Friday 22 November 2013

சௌராஷ் ட்ரா சமூகம் - குலதெய்வங்கள்


சௌராஷ்ட்ரா குலதெய்வங்கள்::


தமிழ் நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா மொழி இன மக்கள் வரலாற்றில் இதுவரை இடம் பெயராத விசயங்களில் ஒன்று அவர்களின் குல தெய்வம்  பற்றியது .
எந்த ஒரு சமூகத்திற்கும் குல தெய்வம் என்று ஒன்று உண்டு. அந்த குல தெய்வத்திற்கும் ஒரு தல வரலாறு இருக்கும். அந்த சமூக மக்கள் , அந்த குல தெய்வ கோவில்களில் தான், குழந்தைகளுக்கு முடி காணிக்கை (முதல் மொட்டை)  மற்றும் காதனி விழா செய்வார்கள். சில சமயங்களில் அங்குதான் திருமணம் போன்ற சுபகாரியங்களையும் செய்வார்கள். குல தெய்வ கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தவறாமல் கலந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.
இந்து மதத்தில், பிராமணர்கள் பொதுவாக சைவர்கள் மற்றும் வைணவர்கள் என பிரிந்துள்ளனர். மற்ற வகுப்பினர்களில் அந்த பாகுபாடு அதிகம் காணப்படுவதில்லை. சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் யார் உயர்ந்தவர்கள் என்ற தர்கம் , இந்த பிரிவுகள் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கிறது.
சைவர்கள் நெற்றியில் விபூதில் பட்டை அடிப்பார்கள் (வலமிருந்து இடமாக மூன்று கோடுகள். இவர்கள் சிவபெருமானை வழிபடுபவர்கள்.பொதுவாக லிங்க வடிவத்தில் இருக்கும் சிலைகளை வழிபடுபவர்கள். சிவனின் மற்ற அவதாரங்களின் வடிவங்களையும் , சிவனின் பிள்ளையென கூறப்படும் முருக கடவுளையும் வழிபடுவார்கள். சிவனை குல தெய்வமாக வழிபடுபவர்கள் பெரும்பாலும் சிவன் கோவிலில் மொட்டியடித்து காது குத்துவது கிடையாது. பெரும்பாலும் முருகன் கோவிலில் காவடி எடுத்தோ, அல்லது காவடி எடுக்காமலோ மொட்டையடித்து காது குத்துவார்கள். வீடுகளில் சிறிய வடிவில் சிவபெருமானின் சிலைகலையும் , லிங்க வடிவ சிலைகலையும் , முருகன் சிலையையும் படமும் பூசை அறையில் வைத்து வழிபடுவார்கள். வேறு சில அம்மன் / தேவி சிலைகள் அல்லது படங்கள் இருக்கும். வைணவர்கள் வணங்கும் தெய்வ சிலைகள் படங்கள் இருக்காது

வைணவர்கள் நெற்றியில் நாமம் போடுவார்கள் . கீழிருந்து மேலாக மூன்று கோடுகள். அவை U வடிவிலும் Y வடிவிலும் இருக்கும். இதற்கு வடகலை, தென்கலை என்று பெயர். இவர்கள் விஷ்ணுவை வழிபடுபவர்கள். விஷ்ணுவின் பொதுபெயர் பெருமாள். விஷ்ணுவின் மற்ற அவதார வடிவங்களையும் வழிபடுவார்கள். இவர்கள் பெருமால் கோவில்களில் காவடி எடுத்தோ, அல்லது காவடி எடுக்காமலோ மொட்டையடித்து காது குத்துவார்கள் .விஷ்ணுவின் சிலைகலையும், படங்களையும் பூசை அறையில் வைத்து வழிபடுவார்கள்.வேறு சில அம்மன் / தேவி சிலைகள் அல்லது படங்கள் இருக்கும். சைவர்கள் வணங்கும் தெய்வ சிலைகள் படங்கள் இருக்காது.
இதை தவிர பெரும்பாலன மக்கள் அம்மன் சிலைகளை வணங்குவார்கள். அவைளில் சிவபெருமானின் மனைவி பார்வதி தேவி மற்றும் விஷ்ணுவின் மனைவி மகாலட்சுமியின் அவதார பெயர்கள் கொண்ட அம்மன் / தேவி சிலைகள் இருக்கும். இதுதவிர சுயம்புவாக அவதரித்த வேறு சில அம்மன் / தேவி சிலைகளை வைத்து வணங்குபவர்களும் உண்டு. கிராம புறங்களில் பல்வேறு ஆண் தெய்வங்களும் பெண் தெய்வங்களும் உண்டு. அவைகளுக்கு பல்வேறு தல புராணங்கள் இருக்கும்
தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா மொழி இன மக்களும் மேற்கூரிய முறைகளிலேயே தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர்

தமிழ் பிராமண மக்கள் தங்களுடைய பெயருடன் ஐயர் மற்றும் ஐயங்கார் என்ற பெயரை இனைத்திருந்தனர். ஆனால், சௌராஷ்ட்ரா பிராமணர்களில் சைவர்கள், வைணவர்கள் & மார்த்துவா (
பஞ்ச கௌடர்களில் மதில் கௌட வகுப்பை சார்ந்தவர்கள் கோபி பஞ்ச முத்திரை உடையவர்கள் ) இருந்தாலும், அவர்கள் நெற்றியில் பட்டையும் , நாமமும் தீட்டியிருந்தாலும் அவர்கள் அனைவரும்  தங்களுடைய பெயருக்கு பின்னால் ஐயர் என்ற பொது பெயரையே தாங்கியிருந்தனர். தற்போதைய தலைமுறை மக்கள் தங்கள் பெயருக்கு பின்னால் ஐயர் என்ற பெயரை இனைத்து கொள்வதில்லை. (தமிழர்களும் தற்சமயம் ஐயர் மற்றும் ஐயங்கார் என்ற பெயர்களை இனைத்துகொள்வதில்ல. பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளும், திராவிட கட்சிகளின் போலி மத மறுப்பு கொள்கைகளும் காரணமாக இருக்கலாம்)
அண்மைகாலங்களில், சௌராஷ்ட்ரா மக்களில் வைணவ பிரிவை சார்ந்தவர்கள் பெருமாளுக்கும் கிருஷ்ணருக்கும் பல கோயில்களை ஏற்படுத்தியிருந்தாலும், சைவ பிரிவினர் சிவபெருமான் கோயில்களை எழுப்பியதாக தெரியவில்லை. 
ஆனால், இன்றைக்கு தமிழ்  நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா மொழி இன மக்களில் பெரும்பான்மையினர் திருப்பதியில் இருக்கும் வெங்கடாஜலபதியையும், சிவன் ,பழனி மற்றும் பல ஊர்களில் இருக்கும் முருகனையும் குல தெய்வங்களாக ஏற்றுகொண்டுள்ளனர்.  சிலர் ஐயப்பனையும் , ரேணுகா தேவியையும் குல தெய்வங்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர். திரோபதி அம்மனையும் வழிபடுகின்றனர்.

ஆனால், இவர்கள் தங்காள் சௌராஷ்ட்ரா தேசத்தில் குடியிருந்த போது இந்த தெய்வங்களை வழிபட்டார்களா அல்லது இவர்கள் வாழ்ந்த பகுதியில் இவர்களுக்கென தனி தெய்வங்கள் இருந்ததா என்ற கேள்வியை யாரும் கேட்டுகொள்ளவில்லை. எனவே இது குறித்து அறியும் முயற்சியை யாரும் மேற்கொள்ளவில்லை என தோன்றுகிறது.

பொதுவாக மக்கள் எந்த நிலையில் தாங்கள் வாழ்ந்த பகுதிகளிலிருந்து வெளியேறியிருந்தாலும், தங்களுடைய குல தெய்வங்களை சுமந்து கொண்டுதான் வெளியேறுவார்கள். அப்படி தான் சௌராஷ்ட்டிரர்கள் வெளியேறியிருப்பார்கள். குடியேறிய பகுதியில் வீடுகளில் வைத்து வணங்கியிருப்பார்கள். ஆனால், மீண்டும் சௌராஷ்ட்ரா தேசம் சென்று , குலதெயவ வழிபாடு செய்ய அந்த கால அரசியல் சூழ்நிலை அமைந்திருக்காது. மேலும், தொலைதாரம் செல்வதற்கு இன்றைய கால கட்டங்களை போல போக்குவரத்து வசதியின்மையும், பொருளாதார நிலைமையும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், குல தெய்வங்களை இங்கு நிறுவி வழிபட முடியாமல் போனதற்கு என்ன காரணமாய் இருக்ககூடும்.

100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சௌராஷ்ட்ரா பிரமாண மாநாட்டில், பிரமானர்களின் ஆச்சார அனுஷ்டானங்களை அனுசரிக்க வேண்டிய விசயங்கள் மட்டுமே பேசப்பட்டுள்ளது. சௌராஷ்ட்ரா தேசத்து குல தெய்வங்களை பற்றி விவாதிக்கப்படவில்லை. அங்கு சென்று குலதெய்வங்களை வழிபடவேண்டும் என்றும், அந்த குலதெய்வங்களுக்கு ஆலயங்கள் நிறுவபட வேண்டும் என்றும் விவாதிக்கப்படவில்லை. மேலும், அந்த பிராமண மாநாட்டில், பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டாலும், கோவில்களை நிர்மானிக்க வேண்டும் என்றோ அல்லது சொராஷ்ட்ரா மக்கள் நிறுவியுள்ள கோவில்களை நிர்வாகிக்கவேண்டும் என்றோ அல்லது கோவில் தெய்வம் சார்ந்த பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்றோ விவாதிக்கப்படவில்லை.

சௌராஷ்ட்ரா தேசத்து குல தெய்வ வழிபாடுகளை மறந்து விட்டார்களா அல்லது 100 வருடங்களுக்கு முன்பு சௌராஷ்ட்ரா மொழி இன மக்கள் தமிழ்நாட்டில் கோயில்களை ஏற்படுத்தவில்லையா ?

சௌராஷ்ட்ரா மொழி இன மக்களின் சரித்திர ஆராய்சி செய்தவர்களும் இன்றுவரை இதுகுறித்து ஏதும் எழுதவில்லை. சௌராஷ்டரா மொழி இன மக்கள் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், தெய்வ வழிபாட்டிலும் எந்த இன மக்களுக்கும் குறைந்தவர்கள் அல்ல .

ஏதெனும் காரணங்களுக்காக , வேண்டுமென்றே அமைதி காத்தார்களா அல்லது அச்சம் காரணமாக அமைதியாக இருந்து , வாழ்விடங்களில் இருந்த தெய்வங்களை குல தெய்வங்களாக ஏற்றுக்கொண்டார்களா ? இது ஆராயப்பட வேண்டிய விசயம்.

உள்ளூர் தெய்வங்களை, குல தெய்வங்களாக ஏற்றுக்கொண்ட சௌராஷ்ட்ரா மொழி இன மக்கள், மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனை(1600 ஆண்டு காலம் பழமை வாய்ந்த கோவில்) குலதெய்வமாக ஏன் ஏற்றுகொள்ளவில்லை. மீனாட்சி அம்மனும் , பார்வதி தேவியின் ஒரு அவதாரம் தானே ?

தெய்வங்களுக்கு பிறப்பு இறப்பு இல்லையென்பதும் அதனால் காலங்களை கணிக்க இயலாது என்பது தெரிந்தாலும், அந்த தெய்வங்களுக்கு எழுப்பபட்ட கோவில்களுக்கு தோரயமான கால நிர்ணயம் உண்டு மற்றும் தல புராணமும் உண்டு. மதுரை மீனாட்சியம்மனை குல தெய்வமாக ஏற்றுகொள்ளாத சௌராஷ்ட்ரா மொழி இன மக்கள், ரேணுகா தேவியையும், திரோபதியையும் எப்படி தங்களது தெய்வங்களாக ஏற்றுக்கொண்டனர்.
ரேணுகா தேவி
சௌராஷ்ட்ரா மக்கள் ஏற்றுக்கொண்ட ரேணுகா தேவி தெய்வத்திற்க்காவது ஒரு வரலாறு இருக்கிறது கிடைத்துள்ள தகவல்களின் படி, ரேணுகா தேவியின் தோற்றம் இதிகாச காலத்தில் இருப்பதால் , சௌராஷ்ட்ரா மொழி இன மக்கள் தமிழ்நாட்டில் குடியேறிய பின்பு குலதெய்வமாக ஏற்றுகொண்டார்களா அல்லது சௌராஷ்ட்ரா தேசத்தில் இருந்த போதிலிருந்தே குல தெய்வமாக வழிபட்டார்களா என தெரியவில்லை
ரேணுகா தேவி மாராட்டிய மாநிலத்தில் இருக்கும் தெய்வம் என சொல்லப்படுகிறது. சௌரஷ்ட்ரா மொழி இன மக்கள் , தமிழ்நாடு வந்து சேருவதற்க்கு முன்பு, இன்றைய மராட்டிய மாநிலத்தில் சில நூற்றாண்டுகள் வாழ்ந்துள்ளனர். எனவே , சௌராஷ்ட்டிரர்கள், மராட்டிய மாநிலத்தில் வாழ்ந்த காலத்தில் ரேணுகா தேவியை குல தெய்வமாக ஏற்றுகொண்டிருக்க வாய்ப்புள்ளது. அல்லது தமிழ்நாட்டில் ரேணுகா தேவி கோயில் அமைந்துள்ள பகுதியிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் வாழ்ந்த சௌராஷ்ட்ரா மொழி இன மக்கள் , உள்ளூரில் கோவிலில் இருந்த தேவியை சாதாரணமாக வழிபட ஆரம்பித்து பின்பு குல தெய்வமாக ஏற்றுக்கொண்டிருக்கலாம். இந்த தேவியின் கோயிலில் குழந்தையின் முடி காணிக்கை ( முதல் மொட்டை) செய்யப்படுகிறதா மற்றும் காது குத்துதல் என்ற சடங்குகள் செய்யப்படுகிறதா என தெரியவில்லை. அல்லது உள்ளூரில் இருக்கும் கோயில்களில் இயற்கையாக செய்யும் வழிபாடும் பிரத்தனைகளும் மற்றும் நேர்த்தி கடன்கள் மட்டும் செய்யப்படுகிறதா.

தட்சன் தான் செய்யும் யாகத்திற்கு தனது மருமகனான சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பாமல் அவமதித்தான்.  சிவபெருமானின் சொல் கேளாமல் சென்ற சக்தி தேவி தன் தந்தையான தட்சனால் அவமதிக்கப்பட்டாள்.  அதனால் கோபமுற்ற தாட்சயனி யோக நிலையில் தன் உயிரை விட்டாள்.  இதனால் பித்து பிடித்த சிவபெருமான் தேவியின் உடலை தோளில் சுமந்தவாறே அலைந்து திரிந்தார்.
சிவன் தேவியின் உடலை தூக்கிக்கொண்டு தாண்டவமாட தேவியின் உடலுறுப்புக்கள் ஒவ்வொன்றாக சிதறி விழுந்தன.  அவ்வாறு சிதறி விழுந்த இடங்களிலெல்லாம் சக்தி பீடங்கள் தோன்றின.  ரத்த துளிகள் விழுந்த இடங்கள் அம்மனின் சிறு சிறு கோவில்களாக தோன்றின.
 
அவ்வாறு தோன்றிய சக்தி பீடமே மகாராஷ்டிர மாநிலம், நான்தேட் மாவட்டம், மாஹுர்கட் என்ற இடத்தில் உள்ள ரேணுகா தேவி ஆலயம் ஆகும்.  மந்திர நூல்களில் வர்ணிக்கப்படும் ரேணுகா தேவி, சக்தியின் அம்சம்.  அந்த சக்தியின் அம்சமான ரேணுகா தேவி, துர்க்கை ஆகியோர் தன் படைகளுடன் வந்து தங்கிய இடமே திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டம், சந்தவாசல் அருகே அமைந்திருக்கும் படைவீடு என்றழைக்கப்படும் அம்மன் கோவில் படைவீடு ஆகும்.  இதற்கு பெரிய கோட்டை என்று பெயர்.  கோட்டை அம்மன் என்பது இத்தலத்து தேவியின் வேறு பெயர் ஆகும்.
காலப்போக்கில் வரலாறு திரிக்கப்பட்டு ரேணுகா தேவி, ஜமதக்கினி முனிவரின் மனைவியாகவும், பரசுராமரின் அன்னையாகவும், கந்தர்வனின் அழகில் மயங்கியதாகவும், அதன் பின்னர் தலை வெட்டுண்டு மறுபடியும் உயிர்தெழுந்ததாகவும் கதைகள் உண்டு.
மந்திர நூல்களில் வர்ணிக்கப்படும் ரேணுகா தேவி முழு உடலை உடையவள்.  சக்தியின் அம்சம்.  கிரீடத்தில் சிவ லிங்கத்தை உடையவள்.  தலையை மட்டும் வழிபாடு செய்யும் வழக்கம் இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. தமிழ் நாட்டில் பல ஊர்களில் ரேணுகா தேவி கோவில் உள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் உள்ள உருவ சிலைகள் வேவ்வெறு விதமாக உள்ளது.
திரோபதி அம்மன்
சௌராஷ்ட்ரா மொழி இன மக்களில் கணிசமான மக்கள் திரௌபதி அம்மனை வழிபடுகின்றனர். திரௌபதி அம்மனுக்கு எந்த வரலாறும் கிடையாது. திரௌபதி, சிவபெருமானின் மனைவி பார்வதியின் அவதாரமும் அல்ல விஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமியின் அவதாரமும் அல்ல.
திரௌபதி மகாபரதத்தில் பஞ்ச பாண்டவர்களின் மனைவி. அவர் தெய்வ நிலையை அடைந்தார் என்ற தகவலும் மகாபரதத்தில் இல்லை. அப்படியிருக்கும் போது, சௌராஷ்ட்ரர்கள் அவரை தெய்வமாக வழிபடுவதுடன் அவருக்கு கோயிலும் கட்டியது எதன் அடிப்படையில் என புரியவில்லை
ஆனால், 500-1000 வருடங்கள் பழமையான மதுரை தவிட்டு சந்தையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் வரலாறு இவ்வாறு உள்ளது:
கண்ணகி தனது கணவன் கோவலனை கொன்றதற்காக பாண்டிய மன்னன் மீதும், பாண்டிய நாட்டின் மீதும் கோபம் கொண்டு மதுரையை எரித்தாள். இனிவரும் காலங்களில் மதுரை எந்தவித பாதிப்பும் அடையாமல் இருக்க பாண்டிய நாட்டு மக்கள் பார்வதியை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பார்வதி அசரீரியாக, பஞ்ச பாண்டவர்களின் துணைவி திரவுபதி. பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் சக்தியாக இவள் கருதப்படுகிறாள். பஞ்சபூத சீற்றங்களினால் மதுரை நகரம் பாதிப்படையாமல் இருப்பதற்காக இவளுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள் என்று கூறியதாகவும் அதன் அடிப்படையில் இப்பகுதி மக்கள் திரௌபதிக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருவதாகவும் தல வரலாறு கூறுகிறது.
தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. தல புராணங்கள் மாறுபட்டு உள்ளது. ஆனால், இன்றைய வட இந்தியாவில் குறிப்பாக குஜராத், மாகராஷ்டிரம், கர்நாடகா பகுதிகளில் திரொபதி அம்மன் கோவில் காணவில்லை


மகாபாரத கதை இன்றைய இந்தியாவின் வடக்கு பகுதியில் நடந்துள்ளது. இன்றைய திராவிடர்களின் கூற்றுப்படி இன்றைய இந்திய தேசத்தின் வடபகுதியிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள். எனவேஆரிய பகுதியிலிருந்து வந்த சௌராஷ்ட்ரர்கள், மகாபாரத கதையின் , கதாநாயகி திரௌபதியை தெய்வாமாக ஏற்றுகொண்டிருப்பார்கள் என தோன்றுகிறது.
னால், இந்த தேவியின் கோயிலில் குழந்தையின் முடி காணிக்கை ( முதல் மொட்டை) செய்யப்படுகிறதா மற்றும் காது குத்துதல் என்ற சடங்குகள் செய்யப்படுகிறதா என தெரியவில்லை. அல்லது உள்ளூரில் இருக்கும் கோயில்களில் இயற்கையாக செய்யும் வழிபாடும் பிரத்தனைகளும் மற்றும் நேர்த்தி கடன்கள் மட்டும் செய்யப்படுகிறதா என தெரியவில்லை.



சுவாமி ஐயப்பனை
சௌராஷ்ட்ரா மொழி இன மக்களில் கணிசமான மக்கள் சுவாமி ஐயப்பனை குலதெய்வமாக வழிபடுகின்றனர். இதற்கு காரணம் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என்ற பொதுநம்பிக்கையாகவும் இருக்கலாம். அல்லது தமிழ்நாட்டில் வாழ்ந்த சௌராஷ்ட்ரா மொழி இன மக்களின் புஷ்கலை என்ற பெண்னை சுவாமி ஐயப்பன் திருமணம் செய்து கொண்டதாக வரலாற்று நம்பிக்கை இருப்பதன் காரணமாகவும் குல தெய்வமாக ஏற்றுகொள்ளப்பட்டிருக்கலாம்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தால், சுவாமி ஐயப்பனின் மனைவியாக உள்ள சொராஷ்ட்ரா சமூக பெண் புஷ்கலை தானே அம்மன் அல்லது தேவி என்ற பெயரில் வணங்கப்படவேண்டும். சுவாமி ஐயப்பனை குலதெய்வமாக ஏற்றுகொண்டதற்கான காரணம் தெரியவில்லை.
சபரிமலையில் பிரம்மச்சாரியாக உள்ள ஐயப்பன் ஆரியங்க்காவு கோவிலில் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராகக் காட்சி தருகிறார் என கூறப்படுகிறது.
ஆரியங்க்காவு கோவிலின் தலவரலாறு இவ்வாறு கூறப்படுகிறது. மதுரையிலிந்து  திருவிதாங்கூர் மன்னருக்கு துணி நெய்துதரும் சௌராஷ்ட்ரா இன வியாபாரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் அவ்வாறு மதுரையிலிருந்து திருவிதாங்கூருக்கு துணிவிற்கச் செல்லும்போது தனது மகள் புஷ்கலையைக் கூட்டிச் சென்றார். ஆனால் பாண்டிய நாடு தாண்டி ஆரியங்காடு சென்றதும் புஷ்கலை அடர்ந்த காட்டில் பயணம் செய்யப் பயப்பட்டாள். அதனால் வியாபாரி தன் மகளை ஆரியங்காவு ஐயப்பன் கோவில் பூசாரியின் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டுத் தன் பயணத்தை தொடர்ந்தார். புஷ்கலை ஐயப்பன் கோவிலுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து வர, அவள் ஐயப்பனிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது.
திருவிதாங்கூரில் தன் வியாபாரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய வியாபாரியை ஒரு மதயானை துரத்தியது. ஒரு இளைஞன் மதயானையை விரட்டியடித்து, பயந்து ஓடிய அவரைக் காப்பாற்றினான். வியாபாரி தன்னைக் காப்பாற்றிய அவ்விளைஞனுக்குத் தான் செய்யக்கூடிய உதவி என்ன என்பதை வினவ, அவன் அவரது மகளைத் தனக்குத் திருமணம் செய்துதரும்படிக் கேட்டான். அவரும் அவ்வாறே செய்வதாக உறுதியளித்தார்.
ஆரியங்காடு வந்த வியாபாரி தான் காட்டில் கண்ட இளைஞனின் உருவம் போன்றேயுள்ள ஐயப்பனைக் கோவிலில் கண்டு ஐயப்பனின் கருத்தை உணர்ந்து கொண்டார். திருவிதாங்கூர் மன்னரின் சம்மதத்துடன் மதுரையிலிருந்த சொந்தபந்தங்கள் சீர்வரிசை எடுத்துவர ஐயப்பனுக்கும் புஷ்கலைக்கும் திருமணம் ஏற்பாடாகியது. ஐயப்பன் நேரில் தோன்றி புஷ்கலையைக் கரம்பற்றியதாக மரபுவழிச் செய்தி கூறுகிறது.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இத்திருமண விழா கொண்டாடப்படுகிறது. அவ்விழாவிற்கு இப்பொழுதும் மதுரையில் வாழும் சௌராஷ்டிர இனத்தவர் சீர் எடுத்து வரும் வழக்கம் உள்ளது.
மேற்கூரிய வரலாறு உண்மையாக இருக்கும்பட்சத்தில், சௌராஷ்ட்ரா மக்கள் தமிழ்நாட்டில் குடியேறிய பிறகே, சுவாமி ஐயப்பனை குல தெய்வமாக ஏற்றிருக்கமுடியும். சுமார் 1000-1200 ஆண்டுகளில் தான் இந்த வரலாறு தோன்றியிருக்கும் இப்படி சிறப்பான வரலாறுருடன் இருக்கும் புஷ்பகலையின்   சிலையோ, உருவப்படமோ காண கிடைக்கவில்லை. புஷ்பகலை என்ற பெண்ணின் சௌராஷ்ட்ரா குடும்ப பெயர் என்னவென்றும், தாய் தந்தையர் யார் என்ற குறிப்பும் வரலாற்றில் இடம் பெறவில்லை.
 
சௌராஷ்ட்ரா மொழி இன மக்களில் , சுவாமி ஐயப்பனை குலதெய்வமாக ஏற்றுகொண்டவர்கள் முடிகாணிக்கை (முதல் மொட்டை) காது குத்தல் போன்ற நிகழ்சிகளை இங்கு செய்கின்றனர். எல்லா சுப காரியங்களும் சுவாமி ஐயப்பன்  கோவிலிலும், உருவபடத்தை வீட்டில் வைத்தும் வழிபடுகின்றனர்.
சைவர்கள் மற்றும் வைணவர்கள் இருவரும் வழிபடுகின்றனரா அல்லது ஏதெனும் ஒரு பிரிவினர் மட்டும் வழிபடுகின்றனரா என தெரியவில்லை. ஏனெனில், சுவாமி ஐயப்பன், சிவபெருமானின் அவதாரமாகவோ அல்லது விஷ்ணுவின் அவதாரமாகவோ கூறப்படவில்லை.
சுவாமி ஐயப்பனின் தோற்றத்தின்  வரலாற்றுப்படி, சிவபெருமான் மற்றும் விஷ்ணும் (மோகினி வடிவம்) இனைந்து உருவான கடவுளாக கூறப்படுகிறது.
ஆண் வம்ச வழிபடி சிவனின் அவதாரமாக கொண்டால், சுவாமி ஐயப்பன் சைவர்களின் கடவுளாகவே கருதப்பட வாய்புள்ளது. ஆனால், சுவாமி ஐயப்பனின் உருவத்தில் நெற்றியில் வைணவ குறியிடான U வடிவ நாமம் போடப்பட்டுள்ளது. எனவே இரு பிரிவினருக்கும் பொதுவான கடவுளாகவே கருதப்படலாம்.



திருப்பதி வெங்கடாசலபதி
இந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல ராஜாங்கங்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் இக்கோவில் தொண்டை மான் என்ற பல்லவ மன்னனால் ஆக்கம் பெற்றதாக கூறப்படுகிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் பல்லவர்களாலும், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை சோழர்களாலும், கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் விசயநகர பேரரசாலும் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.
சௌராஷ்ட்ரா மக்கள் தமிழ்நாட்டில் குடியேறிய பிறகே திருப்பதியில் இருக்கும் வெங்கடாசலபதியை குல தெய்வமாக ஏற்றுகொண்டிருப்பார்கள். விஷ்ணுவின் இந்த உருவம் பழைய சௌராஷ்ட்ரா தேசத்திலோ அல்லது இன்றைய குஜராத் பகுதியிலோ இல்லை. சௌராஷ்ட்ரா மக்களில் வைணவ பிரிவினர் இவரை குல தெய்வமாக ஏற்றுகொண்டுள்ளனர். இங்கு முடிகாணிக்கை (முதல் மொட்டை), காது குத்துதல் முதலிய சடங்குகள காவடி எடுத்து வந்து செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் சனிகிழமைகளில் இவரது பெயரில் விரதம் இருந்து , அரிசி பிட்சை எடுத்து அதில் உணவு சமைத்து பலருடனும் பகிர்ந்து உண்டு விரதத்தை முடிக்கின்றனர்




பழனி முருகன்
சௌராஷ்ட்ரா மக்களின் சைவ பிரிவினர் சிவன் கோவில்களுக்கு சென்று வழிபட்டாலும், பழனி முருகன் கோவில் மற்றும் இதர பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தான் முடி காணிக்கை, காது குத்துதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர். சிலர் திருமண போன்ற சுபகாரியங்களையும் செய்கின்றனர்.
சௌராஷ்ட்ரா மக்கள் தமிழ்நாட்டில் குடியேறிய பிறகே பழனியில் இருக்கும் முருகனை குல தெய்வமாக ஏற்றுகொண்டிருப்பார்கள். முருகனின் இந்த உருவம் பழைய சௌராஷ்ட்ரா தேசத்திலோ அல்லது இன்றைய குஜராத் பகுதியிலோ இல்லை
பழனி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
முருகன் சைவக் கடவுளான சிவன் பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது ஆறு முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.
ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது. பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்கிளில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூ தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது



சௌராட்டிரர்களின் குல தெய்வம் சௌராட்டிர தேசத்தில் குடிகொண்டுள்ள, ஸ்ரீதைத்யசுதன் எனும் மகாவிஷ்ணு என்ற நம்பிக்கையும் உண்டு. எனவேதான் சௌராட்டிரர்கள் குடியிருக்கும் ஊர்களில் கிருஷ்ணன், இராமர்பெருமாள் கோயில்கள் கட்டி வழிபடுகிறார்கள்.
அண்மை காலங்களில், சௌராஷ்ட்ரா மக்களில் வைணவ பிரிவை சார்ந்தவர்கள் பெருமாளுக்கும் கிருஷ்ணருக்கும் பல கோயில்களை ஏற்படுத்தியிருந்தாலும், சைவ பிரிவினர் சிவபெருமான் கோயில்களை எழுப்பியதாக தெரியவில்லை. 
தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரர்கள் மேற்கூரிய தெய்வங்களை குலதெய்வமாக வழிபட்டாலும், அவர்கள் சௌராஷ்ட்ரா தேசத்தில் வாழ்ந்த போது வழிபட்ட குலதெய்வம் யார் என அறியமுடியவில்லை.
தெய்வம் யாராக இருந்தால் என்ன எந்த பெயரில் இருந்தால் என்ன எந்த ஊரில் இருந்தால் என்ன, அவர்களுடைய கோவில் எதுவாக இருந்தால் என்ன , தெய்வ வழிபாடு என்பது தான் முக்கியம்.
அவரவர் அவர்கள் விரும்பும் தெய்வங்களை வணங்கி , தெய்வத்தின் அருள் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வேண்டும்.
தமிழ்நாட்டில் வாழும் நிர்மானித்துள்ள சில கோவில்கள்

  • திருபுவனம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில்
  • மதுரை, அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில், தெற்கு மாசி வீதி
  • http://thiruvadi.blogspot.in/2013/03/blog-post.html
  •  
  • மதுரை, அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், காமராசர் சாலை
  • மதுரை அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில், காமராசர் சாலை
  • மதுரை, அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவில், (²ட்டின் தெள³ரோ), தெற்குமாரட்டு வீதி
  • மதுரை, அருள்மிமு  திரௌபதி அம்மன் திருக்கோவில், (ஜீட்டின் தெள³ரோ), தெற்கு மாசி வீதி
  • மதுரை, அருள்மிகு சீதாராம ஆஞ்சநேயர் திருக்கோவில், மகால் 5 வது தெரு
  • மதுரை, அருள்மிகு பாலகிருஷ்ணன் திருக்கோவில், பந்தடி,பால்மால் குறுக்குத் தெரு,
  • மதுரை, வரதராஜப் பெருமாள் கோவில்,(பொட்டேன் தெள³ரோ), தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி
  • மதுரை, ஆஞ்சநேயர் திருக்கோவில், கூடல் அழகர் கோவில் தென்புறம்
  • மதுரை, ஆஞ்சநேயர் திருக்கோவில், அலங்கார் தியேட்டர் பின்புறம்
  • மதுரை, அருள்மிகு தசகாளி அம்மன் திருக்கோவில், சின்னக்கடை தெரு, தெற்கு மாசி வீதி
  • மதுரை, அருள்மிகு  சக்திமுத்துலெட்சுமி அம்மன் திருக்கோவில், மதுரை இரயில்வே காலனி
  • மதுரை, அருள்மிகு  நடன கோபல நாயகி கோவில், அழகர் மலை சாலை
  • மதுரை, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில், ஒத்தகடை, யாணைமலை
  • மதுரை, அருள்மிகு பாண்டு ரெங்கமாயி திருக்கோவில், கொடிக்குளம் கிராமம், ஒத்தகடை,
  • பரமக்குடி, அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில்
  • எமனேசுவரம் அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்
  • சேலம டவுண், அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோவில்
  • திண்டுக்கல்,நாகல்நகர், அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் & ரேணுகா அம்பாள் கோவில்
  • பாளையங்கோட்டை, அருள்மிகு கிருஷ்ணன் கோவில், இராமசுவாமி கோவில் & சிவன் கோவில்
  • வீரவநல்லூர், அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில்
  • கோட்டாறு, அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில்
  • திருச்சி மலைகோட்டை, அருள்மிகு செந்தாமரைக் கண்ணன் திருக்கோவில்
  • தஞ்சை மானம்புசாவடி, அருள்மிகு நவநீத கிருஷ்ணன் திருக்கோவில்
  • அய்யம்பேட்டை, அருள்மிகு இராச கோபால சுவாமி திருக்கோவில்
  • அம்மாபேட்டை, அருள் மிகு கோதண்ட இராமர் திருக்கோவில்
  • கும்பகோணம், அருள்மிகு பிரம்மன் கோவில் & வேத நாராயணப் பெருமாள் திருக்கோவில்
  • கும்பகோணம், அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில்
  • சென்னை, சூளையில் உள்ள அருள்மிகு பிரசன்ன வேங்கடசப் பெருமாள் திருக்கோவில்
  • வாலஜாபேட்டை, அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்
  • அம்மையப்பன், (திருவாரூர் அருகில்), அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோவில்


3 comments:

  1. தைத்யஸூதன், ரேணுகா தே3வி மதுரை மு லெகுத்தாம் பாய்ம்பொட3த்தக் நிகிள்ரியொ.
    மதுரைமு திரௌபதி தௌ4ரான் தி3ய்யொ ஸே. ஒண்டெ க2ட்டின் தௌ4ரொ. அங்குண்டெ ஜுட்டின் தௌ4ரொ.
    க2ட்டின் & ஜுட்டின் கோட் கான் ஜொவள் ஹெட3ரியொ மெனத்தெ களாரனி.
    அங்கு3ன் ஜுக்கு ஆராய்ச்சி கெர்னொ ஸே.
    மத்வமத மடாதிபதி ஒண்டெனு (நாவ் ஹவ்டன் அவரனி) திருநெல்வேலி லெகுத்தொ ஸேத்தெ செய்துங்கநல்லூரும் ஹொதெ ஸௌராஷ்ட்ர பிராமண மென்க்யானுகு மத்3வ மதம் மு செர்செயொ மெனி மத்வ மத மடம் தகரியொ பஞ்சாங்கும் மீ செவ்தெயொ.
    தெக ஹாலி, மதுரை மு கொ3பி3 லவ்லரியொ மத்வமதம்மு செர்யாத்தெனு மெள்ளி ஸேத்தெ.
    அவ்ரெ தெனு சிவன் கோவில் மெள்ளி ப4ந்திரியோஸ் மெனி மீ ஹவ்டரியொ. அய்யம்பேட்டைமு ஒண்டெ சிவன் தௌரொ ஸே. எமனேஸ்வரம்மு மெள்ளி ஒண்டெ சிவன் தௌரொ ஸே. மதுரை யானைமலை மு பாலதண்டாயுதபாணி தௌ4ரொ அவ்ரெ தெனு ப4ந்திராஸி.
    ஜதொ தெல்யொ தெல்யொ கா3மு தௌ4ரானுக் ஜீ பாய்ம்பொடத்தக் வசதிகன் ஸெத்தர்னு ப4ந்தி தொ2வ்ராஸி. ராமேஸ்வரம், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், பழனி,சென்னை, திண்டுக்கல், பாளயங்கோட்டை, சேலம் அங்குன் மெள்ளி தெ2வ்ட கா3ம்மு ஸெத்தர்னு ஸே. இல்யொமாம் ரீ: அமி அஸ்கி தே3வுனு பாய்ம் பொட்3ரியொ மெனத்தெ களான் அவரியொ.
    மதுரை ரயில்வே காலனிமு ‘அம்மா மிட்டொ’ மெனி முத்துலக்ஷ்மி மாயிகு ஒண்டெ தௌ4ரொ ஸே. வொய்து3ன் & த2க்குன் தெல்யொ தௌ4ராக் விஸேஷ்கன் ஜீ பாய்ம்பொள்ளி அவர்யாஸி. முத்துலக்ஷ்மி மாய் மல்லெலும் ஹுத்துரத்தக் ராணி மங்கம்மள் அனுமதி தீ3ரியொ; தெக்குர்சி ஜு2கு ஏக்கர் தா2ம் தீரியொ. தெல்யொ தா2ம்மு அத்தொ மதுரை ரயில்வே ஸ்டேஷன், ரயில்வே காலனி அஸ்கி ஸேத்தெ.
    Proper documentation konni kerriyo nhii.
    Even today say from 1900 till today events are not properly recorded.
    Sourashtra Sabha Museum & Library angun open kerariyo nhii. Sri P.S.A.Krishnaiernu keShTam paaD poDi Walajapettai mu rhii khaLLi ave Tyagarajar angun Venkataramana Bhagavathar kiirtanan - palm leaves, paper manuscripts aski mii leguttam catalogue teyaar keri diyeyo.
    hoyeti, angunuku Sourashtra Sabha, Madurai, konkiku telyo saattak soDariyo nhii. Digitize kerattak Government anumati dii meLLi, telyo chance avail kerriyo nhii.
    chevdyaattenko haali, Old is gold menatte kaLaarani. proper importance dEryaani.
    elyo khobbo marchaay kii?
    Sourashtra High School Old Boys' Association librarymu jhuku junno books jukuyo hoteyo. atto telyo close hoy sE. Books kOn kaay kereyo kii.
    Sourashtra Sabhaam meLLi ruvvo printed books hoteyo. telyo atto kOT thovriyo kii?
    Sabha nirvaaginuk monnu avno.
    Let us continue our research and unearth many unknown things.

    O.S.Subramanian.
    subramanian.obula@gmail.com

    ReplyDelete
  2. srii m.s. sekarnu kitko ivarnu abbaykii tye aski cherchi oNTE thaam iso likki chokkaD sEve keriraas. aski dEvun, dhowraan, sthala purAAN aski kaLaye ivarunuus. yE aski saattevEL amre samuuham 'emmadamum sammadamE' menatte manObhaavammu aski dEvunuk paaimpoDilEt avaraatte kaLaares. '
    novvo ivarun dheri anusandhaan keretiis abbay.
    K.V.Pathy

    ReplyDelete
  3. சொக்கட் புஸ்னி

    அவ்ரெ குல தேவ் காயோ ?

    ReplyDelete