Tuesday 5 August 2014

கவிஞர்களும் கவிதைகளும்



முகநூலில் நிறைய பேர் கவிதை எழுதுகிறார்கள். சிலர் பத்திரிக்கைகளில் கவிதை எழுதுகிறார்கள். சிலரது கவிதைகள் புத்தகமாக வெளிவந்துள்ளது.

சிலரது பெயருக்கு முன்னாள் கவிஞர். Xxxxxxxxxxxx என்று எழுதப்படுகிறது. சிலரது பெயருக்கு பின்னாள் அவ்வாறு எழுதப்படுவதில்லை.

இந்த கவிஞர் என்று போட்டுக்கொள்வதற்க்கு ஏதேனும் பட்டயப்படிப்பு அல்லது இளநிலை முதுநிலை அல்லது முனைவர் பட்டம் போன்ற பட்ட படிப்பு உள்ளதா? இவை கல்லூரிகளில் கற்று தரப்பட்டு, பல்கலைகழகங்களால் வழங்கப்படுகிறதா ?

பத்திரிக்கைகள் மற்றும் பதிப்பகத்தார் பிரசுரிக்கும்  போது அவரது பெயருக்கு முன்னாள் கவிஞர் என்று குறிப்பிடப்பட்ட பிறகு அந்த பட்டம் அதிகாரபூர்வமாகிறதா. ?

தொலைகாட்சி நிறுவன நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, அவரை குறிப்பிடும் போது கவிஞர் என்று குறிப்பிடப்பட்ட பிறகு கவிஞர் என்ற பட்டம் அங்கீகரிக்கப்படுகிறதா ?

புத்தகம் பற்றி விமர்சன விழா எடுக்கும் போது அல்லது அவரது கவிதைகளை வேறோரு கவிஞர் அல்லது எழுத்தாளர் தன்னிச்சையாக விமர்சிக்கும் போது கவிஞர் என்று குறிப்பிடப்பட்ட பிறகு அங்கீகாரம் பெறுகிறதா ?

அவரது நண்பர்கள் உண்மையாகவோ அல்லது நகைச்சுவைக்காகவோ அவரை கவிஞர் என்று அழைக்கப்பட்டதால் அது அவரது பெயருடன் ஒட்டிக்கொள்கிறதா ?

தனக்கு தானே அப்படி நினைத்துக்கொண்டு தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போது,நான் கவிஞர் என்று அறிமுகப்படுத்திகொள்கிறார்களா ?

எந்த வகையில் இந்த கவிஞர் பட்டம் இவர்களை வந்தடைகிறது ? யாரல் வழங்கப்படுகிறது ?

குறிப்பிட்ட அளவு கவிதைகளை எழுத வேண்டும் என்ற விதியோ அல்லது எழுத்தில் பிரசுரமாக வேண்டும் என்ற விதியோ ஏதாவது உள்ளதா அல்லது ஏதேனும் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த பிறகு அந்த பட்டத்தை போட்டுக்கொள்ளலாம் என்ற விதி முறை இருக்கிறதா.?

இன்று கவிஞர் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களுக்கு அந்த பட்டம் எப்போதிருந்து யாரல் வழங்கப்பட்டது என்று நினைவிருக்கிறதா ? அது ஆவனப்படுத்தப்பட்டுள்ளதா ?

இவையெல்லாம் ஏன் கேட்கிறேன் என்றால் , பிற்காலத்தில் இன்றைக்கு சாதாரணமாக உள்ளவர்கள் இந்த கவிதை துறையில் உயரிய நிலை அடையக்கூடும். அப்போது தான் எப்போது யாரால் கவிஞர் என்று அங்கீகரிக்கப்பட்டோம் என்பதை அவரது சுய சரிதையில் சொல்ல வேண்டியிருக்கும். அதற்க்காக இப்போதே ஆவனப்படுத்தி கொள்வது நல்லதல்லவா ?

தேச தந்தை திரு. காந்தி அவர்களுக்கு மகாத்மா என்ற பட்டம் எப்போது யாரால் வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு அரசாங்காத்திடம் எந்த பதிலும் இல்லை . ஆவனமும் இல்லை

தேச தந்தை என்று எப்படி ஏன் அழைக்கப்படுகிறார் என்பதற்க்கும் அரசாங்கத்திடமோ  குடும்பத்தாரிடமோ அல்லது பொது மக்களிடமோ  பதில் இல்லை.

அது போன்ற நிலை இன்றைய கவிஞர்களுக்கு ஏற்ப்பட கூடாது என்பதால் , கவிஞர் என்று அழைக்கப்படுபவர்கள் , அழைக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அதை ஆவணப்படுத்திக்கொள்வது நல்லது.

எந்த கவிஞரது கவிதைகளும், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் பொற்றாமரை குளத்தில் உள்ள தாமரை பூவில் மிதக்க விடப்பட்டு, ஆஸ்தான புலவர் கூட்டிய அறிஞர் சபையில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல.?

No comments:

Post a Comment