Thursday 13 March 2014

சௌராஷ்ட்ரா சமூகம் - கலாச்சாரம்

மஞ்சள் பையும் - வெண்பொங்கலும் வெங்காய சாம்பாரும்


சௌராஸ்ட்ரா மொழி இன மக்களுக்கும் வெண்பொங்கலுக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு.

இது ஒரு முக்கிய உணவு என்பதுடன் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று. ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்கள் வீட்டில் செய்து சாப்பிடும் உணவல்ல. பின்பு எப்படி இந்த உணவு தமிழ்நாட்டில் வாழும் இந்த மக்களிடம் ஏற்பட்டது என்று ஆராய்வோம்.

இன்றும் வடநாட்டில் எல்லா இடங்களிலும், கிச்சிடி என்ற ஒரு உணவு உண்டு. பொதுவாக ஏழை மக்களும், மற்றவர்கள் உடல் நிலை இல்லாத போது சாப்பிடும் உணவு. தற்சமயம் விரிவாக உணவு தாயரிக்க நேரம் இல்லாத போது இதை செய்து சாப்பிடுகிறார்கள். 

அரிசியும் பருப்பும் சேர்த்து உப்பு போட்டு வேக வைத்து சுடச்சுட சாப்பிடுவார்கள். பொங்கல் போல கெட்டியாக இருக்காது. நெய் சேர்ப்பவர்களும் உண்டு. சற்று தண்ணிராக இருக்கும். இதற்கு எதை வேண்டுமானலும் தொட்டுக்கொள்ள வைத்துகொள்வார்கள். இதன் சற்று மாறிய வடிவம் தான் பொங்கல். இதில் சற்று நெய்யோ , டால்டாவோ கலந்து , மிளகு சீரகம் சேர்த்து செய்கிறார்கள்.

இன்றைக்கும் எங்கள் வீட்டில் வெண்பொங்கல் செய்தோம் என்று கூறினால், கிச்சிடியா என்று தான் கேட்கிறார்கள்.

எனவே சமூக சரித்திரம் எழுதுபவர்கள் இதை குறிப்பிட்டும், வலுவான ஆதாரம் சேர்க்கலாம்.

சமூகத்தில் சற்று மந்தமான நிலையில் சுறுசுறுப்பாக இல்லாமல் தெளிவாக பேசாமல் இருப்பவர்களை இன்றைக்கும் அவண் சரியான “பொங்கல்” என்று கேலி செய்யும் வழக்கம் உள்ளது. இது கூட இந்த வெண் பொங்கலை விரும்பி சாப்பிட்டதன் விளைவாக DNA வில் ஏற்ப்பட்ட மாற்றமாக இருக்ககூடும்.

சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் வீட்டு கல்யாண நிகழ்ச்சிகளில் விருந்து செலவை சிக்கனமாக முடிக்க மதிய உணவாக வெண்பொங்கலும், சாம்பாரும் அல்லது கத்திரிக்காய் சட்னியும் செய்வார்கள். இனிப்புக்கு மிக எளிமையாக ரவா கேசரி செய்வார்கள். இன்றைக்கு மிகவும் ஆடம்பரமாக உணவு வகைகள் செய்தாலும், வெறும் வெண்பொங்கலும் வெங்காய் சாம்பாரும் செய்து விருந்தை முடிப்பவர்கள் உண்டு.

சமூகம் சார்ந்த பொது நிகழ்ச்சிகள், கடவுள் வழிபாடு கூட்டங்கள், சமூக சேவை அமைப்புகள் மற்றும் அரசியல்வாதி செய்யும் கூட்ட ஏற்பாடுகளில் கூட இந்த வெண்பொங்கலும் வெங்காய சாம்பரும் முக்கிய பங்கு வகிக்கும்.
.
தற்போது அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிகளில் பிரியானியும், குவாட்டரும் பணமும் கொடுக்கப்படுகிறது என அறிகிறேன்.

இப்படி எளிமையாக திருமணங்கள் செய்யப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகள் சமூகத்தின் வறுமையையும், மக்களின் மனநிலையையும் பிரதிபலிப்பதாக இருந்தது.

கல்யாண வீட்டிற்க்கு வருபவர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் , சமையல் அறைக்கு சென்று தாங்கள் கொண்டு வந்திருக்கும் தூக்கு சட்டியில் பொங்கலும், சாம்பாரும், கேசரியும் எடுத்து செல்வார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அல்லது பள்ளிக்கு சென்ற குழந்தைகு என்று எடுத்து செல்வார்கள். ஒருவருக்கு என்று சொல்லி நாலு பேர் சாப்பிடும் அளவுக்கு எடுத்து செல்வார்கள். இரவு விருந்து இல்லையென்றால் அதையே வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடுவார்கள். இல்லையென்றால் உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுப்பார்கள். இதை தவிர சாப்பாடு, மதிய உணவாக இருந்தால், தூக்கு சட்டியுடன் கேரியரும் எடுத்து வந்து எல்லா காய்கறிகளையும் மற்ற உணவுகளையும் எடுத்து செல்வார்கள். ஆனால், இளம் பெண்கள் இப்படி எடுத்து செல்ல கொஞ்சம் வெட்கப்பட்டு கொண்டு, பாவாடை தாவனியில் வரும் பெண்கள் முந்தானையை நீளமாக வைத்து கட்டி வருவார்கள். தூக்கு சட்டியை முந்தானையை தொங்கவிட்டு மறைத்து எடுத்து செல்வார்கள்.

முதலிலேயே இப்படி எடுத்து சென்றதால், பந்தியில் சாப்பாடு பற்றாக்குறை ஏற்படும். மீண்டும் அவசர அவசரமாக சமைத்து கொண்டிருப்பார்கள்.

மொத்த குடும்பமும் வந்து சாப்பிட்டுவிட்டு, பார்சலும் எடுத்து செல்லும் நபர்கள் செய்யும் மொய் பணம் வெறும் இரண்டு ரூபாய்  அல்லது அதிக பட்சம் ஐந்து ரூபாயாக இருந்தது. மேலும், உறவினர்களுக்கு திருமண பலகாரம் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு முறுக்கு ஒரு மைசூர்பாக்கு. இதில் ஏற்ப்படும் பிரச்சனைகள் சொல்லி மாளாது. வீட்டிற்க்கு கொண்டு வந்து கொடுக்கவில்லையென்றால் குற்றம் குறைவாக கொடுத்தாலும் குற்றம். குற்றம் கண்டுபிடிப்பதற்கென்றே கூட பிறந்தவர்கள்  இருப்பார்கள்.

இது போன்ற திருமண நிகழ்ச்சிகளில் வீட்டு மாப்பிளைகள் செய்யும் அராஜகம்  அளவில்லாதது. அதாவது மாப்பிள்ளை/மணப்பெண்ணின்  அத்தை கணவர்கள்  அல்லது அவர்களது சகோதரிகளின் கணவர்கள் செய்யும் அட்டுழியம் அதிகம். அதிலும் குறிப்பாக அந்த மஞ்சள் பையை யார் வைத்துகொள்வது என்பது தான் முக்கிய பிரச்சனையாக இருக்கும். மஞ்சள் பையில் இருக்கும் சில்லறை காசுகளை புரோகிதருக்கு அவ்வப்போது கொடுத்துகொண்டேயிருக்கவேண்டும். இதுதான் மஞ்சள் பையின் மகிமை.

சகோதிரியின் கணவரிடம் கொடுத்தால், அத்தை கணவர் கோபித்துகொள்வார். அத்தை கணவரிடம் கொடுத்தால் சகோதிரியின் கணவர் கோபித்துகொள்வார். இதனால் திருமண நேரத்தில் வெளிநடப்பு செய்பவர்களும்  உண்டு. இவர்களை சமாதனப்படுத்த தனி திறமை வேண்டும்.

அடுத்து தாலி கட்டியவுடன் இந்த மாப்பிள்ளைகளுக்கு காப்பி அல்லது குளிர் பானம் வாங்கி கொடுக்க வேண்டும். இப்படி இவர்களை இதற்காக வெளியே அழைத்து செல்லும் போது அருகில் இருக்கும் முக்கிய  உறவினர்களையும் அழைக்க வேண்டும். பெண்கள் குழந்தைகளை போக சொல்லி வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பார்கள். இதில் காலதாமதம் ஆனாலும் பிரச்சனை வெடிக்கும்.

அடுத்து இந்த மாப்பிள்ளைகளை பந்திக்கு அழைத்து சென்று அருகில் இருந்து உணவு பரிமாறுவதை பார்வையிட்டு உபசரிக்க வேண்டும். இதிலும் பிரச்சனை வெடிக்கும்.

எனது திருமண சமயத்தில் இப்படி செய்யகூடாது என்று சமயலறையில்
“ பார்சல் கிடையாது “ என்று போர்டு வைக்க போவதாக கூறினேன். முதல் எதிர்ப்பே என்னுடைய அம்மாவிடமிருந்து தான் வந்தது. நீ போடும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு இத்தனை கெடுபிடியாக என திட்டியதால் திட்டம் கைவிடப்பட்டது. நான் மொத்தம் ரூ.13,000/= செலவு (1986) செய்து விமர்சையாக திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்லியாக வேண்டும்.

இந்த வெண்பொங்கலுக்கும் வெங்காய சாம்பாருக்கும் விலை போன மக்கள் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்ப்பட நீண்ட வருடங்கள் தேவைப்பட்டது. 

தற்போது இந்த பழக்கம் குறைந்து விட்டது அல்லது முழுவதுமாக நின்று விட்டது என தோன்றுகிறது.  ஆனால் இந்த மஞ்சள் பை, காப்பி குடிப்பது, விருந்து உபசரிப்பது போன்றவை இன்னமும் இருக்கிறது. ஆனால் முன்பு செய்தது போல ஆர்பாட்டம் இல்லையென தெரிகிறது.

                                      









3 comments:

  1. எந்த பழக்கமும் குறையவில்லை மஞ்சள் பை, காப்பி குடிப்பது அல்லது போதைதண்ணி,

    மஞ்சள் பை பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது ( அத்தை கணவரா தங்கை கணவரா !!!
    வெண்பொங்கல் ம் உண்டு , முறுக்கு மைசூர் பாக் பிரச்சனையும் உண்டு !!

    இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருக்காது ஏன் என்றால் தற்காலத்தில் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வதோடு நிறுத்திக்கொள்கிறார்கள் ! எதிர்கால பிள்ளைகளுக்கு அத்தை, சித்தப்பா, பெரியப்பா உறவு முறை கிடக்குமா என்ன :( இது மிகவும் வருந்தத்தக்கது !

    ReplyDelete
  2. ஸௌராஷ்ட்ர சரித்திரம் லிக்கத்தெனு ஒக்கொக்கொ வைபவம் கோனக் சல்லேத் ஹொதெயொ மெனத்தெ ரிகார்டு கெரி தொ2வ்னொ.
    கெ4ட்டி விடா3கு நொவ்ராகு முதுல்லோஸ் பொ3ல்லி ஜானான் நொவ்ரி கெரின் கே4ர். ருவ்வொ கெ4டி ப2ராது ஒண்டெனொ ஜீ பொ3ல்லி அவயி. ருவ்வ கெ4டிஸ் நொவ்ரி கெரின் கொ4ம்மொ ரீ:டி, கெ4ட்டி3 விடொ3 முஸுநாத்திக்காம் முதுல்லொ நொவ்ரொ ஜேட3யி.
    அத்தொ அஸ்கிதெங்கொ ஸெரொ போட்டோஸ் தெ4ர்லுட3ரியொ.
    ஹொராட் ஹோத்தக் முந்தடீ3ஸ் ஸொந்தம் மென்க்யான் ஸெந்தொ மெள்ளி குரூப் போட்டோ தெ4ர்லுட3ரியொ.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete