Tuesday 26 August 2014

கசப்பான சர்க்கரை



கசப்பான சக்கரை::


நாம் மிக சுலபமாக அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் குறை கூறுகிறோம்.  அந்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் பயனடைவோரும் பாதிக்கப்படுவோரும் தங்களது வசதிக்கேற்ப்ப விமர்சனம் செய்கின்றனர்.

அந்த கொள்கைக்கும் திட்டங்களுக்கும் சம்மந்தமே இல்லாதவர்கள். தங்களது அரசியல் சார்ந்து விமர்சனம் வைக்கின்றனர். பொது மக்கள் இது குறித்து ஆழமான புரிதல் இல்லாமல் ஏதோ ஒன்றை சொல்லி வைக்கிறோம்.

கடந்த மாதமும் இன்றும் அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையை பார்ப்போம்.

1. கடந்த மாதம் , தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு குறைந்த வட்டியில் 4000 கோடி ரூபாய் கடனாக வழங்க அரசு முடிவு செய்தது,

2. இன்று சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 15%லிருந்து 25% ஆக ஏற்றியுள்ளது.

இந்த இரண்டு செய்திகளுக்கும் , சம்மந்தப்பட்டவர்களும் பொது மக்களும் சொன்ன கருத்துக்களை பார்ப்போம். அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கவில்லையென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசு தரப்பு:

தனியார் சர்க்கரை ஆலைகள், விவாசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் கால தாமதம் செய்வதால், விவசாயிகளுக்கும் ஆலை நிர்வாகத்திற்க்கும் உதவி செய்யும் வகையில் இந்த கடன் திட்டம் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தது.

சர்க்கரை ஆலை நிர்வாகிகள்:

விவசாயிகளுக்கு பணம் நிலுவையில் உள்ளது உண்மை தான் என்றும் அதற்கு காரனம், உற்ப்பத்தி செய்யப்பட்ட சர்க்கரைகளை விற்பனை செய்ய முடியவில்லையென்றும், சர்க்கரை ஆலைகளில் தேங்கியுள்ளது என்றும் கூறினார்கள்

இந்த கடனுதவியால் எந்த பயனும் இல்லை என்றார்கள். இந்த கடனை வாங்கி விவசாயிகளுக்கு கொடுத்தாலும், சர்க்கரை விற்க்காத நிலையில் வட்டியுடன் கடனை திரும்பி செலுத்துவது சிரமம். என்பதால் இந்த திட்டத்தால் பயன் இல்லை என்றார்கள்.

கரும்பின் கொள்முதல் விலை, தயாரிப்பு செலவுகளின் கணக்குப்படி சர்கரையின் விலையை நிர்ணயித்தால், இறக்குமதி செய்யப்படும் சர்க்கரையின் விலையை விட அதிகமாகிறது. எனவே, இறக்குமதியாகும் சர்க்கரையின் விலையை போன்ற விலையில் விற்க வேண்டுமென்றால் அரசு மானியம் அளிக்க வேண்டும் என்றார்கள். அல்லது இறக்குமதியை கட்டுப்படுத்தினால் தான் உள்நாட்டு சர்க்கரையை விற்க முடியும் என்றார்கள். விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விலை 70% அதிகரித்துள்ளது என்றும் ஆனால், தாங்கள் உற்ப்பத்தி செய்யும் சர்கரையின் விலை 7% தான் கூடியுள்ளது என்று கூறுகின்றனர்.

இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளது என்றும், ஆனால் சர்க்கரை தயாரிப்பு செலவு கூடுதலாக இருப்பதால் சர்க்கரை விலை குறைய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இறக்குமதியை கட்டுப்படுத்தினால், சர்க்கரை தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விலை அதிகரித்து மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது அரசின் வாதம்.

விவசாயிகள்::

சர்க்கரை ஆலைகளுக்கு அரசு கடன் வழங்குவதன் மூலம், ஆலைகள் உங்கள் நிலுவை தொகையை கொடுக்கும் அதனால் உங்களுக்கு மகிழ்ச்சி தானே என்று கேட்டதற்க்கு, எங்களுக்கு பழைய பாக்கி கிடைக்கும் என்றாலும் எங்களது கோரிக்கை கரும்புக்கு கட்டுப்படியாகும் விலையை கொடுக்க வேண்டும் மற்றும் தற்போது கொடுக்கும் மானியத்தை அதிகரிக்க வேண்டும் என்றார்கள்.

அடிப்படை விலையை அதிகரித்தால் சர்க்கரை விலை ஏறி மக்கள் சிரமப்படுவார்கள் என்று கேட்டதற்க்கு , ஆலை அதிபர்கள் சர்க்கரை விலையை கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்றார்கள். அதாவது, கரும்பிலிருந்து சர்க்கரை எடுத்த பிறகு அதன் கழிவிலிருந்து எரிசாராயம் தாயரிக்கும் பொருட்கள் கிடைப்பதாகவும், அதில் வரும் வருமானத்திலிருந்து சர்க்கரை தாயரிப்பதில் ஏற்ப்படும் நட்டத்தை ஈடு செய்யலாம் என கூறினார்கள். மேலும், அந்த உபரி வருமானத்தில், விவசாயிகளுக்கு பங்கு தந்தால், தங்களது கரும்பு உற்பத்திக்கு ஏற்படும் செலவை ஈடுகட்ட முடியும் என்று கூறினார்கள்.

சர்க்கரை ஆலை அதிபர்கள் , இந்த வருமானத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், சர்க்கரை உற்பத்தி செலவை விட கிலோவுக்கு இரண்டு ரூபாய் குறைவாகவே விற்க வேண்டியுள்ளது என்று கூறினார்கள். அதாவது, இறக்குமதி சர்க்கரையின் விலைக்கு எற்ப உள்நாட்டு சர்க்கரை விலையை நிர்னயித்தால், கிலோவுக்கு இரண்டு ரூபாய் நட்டம் ஏற்ப்படுவதாக கூறினார்கள்.

இந்த இறக்குமதி வரி ஏற்றத்துக்கு காரணம், உள்நாட்டு சர்க்கரை விலைக்கு ஈடாக கொண்டுவருவதன் மூலம் ஆலைகளில் தேங்கியுள்ள சர்க்கரையை விற்ப்பனை செய்ய முடியும் என்பதே.

பிரேசிலில் அமோக விளைச்சல் காரணமாகவும், உலகம் முழுவதும் சர்க்கரை விலை குறைந்திருக்கும் நிலையில், இறக்குமதி வரியை ஏற்றியிருப்பதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை விலை ஏறுகிறது.

உள்நாட்டுள் கரும்பு உற்ப்பத்தி அதிகரித்திருந்தாலும், சர்க்கரை தயாரிப்பு செலவு அதிகமாக இருப்பாதால் சர்க்கரை விலை குறைய வாய்ப்பில்லை.

விவசாயிகளுக்கு மானியம் கொடுத்து, சர்க்கரை ஆலைகளுக்கு மானியம் கொடுத்து, அதிகமாக அந்திய செலவாணி செலவு செய்து இறக்குமதி செய்தாலும், அங்கு கொடுக்கப்படும் பணம் அனைத்தும் பொது மக்களின் வரிப்பணம்.

நடுத்தர மக்கள் வரியையும் செலுத்தி இவர்களுக்கு மானியமும் கொடுத்து இவர்களது பொருள்களை அதிக விலைக்கு வாங்க வேன்டியுள்ளது.

வசதி படைத்தவர்களுக்கு பிரச்சனையில்லை. ஏழைகளுக்கு இலவசமாகவும் குறைந்த விலையிலும் ரேசன் கடைகளில் சர்க்கரை கிடைக்கிறது. இந்த வாய்ப்புகள் இல்லாத மற்ற பொதுமக்கள் தான் , இவர்கள் எல்லோருக்கும் கொடுக்கப்படும் சலுகைகளுக்கு பணம் கொடுத்து ஈடு செய்ய வேண்டியுள்ளது.

விவசாயிகளுக்கு வருடா வருடம் உற்பத்தி செலவு அதிகரித்து கொண்டேயிருக்கும். தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துக்கொண்டேயிருப்பார்கள். அது போலவே சர்க்கரை ஆலை அதிபர்களும் தங்களது வாதத்தை முன்வைத்து கோரிக்கைகளை வைத்துக்கொண்டேயிருபார்கள். ஏழைகளுக்கு இலவசமும் மலிவு விலையில் கொடுதால் தான் தாங்கள் ஆட்சியில் இருக்க முடியும் என்பதால் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு சாதாமகவே நடந்து கொள்வார்கள்
.

இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை விலை குறைவாக இருக்கிறதென்றால், அங்கு, உற்பத்தி செலவு குறைவு என்று பொருள் கொள்ளலாம் அல்லது குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சல் செய்கிறார்கள் என்று பொருள்
அது உண்மையென்றால், அது போன்று இங்கு ஏன் விளைச்சலை அதிகப்படுத்தி, சர்க்கரை உற்ப்பத்தி செலவை குறைக்க முயற்சிக்க கூடாது. ?
ஒரு வேளை அவர்களது உள்நாட்டு தேவைகான சர்க்கரையை குறைத்து, சர்க்கரையை ஏற்றுமதி செய்து, அந்நிய செலவாணி ஈட்டி, அவர்களது பொருளாதரத்தை (balance of payment)  கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

உலகத்தில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஒரே மாதிரி தான், எந்த கொள்கையை வகுத்தாலும் அதற்கு எதிர்ப்பு வரும் என்பது தெரியும். எனவே, வகுக்கப்படும் கொள்கைகளில் மூலம் தங்களது தனிப்பட்ட லாபத்தையும் விருப்பு வெறுப்புகளையும் கலந்து விடுகிறார்கள் என தோன்றுகிறது.

எல்லா நாடுகளிலும் பிரச்சனை இருப்பதாலும், இது தான் சரியான கொள்கை என்று முடிவெடுக்க முடியாத நிலையில் சமயத்திற்க்கு எற்றார் போல முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கலாம்.

இந்த விசயத்தில் என்ன மாதிரியான கொள்கை வகுத்தால், விவசாயிகள், சர்க்கரை அலை தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பயனடைய முடியும் என்று சொல்லுங்களேன்.

சர்க்கரை விலை இப்படியே ஏறிக்கொண்டிருந்தால், இலுப்பை பூவை தான் உபயோகிக்க வேண்டும்.

4 comments:

  1. சக்கரைக்கு மாற்று என்ன என்பதையும் அப்படியே நீங்களே சொல்லி விடுங்களேன்...

    ReplyDelete
  2. இலுப்பைப்பூ தவிர....

    ReplyDelete
  3. அதுக்குத்தான் சக்கரை வியாதிஸ்தர்கள் இந்தியாவில் கூடிண்டே இருக்காகளே???

    ReplyDelete
  4. இனிப்பு சாப்பிடாமல் இருக்கலாம்.

    ReplyDelete