Saturday, 14 September 2013

வணிகம்-BUSINESS


RELIANCE NEW INVESTMENT- ரிலையென்ஸ் புதிய மூதலீடு



ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்காவில், ரூ.63,400 கோடி ($ 10 billion )முதலீடு செய்து, சேல்(shale gas) வாயு நிறுவன சொத்துக்களை வாங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ரூ.38674 ($ 6.1 billion) முதலீடு செய்துள்ளது. மீதமுள்ள ரூ.25360 கோடிகளை ($3.9 billion) முதலீடு செய்ய உள்ளது.. ரிலையன்ஸீடம் ஏற்கனவே ரூ.85000 கோடி உபரியாக உள்ளது. அந்த பணத்தின் மூலம் இதை வாங்க போகிறது.

அமெரிக்காவில் இருக்கும் சொத்துக்களின் மூலம், சேல்(SHALE) வாயு உற்பத்தி செய்து, அமெரிக்காவில் வாயு அடிப்படையாக கொண்ட,(GAS BASED FERTILIZERS, PETRO CHEMICALS AND POWER PLANT தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிறகு அவைகளை இந்தியா கொண்டுவர உள்ளது. மேலும், விலை குறைவான சேல் வாயுவை(SHALE GAS) இந்தியாவிற்க்கு கொண்டுவந்து, விலை அதிகமான (LNG) மாற்றி விற்க முடிவு செய்துள்ளது.

ஒரு இந்திய நிறுவனம், உலக நிறுவனங்களுக்கு இனையாக தொழில் செய்வது பெருமைபடகூடிய விசயம். இந்த நிறுவனத்திற்க்கு சேவை செய்யும் விதமாக பல சிறிய நிறுவனங்கள் உருவாகும். நிறைய வேலை வாய்புகள் உண்டாகும் இந்த நிறுவனம் நிறைய லாபம் சம்பாதிக்கும். சரி இதில் என்ன பிரச்சனை. ஏன் இந்த பதிவு.

ரிலையன்ஸ் மூதலீடு ரூ.63400 கோடி ($ 10 billion) இந்திய அரசின் கையிருப்பில் இருக்கும் அந்நிய செலவானி( அமெரிக்கன் டாலர்) வெளியே போகிறது.
அமெரிக்காவில் இருக்கும்  ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கு அமெரிக்காவில் தயாரான பொருட்களை விற்கும் போது, இந்திய நிறுவனம் அந்நிய செலவாணி கொடுத்து தான் வாங்கும்.
அதாவது, மூதலீடு செய்யும் போதும், அங்கு தயாரன பொருட்களை திரும்ப கொண்டுவரும் போதும் நாட்டின் அந்நிய செலவானியை இரண்டு முறை உபயோகப்படுத்துகிறது. இந்திய நிறுவனம்  வெளிநாட்டில் தொழில் தொடங்குவதன் மூலம் இரட்டிப்பு அந்நிய செலவாணி செலவாகிறது. இந்த தொழிலின் மூலம் அந்நிய செலவானி நம் நாட்டுக்கு வரவில்லை.

இதே தொழிலை இந்தியாவில் கிடைக்கும் கனிமங்களை கொண்டு செய்தால், அந்நிய செலவானி மிச்சமாகிறது. மேலும் நமக்கு பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ( கச்சா எண்ணெயில் செய்யும் அடாவடி தனத்தை செய்யாமல் இருந்தால்(எனது முந்தைய பதிவை படிக்கவும்)

இதற்காக தான் தஞ்சாவூர் பகுதியில், மீத்தேன் வாயு கிடைப்பதால், அங்கு அதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டது. ஆனால், விளைநிலங்கள் பாழகிவிடும் மற்றும் தானிய உற்பத்தி குறைந்து விடும் என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இப்போது புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள நிலசீர்திருத்த சட்ட்த்தின் மூலம் , நில உரிமையாளர்களில் 80% பேர் ஒப்புகொண்டால் தான் நிலத்தை கையகபடுத்தமுடியும். எனவே எதிர்ப்பு இருப்பதால், நிலத்தை கையகபடுத்த முடியாது . தொழிற்சாலை தொடங்க இயலாது.

ஆனால், புதிய நிலசீர்திருத்த சட்டத்தின்படி, நிலங்களுக்கு நட்ட ஈடாக , அந்த இடத்தின் சந்தை விலையை போல 4 மடங்கு தர வேண்டும் என்றும் மேலும் பலபல  சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆசைபட்டு, விவசாயிகள் நிலங்களை விற்க ஆசைபடலாம்.
இந்த சட்டம் இயற்றியதற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாரட்டவுமில்லை.

அரசு எந்த கொள்கை வகுத்தாலும் , பொதுவாக பணக்கார்ர்களுக்கு சாதகமாகவே செயல்படுவதாகவே கூறுவார்கள். எதிர்கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் மக்களுக்காக போராடுவதாக ஒருநாள் ஊர்வலம், கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பை காட்டி அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக செயல்படுவதாக காட்டிகொள்வார்கள். ஆனால், அரசு சட்டத்தை கொண்டுவர உதவியும் செய்வார்கள்.
இது போன்ற தொழிற்சாலைகள் தொடங்கபடும் இடங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாதாமாதம் லட்சகணக்கில் பணத்தை பட்டுவாடா செய்கின்றன. இவர்கள் பொதுமக்களின் துணையுடன் பிரச்சனை செய்யாமல் இருப்பதற்க்கும் அல்லது பொதுமக்களோ அல்லது தனியார் அமைப்புகளோ தொல்லை கொடுத்தால் அதை அவர்கள் சமாளிப்பதற்க்கும் கொடுக்கப்படுகிறது.

சேல் என்பது என்ன?
இறுக்கப்பட்ட சேறு , களிமண் மற்றும் வேதியல் பொருள்களால் ஆன பாறை. (Shale is a compressed fine-grained type of sedimentary rock. It was formed from mud silt, clay, and organic matter).
சேல் வாய் என்பது என்ன?  சேல் பாறைகளில் இருக்கும் வாயு. இது HYDROCABON வாயு கலவை. இதில் அதிகமாக METHANE வாயு அடங்கியுள்ளது.மேலும், ETHANE, PROPANE , BUTANE, CAROBON DIOXIDE, NITROGEN)AND SULFIDE அடங்கியுள்ளது.
Shale gas is natural gas trapped within tiny pore spaces in shale formations. It is a hydrocarbon gas mixture. It consists mainly of methane. Other hydrocarbons are natural gas liquids (NGLs) like ethane, propane, and butane, and it also contains carbon dioxide, nitrogen, and hydrogen sulfide.
LNG என்றால் என்ன?
நிறமற்ற திரவநிலையில் இருக்கும் இயற்கை வாயு
இது மின்சார உற்பத்திக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இராசயன பொருட்கள் தாயரிப்பதற்க்கும் பயன்படும்

LNG is liquefied natural gas, a clear, colourless, non-toxic liquid that forms when natural gas is cooled to -162ºC (-260ºF). This shrinks the volume of the gas 600 times, making it easier to store and ship to energy-hungry towns and cities overseas.
 

 RELIANCE CRUDE OIL BUSINESS-ரிலையஸ் கச்சா எண்ணெய் வியாபாரம்


ரிலையன்ஸ் நிறுவனம் கடலோர பகுதிகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது என்பது தெரிந்த விசயம்.

இப்போது அரசுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கும் நடக்கும் பிரச்சனைகள்.

அரசு தரப்பு::
1. ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி தொடங்காத்தால், 100 கோடி            ($ 1 billion) அமெரிக்க டாலர்கள் ஏற்கனவே அபராதம் விதித்துள்ளது.மேலும், தற்போது, 797 லட்சம்( $ 797 million) அமெரிக்க டால்ர்கள் அபராதம் விதித்துள்ளது.
2. ஏற்கனவே உற்பத்தி செய்யும் இடங்களில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க முடியாது என அமைச்சகம் கூறுகிறது.
3. கால தாமதம் செய்வதால் புதிதாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 8 இடங்களை அரசுவசம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சகம் கூறுகிறது
4. சில இடங்களில் மட்டுமே உற்பத்தி செய்கிறது அதுவும் குறைவாக செய்கிறது என்பது அரசின் குற்றசாட்டு.

ரிலையன்ஸ் வாதம்::

1. எண்ணெய் விலையை அரசு நிர்ணயம் செய்கிறது. ஆனால் ஒப்பந்தபடி சந்தை விலை கொடுக்க வேண்டும்.
2.அரசு ஒப்பந்தத்தை மீறுகிறது என குற்றம் சாட்டுகிறது.
3. 8 எண்ணெய் கிணறுகளை அரசு ஒப்படைக சொல்லுவதை கோபத்துடன் மறுக்கிறது.
4. இப்படிபட்ட சூழ்நிலையில், முதளிட்டாளர்கள் எண்ணெய் உற்பத்தி செய்ய மாட்டார்கள் என கூறுகிறது.
5. சந்தை விலை நிர்ணயிக்கமுடியாது என கூறுவதை எதிர்கிறது.
6. அரசு எங்களிடமிருந்து ஒரு பகுதியை திரும்ப எடுத்துகொண்டு , மீண்டும் ஏலம் விட முறச்சி செய்கிறது.
7.கனிம வள சிக்கல்களினால் (geological complexity) உற்பத்தி குறைவாக உள்ளதாக கூறுகிறது.


தனியார் தொழில் தொடங்கினால், அவர்கள் தங்களது லாபத்தை மட்டுமே பார்க்கிறார்கள். தேச நலனை கருத்தில் கொள்வதில்லை.

அரசு பொதுதுறை நிற்வனங்களை தொடங்குவதில்லை. ஏற்கனவே இருக்கும பொதுதுறை நிறுவனங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை.இதற்கு அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டும் காரணமல்ல. அங்கு வேலை செய்யும் தொழிலார்களும் பொதுமக்களும் கூட காரணம். பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு அரசு விற்பனைசெய்கிறது. பொது துறை நிறுவனங்கள் சரிபட செயல்பட அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.

அரசும் ரிலையன்ஸ் நிறுவனமும் பேசி ஒரு முடிவுக்கு வந்தால், அதிக உற்பத்தி தொடங்கும். அந்நிய செலவானி மிச்சமாகும். எண்ணெய் விலை குறைந்தால் அனைத்து பொருள்களின் விலையும் குறையும். தொழில் உற்பத்தி அதிகரிக்கும். பொருளாதரம் மேம்படும்.

விரைவில் தீரவு காண்பார்கள் என எதிர்பார்ப்போம்.
நான் தமிழில் பதிவிடுவதற்க்கு காரணம்தமிழ் மட்டுமே எழுத படிக்க பேசகின்ற மக்களும் எனது பதிவின் விவரங்கள் அறியவேண்டுமென்பதற்க்காக.
என் பதிவில் கருத்து பதிய விரும்பும் நபர்களும் தமிழில் கருத்துக்களை பதிவு செய்யவும்.
ஆங்கிலத்தில் கருத்துகளை பதிவில் செய்ய விரும்பினால் ஆங்கிலத்தில் எழுதுங்கள் .தமிழை ஆங்கிலத்தில் எழுதுபவர்களின கருத்துக்களை நான் படிப்பதில்லை.

அதே சமயம் தமிழின் பழைய பெருமைகளை பேசி திரிபவன் அல்ல. தமிழன் அவமானப்படுத்தபடுகிறான் என்று புலம்புபவனும் அல்ல. தமிழர்களுக்கு தனி தமிழ் நாடு வேண்டும் என்பவர்களுக்கு ஊக்கம் கொடுப்பவனும் அல்ல.

திரைபட விமர்சனங்கள்


இந்தி திரைப்படம் GRAND MASTI


இந்தி திரைப்படம் GRAND MASTI வெளிவந்துள்ளது. வயது வந்தோர்கான (ADULT) திரைப்படம்.
வயதுவந்தோர்கானஎன்ற தமிழ் வார்த்தையை அடிப்படையாக வைத்து பார்த்தால் என்ன பொருள் வருகிறது. அல்லது ADULT என்பதற்க்கு சட்ட ரீதியாக கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தின் அடிப்படையில் என்ன பொருள் வருகிறது.
ADULT என்பதற்க்கு 18 வயது பூர்த்தியானவர்கள் என்பது பொருள். இன்றைக்கு 17 வயது 364 நாட்கள் ஆன ஆணும் பெண்ணும் பார்க்க முடியாது. நாளைக்கு பார்க்கலாம். இந்த ஒரு நாள் இரவில் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் முதிர்ச்சி அடைந்து வசனங்களை கேட்கவும், காட்சிகளை பார்க்கவும்,தகுதி அடைந்து விடுகிறார்களா. அதை பார்த்து உடல் கிளர்ச்சி அடைந்தால் அதை கட்டுபடுத்தும் தகுதியும் அல்லது உடல் கிளர்ச்சியை தணித்து கொள்ளும் உரிமையும் பெற்று விடுகிறார்களா. இப்படி விவாதம் செய்தால் பின்பு எந்த வயது சரியென்று தீர்மானித்து அனுமதிப்பது என்று விவாதம் எழலாம்.
வயதுவந்தோர் என்பதற்க்கு நாட்கள் தான் குறியீடா. பின்பு ஏன் பெண்ணுக்கு  13-14 வயதில் உடல் ரீதியாக  ஏற்படும் மாற்றங்களை கொண்டு அவள் வயதுக்கு வந்துவிட்டாள் என கூற வேண்டும். அவள் தான் வயதுக்கு வந்துவிட்டாளே அதற்கு பின்பும் ஏன் கட்டுபாடுகள் விதிக்கப்படுகிறது. அவள் ஏன் வசனங்களை கேட்ககூடாது. காட்சிகளை பார்க்ககூடாது..இவைகளை பார்பதால் ஏற்படும் உடற்கிளர்சிகளையும் மனகிளர்சிகளையும் ஏன் கட்டுப்படுத்துகிறார்கள்.தமிழ் மொழி கூற்றுப்படி 13-14 வயதான பெண் வயதுக்குவந்துவிட்டாள் என்றால் ஏன் அவளை இதற்கு அனுமதிக்ககூடாது.
இது ஆணுக்கும் பொருந்தும்.13-14 வயதில் அவனும் வயதுக்கு வந்துவிடுகிறான். அதை வெளியே சொல்லி கொண்டாடுவதில்லை. மற்றபடி அவனுக்கும் அவளுக்கும் எல்லா விசயங்களும் தெரிய ஆரம்பித்து விடுகிறது. அப்படி சிலருக்கு தெரியமாலிருந்தாலும், தெரிந்து கொள்வதில் என்ன தவறு.
இந்த வயதில் தெரிந்து கொள்வதாலும் தவறுகள் நடக்கிறது. தெரிந்து கொள்ளாமல் இருப்பதாலும் தவறுகள் நடக்கிறது. எனவே இது ஒரு விவாத பொருள்.
எனவே, பெற்றோரும், கல்வி நிலையங்களிலும் இதற்கான பாடதிட்டத்தை வகுத்து சொல்லி தரவேண்டும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவு,சம்பிரதாய ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சட்ட ரீதியாகவும், இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை சொல்லி தரவேண்டும்.

மேலே குறிப்ப்பிட்ட திரைபடம் ADULT COMEDY  என்று விளம்பரபடுத்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் இல்லை ஒவ்வொரு சொல்லும் இரட்டை அர்த்தங்கள் கொண்டது. மேலும் நடிகர்கள் நடிகைகள் செய்யும் வசன உச்சரிப்பும். உடல் அசைவுகளும் நெளிய வைக்கிறது. வசனம் எழுதியவர் சரளமாக எழுதியிருக்கமாட்டார். மிகவும் சிரமப்பட்டு எழுதியிருப்பார். ஆண் உறுப்பையும் பெண் உருப்பையும் உருவகப்படுத்த சொற்களை தேடி அலைந்து எழுதியிருப்பார். இந்தி மொழி வசனங்களை தமிழில் மாற்றமுடியாது. அதே பொருள் தராது. இந்த படத்தை தமிழில் எடுக்க யாரும் முன் வர மாட்டார்கள் என நினைக்கிறேன்..

எல்லோருக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் பிடிக்கும்.நண்பர்களுக்குள் சொல்லி ரசிக்கப்படும். பெரியவர்களும் சந்தடி சாக்கில் சொல்லி ரசிக்கவும் செய்வார்கள். சங்கடபடுத்தவும் செய்வார்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இந்த படத்தில் வசனங்களும், காட்சிகளும் உடல் அசைவுகளும் அனைத்துமே அதிகம்.

அவசியம் பார்க்க வேண்டிய படம் அல்ல. பார்க்க வேண்டும் என நினைத்தால், திருட்டு VCD வாங்கி பார்க்கவும். இது தொலைகாட்சியில் ஒளிபரப்ப இயலாது என்பது எனது எண்ணம்.





Saturday, 7 September 2013

பிள்ளையாருக்கு பிரச்சனைகள்

கடவுள் வழிபாடு::


நேற்று என் கனவில் பிள்ளையார் வந்து புலம்பிய புலம்பலை, உங்களிடம் புலம்பா விட்டால், எனக்கு பைத்தியமே பிடித்துவிடும். அவரது புலம்பல்கள்.

1. நான் பிறந்து உயிர் பெற்ற விதம் விசித்திரமானது. எனது அம்மா பார்வதி அதாவது சிவபெருமானின் மனைவி, மண்ணால் என்னை செய்து(சிலர் என் அம்மா தனது உடலில் இருந்த அழுக்கை சேர்த்து உருட்டி) உயிர் ஊட்டி , பின்பு என்னை காவலுக்கு வைத்துவிட்டு குளிக்க சென்றார்களாம்.
என்ன கொடுமடா இது. உலகை ஆளும் சக்தி படைத்த பார்வதி எத்தனை வருடங்கள் குளிக்காமல் இருந்தார்கள் இவ்வளவு அழுக்கு சேர்வதற்க்கு  ?
அது சரி, என் அம்மா குளிப்பதற்க்கு காவல் எதற்கு ? முக்கோடி தேவர்களும் வந்து அம்மா குளிப்பதை வேடிக்கை பார்ப்பார்கள் என்ற பயமா? மறைந்திருந்து புகைபடம் எடுத்து வலைதளங்களில் வெளியிட்டுவிடுவார்கள் என்ற பயமா? அல்லது அதற்கும் மேலாக யாரவது அவரிடம் தவறாக நடந்து கொள்வார்கள் என்ற பயமா ?

இன்றைக்கு பூலோகத்தில், ஒரு பெற்றோர்(SINGLE PARAENT) என்ற முறை உள்ளதாம். அதாவது, அம்மாவோ அல்லது அப்பாவோ யாராவது ஒருவர் தனியாக குழந்தை வளர்த்தால் அதற்கு ஒரு பெற்றோர் என்று பெயராம்.
உண்மையில் ஒரு பெற்றோர் முறையை அறிமுகப்படுத்தியதே எனது அம்மா தான். ஆண் பெண் உறவு இல்லாமல் தான் ஒருவரே என்னை உருவாக்கி வளர்த்ததால் எனது அம்மா தான் உண்மையிலேயே ஒரு பெற்றோர் முறையை உருவாக்கியவர் என்ற பெருமையை அடைகிறார். ஆனால், பூலோகவாசிகள் அவர்கள் உருவாக்கியதாக கூறிக்கொண்டு என் அம்மா அறிமுகபடுத்திய முறைக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை.

2) சரி. நான் காவலுக்கு இருந்த போது, பார்வதியின் கணவர்(எனது அப்பா அல்ல) வந்தார் . நான், அவர் உள்ளே சென்ற போது தடுத்ததாகவும், அதனால் கோபம் கொண்டு என் தலையை வெட்டி சாய்த்து விட்டு உள்ளே சென்றதாகவும் கூறுகிறப்படுகிறது.
முக்காலமும் உணர்ந்த சிவபெருமானுக்கு, தனது மனைவி பார்வதி குளித்து கொண்டிருப்பது தெரியாதா ? அல்லது நான் யார் என்பது தான் அவருக்கு தெரியாதா ?
மேலும், பார்வதி என்ன முதன் முறையாக குளித்தாரா. என்னை உருவாக்குவதற்க்கு முன்பு, அவர் குளித்ததே இல்லையா ? அப்போதெல்லாம் யாரை காவலுக்கு வைத்துவிட்டு குளிக்க சென்றார். அல்லது என்னை உருவாக்கி அதன் மூலம் எழுந்த விளைவுகளுக்கு பின்பு மீண்டும் குளித்தாரா இல்லையா. அப்போது யாரை காவலுக்கு வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு தான் பார்வதி குளிக்கும் குளியலறைக்கு தாழ்பாள் போடப்பட்டதா.

3)எனக்கு யானை தலையை வெட்டி கொண்டு வைத்தார்கள். சரி. எனக்கு ஏன் தொப்பை வயிறு இருப்பதாக காட்டுகிறார்கள். நான் யானையை போல நிறைய சாப்பிட்டதால், அப்படி வயிறு இருப்பதாக காட்டீனார்களா ?
இப்போது, பூலோகத்தில் எனது உருவத்தை பலவிதமாக வரைகிறார்கள். பல்வேறு உலோகங்களில் எனது சிலைகளை செய்கிறார்கள். Cartoon character விட மோசமாக செய்கிறார்கள்.
நான் நல்ல உடற்பயிற்சி செய்து, நீங்கள் எல்லாம் சொல்வது போல 6 pack உடல் அமைப்புடன் இருக்கிறேன். எனக்கு ஒரு jeans pant  போட்டு 6 pack  உடல் அமைப்புடன் இருப்பது போல் ஏன் வரைவதில்லை. சிலை செய்வதில்லை. கொஞ்சம் யோசியுங்கள. எனக்கும் இது போன்ற ஆசைகள் இருக்கிறது.
4) நாரதர் கொண்டு வந்த மாம்பழத்தை பெறுவதற்க்காக வைக்கப்பட்ட போட்டியில் நான் பார்வதி-சிவபெருமான் அவர்களையே உலகமாக கூறி அவர்களை சுற்றி வந்து பழத்தை பெற்று கொண்டதாக கூறுகிறார்கள். அதவாது நான் ஏமாற்றி பழத்தை வாங்கி கொண்டேன் என்பதை நாசூக்காக கூறுகிறார்கள். என்ன ஒரு பித்தலாட்டம்.
பெரிய உருவம் உள்ள எனக்கு, ஏன் சிறிய மூஞ்சூரை வாகனமாக ஒதுக்கினார்கள். எனது பெரிய உருவத்தை சுமக்கும் அளவுக்கு பலம் கொண்ட உயிரினத்தை ஏன் உருவாக்கி கொடுக்கவில்லை.
இப்போது நிங்கள் செய்யும் உருவத்திலாவது மூஞ்சூருக்கு பதிலாக நீங்கள் உபயோகிக்கும் வேகமாக செல்லும் நவீன வாகனத்துடன் சிலை செய்யுங்கள்
(முருகனும் புலம்பிகொண்டிருக்கிறான். அவனுக்கு சேவலை வாகனமாக ஒதுக்கிவிட்டார்களாம். அவன் அதன் மீது உட்கார்ந்து கொண்டு அதை பாதுகாக்க வேண்டியுள்ளதாம். கொஞ்சம் ஏமாந்து பிடியை தளர்த்தினாலும் அது கோழியை தேடிகொண்டு சென்று விடுகிறதாம். அதனால் சேவலை எப்போதும் கவட்டுக்குள் வைத்து கொண்டு கவனமாக இருக்க வேண்டியிருக்கிறதாம். இதனால், “ கந்தனுக்கு புத்தி கவட்டுக்குள்ளே” என்ற பழமொழியே ஏற்பட்டு விட்டதாக புலம்பிகொண்டிருக்கிறான். எனவே எனது பிரச்சனையை தீர்த்து விட்டு , அவனது பிரச்சனையையும் கவனியுங்கள்)

5)நான் இந்து மத கடவுள், தமிழ்நாட்டிலும் இந்தியா பூராவும் வணங்கபடுகிறேன்.
ஆனால், எனது உருவத்தை ஏன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து உபயோகிக்கிறிர்கள். இந்தையாவிலேயே செய்ய கூடாதா. ?
6) எனக்கு ஏன் எப்போதும் சாப்பிடுவதற்க்கு கொழுகட்டையும் சுண்டலும் மட்டும் தருகிறிர்கள். நீங்கள் மட்டும் வகைவகையாக செய்து சாப்பிடுகிறீர்கள். எனக்கு ஒரே மாதிரி உணவை சாப்பிட்டு அஜிரினம் ஆகிவிட்டது. சம விகித்த்தில் உணவை கொடுங்கள். அப்போது தான் எனக்கு உடல் நிலை சரியாய் இருக்கும். மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் எனக்கு கொழுகட்டை போல் இருக்கும் அவர்கள் உணவு “மோமோ” கொடுக்கலாமே.
எனக்கு கல்யானம் ஆகிவிட்டதா இல்லையா. தெளிவாக சொல்லுங்கள். நான் கல்யானம் ஆகாமல், பிரம்மசாரியாக மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ஏங்கி கொண்டிருப்பதாக ஒரு சாரார் சொல்கிறார்கள்.
மறுசாரார், எனக்கு கல்யானம் ஆகிவிட்டது என்றும், 2 மனைவிகள் உள்ளர் என்றும் கூறுகிறார்கள். எது உண்மை.
எனக்கு கல்யானம் ஆகிவிட்ட்து என்றால் எனது வாரிசுகள் எங்கே. கல்யானம் ஆகியும், எனது உருவத்தின் காரணமாக “உறவு” கொள்ளாமல் இருக்கிறேனா அல்லது எனக்கு உருவாகும் வாரிசு என்னை போல இருப்பானா அல்லது மற்றவர்களை போல சாதாரனமாக இருப்பானா. என் மனைவியால் எனது குழந்தையை சுமக்க முடியுமா. அல்லது, நான் அந்த விசயத்திற்க்கு லாயக்கு இல்லாதவனா. செயற்கை முறையிலாவது எனது மனைவிகளை கரு தரிக்க செய்து , எனக்கு வாரிசுகளை உருவாக்குங்கள்.

அவரது புலம்பல்களுக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை. நீங்களாவது பதில் சொல்லுங்கள்.
எங்கள் வீட்டு பூஜையில் சுண்டல் நிச்சியம். கொழுகட்டை செய்வது பற்றி யோசிக்கப்படுகிறது.