.


ஆனால் சமீப காலமாக   சில சௌராஷ்ட்டிர தனிநபர்களும், சில அமைப்புகளும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றி அதை அரசுக்கு அனுப்பி செயல்படுத்த நினைக்கின்றனர். அவை ;
1.பின் தங்கியோர் பட்டியலில் இருக்கும் தங்களுக்கு 2% உள் ஒதுக்கீடு தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.
2.தங்களை, பின்தங்கியோர் பட்டியலிலிருந்து மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் இனைக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.
இவர்கள் இப்படி கேட்பதற்கு காரணம், கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்புகளிலும் அதிக எண்ணிக்கையில் சௌராஷ்ட்டிரர்கள் இடம் பிடிக்க முடியும் என்பதும், அதன் மூலம் சௌராஷ்ட்ரா சமூகம் முன்னேற்றம் அடையும் என்பதும்.
இன்றைய சமூக சூழ்நிலையில், சௌராஷ்டிரர்களை என்ன ஜாதி என்று கேட்டால் நாம் சௌராஷ்ட்டிரர்கள் என்று கூறுகிறோம். ஆனால், பலருக்கு அது புரிவதில்லை. அதை மொழியின் பெயர் என்று அறிந்தவர்கள் கூட மீண்டும் என்ன ஜாதி என்று கேட்கின்றனர். பின்பு, “பின்தங்கிய வகுப்பா ? என்ற கேள்வி தொக்கி நிற்பது போல கேட்கின்றனர். பின்தங்கிய வகுப்பு என்றாலே ஏதோ இழிமையான தொழில் செய்போர் போல எண்ணுகின்றனர். மேலும் எந்த தொழில் செய்பவர்கள் என்ற கேள்வி அவர்கள் மனதில் எழுதுகிறது. ஆனால் இவைகளை அவர்கள் நேரடியாக கேட்பதில்லை காரணம் சட்டபிரகாரம் அப்படி கேடக்கூடாது என்பதும் இழிவு படுத்தகூடாது என்பதும்.
இக்கட்டுரையின் முதல் பகுதியை எழுதும் முன்பும், பின்பும் சௌராஷ்ட் ரர்களிடம் பேசிய போது, சௌராஷ்ட்ரர்கள் அனைவரும் பிராமனர்கள் என்ற எண்ணத்திலேயே பேசினர். சௌராஷ்ட்டிரர்களிடம் ஜாதி இல்லை என்று கூறினர்.
முதல் சௌராஷ்ட்ரா பிராமன மாநாடு நடந்த போது கலந்து கொண்டவர்களின் பெயர்களை பார்த்தாலே சௌராஷ்ட்டிரர்களிடம் ஜாதி வேற்றுமை இருந்தது என்பது தெளிவாக தெரியும்.(1) கிருஷ்ணசுவாமி பாகவதர் (2) இராமசுவாமி ஐயர் (3) ராமலிங்கய்யர்(4) சுப்பய்யர் என்று எல்லா பெயர்களும் ஐயர் என்றும் பாகவதர் என்றும் முடியும் பெயர்களை கொண்டவர்கள் தான் கலந்து கொண்டுள்ளனர். ஐயங்கார் என்ற பெயருடன் முடியும் பெயர்களை கொண்டவர்களை கான முடியவில்லை. மேலும் ஐயர் என்ற பெயர் இல்லாதவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

சௌராஷ்ட்ரா பிராமணர்கள் ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை மட்டுமே விவாதித்துள்ளனர்.
சௌராஷ்ட்ரா பிராமணர்கள் மற்ற பிராமணர்களுக்கு இனையானவர்கள் என்று தான் ராணி மங்கமாளிடமிருந்து சாசணம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. எல்லா சௌராஷ்ட்ரார்களும் பிராமணர்கள் என்று சாசனம் எழுதி வாங்கப்படவில்லை. இதிலிருந்து தெரிவது சௌராஷ்ட்ரா சமூகத்தில் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதவர் இருந்துள்ளனர் என்பதே.
இப்போது, சௌராஷ்ட்ரா சமூகத்தை ஜாதிய அடிப்படையில் மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் இனைக்க வேண்டும் என்போர்  சமூகத்தில் பிராமணர், வைசியர், சத்திரியர் மற்றும் சூத்திரர் என்ற பாகுபாட்டை ஏற்படுத்துவார்களா ? குடும்ப பெயர்களை ஜாதிபெயர்களாக மாற்றி, FORWARD, BACKWARD, MOST BACKWARD, SCHEDULE CASE AND SCHEDULE TRIBE என்று பிரிப்பார்களா ? இவற்றை சௌராஷ்ட்ரா சமூக மக்கள் ஒப்புகொள்வார்களா ?
இன்றைக்கு மிகவும் பின்தங்கிய வகுப்பில் சேர்க்க வேண்டும் என்பதை ஒப்புகொண்டால், நாளை யாரவது SCHEDULE CASTE பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்புவார்கள்.
அமைதியாக ஒரே ஜாதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தை பிரிவினைக்கு உள்ளாக்குவது சரியா ?
இந்த சூழ்நிலையில் சௌராஷ்ட்ரா சமூகத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் இனைத்தால் சமூகத்தில், சௌராஷ்ட்டிரர்களின் அந்தஸ்த்து குறையும். மிகவும் இழிதொழிலை செய்வோர் என்று நினைக்ககூடும். இன்றைக்கு சௌராஷ்ட்டிரர்களுக்கு கிடைக்கும் நல்ல அந்தஸ்த்து கிடைக்காது.
ஒரு சில இடங்கள் கல்வி நிறுவனங்களில், வேலைவாய்புகளில் அதிகம் கிடைக்கும் என்பதற்காக ஒட்டு மொத்த சமூக மக்களின் சமூக அந்தஸ்த்தையும் கீழ்நோக்கி இட்டு செல்வது எந்த விதத்தில் நியாயம்.
நல்ல சமூக அந்தஸ்த்தில் இருப்பவர்கள் ஏன் இழிநிலைக்கு செல்லவேண்டும். சமூக மக்களை முன்னேற்ற இதை விட பலவழிகள் உள்ளன.
இவை சமூக அக்கறைக்காக செய்யபடும் செயல் அல்ல. சில அரசியல்வாதிகளும், அரசியல் வாழ்வில் ஈடுபட நினைப்பவர்களும், அவர்களுக்கு துனைபுரியும் சமுக அமைப்புகளும் தனிப்பட்ட நலனுக்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் கீழ்நோக்கி இழுத்து செல்கின்றன.
ஜாதிய அடிப்படையில் ஓதுக்கீடு செய்வது, சமூகத்தில் கீழ்நிலையில் இருப்போர் மேல்நோக்கி முன்னேற வேண்டும் என்பதற்காவும், அவர்களும் சமூகத்தில் சமமாக மதிக்கபடவேண்டும் என்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது
ஆனால், சௌராஷ்ட்ரா சமூகத்தில் சிலர் மக்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து, இதன் மூலம் சமூக மக்களுக்கு பெரிய ஆதாயம் கிடைக்கும் என்பது போல .தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் அவர்களது தனிப்பட்ட ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள முயற்சி செய்கின்றனர்.
சௌராஷ்ட்டிரர்கள் உயர் ஜாதி என்று சொல்லி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது நோக்கம் அல்ல. அதே சமயம் கீழ்ஜாதி என்று சொல்லி அவமானப்படவேண்டிய அவசியமும் இல்லை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு, வேறு வழிகளில் சமூகத்தை முன்னேற்ற முயற்சி செய்யவேண்டும்.
உலகத்தில் எந்த சமூகமாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் பொருளாதர நிலையில் எல்லோரும் சமமாக இருக்கமுடியாது. எனவே சமூக ஏற்ற தாழ்வுகள் இருக்கதான் செய்யும். அதை எவராலும், ஆண்டவனாலும் மாற்ற முடியாது.
இந்தியாவில் ஜாதிய அடிப்படையில் ஏற்ற தாழ்வுகள் இருப்பது போல மற்ற நாடுகளில் மக்களின் நிற அடிப்படையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது. மக்களிடையே ஏதேனும் ஒரு விதத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.
ஏற்ற தாழ்வுகளை களைய தன்னை தானே, தனது சமுகத்தை தாழ்த்தி, சில பொருளாதார பயன்களை பெறுவதன் மூலம் சமூகத்தை பொருளாதார நிலையிலும் சமூக அந்தஸ்த்து நிலையிலும் உயர்த்தமுடியாது என்பதை உணர வேண்டும்.
இது எவ்வளவு பொய்யான தகவல் என்பதை கீழ்காணும் அட்டவனையை பார்பதன் மூலம் அறிந்துகொள்வீர்கள்.
இந்த முயற்சியை யார் எடுத்தாலும் , எங்கு எடுத்தாலும் , எப்போது
எடுத்தாலும் அதை தீவிரமாக எதிர்ப்பேன்.










ENGINEERING SEATS ALLOCATION
TOTAL ENGINEERING COLLEGES IN TAMIL NADU
570

GOVT. COLLEGES
6

GOVT.AIDED COLLEGES
3

SELF FINANCE COLLEGES
511

TOTAL NO.OF SEATS
2,05,000

TOTAL NO.OF SEATS FOR GOVT.QUOTA 69%
1,41,450

TOTAL NO.OF SEATS FOR MANAGEMENT QUOTA
63,550
BACKWARD CLASS 30% (GENERAL 26.5% = 54,325
& MUSLIMS 3.5% = 7,175)

61,500
MOST BACKWARD CLASS 20%
41,000
SCHEDULE CLASS 18% (GENERAL 15%  = 30,750
& ARUNTHATHIYAR 3% =6,150 )
36,900
SCHEDULE TRIBES 1%

2,050

IN 2013, ABOUT 80% OF MANAGEMENT QUOTA SEATS SURRENDERED TO GOVT. QUOTA FOR NOT ABLE TO FILL UP THE SEATS BY MANAGEMENT
சௌராஷ்ட்ரர்கள்
61,500  இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை பெறுவது நல்லதா
அல்லது
41,000 இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை பெறுவது நல்லதா
அல்லது
பின்தங்கிய வகுப்பில் 2% உள் ஒதுக்கீடு கேட்டு 1,230 இடங்களில் அதிக இடங்களை பெறுவது

MEDICAL  SEATS ALLOCATION
TOTAL MEDICAL COLLEGES IN TAMIL NADU

35
GOVT. COLLEGES

18
GOVT.AIDED COLLEGES
17

SELF FINANCE COLLEGES
511

TOTAL NO.OF SEATS IN GOVT. MEDICAL COLLEGES
2,145

ALL INDIA QUOTA SEATS

322
STATE GOVT.QUOTA

1,823
TOTAL NO.OF SEATS FOR GOVT.QUOTA 69%  OF 1,823
1,258
TOTAL NO.OF SEATS FOR MANAGEMENT QUOTA
565
BACKWARD CLASS 30% (GENERAL 26.5% = 483
& MUSLIMS 3.5% =64 )

547
MOST BACKWARD CLASS 20%
365
SCHEDULE CLASS 18% (GENERAL 15%  273 =
& ARUNTHATHIYAR 3% = 55)
328
SCHEDULE TRIBES 1%

18
சௌராஷ்ட்ரர்கள்
547  இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை பெறுவது நல்லதா
அல்லது
365 இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை பெறுவது நல்லதா
அல்லது
பின்தங்கிய வகுப்பில் 2% உள் ஒதுக்கீடு கேட்டு 11 இடங்களில் அதிக இடங்களை பெறுவது


1 comment:

  1. kOn gumpum (category) rhiyeti, amko beneficial menatte Statistics analyse kereti kaLaayi.
    ami mene vEngum Government amko mbc mu cherchuttaigaa? teka norms kaayo?
    telyo prove kerattak avre jovaLkaay statistics sEtte?

    vasadhi sEttenu bc quota mu compete kernaattak soDi dEngaa? (so that durbal oNTe teko seat abbayi).
    Conceptual thinking meneti kaayo menatte amko kaLaanaa !

    ReplyDelete