Friday 10 October 2014

ஹைதர் HAIDER - இந்தி திரைப்படம்.



 ஹைதர் HAIDER


அண்மை காலத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று தற்போது திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கும் ஹைதர் HAIDER என்ற இந்தி திரைப்படம்.

ஷேக்ஸ்பியரின் HAMLET  கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்.

1995ஆம் ஆண்டுகளில் காஷ்மீரில் தீவிரவாதம் (சுதந்திர போராட்டம் ? ) உச்ச நிலையில் இருந்த கால கட்டத்தை அடிப்படடையாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

அன்றைக்கும் இன்றைக்கும் காஷ்மீரில் உள்ள நிலையை அருமையான வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகளின் மூலம் விளக்கியுள்ளார்.

நகரில் எங்கு பார்த்தாலும் முள் வேலி தடுப்புகள், எல்லா இடங்களிலும் இராணுவத்தால் சோதனை செய்யப்படுதல் என்பவற்றை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

தீவிரவாதிகளை அடையாளம் காண ஒலிப்பெருக்கி மூலம் அனைத்து ஆன்களையும் வீட்டிலிருந்து வெளியே வர சொல்ல அனைவரும் தங்களது அடையாள அட்டையுடன் வந்து வரிசையில் நிற்பதன் மூலம் மக்கள் எத்தகைய வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பதை விவரித்துள்ளார்.,

ஒருவன் தன் வீட்டு வாசலிலேயே மணிக்கனக்காக காத்திருந்து விட்டு திருப்பி போவதாக வீட்டு பெண்மனிகள் கூறும் போது, அவனது உடலை தடவி சோதனை செய்து, உன் அடையாள அட்டை எங்கே என்று கேட்டவுடன் கான்பித்து விட்டு வீட்டுக்கு உள்ளே செல்கிறான். இன்றைக்கு இது தான் காஷ்மீர் மக்களின் மன நிலையாக மாறிவிட்டது என்கிறான். சக மனிதனை அவனது அடையாள அட்டை மூலமே அறிய முடியும் என்பதை செருப்பால் அடித்தது போல சொல்லியிருக்கிறார்.

Armed Forces Special Act  என்ற சட்டம் மக்களின் அன்றாட வாழ்க்கையை அலோங்கோலப்படுத்தியுள்ளது என்பதையும் நன்றாகவே சாடியுள்ளார்.

தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படும் நபர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் சித்தரித்துள்ளார்.

அதே சமயம் சமூக ஆர்வலகள் என்ற பெயரில் தீவிரவாதிகள் (விடுதலை போராட்ட வீரர்கள்) வைக்கும்  வாதத்தையும் சாடியுள்ளார். இது வரை 8000 பேர் கானாமல் போய் உள்ளனர் என்ற வாதத்திற்க்கு, இங்கிருந்த 80000 பிராமணர்கள் கானாமல் போய் உள்ளதை இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை என்று அவர்களையும் வசை பாடியுள்ளார்.

இவர்கள் இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற போராடவில்லை பாக்கிஸ்தானிடம் அடிமையாக போராடுகின்றனர் என்று தனது தேச பக்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். 

இது இந்திய எதிப்பு பிரச்சாரமாக உள்ளதே என்ற விமர்சனத்துக்கு இயக்குனர் விசால் பரத்வாஜ் கூறும் பதில் நானும் இந்தியன் தான் எனக்கும் தேசப்பற்று உள்ளது என்றும் நான் மனித உரிமை மீறல்களையே கேள்வியாக்கியுள்ளேன் என்று தைரியமாக பதில் கூறுகிறார்.

படப்பிடிப்பு சமயத்தில் காஷ்மீர் பல்கலை கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும் , தணிக்கை துறை ஆட்சேபித்த காட்சிகளை நீக்கியதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.

கதாநாயகனாக ஷாகித் கபூர் Shahid Kapoor தனது வழக்கமான வணிக திரைப்படத்திலிருந்து விலகி இந்த படத்தில் நடித்திருப்பது சிறப்பு. சிறந்த இயக்குனர் கிடைத்து தனக்கு விருப்பமான கதையில் நடிக்கும் போது, சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும் என உணர்த்தியுள்ளார். நடிப்பில் நல்ல முன்னேற்றம். தொடர்ந்து முயற்சி செய்தால் அவரது தந்தை திரு. பங்கஜ் கபூர் போல சிறந்த நடிகராக உருவாக வாய்ப்புள்ளது.

கதாநாயகனின் காதலி அல்லது மனைவியை தான் திரைப்படத்தில் கதாநாயகி என்று கூற வேண்டிய அவசியமில்லை. இதில் நாயகனுக்கு அம்மாவாக வரும் தபு கதாநாயகியாக மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு காட்சியில் கணவனின் தம்பியுடன் பாடி சிரித்து மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் மகன் வந்து விட அந்த மகிழ்ச்சியை நொடிப்பொழிதில் சோகமாக மாற்றிக்கொண்டு, மகனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறும் இடத்தில் அவரது அனுபவம் பேசுகிறது.

மகன் ,  கணவன் கானாமல் போன சில தினங்களில் அவரது தம்பியுடன் சல்லாபம் செய்கிறாயா இது இப்போது தான் ஆரம்பித்ததா அல்லது அவர் இருக்கும் போதே ஆரம்பித்ததா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் தருணத்தில் அவரது நடிப்பு அருமை.

நாயகனின் காதலியாக வரும் சரதா கபூர் Shraddha Kapoor தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

கே.கே.மேனன் , இர்பான் கான் இருவருமே தங்களது பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.

பங்கஜ் கபூரின் ஒளிப்பதிவு காஷ்மீரை மிக அழகாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இவ்வளவு அழகான நிலப்பரப்பு மனிதனின் வீம்பின் காரணமாகவும் சுய நலத்தின் காரணமாகவும் அரசியல் காரணங்களுக்காகவும் யுத்த பூமியாக இருப்பது மிகவும் வருத்தத்தை ஏற்ப்படுத்துகிறது.

பாடல்களும் இசையும் விசால் பரத்வாஜ் செய்துள்ளார். சற்று உருது வார்த்தைகள் கலந்த பாடல்கள்.

நார்வே நாட்டு நடன கலைஞரை கொண்டு வடிவமைக்கப்பட்ட நடன காட்சி நன்றாக உள்ளது.

மொத்த படமும் 54 நாட்களில் 37 கோடியில் கபூர், பரத்வாஜ் மற்றும் UTV நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியில் வெற்றியடைந்துள்ளது.


கதைச்சுருக்கம்:

காயம் பட்ட தீவிரவாதிக்கு மருத்துவர் சிகிச்சையளிகிறார். மருதுவர் கைது செய்யப்படுகிறார். வீட்டை தகர்த்து தீவிரவாதி கொல்லப்படுகிறான். மருத்துவர் கானாமல் போகிறார். அவரை மகன் காவல் நிலையங்களிலும் முகாம்களிலும் தேடுகிறான்.

அவனது அம்மா சித்தாபாவுடன் உறவாடுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்மாவை நம்புவதா வெறுப்பதா அன்பு செலுத்துவதா கொல்வதா என குழம்புகிறான். ஆனால் அம்மா அவன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறாள்.

ராணுவ அதிகாரியின் மகளை காதலிக்கிறான். தீவிரவாதி இயக்கத்தில் இருக்கும் ஒருவன் தன்னை சந்திக்கும் படி செய்தி அனுப்புகிறான். அவனும் சந்திக்கிறான். உன் அப்பாவுடன் சிறையில் இருந்தேன் என்றும் உன் அப்பா உன் சித்தப்பாவை பழி வாங்க சொன்னதாகவும் கூறுகிறான். உன் அம்மாவின் மனதை மாற்றி உன் சித்தப்பா அவளை அபகரித்துள்ளான் என்று கூறுகிறான். உன் அப்பா இறந்துவிட்டார் என்றும் உன் அப்பா இறப்பதற்க்கு காரணம் உன் சித்தப்பாவின் சதி தான் காரணம் என்றும் கூறுகிறான். துப்பாக்கி கொடுத்து உதவுகிறான்.

மகன் அம்மாவிடம் அப்பா இறந்து விட்டதை கூறுகிறான் இறந்தவருக்கு சடங்குகள் செய்யும் போது, சித்தப்பா விதவையை (அண்ணி) தான் மனந்து கொள்வதாக கூறி மணந்து கொள்கிறான்.

தான் சித்தப்பாவை கொல்ல நினைத்திருப்பதை காதலியிடம் சொல்ல அவள் எதேச்சையாக அவள் அப்பாவிடம் சொல்ல, ராணுவ அதிகாரியான அவளது தந்தை அவனது சித்தாப்பாவிடம் சொல்ல ( சித்தப்பா தேர்தலில் வெற்றி பெற்று MP ஆகி விடுகிறார்) அவன் சிறைபடுகிறான். அவனை மனநோய் மருத்துவமனையில் சேர்க்க முயற்சி மேற்க்கொள்ளப்படுகிறது. தப்பி விடுகிறான். சித்தப்பா அவனை கொல்ல ஏற்பாடு செய்கிறார். எல்லை கடந்து பயிற்சி எடுத்துக்கொண்டு வந்தால் உன் சித்தப்பாவை எளிதில் கொன்று விடலாம் என தீவிரவாதிகள் சொல்ல ஒப்புக்கொள்கிறான். அதை அம்மாவிடம் தொலை பேசி மூலம் தெரிவிக்கிறான். போவதற்க்கு முன்பு கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டு போ என அம்மா வேண்டுகிறார். ஒப்புக்கொள்கிறான்.

இந்த கட்டத்தில் காதலி இறந்து அவளை புதைக்கும் காட்சியை பார்க்கும் இவன் அங்கு செல்ல காதலியின் அண்ணன் சித்தாப்பாவுக்கு தகவல் கொடுக்க அவர் அங்கு வந்து அவனை கொல்ல முயற்சி செய்கிறார். இதற்கிடையில் மகனை சந்தித்து அவன் மனதை மாற்றுகிறேன் என்று அம்மா கூற ஒப்புக்கொள்ளப்படுகிறது. அம்மாவின் வேண்டுகோளை புறக்கணிக்கிறான். துப்பாக்கி சூடு நடைபெறுகிறது. தீவிரவாதிகள் அங்கு வர கடுமையான சண்டை நடைப்பெறுகிறது. அம்மா மனித வெடிகுண்டாக மாறி தன்னை மாய்த்து கொள்ள , சித்தாப்பா கால்களை இழந்து தவிக்கிறார். மகன் அவரை கொல்ல முயற்சிக்கிறான்

அப்பா பழி வாங்க சொன்னதை நினைவு படுத்திக்கொண்டு கொல்ல முயற்சி செய்யும் போது, பழிக்கு பழி வாங்குவதால் பிரச்சனை தீர்ந்து விடாது என்று அம்மா சொன்னதை நினைத்து கொண்டு கொல்லாமல் விட்டு விடுகிறான்.
. ========================================================================
 

No comments:

Post a Comment