Thursday 14 August 2014

ஜெயகாந்தன் கதைகள்



ஜெயகாந்தன்

இவர் சமகால எழுத்தாளர். இலக்கியவாதி. நிறைய எழுதியுள்ளார். கம்யுனிசத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். நிறைய விருதுகள் வாங்கியுள்ளார். இவரது நாவல்கள் திரைப்படம் ஆக்கப்பட்டுள்ளது. இவரே இயக்கியுள்ளார்.

இன்றைய எழுத்தாளர்களின் பாகுபாட்டில் எதிலும் சேராதவர். அதாவது, இடதுசாரி, வலது சாரி, முற்போக்கு , பின் நவினத்துவம், தலித் இலக்கியம் இப்படி எதிலும் வகைப்படுதப்படாதவராகவே நான் கருதுகிறேன்.

இவர் எழுதிய காலங்களில் சில கதைகளை படித்துள்ளேன். ஆனால் ஞாபகம் இல்லை. இவரது சினிமாவுக்கு போன சித்தாளு, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் இந்த இரண்டு மட்டுமே ஞாபகம் உள்ளது.

தற்போது அவரது மூன்று கதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்த்து. (1) இந்த நேரத்தில் இவள் (2) பாட்டிமார்களும் பேத்திமார்களும் (3) அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்.

இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று இனைந்தவை. மூன்றும் தொடர்ச்சியான கதைகள். வாரப்பத்திரிக்கையில் தொடர் கதையாக எழுதப்பட்டவை.

இவை வெளிவந்த காலத்தில் பிரபலமாக இருந்திருக்கலாம். சுவையாக எழுதியுள்ளார். முழுமையாக படிக்க தோன்றுகிறது. சரளமான நடை.

இந்த மூன்று கதைகளும் குடும்ப கதை என்ற வகையை சார்ந்தது. இதில் மாறுப்பட்ட சிந்தனையோ, புரட்சிகரமான சிந்தனையோ எதுவும் இல்லை. படிக்கும் வாசகனை உணர்ச்சிவசப்பட செய்யும் விசயங்கள் ஏதும் இல்லை. சிந்தனையை தூண்டுவதாகவும் இல்லை. எந்த உபதேசமும் செய்யவில்லை படிப்பவர்களின் மனதில் பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்துவதில்லை.

இன்றைய தொலைக்காட்சி தொடர்களில் வரும் கதை போல் உள்ளது. இந்த மூன்று கதைகளையும் தொலைக்காட்சி தொடராக மாற்றினால் குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு தொடரை எடுத்து  செல்ல முடியும்.

திரு. ஜெயகாந்தன் சரியான சமூக அந்தஸ்து மரியாதை பெறவில்லை என்பதாக சில கருத்துக்களை பார்க்க முடிகிறது. அவருக்கும் தாம் சமூகத்தில் சரியாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற வருத்தம் இருப்பதாக தெரிகிறது.

பொதுவாக, எழுத்தாளர்கள் சமூகத்தில் வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை. அவர்களது காலத்திற்க்கு பின்பே அங்கீகரிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் வாழும் காலத்தில் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை முறை, அரசியல், மதம் கடவுள் சார்ந்த அவரது கருத்துக்கள் மக்களுக்கு தெரிவதால் பல விமர்சன்ங்களுக்கு ஆளாவதுடன் , இலக்கிய துறையில் இருக்கும் போட்டி பொறாமை காரணமாக அவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள்.

அவர்கள் மறைவுக்கு பிறகு அவரது எழுத்துக்களை படிக்கும் அடுத்த தலைமுறைக்கு அவரது தனிப்பட்ட  வாழ்க்கையோ அல்லது அவரது மற்ற கருத்துக்களோ அதிகம் தெரியாத காரணத்தால், அவரது எழுத்துக்களை படித்து மதிப்பிட்டு மரியாதை செய்கின்றனர். 

அவரது சமகால எழுத்தாளர்கள் அவரது மறைவுக்கு பிறகு தங்களது பிழைப்புக்கு பாதிப்பு இல்லையென்ற காரணத்தால், பின்பு புகழ ஆரம்பிக்கின்றனர். இது எல்லா நல்ல எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.

இந்த மூன்று கதைகளை பொறுத்த வரை மிக சாதாரண குடும்ப கதைகளாகவே எனக்கு தோன்றுகிறது. பெரிதாக புகழும்படி ஏதுமில்லை.
கதை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இவள்

கதையின் நாயகன் – மகுடேசன் பிள்ளை மனைவியின் பெயர் அம்பிகை
மூத்த பெண் – காந்திமதி . வீட்டோடு இருப்பவள்
அடுத்த பெண் பொன்னம்மாள். அம்மாவுடன் சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு வராமல் இருப்பவள் .
மூன்றாவது பெண் சிவகாமி – புருஷன் வீட்டு உறவை முறித்து கொண்டு அப்பாவுடன் இருப்பவள்.
நாலவது பெண் இந்திராணி. நோயாளி புருஷனுடன் பக்கத்து தெருவில் வசிப்பவள்
ஐந்தாவது பெண் மகாராணி கனவனுடன் இங்கேயே இருப்பவள். அவளது கணவன் மகுடேசன் பிள்ளையின் தோப்பு துரவுகளை பார்த்து கொள்பவன்.
ஆறாவது பெண் ராசாத்தி இன்னும் கல்யானம் ஆகவில்லை
அவரது மூத்த மகன் பெரியசாமி அவனது மனைவி மங்களம் .
இரண்டாவது மகன் சிங்காரம் – அவனது தமக்கைகள் எல்லாம் அவனை பெண் பிள்ளை போல வளர்ப்பவர்கள்
கடைசி மகன் வைத்தி
விளக்கு சாமி – மகுடேசனின் நண்பர் குரு. மகுடேசன் வீட்டு தின்னையில் காலம் கழிப்பவர். சமைத்த உணவை சாப்பிடாமல் அரிசியையும் வெங்காயத்தையும் சாப்பிட்டு வாழ்பவர். மகுடேசன் வீட்டு விசயம் அனைத்தையும் அறிந்தவர்.

மூத்த மகன் பெரியசாமி தேவடியாள் தெருவில் பழக்கம் ஏற்ப்படுத்தி கொண்டு அங்கேயே வாழ்பவன். தாத்தா சொத்துக்களை பிரித்து எடுத்து கொண்டு போய்விட்டான். அவன் மனைவி மகுடேசன் பிள்ளை வீட்டில் இருக்கிறாள்.

மகுடேசன் சொத்து பிரிக்கும் போது, பெரியசாமிக்கு பங்கு கொடுக்காமல் பங்கு பிரிக்கிறார். ஆனால், சிங்காரமும் வைத்தியும் சிறியவர்களாக இருப்பதால், அவர்கள் பெரியவர்கள் ஆகும் வரை சொத்து பெரிய மகன் பெரியசாமியின் நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என எழுதி வைக்கிறார்.
மகுடேசன் பிள்ளை மனைவி இறந்து விடுகிறாள். மூத்த மகள் ஏற்ப்பாட்டின் படி அவருக்கு இரண்டாவது திருமணம் நடைப்பெறுகிறது. கோதை என்கிற பெண்ணை மனந்து கொள்கிறார். மகுடேசன் பெண்களை விட சிறியவள். ஆனாலும் சித்தி என்று கூப்பிடுகிறார்கள்

இந்த குடும்பம் சைவ குடும்பம். மகுடேசன் பிள்ளை பெண்கள் அவருக்கு தெரியாமல் மீன் சாப்பிடுவார்கள்.

இவரகள் அசைவம் சாப்பிடுவது கோதைக்கு தெரியவருகிறது.

மகுடேசன் பிள்ளையின் மருமகள் மங்களம் கர்பமாக இருக்கிறாள். மகன் வீட்டில் இல்லாத போது எப்படி கரமானாள் என்று விசாரிக்கும் போது, இவர் தனது இரண்டாவது கல்யானத்திற்க்காக வெளியூர் சென்றிருந்த ஒரு வாரம் அவரது பெரிய மகன் பெரியசாமி இங்கு வந்து தங்கியதன் விளைவு. கோபப்படும் மகுடேசன் மங்களத்தையும் பெரியசாமியையும் தனி வீட்டில் இருக்க சொல்லி அனுப்பிவிடுகிறார்.

பெண்கள் அசைவம் சாப்பிடும் விசயத்தை மகுடேசனிடம் அவரது மனைவி கோதை சுற்றி வளைத்து சொல்லும் போது, கோதை அசைவம் சாப்பிடுபவள் என நினைக்கிறார். அவருக்கு அன்ன தூவேசம் ஏற்ப்படுகிறது. சரியாக சாப்பிடாமல்  இறந்து விடுகிறார்.


பாட்டிமார்களும் பேத்திமார்களும்

மகுடேசன் பிள்ளை இறுதி சடங்கில் பெரிய மகன் பெரியசாமி ஒதுங்கி நின்று கலந்து கொள்கிறான். சின்ன பிள்ளை சிங்காரம் உயில் படி கொள்ளி போடுகிறான்.

இந்த வீட்டு பிள்ளைகளுக்கு அசைவம் செய்து கொடுப்பவள் வெள்ளையம்மாள். அவள் அக்கரையில் வசிப்பவள். சிங்காரம் அவளுடன் பிரியமுடன் இருக்கிறான்.

பள்ளிகூடம் போன சிங்காரம் மீன் சாப்பிடும் ஆசையில் பொன்னம்மாளுடன் அக்கரை சென்று அங்குள்ளவர்களிடம் நட்பு கொள்கிறான். வெள்ளையம்மாளின் மகளுடன் பழக்கம் ஏற்ப்படுகிறது. அந்த பெண்ணின் முறை மாப்பிள்ளை சிங்காரத்தின் நண்பன். அவண் சந்தேகப்பட்டு பேச சிங்காரம் அங்கிருந்து விலகி விடுகிறான். படிப்பை பாதியில் நிறுத்தியது குறித்து வருத்தப்படுகிறான்.

மகுடேசன் பிள்ளையின் ஆறாவது பெண் ராசாத்திக்கு திருமணம் நடக்கிறது. 

சிங்காரம் திருந்தி விடுகிறான். அக்கா பென்னம்மாவின் மகளை மணந்து கொள்கிறான். சிங்காரம் பெரியவன் ஆனவுடன் , அண்ணன் பெரியசாமியிடம் சொத்த தரும் படி கேட்கிறான். சிங்காரமும் வைத்தியும் இருவரும் பெரியவன் ஆனவுடன் தான் சொத்த கொடுப்பேன் என மறுக்கிறான்.

சிங்காரம் பெரியசாமி மீது வழக்கு போடுகிறான். சொத்தையெல்லாம் இழந்து விடுகிறான். வீடு ஏலத்தில் வருகிறது.  கோதையே அதை ஏலத்தில் எடுக்கி’றாள். 

சிங்காரம் பள்ளிகூட பாதிரியாரிடம் வேலை கேட்கிறான். அவனை அவருடன் வைத்துக்கொண்டு அவன் விருப்பப்படி ஆங்கிலம் கற்று தருகிறார்.

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்

செல்லக்கன்ணு பெரிய வீட்டின் மதில் சுவர் ஓரமாக வாழ்பவள். ஒரு காலத்தில் அந்த பெரிய வீட்டின் சொந்தகாரி அவளது மகன் அப்பு. அப்பு சுட்டி. அப்புவின் நண்பன் இறந்ததற்க்கு காரணம் அப்பு என்ற பழி சொல் ஏற்ப்படுவதால் அவனை இரவோடு இரவாக பட்டிணம் அனுப்பி விடுகிறாள். தனியாக ரயில் பயணம் செய்கிறான். பட்டினத்தில் தந்தையை கண்டுபிடிக்கிறான். அவருக்கு மனைவியும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவன் வேலை செய்து சம்பாதிக்கிறான். அப்பா நோயாளி. இங்கிருக்கும் மனைவியை பற்றி ஏதும் கேட்கவில்லை. அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறான். அப்பா நோயாளி என்றும் விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற போகிறது என்றும் எழுதி இங்கு வந்து விடும் படி கூறுகிறான்.

அம்மாவை அப்பாவிடம் அழைத்து வர நண்பனுடன் ஊருக்கு வருகிறான். முதல் கதையில் கூறிய அனைத்து கதாபாத்திரங்களும் ஊரில் வெவ்வேறு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். செல்லகன்ணு சிங்காரத்தின் இரண்டாவது மனைவி. முதல் பிரவசத்தில் மனைவி இறந்து விடுவதால் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளான். அவமானத்துடன் ஊரில் வாழ பிடிக்காமல் ஊரை விட்டு வெளியேறியதை அப்பு தெரிந்து கொள்கிறான். சிங்காரத்தின் இரண்டாவது மனைவி தான் செல்லக்கன்ணு . பட்டினத்தில் சிங்காரத்தின் மனைவியாக இருப்பவள் வெள்ளையமாவின் சொந்தகார பெண். வெள்ளையம்மாள் அப்புவை பார்த்து சிங்காரத்தை விசாரித்து அவன் மனைவிக்கு தனது கம்மலை கொடுக்கும் படி கூறுகிறாள். செல்லக்கன்ணு பட்டினம் வர மறுக்கிறாள்.

சென்னையில் சிங்காரத்துடன் விளக்கு சாமி இருக்கிறார். அறுவை சிகிச்சை ஏற்ப்பாடு நடக்கிறது.

இத்துடன் கதை முடிகிறது.

No comments:

Post a Comment