Tuesday 19 November 2013

புத்தக வெளியீட்டு விழா - விமர்சனம்


ஜனாதிபதி மாளிகையில் புத்தக வெளியீட்டு விழா:


நேற்று (18.11.2013) மாலை 06.00 மணிக்கு , குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த பிரமாண்டமான, குடியரசு தலைவரின் மாளிகை தோட்டதில் அமைந்துள்ள அரங்கிற்கு மகிழுந்தில் செல்லவே 10-12 நிமிடங்கள் பிடித்தது
குடியரசு தலைவர் வாழும் மாளிகை மற்றும் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட தோட்டம் ஒரு சிறிய நகரம் போன்றது.
அங்கு நடந்த நிகழ்வுகளை இங்கு பதிவு செய்கிறேன்.

சிப்ரா தாஸ் (Shipra Das) ஒரு புகைபட பத்திரிக்கையாளர்(Photojournalist)  இவர் முதலில் Anandabazar Patrika , Aajkaal பத்திரிக்கையில் பணியாற்றிய பிறகு  India Magazineல் 20 ஆண்டுகாலம் பணியாற்றியவர்.  அரசியல் நிகழ்வுகளை படம்பிடித்தவர். அரசியல், மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றவர். அரசியல் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றவர். இஸ்லாமிய வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றவர்.
இவர் பார்வையற்றவர்களை படம் பிடித்து அவர்கள் வாழ்கையை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். (அவரது துயரங்ளை கூறி அனுதாபம் சம்பாதிப்பது போல அல்லாமல், தன்னம்பிக்கையுடன் வாழ்பவர்களை பற்றியது) புத்தகத்தின் பெயர் THE LIGHT WITHIN a different vision of life என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டுள்ளார். அதன் புத்தக வெளியீட்டு விழாவில் தான் கலந்து கொண்டேன்.
இதன் பதிப்பாளர்கள் NIYOGI BOOKS  இதன் விலை ரூ.1,000/- 145 புகைபடங்கள் கொண்டது.

மாலை 06.00 மணிக்கு தொடங்கும் விழாவிற்கு 05.30 மணிக்கே அரங்கில் இருக்க வேண்டும் என அழைப்பிதழில் குறிப்பிடபட்டிருந்தது நானும் நண்பரும் சரியான நேரத்திற்க்கு சென்று அமர்ந்தோம். வாசலில்…………….புத்தக ஆசிரியர் அனைவரையும் அன்புடன் வரவேற்று கொண்டிருந்தார். என்னையும் புன்முறுவலுடன் வரவேற்று வணக்கம் கூறினார். எனக்கும் அவருக்கும் இதற்கு முன்பு அறிமுகம் இல்லை. எனது நண்பருக்கு அறிமுகம் உண்டு. மிகவும் கனிவுடன் வரவேற்றார்.
சுமார் 250 பேர் அமரகூடிய அரங்கம். விழாவில் சுமார் 200 பேர் கலந்து கொண்டிருப்பார்கள். இருக்கைகளில் சிறிய அளவில் அச்சிடப்பட்ட தாள் வைக்கப்பட்டிருந்தது. அதில் புத்தகத்தை பற்றியும், ஆசிரியருடைய குறிப்புகளும் இருந்தன.
முதலில் திரு.ராஜ் செங்கப்பா, , THE TRIBUNAL பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர்.முன்வரிசையில் வந்து அமர்ந்தார்.  அடுத்து திருமதி. பிருந்தா காரட், கம்யுனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் வந்தார். அவரை குடியரசு தலைவரின் ஊழியர்கள், பதிப்பகத்தார் வரவேற்று அவரது இருக்கையில் அமர்த்தினர். அடுத்து திரு. லால் கிருஷ்ண அத்வாணி BJP கட்சியின் மூத்த தலைவர் அவர்கள் வந்தார். அவரையும் குடியரசு தலைவரின் ஊழியர்கள், பதிப்பகத்தார் வரவேற்று அவரது இருக்கையில் அமர்த்தினர். திருமதி.பிருந்தா காரட் எழந்து நின்று வரவேற்றார். அடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு. சதாசிவம் வந்தார். அவரை பிருந்தா காரட், லால்கிருஷ்ண அத்வானி மற்றும் குடியரசு தலைவரின் ஊழியர்கள், பதிப்பகத்தார் வரவேற்று அவரது இருக்கையில் அமர்த்தினர். நிகழ்சி தொகுப்பாளினி குடியரசு தலைவர் இன்னும் 2 நிமிடங்களில் வந்துவிடுவார் என அறிவித்த பின்பு கீழே உட்கார்ந்திருந்த திருமதி பிருந்தா காரட், திரு.லால் கிருஷ்ண அத்வானி மற்றும் திரு.ராஜ் செங்கப்பா ஆகியோர் மேடைக்கு சென்று அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர். பின்பு குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்களை அழைத்து வந்தனர். அனவரும் எழுந்து நின்று வரவேற்றனர். மேடையில் அமர்ந்திருந்தவர்களும் எழுந்து நின்று வரவேற்றனர். இவர்களுக்கு பின்புறம் மூன்று இருக்கைகள் இருந்தன. அவற்றில் குடியரசு தலைவரின் ஊழியர்கள் அமர்ந்தனர். ஒருவர் அவரது பாதுகாவலர். மற்றவர் அவரது உதவியாளர்கள் என எண்ணுகிறேன்.
(இந்த சமயத்தில் எனக்கு ஒரு விசயம் நினைவுக்கு வந்தது தமிழ்நாட்டில் இன்றைய தமிழக முதல்வர் அமர்ந்திருக்கும் மேடையில் மிக அருகாமையில் பின்புறம் காவலரும், உதவியாளரும் அமர முடியுமா என தோன்றியது. இந்த விருந்தினர்கள் வந்த போது யாரும் காலில் விழுந்து வணங்கவில்லை. அனைவரும் கைகூப்பி வணக்கம் மட்டும் செய்தனர். அவர்களும் வணக்கம் செய்தனர். சிலருடன் கைகுலுக்கினர். அனைவருக்கும் கையசைத்து வணக்கம் தெரிவித்தனர். குடியரசு தலைவரும் அவ்வாறே நடந்துகொண்டார்.).  (ஆளும் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர், எதிர்கட்சி தலைவர். கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் என 3 வேறுபட்ட கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருப்பதை பார்த்த போது, நமது மாநிலத்தில் இவ்வாறு நடைபெற வாய்புள்ளதா என தோன்றியது)
அதற்கு பிறகு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். நான் நீண்ட வருடங்களுக்கு பின்பு முழுமையான தேசிய கீதத்தை கேட்கும் வாய்ப்பும், மரியாதை செலுத்தும் வாய்பும் கிடைத்தது மிகவும் மகிழ்சியாய் இருந்தது.
நிகழ்சி தொகுப்பாளினி, என்ன நிகழ்சி என்பதை அறிவித்து, பதிப்பக உரிமையாளரை வரவேற்புரை நிகழ்த்தும்படி அழைத்தார்.
பதிப்பக உரிமையாளர், மேடையில் அமர்ந்திருந்த அனைவரையும் அவர்களது பெயரையும் பதவிகளையும் சொல்லி வரவேற்றார். பின்பு புத்தக ஆசிரியரை பற்றி சில விசயங்களை கூறிவிட்டு, அவரது புத்தகத்தை வெளியிடுவதில் பெருமையடைவதாக கூறினார். இப்புத்தம் வெளிவர உதவிய சில பொதுதுறை நிறுவனங்களின் அதிகாரிகளின் பெயரையும் அவரது பதவிகளையும் குறிப்பிட்டார்.
இந்த நேரத்தில், மேடையில் இருந்தவர்கள் ஒருவருக்கொருவருடன் பேசிக்கொண்டிருந்தனர்.

அடுத்து தொகுப்பாளினி, The Tribunal  பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் திரு. ராஜ் செங்கப்பா அவர்களை புத்தகத்தை அறிமுகம் செய்யும் படி அழைத்தார்.
அவர், தனக்கும் புத்தக ஆசிரியருக்கும் பத்திரிக்கை சம்மந்தமான தொடர்புகளை கூறி, பின்பு புத்தகத்தில் இருக்கும் புகைப்படம் மற்றும் அதனுடன் எழுதப்பட்டிருக்கும் நிகழ்வுகளையும் கூறி அதனுடன் சம்மந்தப்பட்ட நிகழ்சிகளையும் கூறினார். அவர் புத்தகத்தை முழுமையாக படித்திருப்பதை இதன் மூலம் அறிய முடிந்தது. புத்தக ஆசிரியருக்கு அவரது முயற்சிகளுக்கு வாழ்த்து கூறினார்.

அடுத்து தொகுப்பாளினி, திருமதி பிருந்தா காரட் அவர்களை பேசும்படி அழைத்தார். அவர் மிக எளிமையான ஆடை அணிந்து வந்திருந்தார். மிகவும் எளிமையான முறையில் ஆங்கிலத்தில் உரையாடினார். புத்தகத்தில் இருந்த சில விசயங்களை பற்றி கூறிவிட்டு, மாற்று திறணாளிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என்று கூறினார். அவர்களை மதிக்க வேண்டும் என்றும் அவர்களை அவமரியாதை செய்வதை தடுக்கும் பொருட்டு சட்டத்தில் மாற்றங்கள் செய்யவேண்டும் எனவும் கூறினார். மதம், ஜாதி, நிறம் போன்றவற்றை கூறி யாரையும் அவமத்திக கூடாது என்ற சட்டம் இருக்கிறது. அதில் மாற்று திறனாளிகளையும் அவமதிக்க கூடாது என்று சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். இது குறித்து பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டுவந்துள்ளதாக கூறினார். புத்தக ஆசிரியரின் உழைப்பையும் முயற்சியையும் பாரட்டினார். பெயர்களை குறிப்பிடும் போதுமட்டும் எழுதி வைத்திருந்த குறிப்புகளை பார்த்து கொண்டு பேசினார்.
(இவர் இவ்வாறு பேசிகொண்டிருக்கும் போது எனக்கு அண்மையில் தமிழ்நாட்டில், பார்வையிழந்த மாற்று திறனாளிகள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் கண்முன்னே தோன்றி மறைந்தன)

அடுத்து தொகுப்பாளினி, திரு.லால் கிருஷ்ண் அத்வானியை பேச அழைத்தார்.
இவர் இந்தி மொழியில் பேசினார். குறிப்புகள் எதையும் வைத்திருக்கவில்லை. இவர் பேச ஆரம்பிக்கும் முன் மேடையில் அனைவரது பெயரையும் சொல்லி வரவேற்று , வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரையும் வரவேற்று வணக்கம் கூறி பேச ஆரம்பித்தார்.
தான் நீண்ட நாட்களாக அரசியலில் இருப்பதால், நீண்ட நாட்களாக புத்தக ஆசிரியருடன் பரிச்சயம் உள்ளது என்றும் இவர்கள் தான் தங்களை முன்னிலை படுத்துகின்றனர் என்று கூறியவர், சில சமயங்களில் தங்களை தவறாக புரிந்துகொள்ளும்படியும் முன்னிலை படுத்துகின்றனர் என்று கூறினார். அரங்கத்தில் சிரிபலை எழுந்தது. குடியரசு தலைவரும் மகிழ்சியுடன் ரசித்து கைதட்டினார். பின்பு அதற்கு காரணம் தாங்கள் அல்ல என்றும் தாங்கள் சார்ந்திருக்கும் துறை அவ்வாறதென கூறினார்.
புத்தகத்தை பற்றி, திரு. ராஜ் செங்கப்பா விவரித்து விட்டதால் தான் விவரிக்கவில்லையென்றும், (புத்தகத்தை படிக்கவில்லையென்று தோன்றியது)  தான் வாழ்கையில் சந்தித்த விழியிழந்த ஒருவரது தன்னம்பிக்கையை பற்றி கூறினார்., பார்வையிழந்த மாற்று திறனாளி ஒருவர் பிசியோதெரபி செய்பவர் என்றும்  அவர் வேலைக்கு செல்லும் போது அவரது மனைவி அங்கு சிகிச்சைக்கு வரும் பெண்களை பார்த்து அசடு வழிய கூடாது என கூறியதாகவும் குறிப்பிட்டார். விழியிழந்தோர் மற்ற சாதாரண மக்களை போலவே தன்னம்பிக்கையுடன் வாழ்வதாகவும் அவர்களை அவமரியாதை செய்ய கூடாது எனவும் கூறினார். விழியிழந்தோர் ஒருவரிடம் நீங்கள் வெளிச்சத்தை பார்த்திருக்கிறீர்களா என கேட்டதற்க்கு, தாங்கள் இருட்டை பார்த்த்தில்லை என்று கூறியதாக கூறி அவர்களது தன்நம்பிக்கையை பாரட்டினார்.
(இந்த சமயத்தில் ஒரு நிகழ்சி நினைவுக்கு வந்த்து. இப்போதைய முதல்வர் இதற்கு முன்பு ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் மதுரை வந்திருந்தேன். பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கூட்ட நெரிசல். பேருந்தின் பின்புறம் நின்றிருந்தேன். கடைசி இருக்கையில் நான்கு பார்வையிழந்தவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு தெரிந்த ஒரு பெண்மனியை பற்றி பேசிகொண்டிருந்தனர். அவரது நடத்தையை பற்றி மிகவும் கொச்சையான வார்த்தைகளால் பேசிகொண்டிருந்தனர். பேச்சு மாறி முதல்வரை பற்றியும் பேச ஆரம்பித்தனர். அங்கிருந்தவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இருப்பினும் அவர்களை கண்டிக்கவும் மனம் வரவில்லை. சிறிது நேரத்தில் பேச்சு மிகவும் கீழ்தரமாக செல்ல ஆரம்பித்த காரணத்தால், ஒருவர் குறுகிட்டு பேருந்தில் கூட்டம் அதிகமாகவும் பெண்களும் பயணம் செய்கிறார்கள் எனவும் இப்படி பேசவேண்டாம் எனவும் கேட்டுகொண்டார், அதற்கு அவர்கள் இருப்பதை தான் நடப்பதை பற்றி தான் பேசுகிறோம் என்று கூறினர். வேறு சிலரும் அவ்வாறு பேசாமல் வரும்படியும் கூறியதால் பேச்சை நிறுத்திவிட்டனர். சிறிதி நேரத்திற்கு பின்பு இறங்கி சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பிறகு, பேருந்தில் இருந்த ஒருவர், இந்த குருட்டு பயல்களுக்கு என்ன பேச்சு, இவர்களுக்கு கண் இருந்தால் என்னவெல்லாம் பேசுவார்கள் செய்வார்கள் என கூறினார். யாரும் பதில் கூறவில்லை. அவர் சொன்னது சரிதான் என தோன்றினாலும்,  அவர்கள் மீது பரிதாபமும் எழுந்த்து.)
இவர்கள் எல்லாம் பேசும் போது, திரு.பிரணாப் முகர்ஜி வலது கண்ணத்தை தாங்கியபடி அமர்திருந்தார். இடையில் அனைவரிடமும் பேசிகொண்டிருந்தார். அவரது உதவியாளர் அவர் பேச வேண்டிய குறிப்புகளை அவரிடம் கொடுத்தார். ஒருமுறை பார்த்துவிட்டு, திருப்பி கொடுத்து விட்டார்.
இதற்கு அடுத்து தலைமை நீதியரசர் திரு. சதாசிவம் அவர்களை , தொகுப்பாளினி பேச அழைத்தார். இவரும் அனைவரது பெயரையும் குறிப்பிட்டு பின்பு பேச ஆரம்பித்தார். புத்தகத்தை பற்றி சில வார்த்தைகள் பேசிவிட்டு, அரசியல் சட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு உள்ளது என்றும் அதை சரியாக பின்பற்றுவதில்லை என்றும் குறிப்பிட்டார். அவரே ஒரு தீர்ப்பில் இடஒதுகீட்டை சரியாக அமுல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியதாகவும் ஆனால் பல மாநில அரசுகள் இதை அமுல்படுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
இவரும் எழுதி கொண்டு வந்திருந்த்தை ஆங்கிலத்தில் படித்தார். இவரது ஆங்கிலத்தில் தமிழ் வாடை வீசியது.
அடுத்து தொகுப்பாளினி திரு.பிரனாப் முகர்ஜியை புத்தகத்தை வெளியிட்டு பேச அழைத்தார். இரண்டு பார்வையில்லாத பெண்களை,  (12ஆம் வகுப்பு படிப்பவர்கள்) புத்தகத்துடன் புத்தக ஆசிரியர் மேடைக்கு அழைத்து வந்தார். அந்த பெண்கள் புத்தகத்தை குடியரசு தலைவரிடம் கொடுக்க அவர் அதை பிரித்து அனைவருக்கும் காட்டினார்.
புத்தக ஆசிரியர் இதுவரை மேடைக்கு வராமல் இருந்தார். புத்தகம் வெளியிட்ட பின்பும் கீழே இறங்கி முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார். அந்த இரண்டு பெண்களும் சில நிமிடங்கள் பேசினர். எழுதி கொடுத்த்தை, மனப்பாடம் செய்து ஒப்புவித்தனர்.
குடியரசு தலைவர் பேச ஒலிபெருக்கு முன்பு வரும் முன், அவருக்கு உயரம் சரிசெய்ய பலகை போடப்பட்டது. ஒரு ஊழியர் தண்ணிர் கொண்டு வந்து வைத்தார். (அவர் பேசும் போது எச்சில் தெரிப்பதையும்  அடிக்கடி தண்ணிர் குடிப்பதையும் பார்த்திருப்பீர்கள்) ஒருவர் அவர் படிக்க வேண்டிய தாள்களை வைத்தார்.
பேசம் முன்பு கையில் கைதுண்டு எடுத்துகொண்டார். அனைவரையும் பெயரை சொல்லி குறிப்பிட்டுவிட்டு எழுதி கொடுத்ததை வாசித்தார். பார்வையிழந்தவர்களுக்கு அனைத்து உதவிகள் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார். புத்தக ஆசிரியரை பற்றி குறிப்பிட்டு அவரது முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் புத்தகத்தை படிக்கவில்லை என்பது தெரிந்த்து. எழுதி கொடுத்ததையும் முதலிலேயே படிக்கவில்லை என்பதும் தெரிந்த்து.
எழுதி கொடுத்தவர்கள் சரியான முறையில் எழுதி கொடுக்கவில்லை என்பது அதில் இருந்த சில சொற்கள் மூலம் அறியமுடிந்தது.
இதற்கு பிறகு , பதிப்பகத்தின் இயக்குனர, நன்றியுரை ஆற்ற தொகுப்பாளினி அழைத்தார். அனைவரது பெயரையும் சொல்லி நன்றி கூறினார்.
மீண்டும் தேசிய கீதம் முழங்க விழா நிறைவு பெற்றது. குடியரசு தலைவர் செல்லும் போது, அனைவருக்கும் கையசைத்து வணக்கம் தெரிவித்தார். சிலருடன் கைகுலுக்கினார். மற்ற விருந்தினர்களும் அவ்வாறே வெளியேறினர்.
நிகழ்சி நடக்கும் போது, திரு. ராஜ் செங்கப்பா அவரது வசிதிகேற்ப்ப நாற்காலியை திருப்பி போட்டுகொண்டு மிகவும் சகஜமாக அமர்ந்திருந்தார். குடியரசு தலைவருடனும் பேசிகொண்டிருந்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளினி உட்பட, குடியரசு தலைவரின் பெயரை சொல்லியே பேசினார்கள்
(நமது தமிழ்நாட்டில், இன்றைய முதல்வரை பெயர் சொல்லி யாராவது குறிப்பிடமுடியுமா என யோசித்து பார்த்தேன். அப்படி யாரவது குறிப்பிட்டால் அவரது கதி என்னவாகும் என நினைக்கவே பயமாக இருந்த்து)
06.00 மணிக்கு ஆரம்பித்த விழா 07.00 மணிக்கு நிறைவடைந்தது. பின்பு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது ஒரு பெரிய அறையில், சிற்றுண்டிகள் வைக்கப்பட்டிருந்த்து. சமோசா, வெஜ் பேட்டி, கோழிகறி உருண்டை, பன்னீர் உருண்டை, ஜிலேபி, கேக் மற்றும் காப்பி/தேனீர்.
அறையில் நாலு இசை கலைஞர்கள் வாசித்து கொண்டிருந்தனர். சிலர் இரவு உணவை இங்கேயே முடித்துகொள்வது போல சாப்பிட்டுகொண்டிருந்தனர். சாப்பிடும் போது, புத்தக ஆசிரியர் அனைவரிடமும் வந்து பேசி நலம் விசாரித்தார். இசை கலைஞர்களுக்கு புத்தக ஆசிரியரும், பதிப்பகத்தாரும் நன்றி கூறினார்கள்.
இறுதி கட்டத்தை. நெருங்கும் போது, ஊழியர்கள் சாப்பிட வந்தனர். விருந்தாளிகள் போன பின்பே சாப்பிட வேண்டும் என கூறி வெளியேற்றப்பட்டனர்.
விழா இனிதே முடிவடைந்தது

இந்த விழாவினால் புத்தக ஆசிரியருக்கு என்ன பயன் என்று குழம்பிகொண்டிருந்தேன். செலவு செய்து புத்தகம் வெளியிடுகிறார் யார் வாங்குவார்கள் என யோசித்தேன். விவரம் தெரிந்த ஒருவருடன் இது குறித்து பேசினேன்.
இந்தியாவில் உள்ள மத்தி மாநில அரசு வாசக சாலைகளுக்கு புத்தகம் வாங்கும்.குழுவினர் , குடியரசு தலைவர் முன்னுரையுடன் கூடிய புத்தகம் என்பதாலும் அவரே வெளியிட்டதன் காரணமாகவும் அதை அனைத்து வாசக சாலைகளும் வாங்க பரிந்துரைபார்கள் என கூறினார். இதன் மூலம் 5000 – 6000 புத்தகங்கள் விற்பனையாகும் என கூறினார். மேலும், வெளிநாட்டு புத்தக சாலைகளும் தனியாரும் வாங்குவார்கள் எனவும் கூறினார். புத்தக பதிப்பாளர்  கண்காட்சிகளில் வைத்தி விளம்பரபடுத்தி தனியாருக்கு விற்பனை செய்வார்கள் என கூறினார். குறைந்தது 10000 பிரதிகளாவது விற்பனையாகும் என கூறினார். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் , புத்தக ஆசிரியருக்கு Royality  கிடைக்கும் என கூறினார். மேலும், புத்தக ஆசிரியருக்கு ஒரு சமூக அந்தஸ்தும், பெருமையும் கிடைக்கும் என கூறினார்.

1 comment:

  1. மேற்படி உங்கள் பதிவு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அனுபவித்தது போல் நிறைவாக உள்ளது.

    ReplyDelete